- + 6நிறங்கள்
- + 25படங்கள்
- shorts
- வீடியோஸ்
டாடா கர்வ்
டாடா கர்வ் இன் முக்கிய அம்சங்கள்
engine | 1199 cc - 1497 cc |
ground clearance | 208 mm |
பவர் | 116 - 123 பிஹச்பி |
torque | 170 Nm - 260 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
drive type | fwd |
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- சன்ரூப்
- advanced internet பிட்டுறேஸ்
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- டிரைவ் மோட்ஸ்
- வென்டிலேட்டட் சீட்ஸ்
- ஏர் ஃபியூரிபையர்
- 360 degree camera
- blind spot camera
- adas
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
கர்வ் சமீபகால மேம்பாடு
டாடா கர்வ் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
டாடா கர்வ் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.10 லட்சத்தில் தொடங்குகிறது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா).
கர்வ் காரின் விலை எவ்வளவு?
டாடா கர்வ் விலையை பொறுத்தவரையில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்கள் ரூ.10 லட்சத்திலும், டீசல் வேரியன்ட்கள் ரூ.11.50 லட்சத்திலும், TGDi டர்போ-பெட்ரோல் வேரியன்ட்கள் ரூ.14 லட்சத்திலும் தொடங்குகிறது. (அறிமுக விலை எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா).
டாடா கர்வ் -ல் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
டாடா கர்வ் 4 டிரிம்களில் கிடைக்கும்: ஸ்மார்ட், ப்யூர்+, கிரியேட்டிவ் மற்றும் அக்கம்பிளிஸ்டு. ஸ்மார்ட் வேரியன்ட்டை தவிர கடைசி 3 டிரிம்கள் கூடுதல் வசதிகள் உடனும் வரும். மேலும் பல சப் வேரியன்ட்களும் உள்ளன.
கர்வ் என்ன வசதிகளை கொண்டுள்ளது?
டாடா கர்வ் -ல் பட்டியலில் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவஸ் டிஸ்ப்ளே மற்றும் சப்-வூஃபர் உடன் கூடிய 9-ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகள் உள்ளன. இது ஒரு ஏர் ஃபியூரிபையர், ஒரு பனோரமிக் சன்ரூஃப், மல்டி கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் , வென்டிலேட்டட் முன் சீட்கள், 6 வே பவர்டு டிரைவர் சீட், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஃப்ளஷ் வேரியன்ட் டோர் ஹேண்டில்கள் ஆகியவையும் உள்ளன.
என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?
டாடா மோட்டார்ஸ் கர்வ் காரை 3 இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் வழங்குகிறது: 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின், புதிய 1.2-லிட்டர் T-GDI டர்போ-பெட்ரோல் மற்றும் நெக்ஸான்-சோர்ஸ்டு 1.5-லிட்டர் டீசல் ஆகும். அவற்றின் குறிப்பிட்ட விவரங்கள் இங்கே:
-
1.2-லிட்டர் T-GDI டர்போ-பெட்ரோல்: இது 2023 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா மோட்டார்ஸின் புதிய இன்ஜின். இது 125 PS/225 Nm உற்பத்தி செய்கிறது மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆப்ஷனலான டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் (DCT) கிடைக்கும்.
-
1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 120 PS/170 Nm 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7-ஸ்பீடு DCT உடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
1.5 லிட்டர் டீசல்: 118 PS மற்றும் 260 Nm அவுட்புட்டை கொடுக்கும் நெக்ஸான் உடன் கர்வ் அதன் டீசல் இயந்திரத்தை ஷேர் செய்து கொள்ளும். இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7-ஸ்பீடு DCT உடன் இணைக்கப்பட்டுள்ளது.
டாடா கர்வ் எவ்வளவு பாதுகாப்பானது?
5-ஸ்டார் தரமதிப்பீடு பெற்ற வாகனங்களை உருவாக்குவதில் டாடாவின் நற்பெயர் நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கர்வ் அதே வெற்றியைப் பிரதிபலிக்கும் மற்றும் அதன் கிராஷ் டெஸ்ட் சோதனையில் சிறப்பான மதிப்பெண்னை பெறும் என்று எதிர்பார்க்கிறோம். இது 6 ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் சென்சார்கள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட பல வசதிகள் ஸ்டாண்டர்டாக வருகின்றன. ஹையர் வேரியன்ட்கள் 360 டிகிரி கேமராவை பிளைண்ட் வியூ டிடெக்ஷன், முன் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்மற்றும் லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் கிராஷ் அவாய்டன்ஸ் அசிஸ்ட் உட்பட லெவல்-2 ADAS ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
நீங்கள் டாடா கர்வ் காரை வாங்க வேண்டுமா?
வழக்கமான பாணியிலான காம்பாக்ட் எஸ்யூவி -களில் இருந்து தனித்து நிற்கும் ஒரு கார் மற்றும் தனித்துவமான ஸ்டைலிங் பேக்கேஜை நீங்கள் விரும்பினால் டாடா கர்வ்வை நீங்கள் தேர்வு செய்யலாம். மேலும் இது நெக்ஸனின் குணங்களை இன்னும் அதிக வசதிகள் மற்றும் ஒரு புதிய இன்ஜின் ஆப்ஷன் உடன் கொடுக்கிறது - இவை அனைத்தும் பெரிய காரில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த காருக்கான மாற்று என்ன?
டாடா கர்வ் சிட்ரோன் பசால்ட் உடன் நேரடியாக போட்டியிடுகிறது. இது அறிமுகப்படுத்தப்படும் விலையில் ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா போன்ற பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவிகளுடனும் போட்டியிடுகிறது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹோண்டா எலிவேட், ஃபோக்ஸ்வேகன் டைகுன், கியா செல்டோஸ் மற்றும் ஸ்கோடா குஷாக். இருப்பினும், நீங்கள் மேலே உள்ள ஒரு பகுதிக்குச் சென்று மஹிந்திரா XUV700 போன்ற எஸ்யூவிகளின் மிட்-ஸ்பெக் வேரியன்ட்களைக் கருத்தில் கொள்ளலாம். மஹிந்திரா ஸ்கார்பியோ N , டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர். ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்டின் மிட்-ஸ்பெக் வேரியன்ட்களும் டாடாவின் இந்த எஸ்யூவி-கூபே விலையை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும் ஃபோக்ஸ்வேகன் விர்டஸ், ஸ்கோடா ஸ்லாவியா, ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சுஸூகி சியாஸ் போன்ற செடான்களையும் நீங்கள் பார்க்கலாம். இவற்றின் விலையும் கர்வ்வ் போன்றே உள்ளது.
கருத்தில் கொள்ள வேண்டிய மற்ற விஷயங்கள்: ஏற்கனவே தொடங்கப்பட்ட கர்வ் -ன் ஆல்-எலக்ட்ரிக் பதிப்பையும் நீங்கள் கவனத்தில் கொள்ளலாம். இதன் விலை 17.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. நெக்ஸான் EV போலவே கர்வ் EV ஆனது 585 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சில் பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை பெறுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள டாடா ஷோரூமிலும் கர்வ்வ் EV-யை சென்று பார்க்கலாம்.
கர்வ் ஸ்மார்ட்(பேஸ் மாடல்)1199 cc, மேனுவல், பெட்ரோல், 12 கேஎம்பிஎல்2 months waiting | Rs.10 லட்சம்* | ||
கர்வ் பியூர் பிளஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 12 கேஎம்பிஎல்2 months waiting | Rs.11.17 லட்சம்* | ||