• English
    • Login / Register

    முன்பதிவு தொடங்கி ஒரே மணி நேரம்தான், 50,000 -க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை தட்டி தூக்கிய புதிய Mahindra XUV 3XO கார்

    மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO க்காக மே 17, 2024 06:48 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 61 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    XUV 3XO காரின் முன்பதிவு தொடங்கிய முதல் 10 நிமிடங்களிலேயே எண்ணிக்கை 27,000 -ஐ தாண்டியது.

    Mahindra XUV 3XO

    • XUV 3XO காரின் டெலிவரிகள் வரும் 26 -ம் தேதி முதல் தொடங்கும்.

    • மஹிந்திரா ஏற்கனவே XUV 3XO 10,000 யூனிட்டுகளுக்கு மேல் உற்பத்தி செய்து தயாராக வைத்துள்ளது.

    • XUV 3XO இரண்டு டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது.

    • 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், டூயல் ஜோன் ஏசி, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ADAS ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    • இதன் அறிமுக விலை ரூ.7.49 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.

    மஹிந்திரா XUV 3XO  -காருக்கான விலை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. மேலும் மஹிந்திரா அதிகாரப்பூர்வமாக இதற்கான முன்பதிவுகளை மே 15 அன்று திறந்தது. வழக்கம் போலவே  XUV 3XO வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  ஒரு மணி நேரத்திற்குள் 50,000 முன்பதிவுகளைப் பெற்றது. முன்பதிவு தொடங்கிய முதல் 10 நிமிடங்களில் 27,000 பேர் இதை பதிவு செய்துள்ளதாக மஹிந்திரா கூறுகிறது.

    XUV 3XO -க்கான டெலிவரிகள் வரும்  26 -ம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மஹிந்திரா இதுவரை XUV 3XO காரின் 10,000 யூனிட்டுகளுக்கு மேல் தயாரித்துள்ளதாகக் கூறுகிறது. XUV700 காரை டெலிவரி செய்வதில் ஏற்பட்ட தாமதம் போன்ற சூழ்நிலைகளை தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் மஹிந்திரா தெரிவித்துள்ளது.

    XUV 3XO பற்றிய கூடுதல் விவரங்கள்

    Mahindra XUv 3XO ENgine

    XUV 300 -ன் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட XUV 3XO முன்பு இருந்த அதே இன்ஜின்ன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. அவற்றின் விவரங்கள் கீழே உள்ளன:

    இன்ஜின்

    1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல்

    1.2-லிட்டர் T-GDi (டர்போ-பெட்ரோல்)

    1.5 லிட்டர் டீசல்

    பவர்

    112 PS

    130 PS

    117 PS

    டார்க்

    200 Nm

    230 Nm வரை

    300 Nm

    டிரான்ஸ்மிஷன்

    6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

    6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

    6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT

    XUV 3XO இப்போது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டரை அதன் டர்போ-பெட்ரோல் இன்ஜின்ன் ஆப்ஷன்களுடன் பெறுகிறது. 112 PS 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் முன்பு 6-ஸ்பீடு AMT உடன் வழங்கப்பட்டது.

    வசதிங்கள் மற்றும் பாதுகாப்பு

    Mahindra XUV 3XO cabin

    XUV 3XO காரில் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷன்), 7-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் செக்மென்ட்-முதல் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வருகிறது. இது க்ரூஸ் கன்ட்ரோல், டூயல் ஜோன் ஏசி மற்றும் வயர்லெஸ் சார்ஜர் போன்ற வசதிகளையும் பெறுகிறது.

    பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது 6 ஏர்பேக்குகள் (ஸ்டண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ரியர்வியூ கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது. இது அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் லேன்-கீப் அசிஸ்ட் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களின் முழு தொகுப்புடனும் வருகிறது.

    விலை & போட்டியாளர்கள்

    மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO ரூ.7.49 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் (அறிமுக, எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், ரெனால்ட் கைகர், மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய கார்களுடன் போட்டியிடுகின்றது.

    மேலும் படிக்க: XUV 3XO AMT

    was this article helpful ?

    Write your Comment on Mahindra எக்ஸ்யூவி 3XO

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience