2024 பண்டிகைக் காலத்தைக் கலக்க வரும் புதிய கார்கள்
published on ஆகஸ்ட் 28, 2024 01:59 pm by anonymous for டாடா கர்வ்
- 45 Views
- ஒரு கருத்தை எழுதுக
வரவிருக்கும் பண்டிகை காலத்தில் மாஸ்-மார்க்கெட் மற்றும் பிரீமியம் வாகன உற்பத்தியாளர்களிடமிருந்து புதிய மாடல்கள் வெளியாக உள்ளன. அவற்றில் ஃபேஸ்லிஃப்டட் ஹூண்டாய் அல்கஸார் மற்றும் டாடா கர்வ் ஆகிய கார்களும் அடக்கம்.
2024 ஆம் ஆண்டின் பண்டிகைக் காலம் நெருங்கி வருகிறது. அந்த சமயத்தில் நிறைய கார் தயாரிப்பாளர்கள் புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்காக தயாராகி வருகிறார்கள். அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கும் நிறைய புதிய தேர்வுகள் கிடைக்கும். பட்ஜெட் மார்கெட் மற்றும் பிரீமியம் மார்கெட் என இரண்டிலும் இந்த பண்டிகை காலத்தில் பல கார்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு பண்டிகைக் காலத்தில் அறிமுகமாகவுள்ள கார்களின் விவரங்கள் இங்கே உள்ளன.
டாடா கர்வ்
வெளியீடு: செப்டம்பர் 2
எதிர்பார்க்கப்படும் விலை: 10.50 லட்சம்
டாடா நிறுவனம் விரைவில் கர்வ் இன்டர்னல் கம்பஸ்டன் (ICE)-இன்ஜின் பதிப்பை அறிமுகம் செய்யவுள்ளது. எலக்ட்ரிக் எஸ்யூவி-கூபே ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது மற்றும் அதன் விலை விவரங்கள் வரும் செப்டம்பர் 2 அன்று அறிவிக்கப்படவுள்ளன. இது கர்வ் EV போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் அதன் EV வெர்ஷன் காரிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம்.
கர்வ் ஆனது 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் சீட்கள், பவர்டு டிரைவர் சீட் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற கூடுதல் வசதிகளுடன் வரும். கர்வ் ICE காரில் இரண்டு டர்போ-பெட்ரோல் உட்பட 3 இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் கிடைக்கும்.
டாடா நெக்ஸான் சிஎன்ஜி
அறிமுகம்: தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 9 லட்சம்
2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் நெக்ஸான் வெளியிடப்பட்டது. வரும் மாதங்களில் சிஎன்ஜி வெர்ஷன் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்யூவி சில முறை சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றும் மற்ற டாடா CNG மாடல்களில் காணப்படும் அதே டூயல் சிலிண்டர் தொழில்நுட்பம் இதிலும் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. குறிப்பிடத்தக்க வேரியன்ட்யில், நெக்ஸான் CNG ஆனது 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உடன் வரும். ஆகவே இது ஒரு தனித்துவமான காராக இருக்கும். இது மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வழங்கப்படலாம். விலையைப் பொறுத்தவரை இதேபோன்ற பெட்ரோல் இன்ஜின் கொண்ட வேரியன்ட்களில் இருந்து ரூ. 1 லட்சம் கூடுதல் விலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
2024 மாருதி சுஸூகி டிசையர்
அறிமுகம்: தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 7 லட்சம்
நான்காவது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் அதைத் தொடர்ந்து அதன் சப்-4m செடான் இணை காரான டிசையர் புதிய தலைமுறை அவதாரத்தில் விரைவில் அறிமுகமாக உள்ளது. 2024 டிசைரின் சோதனைக் கார்கள் ஏற்கனவே படம் பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் உள்ளேயும் வெளியேயும் ஸ்விஃப்ட் காரில் உள்ளதை போன்ற அப்டேட்கள் இருக்கும்.
தற்போதைய மாடலில் 2024 டிசையர் ஒரு பெரிய இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டை உள்ளடக்கும் மற்றும் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளை ஸ்டாண்டர்டாக பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய 82 PS 1.2-லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும். இது ஸ்விஃப்ட்டில் உள்ளதை போன்றே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கிடைக்கும்.
ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்
வெளியீடு: செப்டம்பர் 9
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 17 லட்சம்
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட அல்கஸார் காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் இரண்டையும் ஹூண்டாய் வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ முன்பதிவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. வெளிப்புற மாற்றங்களில் புதிய வடிவிலான கிரில், புதிய ஆல் LED லைட்ஸ் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும். உட்புற அப்டேட்கள் 2024 கிரெட்டா போன்ற டேஷ்போர்டு அமைப்பு, இரண்டாவது வரிசை பயணிகளுக்கான இருக்கை வென்டிலேஷன் (6-சீட்டர் வேரியன்ட்களில் மட்டும்) மற்றும் டூயல் ஜோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 3-வரிசை எஸ்யூவி நான்கு டிரிம்களில் வழங்கப்படும் மற்றும் தற்போதைய மாடலை போலவே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வரும்.
2024 கியா கார்னிவல்
வெளியீடு: அக்டோபர் 3
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 40 லட்சம்
கியாவின் பிரீமியம் MPV -யான கார்னிவல் கார் 2023 -ல் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டது. இப்போது விரைவில் புதிய ஜென் பதிப்பில் மீண்டும் வர உள்ளது. குளோபல் வெர்ஷனில் இன்ஃபோடெயின்மென்ட்டுக்கான 12.3-இன்ச் டூயல்-ஸ்கிரீன் செட்டப் மற்றும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேஷன் மற்றும் பவர்டு இருக்கைகள் மற்றும் 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. இன்ஜின் ஆப்ஷன்களில் 287 PS/353 Nm 3.5-லிட்டர் V6 பெட்ரோல் மற்றும் 242 PS/367 Nm 1.6 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜின் ஆகியவற்றுடன் வரும்..
கியா நிறுவனம் 2024 கார்னிவலை இந்தியாவில் அதே போன்ற வசதிகளுடன் வழங்கலாம் என்று எதிர்பார்க்கிறோம். அதே நேரத்தில் இந்தியா-ஸ்பெக் மாடலின் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் என்ன கிடைக்கும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
எம்ஜி வின்ட்சர் இவி
வெளியீடு: செப்டம்பர் 11
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 20 லட்சம்
MG நிறுவனம் இந்திய சந்தையில் செப்டம்பர் மாதம் விண்ட்சர் இவி என்ற ஆல்-எலக்ட்ரிக் கிராஸ்ஓவரை அறிமுகப்படுத்த உள்ளது. இது MG இந்தியாவின் மூன்றாவது EV மற்றும் சர்வதேச அளவில் வழங்கப்படும் வூலிங் கிளவுட் EV -யின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாகும். அதன் சமீபத்திய டீஸர் 15.6-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்தோனேசியாவில் இது 136 PS மற்றும் 200 Nm ஐ அவுட்புட்டை கொடுக்கும் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் 50.6 kWh பேட்டரி பேக்கை பெறுகிறது மற்றும் CLTC கிளைம்டு 460 கி.மீ ரேஞ்சை கொண்டுள்ளது. இந்தியா-ஸ்பெக் மாடலின் தொழில்நுட்ப விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
2024 ஹோண்டா அமேஸ்
அறிமுகம்: தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை
எதிர்பார்க்கப்படும் விலை: 7.30 லட்சம்
அடுத்த தலைமுறை ஹோண்டா அமேஸ் காரின் ஸ்பை ஷாட்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. ஆகவே இந்த ஆண்டு இறுதிக்குள் காரின் அறிமுகம் இருக்கலாம் என்பதை உறுதி செய்ய முடிகிறது. புதிய அமேஸ் சப்-4 மீ வேரியன்ட் ஆனது பழைய மாடலை போலவே தட்டையான பின்புறம் உள்ளிட்ட வெளிப்புற வடிவமைப்பை அப்படியே தக்க வைத்துக் கொள்ளும். தற்போதைய மாடலில் உள்ள அதே 90 PS/110 Nm 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இது இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழைய மாடலை விட புதிய அமேஸ் சில பயனுள்ள மற்றும் நவீன வசதிகள் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாருதி சுஸூகி டிசையர், டாடா டிகோர் மற்றும் ஹூண்டாய் ஆரா ஆகியவற்றுக்கு போட்டியாக தொடரும்.
கியா EV9
வெளியீடு: அக்டோபர் 3
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.80 லட்சம்
கியா நிறுவனம் வரும் அக்டோபர் 3 அன்று 2024 கார்னிவல் உடன், EV9 காரை அறிமுகம் செய்யவுள்ளது. இது EV6 க்குப் பிறகு கியாவின் இரண்டாவது பிரீமியம் எலக்ட்ரிக் காராக இருக்கும். ஆகவே இந்திய சந்தையில் இந்த கார் கியாவின் ஃபிளாக்ஷிப் EV காராக மாறும். கடந்த ஆண்டு உலகளவில் இது வெளியிடப்பட்டது. ஆல் எலக்ட்ரிக் எஸ்யூவி இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது: 76.1 kWh மற்றும் 99.8 kWh, பிந்தையது அதிகபட்சமாக 541 கி.மீ WLTP ரேஞ்ச் கொண்டதாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது. இது BMW iX1 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் EQE எலக்ட்ரிக் எஸ்யூவி -களுக்கு குறைவான விலையில் கிடைக்கும் காராக இருக்கும்.
மெர்சிடிஸ்-பென்ஸ் EQS 680 எஸ்யூவி
வெளியீடு: செப்டம்பர் 5
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ 3.5 கோடி
ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனங்களின் பக்கம் திரும்பி பார்க்கும் போது மெர்சிடிஸ்-பென்ஸ் செப்டம்பர் மாதம் இந்தியாவில் EQS 680 எஸ்யூவி -யை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியா-ஸ்பெக் EQS 680 எஸ்யூவி -ன் சரியான எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் மெர்சிடிஸ் பென்ஸ் EQS 680 ஐ 658 PS மற்றும் 950 Nm வரை அவுட்புட்டை கொடுக்கும் டூயல் எலக்ட்ரிக் மோட்டார்களுடன் வழங்குகிறது என்பதை நாங்கள் அறிவோம். இது 600 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது. இது ஆல்-வீல் டிரைவ் டிரெய்னுடன் (AWD) வரும். ஆல்-எலக்ட்ரிக் எஸ்யூவி முன்பக்கத்தில் மூன்று ஸ்கிரீன்கள் மற்றும் பின்புற பயணிகளுக்கு இரண்டு 11.6-இன்ச் டிஸ்ப்ளேக்கள் இருக்கும். 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் பல டிரைவர் அசிஸ்ட் ஆகிய கூடுதல் வசதிகள் கிடைக்கும்.
2024 மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ்
அறிமுகம்: தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 80 லட்சம்
இந்தியாவில் EQA ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டின் போது, மெர்சிடிஸ்-பென்ஸ் ஆறாவது தலைமுறையின் இ-கிளாஸ் LWB வெளியீட்டையும் உறுதிப்படுத்தியது. சரியான தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தியா-ஸ்பெக் E-கிளாஸ் இன்ஜின் ஆப்ஷன்கள் தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் இது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது 14.4-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இரண்டு 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று ஓட்டுநருக்கு மற்றொன்று முன் பயணிகளுக்கு), ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் 21-ஸ்பீக்கர் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள எந்த காரை பார்க்க நீங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதைப் பற்றி கீழே உள்ள கமென்ட் பாக்ஸில் உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிரவும்.
விலை விவரங்கள் அனைத்தும், எக்ஸ்-ஷோரூம் -க்கானவை
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.