- + 5நிறங்கள்
- + 22படங்கள்
- shorts
- வீடியோஸ்
க்யா இவி9
க்யா இவி9 இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 561 km |
பவர் | 379 பிஹச்பி |
பேட்டரி திறன் | 99.8 kwh |
சார்ஜிங் time டிஸி | 24min-(10-80%)-350kw |
no. of ஏர்பேக்குகள் | 10 |
- heads அப் display
- 360 degree camera
- massage இருக்கைகள்
- memory functions for இருக்கைகள்
- சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்
- android auto/apple carplay
- advanced internet பிட்டுறேஸ்
- adas
- முக்கிய விவரக்குறிப்புகள்
- டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்
இவி9 சமீபகால மேம்பாடு
கியா EV9 - ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
ஒரே ஒரு ஃபுல்லி லோடட் வேரியன்ட்டில் கியா EV9 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 1.30 கோடி (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இப்போது இந்தியாவில் கியா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் EV கார் ஆகும்.
கியா EV9 -யின் விலை எவ்வளவு?
கியா EV9 விலை 1.30 கோடி ரூபாய் (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கியா EV9 -ல் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
கியா EV9 ஆனது ஃபுல்லி லோடட் ‘ஜிடி லைன்’ வேரியன்ட்டில் வருகிறது.
கியா EV9 என்ன வசதிகளை கொண்டுள்ளது ?
இதில் இரண்டு 12.3-இன்ச் டச் ஸ்கிரீன்கள் (இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிரைவர் டிஸ்ப்ளே), கிளைமேட் கன்ட்ரோல்களுக்கான 5.3-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 11-இன்ச் ஹெட்-அப் டிஸ்ப்ளே (HUD) ஆகியவை அடங்கும். இந்த EV ஆனது முதல் மற்றும் இரண்டாவது வரிசைக்கு சிங்கிள் பேன் சன்ரூஃப்களுடன் வருகிறது, டிஜிட்டல் IRVM (ரியர்வியூ கண்ணாடியின் உள்ளே) மற்றும் 3-ஜோன் ஆட்டோமெட்டிக் ஏசி. இது லெக் சப்போர்ட் உடன் முதல் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கான ரிலாக்ஸிங் வசதியையும் பெறுகிறது. இருக்கைகள் ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் வசதியுடன் வருகின்றன.
பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச் விவரங்கள் என்ன ?
கியா EV9 -ன் இந்தியா-ஸ்பெக் பதிப்பு 99.8 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. இது ஆல்-வீல் டிரைவ் (AWD) எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 384 PS மற்றும் 700 Nm அவுட்புட்டை கொடுக்கக்கூடியது. இது 561 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது.
கியாவின் ஃபிளாக்ஷிப் எலக்ட்ரிக் எஸ்யூவி ஆனது 350 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது, இதன் பேட்டரி பேக்கை வெறும் 24 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை ரீசார்ஜ் செய்ய உதவுகிறது.
கியா EV9 எவ்வளவு பாதுகாப்பானது?
கியா EV9 ஆனது யூரோ NCAP மற்றும் ஆஸ்திரேலிய NCAP ஆகியவற்றால் சோதிக்கப்பட்டது, அங்கு அது 5-நட்சத்திர விபத்து பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது. EV9 -யின் பாதுகாப்புக்காக மல்டி ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற வசதிகள் உள்ளன.
இந்த காருக்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ?
இந்தியாவில், கியா EV9 ஆனது BMW iX மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் EQE எஸ்யூவி ஆகியவற்றுக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும்.
மேல் விற்பனை இவி9 ஜிடி லைன்99.8 kwh, 561 km, 379 பிஹச்பி | ₹1.30 சிஆர்* |