ஃபாஸ்டேக் பேடிஎம் மற்றும் KYC காலக்கெடு பற்றிய முழுமையான விவரங்கள்… பிப்ரவரி 2024 -க்குப் பிறகும் ஃபாஸ்டேக் வேலை செய்யுமா ?
published on பிப்ரவரி 07, 2024 01:30 pm by ansh
- 28 Views
- ஒரு கருத்தை எழுதுக
பிப்ரவரி 29, 2024 -க்குப் பிறகு, சில ஃபாஸ்டேக் எண்கள் பிளாக் லிஸ்ட் பட்டியலில் சேர்க்கப்படலாம், அதே சமயம் பேடிஎம் (PayTM) கணக்கில் டாப்-அப் செய்ய முடியாது.
சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக நாடு முழுவதும் இப்போது பின்பற்றப்பட்டு வரும் முறையான ஃபாஸ்டேக் தொடர்பான செய்திகளை இப்போது அடிக்கடி பார்க்க முடிகின்றது. அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன, ஒன்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) உங்கள் ஃபாஸ்டேக் -கிற்க்கான KYC -யை முழுமையாக அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை விதித்துள்ளது, இரண்டாவதாக, பேடிஎம் வழங்கிய ஃபாஸ்டேக் எண்கள் தொடர்பானவை ஆகும்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பேடிஎம் நிறுவனத்தின் வங்கி சார்ந்த செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள உத்தரவிட்டுள்ளது. இந்த சிக்கல்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் மற்றும் நீங்கள் சிக்கலை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம் .
ஃபாஸ்டேக் கணக்கிற்கான KYC -யை அப்டேட் செய்ய NHAI அறிவுறுத்தியுள்ளது
சுங்கச்சாவடி வசூல் மற்றும் தாமதங்களைக் குறைக்கும் முயற்சியாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சமீபத்தில் "ஒரு வாகனம், ஒரு ஃபாஸ்டேக்" என்ற திட்டத்தை அறிவித்தது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய ரிசர்வ் வங்கி -யின் வழிகாட்டுதல்களின்படி, வாகன உரிமையாளர்கள் தங்கள் ஃபாஸ்டேக்களுக்கான KYC -களை பூர்த்தி செய்து கொள்ளுமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான முந்தைய காலக்கெடு ஜனவரி 31 முடிவடைந்தது. ஆனால் இப்போது பிப்ரவரி 29 -க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கான காரணம் என்ன ?
இதற்குப் பின்னால் உள்ள காரணங்களில் ஒன்று, NHAI ஆனது ஒரு வாகனத்திற்கு பல ஃபாஸ்டேக்கள் வழங்கப்பட்ட பல சம்பவங்களையும், ஒரு ஃபாஸ்டேக் பல வாகனங்களால் பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகளையும் கவனித்தது. ஆகவே அவற்றை தவிர்க்க இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது. KYC அப்டேட் செய்யப்பட்டதும், ஒவ்வொரு வாகனத்துக்கும் தனித்தனியான ஃபாஸ்டேக்கை மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஃபாஸ்டேக் KYC -யை பூர்த்து செய்ய முடியவில்லை என்றால் என்ன ஆகும்?
KYC கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்கு முன் பூர்த்தி செய்யப்படவில்லை என்றால் அதில் பேலன்ஸ் இருந்தாலும் கூட உங்கள் வாகனத்தின் ஃபாஸ்டேக் செயல்படாது. மேலும், செல்லுபடியாகும் KYC உடன் உங்கள் வாகனத்தில் பதிவு செய்யப்பட்ட பல ஃபாஸ்டேக்கள் இருந்தால், சமீபத்தில் எதை வாங்கியுள்ளீர்களோ அது மட்டுமே செயல்படும், மற்றவை பிளாக் லிஸ்டில் வைக்கப்படும்.
மேலும் படிக்க: பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ இனிமேல் ஆண்டுதோறும் நடத்தப்படும் - இதனால் ஆட்டோ எக்ஸ்போ மாற்றப்படுமா?
வாகன உரிமையாளர்களைப் பொறுத்தவரை, இப்போது செய்ய வேண்டிய ஒரே விஷயம் என்னவென்றால், அவர்களின் ஃபாஸ்டேக் கணக்குக்கு சென்று KYC -யை பூர்த்தி செய்ய வேண்டும், இதை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் செய்யலாம். மேலும் ஒரே ஒரு ஃபாஸ்டேக்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளம் -த்தில் லாகின் செய்வதன் மூலம் உங்கள் ஃபாஸ்டேக் KYC -யின் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம். அல்லது உங்கள் ஃபாஸ்டேக்கை வழங்கிய தொடர்புடைய வங்கி இணையதளத்தைப் பார்க்கவும்.
பேடிஎம் பேமெண்ட் பேங்க் வழங்கிய ஃபாஸ்டேக் எண்ணுக்கு நெருக்கடியா ?
சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பேடிஎம் நிறுவனத்தின் முறைகேடுகள் காரணமாக அதன் பேமெண்ட் வங்கியை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 29 -க்கு பிறகு ஏற்கனவே உள்ள கணக்குகள் மற்றும் வாலட்களில் புதிய வைப்புத்தொகைகளை ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது, இதில் பேடிஎம் நிறுவனம் வழக்கிய ஃபாஸ்டேக் எண்களும் அடங்கும். அபராதம் இல்லாமல் கட்டணம் செலுத்துவதற்கு ஃபாஸ்டேக் என்பது கட்டாயமாகிவிட்டதால், RFID எண்ணை வழங்கும் மிகவும் பிரபலமான சேவைகளில் பேடிஎம் ஒன்றாக இருந்தது. எனவே இந்த அறிவிப்பு அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிப்ரவரி 2024 இறுதி வரை, பயனர்கள் தங்கள் பேடிஎம் ஃபாஸ்டேக்கை இன்னும் டாப் அப் செய்யலாம் மற்றும் காலக்கெடுவுக்குப் பிறகும் அவற்றைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பேலன்ஸ் முடிந்ததும், உங்களால் பேடிஎம் ஃபாஸ்டேக்ஐ ரீசார்ஜ் செய்ய முடியாது, ஆகவே டோல்களில் பணம் செலுத்தவும் அதைப் பயன்படுத்த முடியாது.
பல ஸ்டார்ட்அப்களின் CEO -க்கள் RBI அவர்களின் தீர்ப்பை திரும்பப் பெறுமாறு வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் RBI முடிவை திரும்பப் பெறுமா என்பது பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவில்லை. ஆகவே எதிர்காலத்தில் சிக்கல்களைத் தவிர்க்க முடிந்த வரை வேறு நிறுவனங்களிடன் இருந்து புதிய ஃபாஸ்டேக் எண்ணை பெறவும், மேலும் உங்கள் KYC -யை பூர்த்தி செய்யவும் பரிந்துரைக்கிறோம்.
வரவிருக்கும் நாட்களில் ஃபாஸ்டேக் தொடர்பான வேறு ஏதேனும் புதிய செய்திகள் வரலாம், ஆகவே லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு கார்தேக்கோ உடன் இணைந்திருங்கள்.