புதிய XUV 3XO காரின் புக்கிங்குகள் உள்பட மொத்தம் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆர்டர்களை நிலுவையில் வைத்துள்ள மஹிந்திரா நிறுவனம்
published on மே 17, 2024 08:23 pm by shreyash for மஹிந்திரா ஸ்கார்பியோ
- 108 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஸ்கார்பியோ N மற்றும் ஸ்கார்பியோ கிளாஸிக் ஆகியவை அதிக எண்ணிக்கையிலான ஆர்டர்கள் நிலுவையில் இருப்பதற்கு முக்கியமான காரணமாகும்.
மஹிந்திரா சமீபத்திய நிதிநிலை அறிக்கை கூட்டத்தின் போது மே 2024 -க்கான நிலுவையில் உள்ள ஆர்டர்களின் மாடல் வாரியான எண்ணிக்கை விவரங்களை வெளியிட்டது. மஹிந்திரா ஸ்கார்பியோ, தார், XUV700 மற்றும் பொலேரோ போன்ற மாடல்கள் அடங்கிய மொத்த ஆர்டர்கள் தற்போது 2.2 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. மஹிந்திரா எஸ்யூவி -களுக்கான நிலுவையில் உள்ள மாடல் வாரியான முன்பதிவு எண்ணிக்கை விவரங்கள் இங்கே:
மாடல் வாரியாக நிலுவையில் உள்ள ஆர்டர்கள்
மஹிந்திரா ஸ்கார்பியோ N மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் |
86,000 |
மஹிந்திரா தார் (RWD உட்பட) |
59,000 |
மஹிந்திரா XUV 3XO |
50,000 |
மஹிந்திரா XUV700 |
16,000 |
மஹிந்திரா பொலேரோ நியோ மற்றும் பொலேரோ |
10,000 |
மஹிந்திரா ஸ்கார்பியோ N, ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் தார் என ஒட்டுமொத்தமாக நிலுவையில் உள்ள மொத்த ஆர்டர்களின் எண்ணிக்கையில் 65 சதவீதத்திற்கும் அதிகமானவை. அதாவது 1.45 லட்சம் முன்பதிவுகள் இந்த கார்களுக்கானவை ஆகும். ஸ்கார்பியோ N மற்றும் ஸ்கார்பியோ கிளாஸிக் ஆகியவை மாதத்திற்கு சராசரியாக 17,000 முன்பதிவுகளை பெறுகின்றன. அதே நேரத்தில் தார் சராசரியாக 7,000 முன்பதிவுகளை பெறுகிறது. இருப்பினும் பொலேரோ மற்றும் பொலேரோ நியோ கார்களுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆர்டர்களே நிலுவையில் உள்ளன. அவற்றின் சராசரி மாதாந்திர முன்பதிவுகள் 9,500 யூனிட்களாக உள்ளது. இது ஸ்கார்பியோ உடன்பிறப்புகளுக்கு பிறகு அதிகமான எண்ணிக்கையாகும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட XUV 3XO ஒரு மணி நேரத்திற்குள் 50,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது. அதன் காரணமாக மஹிந்திரா -வின் ஒட்டுமொத்த முன்பதிவுகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. XUV 3XO -க்கான டெலிவரிகள் வரும் மே மாதம் 26 -ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன் பிறகு நிலுவையில் உள்ள ஆர்டர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க: முன்பதிவு தொடங்கி ஒரே மணி நேரம்தான், 50,000 -க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை தட்டி தூக்கிய புதிய Mahindra XUV 3XO கார்
மஹிந்திரா எஸ்யூவிகளுக்கான சராசரி காத்திருப்பு நேரம்
XUV700 |
7 மாதங்கள் |
மஹிந்திரா ஸ்கார்பியோ N |
6 மாதங்கள் |
மஹிந்திரா தார் |
4 மாதங்கள் |
மஹிந்திரா XUV400 EV |
4 மாதங்கள் |
மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாஸிக் |
3 மாதங்கள் |
பொலேரோ |
3 மாதங்கள் |
பொலேரோ நியோ |
3 மாதங்கள் |
அட்டவணையில் பார்த்தபடி மஹிந்திரா XUV700 இந்தியாவின் முதல் 20 நகரங்களில் 7 மாதங்கள் வரை அதிகபட்ச சராசரி காத்திருப்பு காலத்தை கொண்டுள்ளது. XUV700 க்கு அடுத்ததாக ஸ்கார்பியோ N ஆனது 6 மாதங்கள் வரையிலான அதிகபட்ச சராசரி காத்திருப்பு காலத்தைக் கொண்டுள்ளது.
ஸ்கார்பியோ N, ஸ்கார்பியோ கிளாஸிக், தார் மற்றும் XUV700 போன்ற சில மஹிந்திரா எஸ்யூவி -களுக்கான நிலுவையில் உள்ள ஆர்டர்கள் பிப்ரவரி 2024 உடன் ஒப்பிடும்போது குறைந்திருந்தாலும், அது இன்னும் 2 லட்சம் யூனிட்களாக உள்ளது. இதற்கான காரணம் உற்பத்தி மற்றும் விநியோக அமைப்பில் உள்ள தடைகள் உட்பட பல்வேறு விஷயங்கள் காரணமாக சொல்லப்படுகின்றன. சராசரியாக மஹிந்திரா தற்போது ஒவ்வொரு மாதமும் 48,000 புதிய முன்பதிவுகளை பெறுகிறது. அதே நேரத்தில் ஆர்டர்கள் ரத்தாகும் விகிதம் ஒரு மாதத்தில் 10 சதவீதம் ஆக உள்ளது.
மேலும் படிக்க: ஸ்கார்பியோ டீசல்
0 out of 0 found this helpful