அறிமுகமானது Citroen Basalt Vision கார் விரைவில் இந்தியாவிலும் வெளியாகவுள்ளது

published on மார்ச் 27, 2024 08:20 pm by shreyash for சிட்ரோய்ன் basalt

 • 1.7K Views
 • ஒரு கருத்தை எழுதுக

சிட்ரோன் பாசால்ட் விஷன் கான்செப்ட் அதன் வடிவமைப்பை தற்போதுள்ள C3 ஹேட்ச்பேக் மற்றும் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி போன்ற சிட்ரோன் மாடல்களுடன் பகிர்ந்து கொள்கிறது.

Citroen Basalt Vision Concept

 • C3 ஹேட்ச்பேக் மற்றும் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி -யில் உள்ள CMP பிளாட்ஃபார்ம் அடிப்படையில் சிட்ரோன் பாசால்ட் விஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

 • இந்தியாவில் தற்போதுள்ள C3 ரேஞ்சை காட்டிலும் இது அதிக வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 • இந்தியாவில் தற்போதுள்ள சிட்ரோன் கார்களில் பயன்படுத்தப்படும் அதே 110 PS 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படலாம்.

 • 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சிட்ரோன் பசால்ட் விஷன் கூபே எஸ்யூவி -யை இந்தியாவில் அறிமுகப்படுத்தக்கூடும்.

 • இதன் விலை ரூ.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரெஞ்சு வாகன உற்பத்தியாளரான சிட்ரோன் நிறுவனம் பாசால்ட் விஷன் கான்செப்ட் என்ற புதிய கூபே எஸ்யூவி -யை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பு சிட்ரோன் C3X என குறிப்பிடப்பட்ட பாசால்ட் விஷன் இந்திய மற்றும் தென் அமெரிக்க சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய கூபே எஸ்யூவி தற்போதுள்ள சிட்ரோன் மாடல்களான சிட்ரோன் C3 மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகிய கார்களில் உள்ள CMP ஃபிளாட்பார்மை அடிப்படையாகக் கொண்டது. இது எப்படி இருக்கிறது மற்றும் என்ன வசதிகள் இருக்கின்றன என்பதை பார்ப்போம்.

வடிவமைப்பு

Citroen Basalt Vision Concept Rear

தற்போதுள்ள C3 மற்றும் C3 ஏர்கிராஸ் போன்ற சிட்ரோன் மாடல்களை போலவே முன்பக்க தோற்றம் இருக்கின்றது. குரோம் மற்றும் ஸ்பிளிட் ஹெட்லேம்ப் ஹவுசிங்கில் ஃபினிஷ் செய்யப்பட்ட அதே ஸ்பிளிட் கிரில்லை இது கொண்டுள்ளது. பக்கவாட்டில் அதன் சாய்வான கூபே போன்ற கூரையின் காரணமாக இது ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஸ்கொயர் வீல் ஆர்ச் , பக்கவாட்டு பாடி கிளாடிங் மற்றும் டூயல்-டோன் அலாய் வீல்கள் ஆகியவை இதன் ஸ்போர்ட்டினஸை மேலும் கூட்டுகின்றன.

இந்த எஸ்யூவி-கூபேயின் பின்புறம் உயரமாக இருக்கின்றது. பூட் லிட், பானட்டை விட மிக உயரத்தில் உள்ளது. பின்புறத்தில் உள்ள மற்ற டிசைன் பிட்களில் ரேப்பரவுண்ட் LED டெயில்லேம்ப்கள் மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட் கொண்ட உயரமான பம்பர் ஆகியவை உள்ளன.

இன்ட்டீரியர் மற்றும் வசதிகள்

Citroen C3 Aircross cabin

சிட்ரோன் பாசால்ட் விஷன் கான்செப்ட்டின் உட்புறத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் இது C3 ஏர்கிராஸ் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பாசால்ட் விஷன் கான்செப்ட் தற்போதுள்ள சிட்ரோன் மாடல்களைக் காட்டிலும் கூடுதல் வசதிகளுடன் க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஏசி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி மற்றும் கீலெஸ் என்ட்ரி போன்ற கூடுதல் வசதிகளுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10.2-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் டிரைவருக்கான 7-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே போன்ற வசதிகள் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி -யில் இருந்து பெறப்பட்டதாக இருக்கும். பாதுகாப்பைப் பொறுத்தவரை பாசால்ட் விஷன் காரில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன்

Citroen C3 Aircross 1.2-litre turbo-petrol engine

பசால்ட் விஷனுக்கான பவர்டிரெய்ன் விவரங்களை சிட்ரோன் இன்னும் வெளியிடவில்லை என்றாலும் இது C3 ஹேட்ச்பேக் மற்றும் C3 ஏர்கிராஸ் காம்பாக்ட் எஸ்யூவி போன்ற அதே 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை (110 PS / 205 Nm வரை) பயன்படுத்தும். இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டிலும் வழங்கப்படும்.

எதிர்பார்க்கப்படும் இந்திய வெளியீடு

சிட்ரோன் பாசால்ட் விஷன் வில்லிஸ் இந்தியாவில் இரண்டாம் பாதியில் 2024 -ம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை ரூ. 8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கலாம். ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர் மற்றும் ஹோண்டா எலிவேட் போன்றவற்றுக்கு மாற்றாக இருக்கும். அதே வேளையில் பாசால்ட் விஷன் டாடா கர்வ்வ் -க்கு போட்டியாக இருக்கும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Citroen Basalt

Read Full News

கார் செய்திகள்

 • டிரெண்டிங்கில் செய்திகள்
 • சமீபத்தில் செய்திகள்

trendingசேடன் கார்கள்

 • லேட்டஸ்ட்
 • உபகமிங்
 • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience