Tata Curvv மற்றும் Tata Nexon: பாரத் NCAP மதிப்பீடுகள் ஒப்பீடு
published on அக்டோபர் 18, 2024 05:44 pm by shreyash for டாடா கர்வ்
- 65 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா கர்வ் முன்பக்க ஆஃப்செட் டிஃபார்மபிள் பேரியர் க்ராஷ் டெஸ்ட்டில் நெக்ஸானை விட டிரைவரின் மார்புக்கு சிறந்த பாதுகாப்பை கொடுத்தது.
இந்தியாவின் சொந்த கிராஷ் டெஸ்ட் அமைப்பான பாரத் என்சிஏபி (புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம்) டாடா கர்வ் மற்றும் டாடா நெக்ஸான் உள்பட 3 டாடா கார்களுக்கான புதிய முடிவுகளை வெளியிட்டது. இரண்டு எஸ்யூவி -களும் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றன. பாதுகாப்பான வாகனங்களை தயாரிப்பதில் டாடாவின் நற்பெயரை இது மீண்டும் ஒரு முறை உறுதி செய்துள்ளது. கர்வ் மற்றும் நெக்ஸான் க்கான கிராஷ் டெஸ்ட் முடிவுகளை இங்கே விரிவாக ஒப்பிடுவோம்.
முடிவுகள்
அளவீடுகள் |
டாடா கர்வ் |
டாடா நெக்ஸான் |
பெரியவர்களுக்கான பாதுகாப்பு (AOP) மதிப்பெண் |
29.50/32 |
29.41/32 |
குழந்தைகளுக்கான பாதுகாப்பு (COP) மதிப்பெண் |
43.66/49 |
43.83/49 |
பெரியவர்களுக்கான பாதுகாப்பு மதிப்பீடு |
5-ஸ்டார் |
5-ஸ்டார் |
குழந்தைகளுக்கான பாதுகாப்பு மதிப்பீடு |
5-ஸ்டார் |
5-ஸ்டார் |
ஃபிரன்டல் ஆஃப்செட் டிஃபார்மபிள் பேரியர் டெஸ்ட் ஸ்கோர் |
14.65/16 |
14.65/16 |
சைட் மூவபிள் டிஃபார்மபிள் பேரியர் டெஸ்ட் ஸ்கோர் |
14.85/16 |
14.76/16 |
டைனமிக் ஸ்கோர் (குழந்தைகளுக்கான பாதுகாப்பு) |
22.66/24 |
22.83/24 |
டாடா கர்வ்
முன் ஆஃப்செட் டிஃபார்மபிள் தடுப்புச் சோதனையில் கர்வ் டிரைவர் மற்றும் இணை ஓட்டுநரின் தலை, கழுத்து மற்றும் மார்புக்கு நல்ல பாதுகாப்பு கிடைத்தது. இருப்பினும் ஓட்டுநரின் இடது காலுக்கான பாதுகாப்பு சிறியதாக மதிப்பிடப்பட்டது. சைடு மூவபிள் பேரியர் சோதனையில் டிரைவரின் தலை மற்றும் வயிற்றுப் பகுதிக்கான பாதுகாப்பு நன்றாக இருந்தது. அதே நேரத்தில் மார்பு போதுமான மதிப்பீட்டைப் பெற்றது. பக்கவாட்டு சோதனையில் ஓட்டுநரின் தலை, மார்பு, வயிறு மற்றும் இடுப்பு பகுதி அனைத்துக்கும் நல்ல பாதுகாப்பு கிடைத்தது.
18 மாத குழந்தையின் முன் மற்றும் பக்க பாதுகாப்பிற்கு, டைனமிக் மதிப்பெண் முறையே 8 -க்கு 7.07 மற்றும் 4 -க்கு 4 கிடைத்தது. அதேபோல 3 வயது குழந்தைக்கு டைனமிக் மதிப்பெண் 8 -க்கு 7.59 மற்றும் 4 -க்கு 4 கிடைத்தது.
மேலும் பார்க்க: Tata Curvv மற்றும் Citroen Basalt: பாரத் NCAP மதிப்பீடுகள் ஒப்பீடு
டாடா நெக்ஸான்
ஃபிரன்டல் ஆஃப்செட் டிஃபார்மபிள் தடுப்பு விபத்து சோதனையில் நெக்ஸான் ஓட்டுநர் மற்றும் பயணிகளின் தலை மற்றும் கழுத்து ஆகிய இரண்டிற்கும் நல்ல பாதுகாப்பு கிடைத்தது. ஓட்டுநரின் மார்புக்கான பாதுகாப்பு போதுமானதாக இருந்தது. அதே நேரத்தில் இணை ஓட்டுநருக்கு இது நல்லது என்று மதிப்பிடப்பட்டது. ஓட்டுனர் மற்றும் துணை ஓட்டுநரின் இரு கால்களுக்கும் போதிய பாதுகாப்பு கிடைத்தது. சைடு மூவபிள் பேரியர் சோதனைக்கான முடிவுகள் கர்வ் -ன் முடிவுகள் போலவே இருந்தன. இதில் டிரைவரின் தலை மற்றும் வயிற்றுப் பகுதிக்கான பாதுகாப்பு நன்றாக இருந்தது. அதே நேரத்தில் மார்பு போதுமான மதிப்பீட்டைப் பெற்றது. இதேபோல் ஓட்டுநரின் தலை, மார்பு, வயிறு மற்றும் இடுப்பு பகுதி அனைத்தும் பக்கவாட்டு சோதனையில் நல்ல பாதுகாப்பைப் பெற்றன.
18 மாத குழந்தையின் முன் மற்றும் பக்க பாதுகாப்பிற்கு, டைனமிக் ஸ்கோர் முறையே 8 -க்கு 7 மற்றும் 4 -க்கு 4 கிடைத்தது. அதேபோல 3 வயது குழந்தைக்கு டைனமிக் மதிப்பெண் 8 -க்கு 7.83 ஆகவும், 4க்கு 4 ஆகவும் இருந்தது.
முக்கியமான விவரங்கள்
ஃபிரன்டல் ஆஃப்செட் பேரியர் சோதனையில் நெக்ஸானை விட டாடா கர்வ்வில் டிரைவரின் மார்புக்கு சிறந்த பாதுகாப்பு கிடைத்தது. ஓட்டுநரின் வலது கால் வளைவில் ஓரளவு பாதுகாக்கப்பு கிடைத்தது, அதே நேரத்தில் நெக்ஸானில் போதுமான பாதுகாப்பு மட்டுமே கிடைத்தது.
காரில் உள்ள பாதுகாப்பு வசதிகள்
டாடா கர்வ் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய இரண்டும் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் EBD உடன் ABS போன்ற பாதுகாப்பு வசதிகளுடன் வருகின்றன. இந்த கார்களில் 360-டிகிரி கேமராவும் உள்ளன, இதன் மூலம் பிளைண்ட் வியூ மானிட்டரிங் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளது. அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ் (ஏடிஏஎஸ்) போன்ற வசதிகளையும் கர்வ் கொண்டுள்ளது.
விலை & போட்டியாளர்கள்
டாடா கர்வ் |
டாடா நெக்ஸான் |
ரூ.10 லட்சம் முதல் ரூ.19 லட்சம் வரை |
ரூ.8 லட்சம் முதல் ரூ.15.50 லட்சம் வரை |
கர்வ் -க்கு உள்ள ஒரே ஒரு நேரடி போட்டியாளர் சிட்ரோன் பசால்ட் மட்டுமே. மேலும் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற சிறிய எஸ்யூவி -களுக்கு மாற்றாகவும் இதை கருதலாம். மறுபுறம் நெக்ஸான் ஆனது மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, சோனெட் மற்றும் மஹிந்திரா XUV 3XO போன்றவற்றுக்கு போட்டியாக உள்ளது
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: டாடா கர்வ் ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful