புதிய Mahindra Thar Earth Edition கார் பற்றிய விவரங்களை 5 படங்களின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்
published on மார்ச் 05, 2024 07:03 pm by rohit for மஹிந்திரா தார்
- 26 Views
- ஒரு கருத்தை எழுதுக
எர்த் எடிஷன் பாலைவனத்தால் ஈர்க்கப்பட்ட தோற்றத்தைக் கொண்டுள்ளது. வெளிப்புறத்தில் ஒரு புத்துணர்ச்சியூட்டும் பெய்ஜ் நிற பெயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேபினுக்குள்ளேயும் பெய்ஜ் கலர் கொடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா தார் ஆர்வலர்கள் இப்போது பிரத்யேக ‘எர்த் எடிஷனால்’ மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது டாப்-ஸ்பெக் LX டிரிம் அடிப்படையிலான வேரியன்ட் ஆகும். வழக்கமான வேரியன்ட்களை விட ரூ.40000 கூடுதல் விலையில் இந்த சிறப்பு எடிஷன் செயல்பாடுகளின் தனித்துவமான கலவையை வழங்குகிறது. இது இப்போது டீலர்ஷிப்களில் கிடைக்கிறது அதன் குறிப்பிடத்தக்க தோற்றம் மற்றும் கவர்ச்சிகரமான வசதிகளைப் பற்றி பார்ப்போம்:
முன்பக்கம்
எஸ்யூவி -யின் முன்பகுதியில் உள்ள ஒரே மாற்றமாக கிரில்லில் உள்ள குரோம் ஸ்லேட்டுகளுக்கு புதிய பெய்ஜ் ஃபினிஷ் உள்ளது. அதன் சிக்னேச்சரான வட்ட வடிவ ஹாலோஜன் ஹெட்லைட்கள் மற்றும் வலுவான பம்பரைத் தக்கவைத்து மஹிந்திரா தார் எர்த் எடிஷன் நவீன நேர்த்தியுடன் அதன் முன் அழகை வெளிப்படுத்துகிறது.
பக்கவாட்டு தோற்றம்
ஸ்பெஷல் எடிஷன் உண்மையிலேயே அதன் தனித்துவமான அம்சங்களுடன் தனித்து நிற்கிறது. இதில் பி-பில்லரை அலங்கரிக்கும் 'எர்த் எடிஷன்' பேட்ஜ்கள் பெய்ஜ் கலருடன் கூடிய அலாய் வீல்கள் மற்றும் கதவுகளை அலங்கரிக்கும் குன்றுகளை போல இருக்கும் தீம் ஆகியவை அடங்கும். இந்த தனித்துவமான வடிவமைப்பு மஹிந்திரா தார் எர்த் எடிஷனுக்கு தனித்தன்மையையும் ஸ்டைலையும் சேர்க்கின்றன.
பின்பக்கம்
மஹிந்திரா தாரின் ரியர் ப்ரொஃபைல் எந்த மாற்றமும் இன்றி அப்படியே உள்ளது. டெயில்கேட் பொருத்தப்பட்ட ஸ்பேர் வீல் மற்றும் 'தாரின்' பெயருடன் அலங்கரிக்கப்பட்ட செவ்வக டெயில்லைட்கள் போன்ற அதன் சின்னச் சின்ன அம்சங்களை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த சிறப்பம்சங்கள் காரின் அழகையும் அடையாளத்தையும் பாதுகாக்கிறன.
தொடர்புடையது: மஹிந்திரா தார் விற்பனையில் பாதி ரியர்-வீல் டிரைவ் வேரியன்ட்களில் இருந்து வருகிறது
கேபின்
மஹிந்திரா தார் எர்த் எடிஷனின் இன்டீரியர் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது டூயல்-டோன் லெதரெட் சீட் கவர்கள் கான்ட்ராஸ்ட் பெய்ஜ் ஸ்டிச் மற்றும் ஹெட்ரெஸ்ட்களில் மேடுகள் போன்ற எம்போசிங் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக பெய்ஜ் நிற பினிஷ் கதவு பேனல்களில் 'தார்' புனைப்பெயரை அலங்கரிக்கின்றன அதே போல் சுற்றிலும் அமைக்கப்பட்ட AC வென்ட் சென்டர் கன்சோல் மற்றும் ஸ்டீயரிங் வீல் கேபின் சூழலுக்கு நேர்த்தியை சேர்க்கிறது.
மஹிந்திரா தார் எர்த் எடிஷனில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் க்ரூஸ் கண்ட்ரோல் கீலெஸ் என்ட்ரி மற்றும் உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான டிரைவர் சீட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் பாதுகாப்பு அம்சங்களில் டூயல் முன்பக்க ஏர்பேக்குகள் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை அடங்கும்.
இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள்
-
6-ஸ்பீட் MT மற்றும் 6-ஸ்பீட் AT உடன் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (152 PS/300 Nm)
-
6-ஸ்பீட் MT மற்றும் 6-ஸ்பீட் AT உடன் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் (132 PS/300 Nm)
மஹிந்திரா பிரத்தியேகமாக தார் எர்த் எடிஷனை 4-வீல்-டிரைவ் (4WD) வெர்ஷனில் மட்டுமே வழங்குகிறது. இதற்கு மாறாக எஸ்யூவியின் வழக்கமான வேரியன்ட்களும் ரியர்-வீல்-டிரைவ் (RWD) ஆப்ஷனுடன் வருகின்றன. சிறிய 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் அதே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் இரண்டிலும் கிடைக்கிறது.
விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா தார் ரூ. 11.25 லட்சம் முதல் ரூ. 17.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது ஃபோர்ஸ் கூர்க்கா மற்றும் மாருதி ஜிம்னியுடன் நேரடியாகப் போட்டியிடுகிறது.
மேலும் படிக்க: Mahindra XUV300 முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது ஃபேஸ்லிப்டட் வெர்ஷன் அறிமுகத்துக்கு பின்னர் மீண்டும் தொடங்கும்
மேலும் படிக்க: தார் ஆட்டோமேட்டிக்
0 out of 0 found this helpful