சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

கடந்த வாரத்தின் டாப் கார் செய்திகள் (பிப். 5-9): புதிய வெளியீடுகள், அப்டேட்கள், ஸ்பை ஷாட்கள், டீசர்கள், விலை குறைப்பு மற்றும் பல

modified on பிப்ரவரி 12, 2024 11:05 am by ansh for டாடா டியாகோ

இந்தியாவில் கடந்த வாரம் முதல் CNG AMT கார்களின் அறிமுகம் மட்டுமின்றி, 6 மாடல்களின் விலையும் குறைக்கப்பட்டது.

கடந்த வாரத்தில், இந்தியாவின் முதல் CNG AMT கார்களின் அறிமுகத்தை பார்க்க முடிந்தது, சில மாடல்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட EV -யின் வெளியீட்டு தேதியும் வெளியிடப்பட்டது, மேலும் அறிமுகமாகவுள்ள சில புதிய கார்களின் சோதனையையும் பார்க்க முடிந்தது. கடந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகள் இங்கே.

டாடா சிஎன்ஜி ஏஎம்டி மாடல்கள் அறிமுகம்

கடந்த வாரம்,டாடா நிறுவனம் இந்தியாவின் முதல் CNG AMT கார்களை அறிமுகப்படுத்தியது. டாடாவின் சிஎன்ஜி வரிசையிலிருந்து மூன்று கார்கள்: டியாகோ சிஎன்ஜி, டியாகோ என்ஆர்ஜி சிஎன்ஜி, மற்றும் டிகோர் CNG ஆகிய கார்கள் புதிய AMT வேரியன்ட்களை பெற்றுள்ளன. இந்த அனைத்து மாடல்களும் அதே 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை 5-ஸ்பீடு AMT உடன் பயன்படுத்துகின்றன மற்றும் 28.06 கிமீ/கிலோ மைலேஜை வழங்குகின்றன.

MG அதன் கார்களின் விலையை குறைத்துள்ளது

இந்தியாவில் எம்ஜி நிறுவனம் 6 மாடல்கள் விற்பனை செய்கின்றது: ஆஸ்டர், ஹெக்டர், ஹெக்டர் பிளஸ், குளோஸ்டர்,காமெட் EV, மற்றும் ZS EV. கார் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் தனது இந்திய போர்ட்ஃபோலியோவில் உள்ள அனைத்து மாடல்களின் விலையையும் குறைத்துள்ளது. அனைத்து எம்ஜி மாடல்களின் புதிய விலை விவரங்களை தெரிந்து கொள்ள, இங்கே கிளிக் செய்யவும்.

பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடக்கும்

இந்த வாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஒவ்வொரு ஆண்டும் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ நடக்கும் என்பதை உறுதிப்படுத்தினார். முதல் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ இந்த ஆண்டு பிப்ரவரி தொடக்கத்தில் நடைபெற்றது, மேலும் பல உள்நாட்டு மற்றும் உலகளாவிய கார் தயாரிப்பாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்வை பற்றி மேலும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ஸ்கோடா புதிய ஆக்டேவியாவின் டிஸைன் ஸ்கெட்ச்சை வெளியிட்டுள்ளது

ஸ்கோடா பிப்ரவரி 14 அன்று அதன் உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஆக்டேவியாவின் சில வெளிப்புற வடிவமைப்பு ஸ்கெட்ச்சை வெளியிட்டுள்ளது. புதிய ஆக்டேவியாவில் பெரும்பாலான வடிவமைப்பு மாற்றங்கள் முன்பக்கத்தில் உள்ளன, இதில் ஷார்ப்பான LED ஹெட்லைட்கள், ஸ்போர்டியர் பம்பர் மற்றும் பூமராங் வடிவ LED DRL -கள் உள்ளன. அதன் கேபின் விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை என்றாலும், அதன் வெளிப்புறத்தை விரிவாக இங்கே பார்க்கலாம்

FASTag அப்டேட்

சமீபத்தில், KYC மற்றும் PayTM தொடர்பான சிக்கல்களுக்காக ஃபாஸ்ட்டேக் கடந்த வாரம் முழுக்க அது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தன. சில நடவடிக்கைகளை எடுக்கப்படாவிட்டால், சுங்கக் கட்டணம் செலுத்தும் ஃபாஸ்ட்டேக் எண்கள் மார்ச் முதல் சிலருக்கு வேலை செய்யாமல் போகலாம். உங்கள் ஃபாஸ்ட்டேக் செயலிழக்கப்படுவதைத் தவிர்க்க என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை அறிய, இங்கே கிளிக் செய்யவும்.

டொயோட்டா டீசல் இன்ஜின் அப்டேட்

கடந்த மாதம், டொயோட்டா அதன் மூன்று டீசல் இன்ஜின்களை ஜப்பானில் இருந்து அனுப்புவதை நிறுத்தியது, அவர்களின் ECU மென்பொருளில் ஒரு குறைபாடு இருந்தது, இது சான்றிதழ் சோதனையின் போது கண்டறியப்பட்டது. இதனால் இந்தியாவிலும் மூன்று மாடல்களின் விநியோகம் பாதித்தது: டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, டொயோட்டா ஃபார்ச்சூனர், மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர், இந்த பவர்டிரெய்ன்களின் ஆப்ஷன்களுடன் வருகிறது. இப்போது, இந்தியா -வில் டொயோட்டா இந்த இன்ஜின்கள் விநியோகத்தை மீண்டும் தொடங்கியுள்ளது .

ஆகவே, இந்தியாவில் இந்த வாகனங்களை வாங்குபவர்கள் நீண்ட காலம் காத்திருக்க தெவையிருக்காது.

டாடா கர்வ்வ் வெளியீட்டு தேதி -யின் விவரம் வெளியிடப்பட்டது

டாடா ஏற்கனவே பன்ச் EV -யை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேலும் இரண்டு EV -களை 2024 -ல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது: கர்வ்வ் இவி மற்றும் ஹாரியர் இவி. இந்த வாரம், டாடா அதன் ICE பதிப்புடன் கர்வ்வ் EV -யின் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தியது. அதைப் பற்றி விவரங்களுக்கு இங்கே படிக்கவும்

மாருதி ஃப்ரான்க்ஸ் வெலாசிட்டி எடிஷன் அறிமுகம்

மாருதி ஃப்ரான்க்ஸ் இப்போது ஒரு சிறப்பு வெலாசிட்டி எடிஷனில் கிடைக்கும், இது எக்ஸ்ட்டீரியர் மற்றும் இன்ட்டீரியரில் சில மாற்றங்களுடன் வருகிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன், அடிப்படையில் ஒரு ஆக்ஸசரி பேக் ஆகும். இது கிராஸ்ஓவரின் மிட்-ஸ்பெக் டெல்டா பிளஸ் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது, மேலும் வெளிப்புறத்தில் ஸ்டைலிங் எலமென்ட்களை கொண்டுள்ளது. உட்புறத்தில் கார்பன் ஃபைபர் போன்ற ஃபினிஷ், சீட் கவர்கள், பாய்கள் மற்றும் ஒரு இன் -கார் வேக்குவம் கிளீனர் ஆகியவை உள்ளன. மாருதி ஃபிரான்க்ஸ் வெலாசிட்டி எடிஷனை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள இங்கே பார்க்கவும்.

கடந்த வாரம் ஸ்பை ஷாட்டில் சிக்கியவை

பட ஆதாரம்

2024 மாருதி டிசையர்: இந்த வாரம், முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் புதிய தலைமுறை மாருதி டிசையர் சோதனை கார் ஒன்று போட்டோவில் சிக்கியது. செடான் இப்போதுள்ள பதிப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது, ஆனால் இது புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் -காரில் இருந்து நிச்சயமாக வடிவமைப்பில் சில விஷயங்களை கடன் வாங்கும். அந்த விவரங்களை இங்கே பாருங்கள்.

5-டோர் மஹிந்திரா தார்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5-டோர் மஹிந்திரா தார் இந்த வாரம் சாலையில் தோன்றியது. ஸ்பை வீடியோவில், நீள்வட்டத்தின் பின்புற பக்கத்தை பார்க்க முடிந்தது மஹிந்திரா தார் அதன் 3-டோர் போன்ற வடிவமைப்பை கொண்டிருந்தது. 5-டோர் தார் பற்றி விரிவாக இங்கே பாருங்கள்.

பட ஆதாரம்

ஹூண்டாய் கிரெட்டா EV: ஹூண்டாய் கிரெட்டா EV இப்போது சிறிது காலமாக சோதனை செய்யப்பட்டு வருகின்றது. அதன் சமீபத்திய ஸ்பைஷாட்டில், எலக்ட்ரிக் எஸ்யூவி ஏரோடைனமிக் அலாய் வீல்களுடன் காணப்படுகிறது, அதே நேரத்தில் அதன் மற்ற வடிவமைப்பு ICE பதிப்பைப் போலவே உள்ளது. எலக்ட்ரிக் கிரெட்டா பற்றிய விவரங்களை இங்கே பாருங்கள்

மேலும் படிக்க: டாடா டியாகோ ஏஎம்டி

a
வெளியிட்டவர்

ansh

  • 33 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது டாடா டியாகோ

Read Full News

explore similar கார்கள்

டாடா டைகர்

Rs.6.30 - 9.55 லட்சம்* get சாலை விலை
சிஎன்ஜி26.49 கிமீ / கிலோ
பெட்ரோல்19.28 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

டாடா டியாகோ

Rs.5.65 - 8.90 லட்சம்* get சாலை விலை
சிஎன்ஜி26.49 கிமீ / கிலோ
பெட்ரோல்20.09 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

டாடா டியாகோ என்ஆர்ஜி

Rs.6.70 - 8.80 லட்சம்* get சாலை விலை
சிஎன்ஜி26.49 கிமீ / கிலோ
பெட்ரோல்20.09 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

எம்ஜி ஹெக்டர்

Rs.13.99 - 21.95 லட்சம்* get சாலை விலை
டீசல்13.79 கேஎம்பிஎல்
பெட்ரோல்13.79 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

எம்ஜி ஹெக்டர் பிளஸ்

Rs.17 - 22.76 லட்சம்* get சாலை விலை
டீசல்15.58 கேஎம்பிஎல்
பெட்ரோல்13.79 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.10.99 - 15.49 லட்சம்*
Rs.14.74 - 19.99 லட்சம்*
Rs.7.99 - 11.89 லட்சம்*
Rs.6.99 - 9.24 லட்சம்*
Rs.60.95 - 65.95 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை