2024 பண்டிகை சீசனில் ரூ.20 லட்சத்துக்கு கீழ் எதிர்பார்க்கப்படும் 6 கார்கள் !
published on ஆகஸ்ட் 29, 2024 07:04 pm by anonymous for மாருதி டிசையர்
- 67 Views
- ஒரு கருத்தை எழுதுக
எஸ்யூவி -களுடன் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் சப்-4m செடான் வேரியன்ட் கார்கள் மட்டுமில்லாமல் பிற பிரிவுகளிலும் புதிய ஜெனரேஷன் மாடல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வரை அனைத்து பட்ஜெட் பிரிவுகளிலும் கார் வாங்குபவர்களுக்கு 2024 ஒரு நம்பிக்கைக்குரிய ஆண்டாக உள்ளது. மேலும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்திலும் நிறைய கார்கள் வெளியாகவுள்ளன. குறிப்பாக எஸ்யூவிகளை தாண்டி ஒரு கார்களை வாங்க நினைப்பவர்களுக்கு நிறைய ஆப்ஷன்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பண்டிகைக் காலத்தில் ரூ.20 லட்சத்துக்கு கீழே அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் அனைத்து கார்களின் விவரங்களும் இங்கே.
டாடா கர்வ்
வெளியீட்டு தேதி: செப்டம்பர் 2, 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.10.50 லட்சம்
டாடா கர்வ் காரின் EV வெர்ஷன் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது மேலும் இந்த பண்டிகைக் காலத்தில் அதன் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) பதிப்பு அறிமுகமாகவுள்ளது. EV பதிப்புக்கான முன்பதிவுகள் நடந்து வருகின்றன. இதன் விலை செப்டம்பர் 2, 2024 அன்று அறிவிக்கப்படும். கர்வ்வ் இவி மற்றும் ICE வெர்ஷன் இரண்டும் ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் அதை வேறுபடுத்துவதற்கான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம்.
டாடா ICE-பவர்டு கர்வ் காரை பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் பல டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் கிடைக்கும். நெக்ஸான் காரில் இருந்து டீசல் இன்ஜின் வருகிறது மேலும் கர்வ் டாடாவின் புதிய 1.2-லிட்டர் T-GDi (டேரக்ட் இன்ஜெக்ஷன்) பெட்ரோல் இன்ஜினும் அறிமுகமாகவுள்ளது. மேலும், டீசல்-டிசிடி (டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்) மிக்ஸிங் உடன் வரும் இந்தியாவின் முதல் பட்ஜெட் மார்கெட் காராக கர்வ்வ் இருக்கும். 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், பவர்டு ஓட்டுனர் இருக்கை மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற கூடுதல் வசதிகளுடன் கர்வ் வரும்.
ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்
வெளியீட்டு தேதி: செப்டம்பர் 9, 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.17 லட்சம்
ஹூண்டாய் நிறுவனம் செப்டம்பர் 9, 2024 அன்று 2024 அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது மூன்று வரிசை எஸ்யூவி ஏற்கனவே வெளியிடப்பட்டது. ஹூண்டாய் நிறுவனம் ஏற்கெனவே இந்த காருக்கான முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கியுள்ளது. புதிய வடிவிலான கிரில், H-வடிவ கனெக்டட் LED DRLகள் மற்றும் மல்டி-ஸ்போக் 18-இன்ச் அலாய் வீல்களுடன் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட அல்கஸார் ஸ்டைலாக தெரிகிறது. இரண்டாம் வரிசை பயணிகளுக்கான சீட் வென்டிலேஷன் (6-சீட்டர் வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்), டூயல் ஜோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் லெவல்-2 ADAS ஆகியவை அடங்கும். ஹூண்டாய் 2024 அல்காஸரை தற்போதைய மாடலில் உள்ள அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் வழங்கும்., அது டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் பிளஸ் மற்றும் மஹிந்திரா XUV700 மூன்று வரிசை வேரியன்ட்களுடன் போட்டியிடும்.
மேலும் படிக்க: 2024 ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா: படங்களில் வடிவமைப்பு ஒப்பீடு
எம்ஜி வின்ட்சர் இவி
வெளியீட்டு தேதி: செப்டம்பர் 11, 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.20 லட்சம்
நீங்கள் எஸ்யூவி களை தவிர வேறு ஏதாவது ஒன்றை வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால், செப்டம்பர் 11 அன்று MG அறிமுகப்படுத்த உள்ள விண்ட்சர் இவி ஆல்-எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் காருக்காக காத்திருக்கலாம். இது ஏற்கெனவே வூலிங் கிளவுட் EV பெயரில் உலகளவில் விற்கப்படுகிறது, இது இந்தியாவில் MG -யின் மூன்றாவது EV ஆகும். சர்வதேச மாடல் 50.6 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் 136 PS மற்றும் 200 Nm ஐ அவுட்புட்டை கொடுக்கிறது. இது CLTC (சீனா லைட் டூட்டி வெஹிக்கிள் டெஸ்ட் சைக்கிள்) 460 கிமீ வரம்பைக் கொண்டுள்ளது. இந்தியா-ஸ்பெக் மாடலுக்கான வரம்பு புள்ளிவிவரங்களில் மாற்றம் இருக்கலாம். இது 15.6-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் பனோரமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜிங் போன்ற கூடுதல் வசதிகள் உடன் வலாம்.
2024 மாருதி டிசையர்
வெளியீட்டு தேதி: தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.7 லட்சம்
கடந்த மே மாதம் நான்காவது தலைமுறை ஸ்விஃப்ட் அறிமுகமானதில் இருந்து 2024 மாருதி சுஸூகி டிசையர் காருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வெளியீட்டு தேதியை மாருதி இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் இந்த பண்டிகைக் காலத்தில் டிசையர் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கிறோம். இது 2024 ஸ்விஃப்ட் போன்ற வெளிப்புற மற்றும் உட்புறம் ஆகிய இரண்டிற்கும் ஒரே அப்டேட்கள் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய 9-இன்ச் டச் ஸ்கிரீன், சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகியவை ஸ்டாண்டர்டாக கிடைக்கலாம். புதிய ஸ்விஃப்ட்டில் காணப்படும் அதே 82 PS 1.2-லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உடன் வரலாம்.
மேலும் படிக்க: இந்த பண்டிகைக் காலத்தைக் கவனிக்க வரவிருக்கும் கார் அறிமுகம்
2024 ஹோண்டா அமேஸ்
வெளியீட்டு தேதி: தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.7.30 லட்சம்
சமீபத்தில் அடுத்த ஜென் ஹோண்டா அமேஸின் ஸ்பை ஷாட்கள் ஆன்லைனில் வெளியாகின. ஆகவே இந்த ஆண்டு இறுதிக்குள் காரின் அறிமுகம் இருக்கலாம் என்பதை உறுதி செய்ய முடிகிறது. புதிய அமேஸ் சப்-4 மீ வேரியன்ட் ஆனது பழைய மாடலை போலவே தட்டையான பின்புறம் உள்ளிட்ட வெளிப்புற வடிவமைப்பை அப்படியே தக்க வைத்துக் கொள்ளும். தற்போதைய மாடலில் உள்ள அதே 90 PS/110 Nm 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இது இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழைய மாடலை விட புதிய அமேஸ் சில பயனுள்ள மற்றும் நவீன வசதிகள் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாருதி சுஸூகி டிசையர், டாடா டிகோர் மற்றும் ஹூண்டாய் ஆரா ஆகியவற்றுக்கு போட்டியாக தொடரும்.
டாடா நெக்ஸான் சிஇன்ஜி
வெளியீட்டு தேதி: தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.9 லட்சம்
எஸ்யூவி பிரிவில் கவனம் செலுத்தி வரும் டாடா மோட்டார்ஸ் இந்த பண்டிகை காலத்தில் நெக்ஸான் காரின் CNG பொருத்தப்பட்ட வேரியன்ட்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சப்காம்பாக்ட் எஸ்யூவி, பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 ஆண்டில் முன்னதாக வெளியிடப்பட்டது, இதில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜின் இருக்கும். இது இந்தியாவின் முதல் டர்போசார்ஜ் செய்யப்பட்ட சிஇன்ஜி காராகவும் இருக்கும். மற்ற டாடா சிஇன்ஜி மாடல்களில் காணப்படும் அதே டூயல் சிலிண்டர் தொழில்நுட்பத்தையும் இது கொண்டிருக்கும். இது சிஇன்ஜி கிட் உடன் கூட போதுமான பூட் இடத்தை உறுதி செய்யும். ஏற்கனவே டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் சிஇன்ஜி பதிப்புகளில் பார்த்தது போல ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் நெக்ஸான் CNG -யை டாடா வழங்கலாம். பெட்ரோல் இன்ஜின்-பவர்டு நெக்ஸான் உடன் ஒப்பிடும்போது கூடுதல் வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஸ்டாண்டர்டான வேரியன்ட்களை விட சுமார் ரூ. 1 லட்சம் கூடுதல் விலையில் இது கிடைக்கும்.
மேலே குறிப்பிட்டுள்ள எந்த காரை பார்க்க நீங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதைப் பற்றி கீழே உள்ள கமென்ட் பாக்ஸில் உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிரவும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.