- + 13நிறங்கள்
- + 16படங்கள்
- shorts
- வீடியோஸ்
மஹிந்திரா எக்ஸ்யூவி700
மஹிந்திரா எக்ஸ்யூவி700 இன் முக்கிய அம்சங்கள்
engine | 1999 cc - 2198 cc |
பவர் | 152 - 197 பிஹச்பி |
torque | 360 Nm - 450 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 5, 6, 7 |
drive type | fwd / ஏடபிள்யூடி |
mileage | 17 கேஎம்பிஎல் |
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- சன்ரூப்
- powered முன்புறம் இருக்கைகள்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- ஏர் ஃபியூரிபையர்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- adas
- வென்டிலேட்டட் சீட்ஸ்
- 360 degree camera
- டிரைவ் மோட்ஸ்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
எக்ஸ்யூவி700 சமீபகால மேம்பாடு
மஹிந்திரா XUV700 -யின் விலை எவ்வளவு?
மஹிந்திரா XUV700 விலை ரூ. 13.99 லட்சம் முதல் ரூ. 24.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது. ஜூலை முதல் மஹிந்திரா நிறுவனம் ரூ. 2.20 லட்சம் வரை விலையை குறைத்துள்ளது, அதுவும் டாப்-ஸ்பெக் AX7 வேரியன்ட்களுக்கு மட்டுமே.
மஹிந்திரா XUV700 -ல் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
XUV700 2 டிரிம்களில் கிடைக்கிறது: MX மற்றும் AX. AX டிரிம் மேலும் 4 சப் வேரியன்ட்களாக பிரிக்கப்பட்டுள்ளன: AX3, AX5, AX5 செலக்ட் மற்றும் AX7. AX7 ஒரு சொகுசு பேக்கை பெறுகிறது, இதனுடன் சில கூடுதல் வசதிகள் கிடைக்கும்.
பணத்திற்கு மிகவும் மதிப்புமிக்க வேரியன்ட் எது?
MX வேரியன்ட் பட்ஜெட்டில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல தேர்வாகும். ஏனெனில் இது பேஸ் வேரியன்ட்டுக்காக வசதிகளின் நல்ல பட்டியலுடன் வருகிறது. AX5 என்பது பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க வேரியன்ட் ஆகும். மேலும் ADAS, சைடு ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற சில முக்கிய பாதுகாப்பு மற்றும் கம்ஃபோர்ட் வசதிகள் இதில் கிடைக்காது என்றாலும் இதை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
மஹிந்திரா XUV700 என்ன வசதிகளைப் பெறுகிறது?
மஹிந்திரா XUV700 ஆனது C-வடிவ LED DRL -கள் கொண்ட LED ஹெட்லேம்ப்கள், கார்னரிங் விளக்குகள் கொண்ட LED ஃபாக் லேம்ப்கள், கதவைத் திறக்கும் போது வெளிவரும் ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், 18-இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்கள் மற்றும் ஒரு பெரிய பனோரமிக் சன்ரூஃப் போன்ற பல வசதிகளைக் கொண்டுள்ளது.
உள்ளே XUV700 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்டுள்ளது. ஓட்டுநருக்கு 6-வே பவர்டு சீட் கிடைக்கிறது, அதே நேரத்தில் ஆட்டோ ஹெட்லேம்ப்கள் மற்றும் வைப்பர்கள் வசதியை கொண்டுள்ளன. மற்ற கம்ஃபோர்ட் வசதிகளில் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. ஆடியோ சிஸ்டம், 12 ஸ்பீக்கர்கள் வரை, சிறந்த சவுண்ட் குவாலிட்டி உடன் கிடைக்கின்றன மற்றும் இன்டெகிரேட்டட் அலெக்சா இணைப்பும் உள்ளது. XUV700 ஆனது நிகழ்நேர வாகன கண்காணிப்பு, ரிமோட் லாக்/அன்லாக் மற்றும் ரிமோட் ஏசி கண்ட்ரோல் போன்ற 70 கனெக்டட் கார் வசதிகளையும் இது கொண்டுள்ளது.
எவ்வளவு விசாலமானது?
XUV700 5 , 6- மற்றும் 7-சீட்டர் அமைப்பில் கிடைக்கிறது. மேனுவல் அட்ஜெஸ்ட்டபிள் லும்பார் சப்போர்ட்டிவ் உடன் கிடைக்கும். இரண்டாவது வரிசையில் இப்போது கேப்டன் இருக்கைகளின் ஆப்ஷன்களுடன் வருகிறது. பெரியவர்கள் மூன்றாவது வரிசையில் தங்கலாம். ஆனால் அதிக நீண்ட பயணங்களுக்கு ஏற்றதாக இருக்காது.
என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?
XUV700 இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது:
-
2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (200 PS/380 Nm).
-
2.2-லிட்டர் டீசல் இன்ஜின் (185 PS/450 Nm வரை).
இரண்டு இன்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கின்றன. டாப்-ஸ்பெக் AX7 மற்றும் AX7 L டிரிம்கள் டீசல் ஆட்டோமேட்டிக் பவர்டிரெய்னுடன் ஆப்ஷனலான ஆல்-வீல் டிரைவ் (AWD) அமைப்பையும் வழங்குகின்றன.
மஹிந்திரா XUV700 மைலேஜ் என்ன?
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷனைப் பொறுத்து மைலேஜ் மாறுபடும்: - பெட்ரோல் மற்றும் டீசல் மேனுவல் வேரியன்ட்கள் 17 கிமீ/லி மைலேஜை வழங்குகின்றன. - பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியன்ட், லிட்டருக்கு 13 கிமீ மைலேஜை வழங்கும். - டீசல் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் மைலேஜ் 16.57 கிமீ/லி வழங்கும்.
இருப்பினும் நிஜ உலக மைலேஜ் குறைவாக இருக்கும் மற்றும் உங்கள் ஓட்டும் நடை மற்றும் சாலை நிலைமைகளின் அடிப்படையில் மாறுபடும்.
மஹிந்திரா XUV700 எவ்வளவு பாதுகாப்பானது?
XUV700 காரில் 7 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றை உள்ளடக்கியது. டாப்-எண்ட் வேரியன்ட்களில் அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங், லேன்-கீப்பிங் அசிஸ்ட், ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) பொருத்தப்பட்டுள்ளன. மேலும் XUV700 ஆனது குளோபல் NCAP கிராஷ் சோதனைகளில் வயது வந்தோருக்கான 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டையும், குழந்தைகளில் பயணிப்பவர்களுக்கு நான்கு நட்சத்திரங்களையும் பெற்றுள்ளது.
எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?
XUV700 MX வேரியன்ட்களுக்கு ஏழு வண்ணங்களில் வருகிறது: எவரெஸ்ட் ஒயிட், ஸ்பார்க்ளிங் சில்வர், ரெட் ரேஜ், டீப் ஃபாரஸ்ட், பர்ன்ட் சியன்னா, மிட்நைட் பிளாக் மற்றும் நபோலி பிளாக். AX வேரியன்ட்கள் இந்த அனைத்து வண்ணங்களிலும் கூடுதல் எலக்ட்ரிக் ப்ளூ ஷேடிலும் கிடைக்கின்றன. AX வேரியன்ட்களில், நாபோலி பிளாக், டீப் ஃபாரஸ்ட் மற்றும் பர்ன்ட் சியன்னா தவிர அனைத்து வண்ணங்களும் ஆப்ஷனலான இரட்டை-டோன் நபோலி பிளாக் ரூஃப் உடன் கிடைக்கும்.
XUV700 அனைத்து கலர் ஆப்ஷன்களிலும் அழகாக இருக்கிறது. இருப்பினும் குறைவான பொதுவான ஒன்றை நீங்கள் விரும்பினால், ஃபியரி சியன்னா மற்றும் டீப் ஃபாரஸ்ட் ஆகியவை சிறந்த தேர்வுகள். ஸ்போர்ட்டி மற்றும் தனித்துவமான தோற்றத்திற்கு, நாபோலி பிளாக் ரூஃப் உடன் கூடிய பிளேஸ் ரெட் பிரமிக்க வைக்கிறது, அதே நேரத்தில் எலக்ட்ரிக் ப்ளூ அதன் பிரத்தியேகத்திற்காக உடனடியாக தனித்து நிற்கும்.
நீங்கள் 2024 மஹிந்திரா XUV700 காரை வாங்க வேண்டுமா?
XUV700 ஸ்டைலான தோற்றம், மிரட்டலான சாலை தோற்றம், விசாலமான மற்றும் வசதிகள் நிறைந்த உட்புறம், வசதியான சவாரி தரம் மற்றும் சக்திவாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இது ஒரு நீண்ட அம்ச பட்டியல் மற்றும் பல இருக்கை கட்டமைப்புகளுடன் வருகிறது. போட்டியுடன் ஒப்பிடும்போது இது சில வசதிகளைத் தவறவிட்டாலும், இது இன்னும் பெரிய மதிப்பை வழங்குகிறது மற்றும் நீங்கள் குடும்ப எஸ்யூவியைத் தேடுகிறீர்களானால், இது உங்கள் பரிசீலனையில் இருக்க வேண்டும்.
இந்த காருக்கான மாற்று என்ன இருக்கிறது?
மஹிந்திரா XUV700 இன் 5-சீட்டர் வேரியண்ட் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், டாடா ஹாரியர், எம்ஜி ஆஸ்டர், மற்றும் எம்ஜி ஹெக்டர் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது. இதற்கிடையில் 7-சீட்டர் வேரியன்ட் டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் பிளஸ், மற்றும் ஹூண்டாய் அல்கஸார் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது.
எக்ஸ்யூவி700 எம்எக்ஸ் 5str(பேஸ் மாடல்)1999 cc, மேனுவல், பெட்ரோல், 15 கேஎம் பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.13.99 லட்சம்* | ||
எக்ஸ்யூவி700 எம்எக்ஸ் இ 5str1999 cc, மேனுவல், பெட்ரோல், 15 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.14.49 லட்சம்* | ||
எக்ஸ்யூவி700 எம்எக்ஸ் 7str1999 cc, மேனுவல், பெட்ரோல், 15 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.14.49 லட்சம்* | ||
எக்ஸ்யூவி700 எம்எக்ஸ் 5str டீசல்2198 cc, மேனுவல், டீசல், 17 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.14.59 லட்சம்* | ||
எக்ஸ்யூவி700 எம்எக்ஸ் இ 7str1999 cc, மேனுவல், பெட்ரோல், 15 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.14.99 லட்சம்* | ||