2026 -ம் ஆண்டுக்குள்ளாக இந்தியாவிற்கு வரவுள்ள Kia EV -களின் விவரங்கள்
- 36 Views
- ஒரு கருத்தை எழுதுக
கியா கொண்டு வர திட்டமிட்டுள்ள மூன்று EV -களில் இரண்டு சர்வதேச மாடல்கள் ஆகும். ஒன்று கேரன்ஸ் MPV -யின் எலக்ட்ரிக் எடிஷனாக இருக்கும்.
இந்திய EV சந்தை பிராண்டுகள் பிரிவுகள் மற்றும் விலை முழுவதும் வரிசையாக வெளியீடுகளுடன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு சர்வதேச - கியா - இந்தியாவில் அதன் EV போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த மூன்று புதிய EV -களை 2026 -ஆம் ஆண்டிற்குள் ஒரு ஃபேஸ்லிஃப்டுடன் இந்தியாவுக்கு கொண்டு வரும்.
கியா EV9
கொரிய உற்பத்தியாளர்களிடமிருந்து கியா பார்க்கும் முதல் புதிய EV கியா EV9 ஆகும். இந்த முழு அளவிலான எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்த ஆண்டு இந்தியாவுக்கு வரும். மேலும் இதன் விலை ரூ. 80 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் EV9 ஆனது இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் 99.8 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது: சிங்கிள்-மோட்டார் ரியர்-வீல்-டிரைவ் செட்டப் 204 PS மற்றும் 350 Nm, மற்றும் டூயல்-மோட்டார் ஆல்-வீல்-டிரைவ் செட்டப் 383 PS மற்றும் 700 Nm என இரண்டு செட்டப்களில் EV9 ஆனது 600 கி.மீக்கு மேல் WLTP கிளைம்டு ரேஞ்சை பெறுகிறது.
இது இரட்டை 12.3-இன்ச் ஸ்கிரீன்கள் (டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே), 14-ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், வெஹிகிள் டூ வெஹிகிள் (V2L), 9 ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளைப் பெறுகிறது. மேலும், லெவல் 3 அட்டானமஸ் டிரைவ் உடன் வரும் உலகின் ஒரே புரடெக்ஷன்-ஸ்பெக் கார் இதுவாகும், ஆனால் இந்தியா-ஸ்பெக் மாடல் நிலை 2 ADAS வசதிகளுடன் மட்டுமே வரலாம்.
கியா EV3
கியா நிறுவனத்தின் உலகளாவிய புதிய EV அறிமுகம் கியா EV3 ஆகும். இது ஒரு சிறிய எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். கியா செல்டோஸ் -க்கு அதே அளவுள்ள எலக்ட்ரிக் மாற்றாக இது இந்தியாவிற்கும் வரக்கூடும். EV3 விலை ரூ. 30 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் 2026 -க்குள் இந்திய சந்தைக்கு வரும்.
உலகளவில் இது இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வழங்கப்படுகிறது: 58.3 kWh மற்றும் 81.4 kWh, ஆனால் இந்தியா-ஸ்பெக் பதிப்பு பெரும்பாலும் சிறிய பேட்டரி பேக்குடன் வரலம். இது 204 PS மற்றும் 283 Nm அவுட்புட்டை கொடுக்கும் முன் சக்கரங்களை இயக்க ஒரே ஒரு சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டாருடன் வரும். மேலும் உலகளாவிய பதிப்பில் 400 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்சை வழங்கும். வசதிகளைப் பொறுத்தவரையில் இது டூயல் 12.3-இன்ச் ஸ்கிரீன்கள், டச்-பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், வெஹிகிள் டூ ஹெஹிகிள், மல்டி ஏர்பேக்குகள், அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற லெவல் 2 ADAS வசதிகளின் முழு தொகுப்பையும் பெறும்.
கியா கேரன்ஸ் இவி
இந்தியா போன்ற நாடுகளுக்கான கியாவின் பிராந்திய-குறிப்பிட்ட EV -களில் ஒன்று அதன் எலக்ட்ரிக் பதிப்பாக இருக்கும் கேரன்ஸ் எம்பிவி ஆகும். கியா கேரன்ஸ் இவி 25 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அடுத்த ஆண்டு வெளியிடப்படலாம்.
மேலும் படிக்க: மஹிந்திரா 2030 ஆம் ஆண்டுக்குள் 6 ICE SUVகளை வெளியிட உள்ளது: அவை என்னவாக இருக்கும் என்பதைக் பார்ப்போம் !
அதன் பேட்டரி பேக் மற்றும் பவர்டிரெய்ன் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இது சுமார் 400-500 கி.மீ தூரம் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) போன்ற ICE கேரன்ஸை போலவே இதன் வசதிகள் இருக்கும். மேலும் இது சில ADAS வசதிகளையும் பெறலாம்.
கியா EV6 ஃபேஸ்லிஃப்ட்
EV6 , கியா -வின் முதல் EV தயாரிப்பானது பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்களுக்காக பிரத்யேகமான E-GMP இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. இது இந்தியாவில் 2022 -ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பிராண்டின் முதல் எலக்ட்ரிக் மாடலாகவும் இருந்தது. இப்போது EV6 ஆனது அதிக பேட்டரி திறன் மற்றும் முன்பக்கத்தில் வடிவமைப்பு புதுப்பிப்புகளுடன் உலகளாவிய ஃபேஸ்லிஃப்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா EV6 அடுத்த 12-18 மாதங்களுக்குள் இந்தியாவிற்கும் வரலாம் என எதிர்பார்க்கிறோம். தற்போதைய EV6 -யை விட விலை கூடுதலாக ரூ.60.95 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம்.
டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மற்றும் டிரைவருக்கான டிஸ்ப்ளே, மல்டி ஜோன் டச்-பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல், பவர்டு சீட்கள் மற்றும் லெவல் 2 ADAS தொகுப்பு ஆகியவற்றிற்கான டூயல் 12.3-இன்ச் திரைகளுடன் கூடிய அதே பிரீமியம் கேபின் இருக்கும் என எதிர்பார்க்கலாம். ரேஞ்சை பொறுத்தவரையில் 700 கி.மீ -க்கு கூடுதலாக ARAI -ன் கிளைம்டு ரேஞ்சை கியா கொடுக்கும் என மீண்டும் எதிர்பார்க்கலாம். கிட்டத்தட்ட 500 கி.மீ வரை யதார்த்தமான ரேஞ்ச் கிடைக்கலாம்.
மேலும் படிக்க: இந்தியாவில் Suzuki eWX எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் காப்புரிமை பதிவு செய்யப்பட்டுள்ளது - இதுதான் மாருதி வேகன் R EV காரா ?
இந்த EV -கள் அனைத்தும் 2026 -ஆம் ஆண்டுக்குள் வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளன. அதன் பிறகு கியா அதன் உலகளாவிய EV -களை அதிக அளவில் கொண்டு வரலாம். அதுவரை இவை இந்திய சந்தையில் நுழையும் என்பதை நாங்கள் அறிவோம். மேலும் நீங்கள் எதைப் பற்றி மிகவும் உற்சாகமாக இருக்கிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறோம். கீழே உள்ள கமெண்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
0 out of 0 found this helpful