• English
  • Login / Register
  • எம்ஜி comet இவி முன்புறம் left side image
  • எம்ஜி comet இவி முன்புறம் view image
1/2
  • MG Comet EV
    + 6நிறங்கள்
  • MG Comet EV
    + 32படங்கள்
  • MG Comet EV
  • 2 shorts
    shorts
  • MG Comet EV
    வீடியோஸ்

எம்ஜி comet ev

4.3216 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.7 - 9.65 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer
Don't miss out on the best offers for this month

எம்ஜி comet ev இன் முக்கிய அம்சங்கள்

ரேஞ்ச்230 km
பவர்41.42 பிஹச்பி
பேட்டரி திறன்17.3 kwh
கட்டணம் வசூலிக்கும் நேரம்3.3kw 7h (0-100%)
சீட்டிங் கெபாசிட்டி4
no. of ஏர்பேக்குகள்2
  • டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
  • ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்
  • கீலெஸ் என்ட்ரி
  • பார்க்கிங் சென்ஸர்கள்
  • advanced internet பிட்டுறேஸ்
  • voice commands
  • பின்பக்க கேமரா
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

comet ev சமீபகால மேம்பாடு

MG Comet EV பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

இது முதலில் MG விண்ட்ஸர் EV உடன் அறிமுகப்படுத்தப்பட்ட பேட்டரி வாடகை திட்டம் காமெட் EV ஆல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. விலை ரூ. 2 லட்சம் குறைவாக உள்ளது.

MG Comet EV -யின் விலை என்ன?

MG காமெட் EV -யின் விலை ரூ.7 லட்சம் முதல் ரூ.9.65 லட்சம் வரை இருக்கும். இது பேட்டரி வாடகை திட்டத்துடன் கிடைக்கிறது, இது காரை மிகவும் விலை குறைவாக கிடைக்கிறது ஆக்ககிறது. இந்தத் திட்டத்துடன் கூடிய காமெட் EV -யின் விலை ரூ. 5 லட்சம் முதல் ரூ. 7.66 லட்சம் வரை இருக்கும். ஆனால் நீங்கள் ஒரு கி.மீ.க்கு ரூ. 2.5 சந்தா கட்டணமாகச் செலுத்த வேண்டும் (அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை).

Comet EV -ல் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

MG காமெட் EV மூன்று வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது:

  • எக்ஸிகியூட்டிவ்  

  • எக்ஸைட்  

  • எக்ஸ்க்ளூஸிவ்  

எக்ஸ்க்ளூஸிவ் டிரிம் அடிப்படையில் லிமிட்டெட் ரன் ‘100-ஆண்டு லிமிடெட் எடிஷன்’ வேரியன்ட்டும் உள்ளது.

Comet EV -யின் பணத்திற்கு மிகவும் மதிப்புமிக்க வேரியன்ட் எது?

காமெட் EV இன் எக்ஸைட் வேரியன்ட் பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க வேரியன்ட் ஆகும். இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.25 இன்ச் டச் ஸ்கிரீன், ஒரே அளவிலான டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் மேனுவல் ஏசி போன்ற வசதிகளைப் பெறுகிறது. அதன் பாதுகாப்புத் தொகுப்பில் இரண்டு ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளன.

MG Comet EV என்ன வசதிகளைப் பெறுகிறது? 

MG காமெட் EV அதன் விலையைக் கருத்தில் கொண்டு சரியானதாக உள்ளது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய இரண்டு 10.25-இன்ச் திரைகள் (இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷனுக்காக தலா ஒரு ஸ்கிரீன்) ஆகியவை இதன் ஹைலைட்ஸ் ஆகும். இது ஒரு மேனுவல் ஏசி, இரண்டு ஸ்பீக்கர்கள், எலக்ட்ரிக்கலி ஃபோல்டபிள் ORVM -கள் (வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள்) மற்றும் கீலெஸ் என்ட்ரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Comet EV உடன் என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கிடைக்கும்? 

MG Comet EV ஆனது 17.3 kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது, இது 42 PS மற்றும் 110 Nm அவுட்புட்டை கொடுக்கும் ரியர்-ஆக்ஸிலில் பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இது 230 கி.மீ வரை ARAI கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது.

Comet EV எவ்வளவு பாதுகாப்பானது?

MG காமெட் EV இன்னும் பாரத் என்சிஏபி அல்லது குளோபல் என்சிஏபி மூலம் கிராஷ்-டெஸ்ட் செய்யப்படவில்லை. அதன் பாதுகாப்புத் தொகுப்பும் அடிப்படையானது மற்றும் டூயல் ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள், ஒரு ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), நான்கு டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவற்றையும் பெறுகிறது.

காமெட் EV உடன் எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன? 

MG Comet EV 5 கலர் ஆப்ஷன்களை பெறுகிறது:

  •  அரோரா சில்வர்  

  • கேண்டி வொயிட்  

  • ஸ்டாரி பிளாக்  

  • ஆப்பிள் கிரீன் (ஸ்டாரி பிளாக்)  

  • கேண்டி வொயிட் (ஸ்டாரி பிளாக்)  

  • பிரிட்டிஷ் ரேசிங் கிரீன் (100-ஆண்டு லிமிடெட் எடிஷன் வேரியன்ட்டுடன் பிரத்தியேகமாக கிடைக்கிறது)  

நீங்கள் 2024 Comet EV வாங்க வேண்டுமா?

MG காமெட் EV என்பது ஒரு சிறிய காராகும், இதன் மூலம் சிறிய பாதைகளில் எந்த வித சிக்கலும், கீறலும் இல்லாமல் வெளியே வரலாம். இது ஒரு கேபினில் பேக் மற்றும் ஒரு பெரிய காரின் அம்ச அனுபவத்தை வழங்குகிறது, மேலும் நகரச் சாலைகளில் கையாள எளிதானது. இது குறைவான விலையில் வருகிறது. இது சிறந்த இரண்டாவது காராக அமைகிறது.

இருப்பினும், நீங்கள் மிகக் குறைவான விலையில் உங்களது குடும்பத்துக்கான எலக்ட்ரிக் காரை தேடுகிறீர்கள் என்றால் டாடா டியாகோ EV ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

MG Comet EV -க்கு மாற்று என்ன? 

MG காமெட் EV -க்கு இந்தியாவில் நேரடி போட்டியாளர்கள் இல்லை, ஆனால் இது டாடா டியாகோ EV மற்றும் சிட்ரோன் eC3 ஆகியவற்றுக்கு விலை குறைவான மாற்றாக உள்ளது.

மேலும் படிக்க
comet இவி எக்ஸிக்யூட்டீவ்(பேஸ் மாடல்)17.3 kwh, 230 km, 41.42 பிஹச்பிRs.7 லட்சம்*
comet இவி எக்ஸைட்17.3 kwh, 230 km, 41.42 பிஹச்பிRs.8.08 லட்சம்*
மேல் விற்பனை
comet இவி எக்ஸைட் fc17.3 kwh, 230 km, 41.42 பிஹச்பி
Rs.8.56 லட்சம்*
comet இவி எக்ஸ்க்ளுசிவ்17.3 kwh, 230 km, 41.42 பிஹச்பிRs.9.12 லட்சம்*
comet இவி எக்ஸ்க்ளுசிவ் fc17.3 kwh, 230 km, 41.42 பிஹச்பிRs.9.49 லட்சம்*
comet இவி 100 year லிமிடேட் பதிப்பு(டாப் மாடல்)17.3 kwh, 230 km, 41.42 பிஹச்பிRs.9.65 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
space Image

எம்ஜி comet ev comparison with similar cars

எம்ஜி comet இவி
எம்ஜி comet இவி
Rs.7 - 9.65 லட்சம்*
டாடா டியாகோ இவி
டாடா டியாகோ இவி
Rs.7.99 - 11.14 லட்சம்*
டாடா டைகர் இவி
டாடா டைகர் இவி
Rs.12.49 - 13.75 லட்சம்*
டாடா பன்ச் EV
டாடா பன்ச் EV
Rs.9.99 - 14.44 லட்சம்*
டாடா டியாகோ
டாடா டியாகோ
Rs.5 - 8.45 லட்சம்*
க்யா syros
க்யா syros
Rs.9 - 17.80 லட்சம்*
டாடா பன்ச்
டாடா பன்ச்
Rs.6 - 10.32 லட்சம்*
க்யா Seltos
க்யா Seltos
Rs.11.13 - 20.51 லட்சம்*
Rating4.3216 மதிப்பீடுகள்Rating4.4276 மதிப்பீடுகள்Rating4.196 மதிப்பீடுகள்Rating4.4117 மதிப்பீடுகள்Rating4.4816 மதிப்பீடுகள்Rating4.649 மதிப்பீடுகள்Rating4.51.3K மதிப்பீடுகள்Rating4.5408 மதிப்பீடுகள்
Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல்
Battery Capacity17.3 kWhBattery Capacity19.2 - 24 kWhBattery Capacity26 kWhBattery Capacity25 - 35 kWhBattery CapacityNot ApplicableBattery CapacityNot ApplicableBattery CapacityNot ApplicableBattery CapacityNot Applicable
Range230 kmRange250 - 315 kmRange315 kmRange315 - 421 kmRangeNot ApplicableRangeNot ApplicableRangeNot ApplicableRangeNot Applicable
Charging Time3.3KW 7H (0-100%)Charging Time2.6H-AC-7.2 kW (10-100%)Charging Time59 min| DC-18 kW(10-80%)Charging Time56 Min-50 kW(10-80%)Charging TimeNot ApplicableCharging TimeNot ApplicableCharging TimeNot ApplicableCharging TimeNot Applicable
Power41.42 பிஹச்பிPower60.34 - 73.75 பிஹச்பிPower73.75 பிஹச்பிPower80.46 - 120.69 பிஹச்பிPower72.41 - 84.82 பிஹச்பிPower114 - 118 பிஹச்பிPower72 - 87 பிஹச்பிPower113.42 - 157.81 பிஹச்பி
Airbags2Airbags2Airbags2Airbags6Airbags2Airbags6Airbags2Airbags6
Currently Viewingcomet ev vs டியாகோ இவிcomet ev vs டைகர் இவிcomet ev vs பன்ச் EVcomet ev vs டியாகோsyros போட்டியாக comet evcomet ev vs பன்ச்Seltos போட்டியாக comet ev
space Image

எம்ஜி comet ev விமர்சனம்

CarDekho Experts
நீங்கள் போக்குவரத்து நெரிசலில் சோர்வாக இருக்கும் போது மற்றும் ஒரு சிறிய காரை ஓட்ட விரும்பினால், MG காமெட் ஒரு சிறந்த தீர்வாகும். இதன் பிரீமியம், ஃபுல்லி லோடட், ஓட்டுவது வேடிக்கையானது மற்றும் உங்கள் பெரிய, அதிக விலையுள்ள காரை ஓட்டும் அனுபவத்தை தவறாமல் கொடுக்கக்கூடியது.

Overview

MG Comet EV

பெரும்பாலும், கார்களை முழுமையானதாகவும் ஆல்ரவுண்டர்களாகவும் பார்க்கிறோம். விசாலமானதாகவும், போதுமான பெரிய பூட், அம்சங்கள், சௌகரியம் மற்றும் என்னவோ இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம். ஆனால் இது எதுவும் நிச்சயமாக காமெட் விஷயத்தில் இல்லை. இது ஒரு காரணத்திற்காக உறுதிபூண்டுள்ளது: அதிகரித்து வரும் நமது போக்குவரத்தில் பெரிய காரை ஓட்டுவதில் உள்ள சிரமத்தை விரும்பாத நபர்களுக்கு ஒரு தனிப்பட்ட நடமாட்ட தீர்வாக இருக்க வேண்டும். கேள்வி என்னவென்றால், இது உங்கள் பெரிய காரின் அனுபவத்துடன் பொருந்துமா, எனவே தேவைப்படும் போதெல்லாம் சிறிய காருக்கு தடையின்றி மாறலாம்

வெளி அமைப்பு

MG Comet EV

பெரும்பாலும், கார்களை முழுமையானதாகவும் ஆல்ரவுண்டர்களாகவும் பார்க்கிறோம். இது விசாலமானதாகவும், போதுமான பெரிய பூட், அம்சங்கள், சௌகரியம் மற்றும் பல விஷயங்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். காமெட் விஷயத்தில் இது நிச்சயமாக இல்லை. இது ஒரு காரணத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது: அதிகரித்து வரும் நமது போக்குவரத்தில் பெரிய காரை ஓட்டுவதில் உள்ள சிரமத்தை விரும்பாத நபர்களுக்கு ஒரு தனிப்பட்ட நடமாட்ட தீர்வாக இருக்க வேண்டும். கேள்வி என்னவென்றால், உங்கள் பெரிய காரின் அனுபவத்துடன் இது பொருந்துமா, எனவே தேவைப்படும் போதெல்லாம் சிறிய காருக்கு தடையின்றி மாற முடியுமா?

எக்ஸ்ட்ரீயர்

MG Comet EV Front

முதலில் நாம் பார்க்க வேண்டியது காமெட் எப்படி தோற்றமளிக்கிறது என்பதைத்தான். ஏனென்றால், இது தலையை விட இதயத்தை ஈர்க்கும் மேலும்  தோற்றம் நிச்சயமாக இந்த பிரிவில் சிறப்பான வடிவமைப்பை கொண்டுள்ளது. எனது தனிப்பட்ட கருத்துப்படி, இது தனித்துவமாகவும் அழகாகவும் தெரிகிறது. சாலையில், காமெட் சிறிய காராக இருக்கும். நீளம் மற்றும் வீல்பேஸ் 3 மீட்டருக்கும் குறைவாக உள்ளது மற்றும் உயரம் … சரி கொஞ்சம் உயரமாக இருப்பதால், அது கொஞ்சம் தெரிகிறது... அட, வேடிக்கையாக இருக்கிறதா?

MG Comet EV Side

இந்த பரிமாணங்களைப் பாராட்டுவது வடிவமைப்பு. நிறைய பேர் தங்கள் கார்களில் விரும்பும் வினோதமான கூறுகள் மற்றும் 20 லட்ச ரூபாய்க்கு அருகில் உள்ள கார்களில் எதிர்பார்க்கப்படும் பல பிரீமியம் அம்சங்கள். LED ஹெட்லேம்ப்கள், LED DRL பார், டூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன், LED டெயில்லேம்ப்கள் மற்றும் கனெக்டட் பிரேக் லைட் ஆகியவை பிரீமியத்தை உணர போதுமான விஷயங்களை கொடுக்கின்றன. வீல் கேப்களுக்கு பதிலாக அலாய் வீல்கள் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் ஆனால் அதற்கு, நீங்கள் வாங்கிய பிறகு சந்தையில் தேட வேண்டும்.

MG Comet EV Rear

இது ஒரு லைஃப்ஸ்டைல் தேர்வு என்பதால், MG காருடன் பல்வேறு கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களை வழங்குகிறது. தேர்வு செய்ய 5 பெயிண்ட் ஆப்ஷன்கள் மற்றும் குறைந்தது 7 ஸ்டிக்கர் பேக்குகள் உள்ளன. உள்ளே, பாய்கள், ஆக்ஸென்ட்ஸ் மற்றும் இருக்கை கவர்கள் இந்த ஸ்டிக்கர் பேக்குகளுடன் பொருந்துகின்றன. எனவே உங்கள் காமெட்டை நீங்கள் உண்மையிலேயே கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். இந்த அனைத்து எலமென்ட்களுடன், வழங்கப்படும் பிரீமியம் வெளிப்புற பாகங்களுக்கான தோற்றம் இரண்டாம் நிலையாக மாறும்.

உள்ளமைப்பு

MG Comet EV Cabin

இங்குதான் காமெட் மிகப்பெரிய ஆச்சரியத்தை அளிக்கிறது. அனுபவம் மற்றும் வழங்கப்படும் இடத்தின் அடிப்படையில், நீங்கள் கதவைத் திறக்கும்போது நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாக வழங்குகிறது. டாஷ்போர்டு எளிமையானது மற்றும் பிளாஸ்டிக்கின் ஃபிட்  மற்றும் ஃபினிஷ் எங்களை கவர்ந்தது. டாஷ்போர்டின் இடது பக்கத்தில் மென்மையான டச் பேட் உள்ளது மற்றும் ஒட்டுமொத்தமாக, வெள்ளை பிளாஸ்டிக், சில்வர் பூச்சு மற்றும் குரோம் ஆகியவை மிகவும் பிரீமியம். மேனுவல் ஏசி மற்றும் டிரைவ் செலக்டருக்கான ரோட்டரி டயல்கள் கூட மிகவும் நன்றாகவே இருக்கின்றன. அளவைத் தவிர, 15 லட்சத்தை விட கூடுதல் செலவாகும் காருக்கு கேபின் சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.

MG Comet EV Displays

சிறப்பம்சங்கள் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை உருவாக்கும் இரட்டை 10.25-இன்ச் ஸ்கிரீன் ஆகியவை அடங்கும். டிஸ்பிளே நல்ல கிராஃபிக்ஸுடன் நன்றாக உள்ளன, மேலும் அதன் விவரங்களுக்கு இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கு நாம் ஒரு பாராட்டை தெரிவிக்க வேண்டும். நீங்கள் டிரைவ் தகவலை மட்டுமே மாற்ற முடியும் மற்றும் அது வேறுபட்ட தீம்களை பெறவில்லை என்றாலும், கார் மாடல் மிகவும் விரிவானது. அனைத்து வெவ்வேறு விளக்குகள் (பைலட், உயர் பீம், லோ பீம்), கதவுகள், இண்டிகேட்டர்ஸ் மற்றும் பூட் அஜார் ஆகிய தகவல்கள் பெரிய தெளிவான டிஸ்பிளேவில் காட்டப்படுகின்றன.

விட்ஜெட்கள் மூலம் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வகையிலான இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் பயன்படுத்த நன்றாக உள்ளது. கூடுதலாக, இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றைப் பெறுகிறது, இது பிழைகள் இல்லாமல் இயங்குகிறது, இதை வேறு எந்த கம்ப்யூட்டரிலும் நாம் இதுவரை அனுபவித்திருக்காத ஒன்று. சவுண்ட் சிஸ்டம் ஏற்றுக்கொள்ளத்தக்கது, ஆனால் மற்ற யூனிட்டை போல் ஈர்க்கவில்லை. மற்ற அம்சங்களில் ஒரு டச் அப்/டவுன் (டிரைவர்), மேனுவல் ஏசி, ரியர் கேமரா, பகல்/இரவு IVRM, எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபிள் ORVM மற்றும் எலக்ட்ரானிக் பூட் ரிலீஸ் கொண்ட பவர் விண்டோக்கள் ஆகியவை அடங்கும். மூன்று USB பாகங்களும் உள்ளன, இரண்டு டேஷ்போர்டின் கீழ் மற்றும் ஒன்று IRVM கீழ் டாஷ் கேமராக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

MG Comet EV Front SeatsMG Comet EV Rear Seats

முன் இருக்கைகள் சற்று குறுகலாக இருந்தாலும் வசதியாக இருக்கும். 6 அடி வரை உள்ள பயணிகள் கூட ஹெட்ரூம் பற்றி புகார் செய்ய மாட்டார்கள். ஆனால் உயரமானவர்கள் யாராக இருந்தாலும் இருக்கையில் அழுத்துவதை போல் உணர்வார்கள். இருப்பினும், பின் இருக்கைகள் தான் பிரகாசிக்கின்றன. பின் இருக்கைகளை அணுகுவது சற்று கடினம்தான் ஆனால் அங்கு சென்றவுடன், சராசரி அளவுள்ள பெரியவர்களுக்கு முழங்கால் மற்றும் கால் அறை போதுமானதாக இருக்கும். மீண்டும், 6 அடி உயரம் வரை பயணிகள் இடம், அகலம் பற்றி புகார் செய்ய மாட்டார்கள். ஆம், தொடையின் கீழ் ஆதரவு இல்லை, ஆனால் நகரப் பயணங்களில், நீங்கள் அதைத் தவறவிட மாட்டீர்கள்.

InteriorInterior

எவ்வாறாயினும், நீங்கள் தவறவிடுவது நடைமுறை. டேஷ்போர்டில் இரண்டு கப்ஹோல்டர்கள், லேப்டாப்களை கூட வைத்திருக்கக்கூடிய பெரிய டோர் பாக்கெட்டுகள் மற்றும் டாஷ்போர்டில் திறந்த சேமிப்பகத்தைப் பெற்றாலும், க்ளோவ்பாக்ஸ் போன்ற மூடிய இடங்கள் இல்லை. டேஷ்போர்டின் கீழ் இரண்டு ஷாப்பிங் பேக் ஹூக்குகள் உள்ளன, ஆனால் இந்த காரில் கொடுக்காமல் விடப்பட்டிருக்கும் ஒரு விஷயம் பெரிய மத்திய சேமிப்பகமாகும், இது மொபைல், பர்ஸ், பில்கள், கேபிள்கள் என பல விஷயங்களை வைக்க உதவியிருக்கும்.

பாதுகாப்பு

MG Comet EV

காமெட் EBD உடன் ABS, டூயல் ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ISOFIX சைல்டு சீட் மவுண்ட்களுடன் ஸ்டாண்டர்டானதாக வருகிறது. ஆனால் இது இன்னும் கிராஷ் டெஸ்ட் -க்கு உட்படுத்தப்படவில்லை.

பூட் ஸ்பேஸ்

MG Comet EV Boot SpaceMG Comet EV Boot Space

பூட் ஸ்பேஸ் இல்லாததால் இந்தப் பகுதியை காலியாக விடலாம். பின்புற இருக்கைகளுக்குப் பின்னால், நீங்கள் சார்ஜர் பெட்டி மற்றும் பஞ்சர் ரிப்பேர் கிட் ஆகியவற்றுக்கு மட்டுமே இடம் இருக்கிறது. இருப்பினும், இருக்கைகளை தட்டையாக மடித்து, பெரிய சூட்கேஸ்களை எளிதில் இடமளிக்க பயணிகளுக்கான இடத்தை பயன்படுத்தலாம். இருக்கைகளை கூட 50:50 ஸ்பிளிட் செய்ய முடியும், நடைமுறைக்கு சேர்க்கிறது. எனவே ஷாப்பிங் செய்வது போதுமான நடைமுறையாக இருந்தாலும், விமான நிலையத்திலிருந்து ஒருவரை அழைத்துச் செல்வது சற்று கடினமாக இருக்கலாம்.

செயல்பாடு

Performance

ஸ்பெக் ஷீட்டை ஒரு முறை பார்த்தால், இது ஒரு சலிப்பான சிறிய EV என்று நீங்கள் நினைக்கலாம். 42PS/110Nm பவர்/டார்க் என்பது பெருமைக்குரிய எண்கள் அல்ல. ஆனால் அதன் சிறிய வடிவம் காரணமாக, இந்த எண்கள் மந்திரம் செய்கின்றன. காமெட் வியக்கத்தக்க வகையில் சுறுசுறுப்பானது மற்றும் ஓட்டுவதற்கு சுறுசுறுப்பாக இருக்கிறது. 20-40கிமீ/மணி அல்லது 60கிமீ/மணி -லிருந்து விரைவான ஆக்சலரேஷன் என்பதால் இது வலிமையானது. ஆகவே நகரத்தில் ஓவர்டேக் செய்வதையும் இடைவெளிகளில் நுழைய முயற்சி செய்வதையும் சிரமமின்றி செய்ய முடிகிறது. மேலும், கச்சிதமான அளவு காரணமாக, இது வெண்ணெய் போன்று போக்குவரத்தை கடந்து செல்கிறது சமயத்தில் ஆட்டோ ரிக்‌ஷாக்களை கூட பொறாமைப்பட வைக்கிறது.

பெரிய விண்ட்ஸ்கிரீன் மற்றும் ஜன்னல்கள் வெளிப்புறத்தின் ஒட்டுமொத்த பார்வைக்கு உதவுகின்றன, இது ஓட்டுநருக்கு நம்பிக்கையை அளிக்கிறது. பார்க்கிங் செய்வதும் எளிதான காரியம் மற்றும் ஒரு சிறிய நீளம் மற்றும் டேர்னிங் ரேடியஸ் உடன், நீங்கள் எளிதாக ஸ்லாட்டுகளில் திரும்பி விடலாம். பின்புற கேமரா தெளிவாக உள்ளது மற்றும் சிறப்பாக வேலை செய்கிறது, இதன் விளைவாக எளிதான பார்க்கிங் வேலை கிடைக்கும். உங்கள் பெற்றோர்கள் இந்த காரை ஓட்டப் போகிறார்களானாலும், பார்க்கிங் இடங்களைக் கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. இப்போது விற்பனையில் உள்ள நகர போக்குவரத்தில் ஓட்டுவதற்கு மிகவும் சிரமமில்லாத கார் இதுவாகும்.

Performance

மூன்று டிரைவ் மோடுகள் உள்ளன -- இகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் - இவை அதிக வித்தியாசத்தை ஏற்படுத்தாது, ஆனால் சிறந்த அம்சம் என்னவென்றால், நகரத்தில் இக்கோ மோட் கூட பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. மூன்று ரீஜென் மோட்களும் உள்ளன -- லைட், நார்மல் மற்றும் ஹெவி, அவை ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. ஹெவி மோடில், ரீஜென் இன்ஜின் பிரேக்கிங் போல் உணர வைக்கிறது, ஆனால் மென்மையாக இருக்கும். மோட்டாரின் ட்யூன் மற்றும் இந்த மோட்கள் நகர டிரைவிங்குக்கு ஏற்றவாறு டியூன் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் இரண்டு பிரச்சினைகள் உள்ளன. முதலாவதாக, காமெட் கண்டிப்பாக ஒரு நகர கார். இதன் பொருள் மணிக்கு 60 கிமீ அல்லது 80 கிமீ வேகம் வரை ஆக்சலரேஷன் ஏற்றுக்கொள்ளத்தக்கது, இது 105 கிமீ வேகத்தை எட்டினால் இது தடுமாறுகிறது. இது நெடுஞ்சாலைகளில் அதன் பயன்பாட்டை திறம்பட கட்டுப்படுத்துகிறது. இரண்டாவதாக, ஓட்டுநர் நிலை உயரமான ஓட்டுநர்களுக்கு சிரமமாக இருக்கிறது. ஸ்டீயரிங் உயரம் மட்டுமே சரி செய்து கொள்ளக்கூடியது மற்றும் டாஷ்போர்டுக்கு மிக அருகில் உள்ளது. இதன் காரணமாக, நீங்கள் சக்கரத்திற்கு அருகில் உட்கார வேண்டும், அது ஆக்சலரேஷன் மற்றும் பிரேக் பெடல்களை டிரைவருக்கு மிக அருகில் வைக்கிறது, இதன் விளைவாக ஒரு மோசமான நிலை ஏற்படுகிறது. நீங்கள் 6 அடிக்கு மேல் உயரமாக இருந்தால், இது உங்களை அதிகம் தொந்தரவு செய்யும்.

ரிடே அண்ட் ஹண்ட்லிங்

MG Comet EV

சிறிய 12 இன்ச் சக்கரங்களில் சவாரி செய்தாலும், காமெட் நகரத்தில் உள்ள மேடுகளை நன்கு எடுத்துக்கொள்கிறது. ஆம், பயணம் குறைவாகவே உள்ளது, எனவே பெரிய மேடுகளில் கேபினில் உணரப்படுகின்றன, ஆனால் வேகத்தைக் குறைத்தால் போதும், அங்கேயும் நன்கு மெத்தை போல இருக்கும். நல்ல சாலைகள் மற்றும் ஸ்பீட் பிரேக்கர்களில், காமெட் ஒரு ஹேட்ச்பேக் போல வசதியாக உள்ளது மற்றும் முதுகுப் பிரச்சினை உள்ள வயதானவர்களைக் கூட புகார் செய்ய விடாது. ஆனால், நடுக்கங்கள் பின் இருக்கையில் அதிகமாக உணரப்படுகின்றன, எனவே வாகனம் ஓட்டும்போது உங்கள் பயணிகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.

MG Comet EV

மணிக்கு 90 கிமீ வேகத்திற்கு அப்பால் செல்லும் போது, காமெட் சற்று இழுப்பதை போல உணர வைக்கிறது. குறுகிய வீல்பேஸ் காரணமாக, அதிவேகத்தில் நிலைத்தன்மை சமரசம் செய்யப்படுகிறது மற்றும் விரைவான பாதை மாற்றங்கள் பயமாக இருக்கும். இருப்பினும், காமெட் பெரும்பாலும் நகர எல்லைக்குள் இயக்கப்படும் என்பதால், இந்த சிக்கலை நீங்கள் அதிகம் எதிர்கொள்ள மாட்டீர்கள்.

வெர்டிக்ட்

MG Comet EV

எம்ஜி காமெட் உங்களுக்கு குடும்பத்துக்கு கார் தேவைப்படும்போது வாங்கும் கார் அல்ல. உங்களுக்கு நகரத்தில் கூடுதல் கார் தேவைப்படும்போது உங்களுக்கு ஏற்ற கார் இது. இது அற்புதமாகச் கொடுப்பது என்னவென்றால், சிறிய பேக்கேஜிங்கில் பெரிய காரின் கேபின் மற்றும் அம்ச அனுபவத்தை உங்களுக்கு வழங்குகிறது. ஆம், இது ஒரு சிறிய கார், ஆனால் தரம் மற்றும் அனுபவத்தில் வழக்கமான குறைகள் இல்லாமல். இதன் விளைவாக, போக்குவரத்தால் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், அனுபவத்தில் சமரசம் செய்யாத அளவுக்கு வாழ்க்கையில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கும் இது ஒரு சரியான காராகும். பெரிய எஸ்யூவியை அதன் அளவு காரணமாக ஓட்டுவது உங்கள் பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்றால், அவர்கள் காமெட் காரை ஓட்டுவதை விரும்புவார்கள்.

எம்ஜி comet ev இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • சிறிய விகிதாச்சாரத்தில் இருப்பதால், காரை நகர பயன்பாட்டிற்கு ஏற்றதாக ஆக்குகிறது.
  • உட்புறத்தின் பிரீமியம் தோற்றம் மற்றும் ஃபீல்
  • 250கிமீ வரை உரிமை கோரப்பட்ட வரம்பு
View More

நாம் விரும்பாத விஷயங்கள்

  • பின் இருக்கைகளை மடக்காமல் பூட் ஸ்பேஸ் கிடைக்காது
  • மோசமான சாலைகளில் சவாரி அவ்வளவு நன்றாக இல்லை
  • நெடுஞ்சாலைக்கான கார் அல்ல, எனவே ஆல்ரவுண்டராக இருக்காது
space Image

எம்ஜி comet ev கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • MG Comet EV நீண்ட கால விமர்சனம்: 2500 கி.மீ இயக்கப்பட்ட பின்னர்
    MG Comet EV நீண்ட கால விமர்சனம்: 2500 கி.மீ இயக்கப்பட்ட பின்னர்

    காமெட் EV இப்போது எங்களிடம் இருந்து வேறு இடத்துக்கு கைமாறிவிட்டது. எங்கள் கையில் இருந்த போது மேலும் 1000 கி.மீ ஓடியிருந்தது. இப்போது அதன் நோக்கம் எங்களுக்கு மிகவும் தெளிவாக தெரிகிறது.

    By anshAug 22, 2024
  • MG Comet: லாங் டேர்ம் அறிக்கை (1,500 கி.மீ அப்டேட்)
    MG Comet: லாங் டேர்ம் அறிக்கை (1,500 கி.மீ அப்டேட்)

    MG காமெட் ஒரு சிட்டி டிரைவிங்கிற்கான சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் ஒரு சில குறைபாடுகளும் இருக்கின்றன.

    By ujjawallAug 05, 2024
  • MG Comet EV: லாங்-டேர்ம் ரிப்போர்ட் (1,000 கி.மீ அப்டேட்)
    MG Comet EV: லாங்-டேர்ம் ரிப்போர்ட் (1,000 கி.மீ அப்டேட்)

    இந்தியாவின் மிகவும் விலை குறைவான எலக்ட்ரிக் காரான காமெட் EV -யை 1000 கி.மீ ஓட்டிய போது புதிய விஷயங்களை கண்டறிய முடிந்தது.

    By ujjawallJun 05, 2024

எம்ஜி comet ev பயனர் மதிப்புரைகள்

4.3/5
அடிப்படையிலான216 பயனாளர் விமர்சனங்கள்
ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (216)
  • Looks (56)
  • Comfort (69)
  • Mileage (23)
  • Engine (9)
  • Interior (47)
  • Space (34)
  • Price (45)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical
  • A
    ayush patel on Feb 19, 2025
    4.7
    City King Car
    Very good and compact car for driving in city absolutely a great experience to have it. it's an eye catching car too. driving it feels so comfy and good. price range is also good.
    மேலும் படிக்க
  • A
    anonymous on Feb 16, 2025
    4.8
    MG Comet EV
    This car is amazing, the features in this car is not yet come in any of the segment the battery life and the warranty given by MG I feel it?s better over all experience is the best
    மேலும் படிக்க
  • A
    amit on Feb 14, 2025
    5
    Chota Packet Bada Dhamaka
    Best car ever,good interior design,you can easily go 200+ kilometer,no need worry about petrol,as per price this is the best car and everyone can afford this price.I can say chota packet bada dhamaka.
    மேலும் படிக்க
    1
  • H
    hareesha on Feb 13, 2025
    4.5
    Morris Garage
    Yeah, its mileage (or rather, range) is pretty impressive for a compact city car. It offers around 230 km per charge, which is great for urban commuting. Plus, its small size makes it super easy to park .
    மேலும் படிக்க
  • S
    sanjay t on Feb 02, 2025
    5
    Mg Comet Ev
    Super car maintenance easy better 👌 Safety 2air bags and features,specifications the Comet EV is primarily designed for city use and may not be ideal for long highway journeys. Some users have reported that it doesn't offer the same level of comfort on extended trips, and its lightweight build can feel less stable at higher speeds.
    மேலும் படிக்க
  • அனைத்து comet இவி மதிப்பீடுகள் பார்க்க

எம்ஜி comet ev Range

motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்230 km

எம்ஜி comet ev வீடியோக்கள்

  • Full வீடியோக்கள்
  • Shorts
  • Living With The MG Comet EV | 3000km Long Term Review15:57
    Living With The MG Comet EV | 3000km Long Term Review
    5 மாதங்கள் ago35.6K Views
  • Miscellaneous
    Miscellaneous
    3 மாதங்கள் ago
  • MG Comet- Boot Space
    MG Comet- Boot Space
    6 மாதங்கள் ago1 View

எம்ஜி comet ev நிறங்கள்

எம்ஜி comet ev படங்கள்

  • MG Comet EV Front Left Side Image
  • MG Comet EV Front View Image
  • MG Comet EV Rear view Image
  • MG Comet EV Top View Image
  • MG Comet EV Grille Image
  • MG Comet EV Front Fog Lamp Image
  • MG Comet EV Headlight Image
  • MG Comet EV Taillight Image
space Image

Recommended used M g Comet EV alternative சார்ஸ் இன் புது டெல்லி

  • M g Comet EV Plush
    M g Comet EV Plush
    Rs6.43 லட்சம்
    20237,270 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • M g Comet EV Plush
    M g Comet EV Plush
    Rs6.43 லட்சம்
    20237,020 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • M g Comet EV Plush
    M g Comet EV Plush
    Rs6.85 லட்சம்
    20234,000 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • M g Comet EV Plush
    M g Comet EV Plush
    Rs6.44 லட்சம்
    202313,465 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • மினி கூப்பர் எஸ்இ எலக்ட்ரிக்
    மினி கூப்பர் எஸ்இ எலக்ட்ரிக்
    Rs38.00 லட்சம்
    20235,000 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • மினி கூப்பர் எஸ்இ எலக்ட்ரிக்
    மினி கூப்பர் எஸ்இ எலக்ட்ரிக்
    Rs41.00 லட்சம்
    20234,038 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Tata Tia கோ EV XT LR
    Tata Tia கோ EV XT LR
    Rs6.50 லட்சம்
    202320,000 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Tata Tia கோ EV XZ Plus Tech LUX LR
    Tata Tia கோ EV XZ Plus Tech LUX LR
    Rs7.40 லட்சம்
    202340,000 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Citroen e சி3 Feel DT
    Citroen e சி3 Feel DT
    Rs10.10 லட்சம்
    202330,000 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
Ask QuestionAre you confused?

48 hours இல் Ask anythin g & get answer

கேள்விகளும் பதில்களும்

srijan asked on 22 Aug 2024
Q ) What is the range of MG 4 EV?
By CarDekho Experts on 22 Aug 2024

A ) The MG 4 EV is offered in two battery pack options of 51kWh and 64kWh. The 51kWh...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 24 Jun 2024
Q ) What are the available colour options in MG Comet EV?
By CarDekho Experts on 24 Jun 2024

A ) MG Comet EV is available in 6 different colours - Green With Black Roof, Starry ...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
vikas asked on 10 Jun 2024
Q ) What is the body type of MG 4 EV?
By CarDekho Experts on 10 Jun 2024

A ) The MG 4 EV comes under the category of Hatchback body type.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
DevyaniSharma asked on 8 Jun 2024
Q ) What is the body type of MG Comet EV?
By CarDekho Experts on 8 Jun 2024

A ) The MG Comet EV comes under the category of Hatchback car.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 5 Jun 2024
Q ) What is the body type of MG Comet EV?
By CarDekho Experts on 5 Jun 2024

A ) The body type of MG Comet EV is Hatchback.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.16,610Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
எம்ஜி comet ev brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
கையேட்டை பதிவிறக்கவும்

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.7.30 - 10.04 லட்சம்
மும்பைRs.7.47 - 10.43 லட்சம்
புனேRs.7.30 - 10.04 லட்சம்
ஐதராபாத்Rs.7.46 - 10.45 லட்சம்
சென்னைRs.7.43 - 10.37 லட்சம்
அகமதாபாத்Rs.7.30 - 10.04 லட்சம்
லக்னோRs.7.30 - 10.04 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.7.30 - 10.04 லட்சம்
பாட்னாRs.7.68 - 10.75 லட்சம்
சண்டிகர்Rs.7.48 - 10.46 லட்சம்

போக்கு எம்ஜி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்Estimated
    ஏப்ரல் 18, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி m9
    எம்ஜி m9
    Rs.70 லட்சம்Estimated
    மார்ச் 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி cyberster
    எம்ஜி cyberster
    Rs.80 லட்சம்Estimated
    மார்ச் 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு

Popular ஹேட்ச்பேக் cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
அனைத்து லேட்டஸ்ட் ஹேட்ச்பேக் கார்கள் பார்க்க
view பிப்ரவரி offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience