2024 Kia Carnival, Kia EV9 கார்கள் இந்த தேதியில் அறிமுகமாகவுள்ளன
published on ஆகஸ்ட் 13, 2024 02:48 pm by dipan for க்யா கார்னிவல்
- 98 Views
- ஒரு கருத்தை எழுதுக
இரண்டு புதிய கியா கார்களும் வரும் அக்டோபர் 3 -ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
2024 ஆம் ஆண்டுக்குள் அதன் வரிசையில் மூன்று கார்களை அறிமுகப்படுத்துவதாக 2023 ஆம் ஆண்டு இறுதியில் கியா இந்தியா நிறுவனம் உறுதியளித்திருந்தது. கியா சோனெட் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இப்போது புதிய தலைமுறை கியா கார்னிவல் மற்றும் கியா EV9 அக்டோபர் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என கியா நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளவில் விற்பனையாகும் இந்த இரண்டு மாடல்களிலும் கிடைக்கும் விஷயங்களை பார்ப்போம்:
2024 கியா கார்னிவல்
கியா கார்னிவல் இந்திய சந்தைக்கு ஒரு புதிய கார் அல்ல. கியாவின் பிரீமியம் MPV இந்தியாவில் முதன்முதலில் 2020 -ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 2023 -ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இப்போது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நான்காம் தலைமுறை அவதாரத்தில் மீண்டும் இது இந்தியாவுக்கு வரவுள்ளது.
இது 12.3-இன்ச் டூயல்-ஸ்கிரீன் செட்டப், பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் மற்றும் பவர்டு சீட்கள் மற்றும் 3-ஜோன் ஏசி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குளோபல் மாடலின் 3.5-லிட்டர் V6 பெட்ரோல் (287 PS/353 Nm) அல்லது 1.6-லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் (242 PS/367 Nm) ஆகியவற்றைப் பெறலாம். இப்போது நிறுத்தப்பட்ட இந்தியா-ஸ்பெக் கார்னிவல் 2.2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் (200 PS/440 Nm) 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது.
கியா EV9
கியா EV9 ஆனது இந்தியாவில் EV6 -க்கு பிறகு இரண்டாவது மற்றும் அதிக பிரீமியம் எலக்ட்ரிக் காராக இருக்கும். கடந்த ஆண்டு உலகளவில் வெளியிடப்பட்டது. EV9 ஆனது 76.1 kWh மற்றும் 99.8 kWh பேட்டரி பேக் ஆகியவற்றிற்கு இடையே ஒரு ஆப்ஷனை பெறும் இது அதிகபட்ச WLTP-மதிப்பிடப்பட்ட 541 கி.மீ ரேஞ்சை கொண்டுள்ளது.
கியா கார்னிவல் போன்ற வசதிகளை பொறுத்தவரை EV ஆனது 12.3-இன்ச் இரட்டை-திரை அமைப்பையும் (ஒன்று ஓட்டுனரின் காட்சி மற்றும் மற்றொன்று டச் ஸ்கிரீன்), 14-ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் செட்டப் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கு ரிக்ளைனிங் அல்லது ரொட்டேட் இடையே ஒரு ஆப்ஷனை பெறுகிறது.
விலை மற்றும் போட்டியாளர்கள்
2024 கியா கார்னிவலின் விலை ரூ. 40 லட்சத்திலிருந்து இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்) என எதிர்பார்கப்படுகிறது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காருக்கு பிரீமியமான மாற்றாக இருக்கும். மேலும் டொயோட்டா வெல்ஃபயர் மற்றும் லெக்சஸ் எல்எம் போன்ற சொகுசு MPV -களை விட குறைவான விலையில் இருக்கும்.
கியா EV9 ஆனது சுமார் ரூ. 80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது BMW iX மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் EQE எஸ்யூவி போன்ற சொகுசு எலக்ட்ரிக் எஸ்யூவி -களுக்கு குறைவான விலையில் கிடைக்கும் மாற்றாகக் இருக்கும்.
கியா 2024 கியா கார்னிவல் மற்றும் கியா EV9 ஆகியவற்றின் விலை எவ்வளவு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கார்கள் தொடர்பான உடனடி அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful