IAA மோட்டார் ஷோ, எப்போதுமே சர்வதேச வாகன உலகுடன் தொடர்புடைய அனைவருக்கும் ஒரு உன்னதமான இடமாக இருந்து உள்ளது. இந்த ஆண்டும் அதே கோலாகலத்துடன், ஃபிராங்க்பர்ட் மோட்டார் ஷோ தற்போது நடந்தேறிக் கொண்டிருக்கிறது. மீண்டும், நம் மனதைக் கொள்ளைகொள்ளும் பிரத்தியேகமான பல விதமான கார்களை, கார் உற்பத்தியாளர்கள் இங்கு காட்சிக்கு வைத்துள்ளனர். இந்த 2015 ஃபிராங்க்பர்ட் மோட்டார் ஷோவில், நாம் இது வரை பார்த்தறியாத கேட்டறியாத வித்தியாசமான இரண்டு விதமான கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.