- + 10நிறங்கள்
- + 28படங்கள்
- shorts
- வீடியோஸ்
மாருதி இ விட்டாரா
மாருதி இ விட்டாரா இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 500 km |
பவர் | 142 - 172 பிஹச்பி |
பேட்டரி திறன் | 49 - 61 kwh |
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
இ விட்டாரா சமீபகால மேம்பாடு
Maruti e Vitara -வின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
மாருதி இ விட்டாராவை ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் காட்சிப்படுத்தியது. இது மாருதியின் முதல் எலக்ட்ரிக்கல் எஸ்யூவி -யாக இருக்கும்.
Maruti e Vitara எப்போது வெளியிடப்படும்?
இ விட்டரா கார் மார்ச் 2025 -க்குள் வெளியாகும்.
Maruti e Vitara -வின் எதிர்பார்க்கப்படும் விலை என்ன?
இந்தியாவில் மாருதியின் முதல் எலக்ட்ரிக் காரான e விட்டாரா காரின் விலை சுமார் ரூ. 17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Maruti e Vitara -என்ன வசதிகளைப் பெறுகிறது?
மாருதி இ விட்டாரா 10.25 இன்ச் டச் ஸ்கிரீன், 10.1 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஆட்டோ ஏசி, ஆம்பியன்ட் லைட்ஸ், வென்டிலேட்டட் முன் இருக்கைகளுடன் 10 வே பவர்டு டிரைவர் சீட், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகள் உள்ளன.
Maruti e Vitara - வில் என்ன பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்கள் உள்ளன?
மாருதி இ விட்டாரா இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது: 49 kWh மற்றும் 61 kWh, அதன் விவரங்கள்:
-
49 kWh: 144 PS மற்றும் 192.5 Nm வழங்கும் முன்-வீலில் பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் மோட்டார் (FWD) உடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
61 kWh: FWD ஆக கிடைக்கிறது, இது 174 PS மற்றும் 192.5 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.
Maruti e Vitara -வில் என்ன பாதுகாப்பு வசதிகள் உள்ளன ?
பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா, ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், ஒரு எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஆல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இது டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TMPS) லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றுடன் தொகுப்புடன் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் கொலிஷன் மிட்டிகேஷன் அசிஸ்ட் போன்ற வசதிகளுடன் வருகிறது.
Maruti e Vitara -வில் என்ன வண்ண ஆப்ஷன்கள் உள்ளன?
மாருதி இ விட்டாரா நெக்ஸான் புளூ, கிரேண்டூர் கிரே, ஸ்ளென்டிட் சில்வர், ஆர்டிக் வொயிட், ஆப்யூலன்ட் ரெட், புளூயிஷ் பிளாக் என ஆறு மோனோடோன் வண்ணங்களிலும், ஆர்க்டிக் ஒயிட், ஆப்யூலன்ட் ரெட், ஸ்பிளெண்டிட் சில்வர் மற்றும் லேண்ட் ப்ரீஸ் கிரீன் வித் புளூயிஷ் பிளாக் ரூஃப் ஆகிய நான்கு டூயல்-டோன் ஆப்ஷன்களிலும் கிடைக்கும்.
Maruti e Vitara -வுக்காக காத்திருக்க வேண்டுமா?
உங்கள் அடுத்த தினசரி காராக ஒரு EV -யை வாங்க நினைத்தால், மாருதி இ விட்டாரா உங்கள் பட்டியலில் இருக்க வேண்டும். மாருதி தனது முதல் EV -யில் கம்ஃபோர்ட் மற்றும் வசதிக்கு உதவும் வசதிகளுடன் 500 கி.மீ.க்கு மேல் கிளைம்டு ரேஞ்ச் உடன் பல்வேறு ஓட்டுநர் காட்சிகளுக்கு எஸ்யூவி -யை பயன்படுத்த அனுமதிக்கிறது. e விட்டாரா ஆனது மாருதி காரில் பல முதல் முறை வசதிகளுடன் வருகிறது. இதில் லெவல் 2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) மற்றும் 7 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக போன்ற பாதுகாப்பு வசதிகள் அடங்கும்.
Maruti e Vitara -க்கு மாற்று என்ன?
MG ZS EV, டாடா கர்வ் EV, மற்றும் ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் போன்ற கார்களுக்கு இ விட்டாரா உள்ளது.
மாருதி இ விட்டாரா இன் சாதகம் & பாதகங்கள்
நாம் விரும்பும் விஷயங்கள்
- மாருதியின் முதல் முழு மின்சார எஸ்யூவி
- கோரப்பட்ட வரம்பு 550 கிமீக்கு அருகில் இருக்கலாம்
- ஆல் வீல் டிரைவிற்காக டூயல் மோட்டார் அமைப்பைக் கொண்டிருக்கும்
நாம் விரும்பாத விஷயங்கள்
- ஆல்-வீல் டிரைவ் இந்திய சந்தைக்கு கொடுக்கப்படாமல் போகலாம்
மாருதி இ விட்டாரா விமர்சனம்
