- + 6நிறங்கள்
- + 39படங்கள்
- shorts
- வீடியோஸ்
மஹிந்திரா தார்
மஹிந்திரா தார் இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 1497 சிசி - 2184 சிசி |
ground clearance | 226 mm |
பவர் | 116.93 - 150.19 பிஹச்பி |
torque | 300 Nm - 320 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 4 |
drive type | 4டபில்யூடி / ரியர் வீல் டிரைவ் |
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
![space Image](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
தார் சமீபகால மேம்பாடு
மஹிந்திரா தார் 5-டோர்:
மஹிந்திரா தார் ராக்ஸ் 12.99 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகப்படுதப்பட்டது (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்). 5 டோர் தாரின் நிறைகள் மற்றும் குறைகளை தீமைகள் அதை ஓட்டிய பிறகு குறிப்பிட்டு காட்டியுள்ளோம்.
தார் காரின் விலை எவ்வளவு?
2024 மஹிந்திரா தார் அடிப்படை டீசல் மேனுவல் ரியர்-வீல் டிரைவ் மாடலுக்கு ரூ.11.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் தொடங்குகிறது மற்றும் டாப்-எண்ட் டீசல் ஆட்டோமேட்டிக் 4x4 எர்த் எடிஷனுக்கு ரூ.17.60 லட்சம் வரை விலை போகிறது, இது ஒரு ஸ்பெஷல்- ஃபுல்லி லோடட் எல்எக்ஸ் வேரியன்ட்டின் அடிப்படையில் தார் பதிப்பு ஆகும்.
மஹிந்திரா தாரில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
தார் 2 வேரியன்ட்களில் கிடைக்கும்: ஏஎக்ஸ் ஆப்ஷன் மற்றும் எல்எக்ஸ். இந்த வேரியன்ட்கள் ஃபிக்ஸ்டு ஹார்ட்-டாப் ரூஃப் அல்லது பெட்ரோல் அல்லது டீசல் இன்ஜின்கள் மற்றும் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களின் தேர்வுகளுடன் மேனுவலி-ஃபோல்டபிள் சாஃப்ட்-டாப் ரூஃப் (மாற்றக்கூடியது) ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.
பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது?
மஹிந்திரா தாரின் ஃபுல்லி லோடட் எல்எக்ஸ் வேரியன்ட் பணத்திற்கான அதன் மதிப்பை கொண்டுள்ளது. அடிப்படை AX ஆப்ஷன் வேரியன்ட் விலை குறைவானது ஆனால் ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ மற்றும் ஃபோன் கன்ட்ரோல்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்பீக்கர்களுடன் கூடிய 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கண்ணாடிகள் போன்ற வசதிகள் கொடுக்கப்படவில்லை. இந்த கூடுதல் வசதிகளுக்காக, LX ஆனது சுமார் 50,000-60,000 ரூபாய் வரை விலை கூடுதலாக உள்ளது மேலும் அதற்காக அதிக செலவு செய்ய வேண்டும்.
தார் என்ன வசதிகளை கொண்டுள்ளது ?
மஹிந்திரா தார் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 2 ட்வீட்டர்கள் கொண்ட 4 ஸ்பீக்கர்கள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ESP, ISOFIX, டூயல் முன் ஏர்பேக்குகள் மற்றும் ஹெயிட் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் இருக்கை போன்ற வசதிகளை வழங்குகிறது.
எவ்வளவு விசாலமானது?
மஹிந்திரா தார் 4 பேர் மட்டுமே அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உயரமான பயணிகள் இரு இருக்கை வரிசைகளிலும் பெரிய அளவிலான ஹெட்ரூமை பாராட்டுவார்கள். உயரமான தளம் என்பதால் நீங்கள் பழைய எஸ்யூவி போன்று கேபினுக்குள் ஏற வேண்டும். ஆனால் பின் இருக்கையில் ஏறுவது கொஞ்சம் சிரமமாக இருக்கும், குறிப்பாக உயரமான பெரியவர்கள் அல்லது முழங்கால் பிரச்சனை உள்ள பயனர்கள் முன் இருக்கைக்கு பின்னால் குனிந்து உள்ளே செல்ல வேண்டும். சுமார் 6 அடி அல்லது அதற்கும் குறைவான உயரமுள்ள நான்கு பேர் தார் கேபினுக்குள் எளிதாகப் அமர்ந்து கொள்ளலாம். இருப்பினும் பின் இருக்கையில் இடம் நன்றாக இருந்தாலும் அமரும் நிலை மோசமாக உள்ளது. ஏனென்றால் பின்புற சக்கரம் கேபினுக்குள் இடத்தை அடைத்துக் கொள்கிறது. அனைத்து இருக்கைகளும் பயன்பாட்டில் இருப்பதால், 3-4 சாஃப்ட் பேக்குகள் அல்லது 2 டிராலி பேக்குகளுக்கு போதுமான பூட் ஸ்பேஸ் மட்டுமே கிடைக்கும். அதிக லக்கேஜ் இடத்திற்காக பின் இருக்கை பின்புறத்தை மடிக்கலாம் ஆனால் பின் இருக்கைகளை முழுவதுமாக மடிக்க முடியாது.
என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?
மஹிந்திரா தார் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் வழங்கப்படுகிறது:
-
1.5-லிட்டர் டீசல்: இது தார் ரியர்-வீல் டிரைவுடன் வழங்கப்படும் ஒரே டீசல் இன்ஜின் ஆப்ஷன் ஆகும், மேலும் இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது. மஹிந்திரா XUV3XO உடன் இந்த இன்ஜின் பகிரப்பட்டுள்ளது
-
2-2-லிட்டர் டீசல்: இந்த டீசல் இன்ஜின் தார் 4x4 உடன் வழங்கப்படுகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை ஸ்டாண்டர்டாக பெற்றாலும், இது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. 1.5-லிட்டர் டீசல் நல்ல செயல்திறனை வழங்கும் அதே வேளையில், இந்த பெரிய இன்ஜின் கூடுதல் பஞ்சை கொண்டுள்ளன, இது ஓவர்டேக்குகளை சற்று எளிதாக்குகிறது மற்றும் நெடுஞ்சாலை செயல்திறனை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது.
-
2-லிட்டர் பெட்ரோல்: பெட்ரோல் தார் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கிடைக்கிறது. மேலும் உங்கள் தார் பெட்ரோலை 4x4 அல்லது ரியர்-வீல் டிரைவ் மூலம் பெற்றாலும் இந்த இன்ஜின் இரண்டிலும் வழங்கப்படுகிறது. இது விறுவிறுப்பான செயல்திறன் மற்றும் ரெஸ்பான்ஸிவ் தன்மையை கொண்டுள்ளது, ஓட்டுவதற்கு மென்மையாக இருக்கும் ஆனால் இந்த இன்ஜின் மைலேஜில் அதிக மதிப்பெண் பெறவில்லை.
மஹிந்திரா தார் மைலேஜ் என்ன?
ரியர் வேர்ல்டு சூழ்நிலையில் மஹிந்திரா தார் டீசல் லிட்டருக்கு 11-12.5 கி.மீ மைலேஜை வழங்குகிறது, அதே நேரத்தில் பெட்ரோல் மஹிந்திரா தார் 7-9 கி.மீ லிட்டருக்கு இடையே வழங்குகிறது.
மஹிந்திரா தார் எவ்வளவு பாதுகாப்பானது?
டூயல் முன் ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில்-ஹோல்ட் கண்ட்ரோல், ஹில்-டிசென்ட் கன்ட்ரோல் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு வசதிகளுடன் வருகிறது. குளோபல் என்சிஏபியின் கிராஷ் டெஸ்ட்களில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 4/5 நட்சத்திரங்களைப் பெற்றுள்ளது.
எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?
மஹிந்திரா தார் 6 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. : ரெட் ரேஜ், டீப் கிரே, ஸ்டெல்த் பிளாக், எவரெஸ்ட் ஒயிட், டீப் ஃபாரஸ்ட் மற்றும் டெசர்ட் ப்யூரி.
நாங்கள் விரும்புவது:
டெசர்ட் ப்யூரி, எந்தவொரு காருக்கும் அரிதாகவே வழங்கப்படும் வண்ணம் மற்றும் தனித்துவமான பெயிண்ட் ஃபினிஷிங்கை விரும்புவோருக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்
ஸ்டெல்த் பிளாக், நீங்கள் ஒரு பாக்ஸி எஸ்யூவி யின் மஸ்குலர் தோற்றத்தை பூர்த்தி செய்யும் குறைவான வண்ணங்களை விரும்பினால்
2024 தார் காரை வாங்கலாமா ?
மஹிந்திரா தார் ஒரு ஆஃப்-ரோடு எஸ்யூவி ஆகும், மேலும் இது ஒரு திறமையான வாழ்க்கை முறை வாகனத்தை விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். பழைய வடிவமைப்பு மற்றும் கரடுமுரடான கவர்ச்சிக்காக தார் விரும்புவோருக்கு, தார் ரியர்-வீல் டிரைவ் நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பைச் சமாளிக்க கட்டப்பட்ட சேஸ் ஆகியவற்றின் வழங்குகிறது. எப்போதாவது பயன்படுத்தினாலும் 4x4 உதவியாக இருக்கும். இருப்பினும் அதே விலையில் கிடைக்கும் சாலையை மையமாகக் கொண்ட எஸ்யூவிகள் அதிக வசதி, சிறந்த மற்றும் நடைமுறை உட்புறம், எளிதான கையாளுதல் மற்றும் கூடுதல் வசதிகளையும் வழங்குகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த காருக்கான மாற்று என்ன இருக்கிறது?
மாருதி சுஸூகி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா மஹிந்திரா தார் போன்ற விலையில் நீங்கள் வாங்கக்கூடிய ஆஃப்-ரோடு எஸ்யூவி -கள் ஆகும். நீங்கள் ஒரு எஸ்யூவியின் ஸ்டைல் மற்றும் உயர்ந்த இருக்கை நிலையை மட்டுமே விரும்பினால் ஆனால் சாலைக்கு வெளியே அதிகம் ஓட்ட விரும்பவில்லை என்றால், எம்ஜி ஆஸ்டர், ஹோண்டா எலிவேட், கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஒரே மாதிரியான விலையில் கிடைக்கும்.
தார் ஏஎக்ஸ் opt ஹார்ட் டாப் டீசல் ரியர் வீல் டிரைவ்(பேஸ் மாடல்)1497 சிசி, மேனுவல், டீசல், 9 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.11.50 லட்சம்* | ||
தார் எல்எக்ஸ் ஹார்ட் டாப் டீசல் ரியர் வீல் டிரைவ்1497 சிசி, மேனுவல், டீசல், 9 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.12.99 லட்சம்* | ||
தார் எல்எக்ஸ் ஹார்ட் டாப் ஏடி ரியர் வீல் டிரைவ்1997 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.14.25 லட்சம்* | ||
தார் ஏஎக்ஸ் opt convert top1997 சிசி, மேனுவல், பெட்ரோல், 8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.14.49 லட்சம்* | ||
தார் ஏஎக்ஸ் opt convert top டீசல்2184 சிசி, மேனுவல், டீசல், 9 கேஎம்பிஎல்1 ம ாத காத்திருப்பு | Rs.14.99 லட்சம்* | ||
தார் ஏஎக்ஸ் opt ஹார்ட் டாப் டீசல்2184 சிசி, மேனுவல், டீசல், 9 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.15.15 லட்சம்* | ||
தார் எல்எக்ஸ் ஹார்ட் டாப்1997 சிசி, மேனுவல், பெட்ரோல், 8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.15.20 லட்சம்* | ||
தார் earth எடிஷன்1997 சிசி, மேனுவல், பெட்ரோல், 8 கேஎம்பிஎல்1 ம ாத காத்திருப்பு | Rs.15.40 லட்சம்* | ||
தார் எல்எக்ஸ் ஹார்ட் டாப் mld டீசல்2184 சிசி, மேனுவல், டீசல், 9 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.15.70 லட்சம்* | ||
தார் எல்எக்ஸ் convert top டீசல்2184 சிசி, மேனுவல், டீசல், 9 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.15.90 லட்சம்* | ||
மேல் விற்பனை த ார் எல்எக்ஸ் ஹார்ட் டாப் டீசல்2184 சிசி, மேனுவல், டீசல், 9 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.15.95 லட்சம்* | ||
தார் earth எடிஷன் டீசல்2184 சிசி, மேனுவல், டீசல், 9 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.16.15 லட்சம்* | ||
தார் எல்எக்ஸ் convert top ஏடி1997 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.16.65 லட்சம்* | ||
தார் எல்எக்ஸ் ஹார்ட் டாப் ஏடி1997 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.16.80 லட்சம்* | ||
தார் earth எடிஷன் ஏடி1997 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.17 லட்சம்* | ||
தார் எல்எக்ஸ் ஹார்ட் டாப் mld டீசல் ஏடி2184 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 9 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.17.15 லட்சம்* | ||