• English
    • Login / Register

    Citroen Basalt, Aircross மற்றும் C3 டார்க் பதிப்புகள் அறிமுகம்

    kartik ஆல் ஏப்ரல் 14, 2025 02:31 pm அன்று மாற்றியமைக்கப்பட்டது செய்யப்பட்டது

    17 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    3 டார்க் பதிப்புகளும் டாப் மேக்ஸ் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டவை.

    Citroen Basalt, Aircross And C3 Dark Edition Launched

    • மூன்று மாடல்களின் வெளிப்புறத்திலும் பெர்லா நேரா பிளாக் நிறத்தில் டார்க் குரோம் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. 

    • உட்புறம் டாஷ்போர்டு மற்றும் இருக்கைகளில் ரெட் ஸ்டிச் கொண்ட பிளாக் தீம் பெறுகிறது. 

    • இவற்றின் வசதிகள், பாதுகாப்பு தொகுப்பு மற்றும் பவர்டிரெய்ன் ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

    • சிட்ரோன் பாசால்ட், ஏர்கிராஸ் மற்றும் சி3 ஆகியவற்றின் டார்க் எடிஷன்கள் ரூ.23,000 வரை பிரீமியத்தில் பெறலாம். 

    பல டீஸர்களுக்குப் பிறகு இந்தியாவில் சிட்ரோன் பசால்ட், C3 மற்றும் ஏர்கிராஸ் டார்க் பதிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்று மாடல்களும் புதிய வெளிப்புற மற்றும் உட்புற தீம் உடன் குறைவான காலத்துக்கு மட்டுமே கிடைக்கும்.. டார்க் பதிப்புகள் ஒவ்வொரு மாடலின் டாப் மேக்ஸ் (பாசால்ட் மற்றும் ஏர்கிராஸுக்கு) மற்றும் ஷைன் (சி3க்கு) வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டவை. 

    டார்க் எடிஷன்களின் மாறுபட்ட விலை விவரங்கள் இங்கே: 

    மாடல்

    டார்க் எடிஷன் விலை 

    ஸ்டாண்டர்டான விலை 

    வேறுபாடு 

    சிட்ரோன் சி3 ஷைன் டார்க் எடிஷன் (எம்டி)

    ரூ.8.38 லட்சம் 

    ரூ.8.15 லட்சம் 

    ரூ.22,500

    சிட்ரோன் சி3 ஷைன் டர்போ டார்க் எடிஷன் (எம்டி)

    ரூ.9.58 லட்சம் 

    ரூ.9.35 லட்சம் 

    ரூ.22,500

    சிட்ரோன் C3 ஷைன் டர்போ டார்க் பதிப்பு (AT)

    ரூ.10.19 லட்சம் 

    ரூ.9.99 லட்சம் 

    ரூ.19,500

    சிட்ரோன் பசால்ட் டர்போ மேக்ஸ் டார்க் எடிஷன் (MT)

    ரூ.12.80 லட்சம் 

    ரூ.12.57 லட்சம் 

    ரூ.23,000

    சிட்ரோன் Aircross டர்போ மேக்ஸ் டார்க் எடிஷன் (MT)

    ரூ.13.13 லட்சம் 

    ரூ.12.90 லட்சம் 

    ரூ.22,500

    சிட்ரோன் பசால்ட் டர்போ மேக்ஸ் டார்க் எடிஷன் AT)

    ரூ.14.10 லட்சம் 

    ரூ.13.87 லட்சம் 

    ரூ.23,000

    சிட்ரோன் Aircross டர்போ மேக்ஸ் டார்க் எடிஷன் (AT)

    ரூ.14.27 லட்சம் 

    ரூ.14.04 லட்சம் 

    ரூ.22,500

    பெசால்ட், சி3 மற்றும் ஏர்கிராஸ் ஆகியவற்றின் டார்க் எடிஷன்களில் நீங்கள் பெறுவதைப் பாருங்கள். 

    சிட்ரோன் பிளாக் பதிப்புகள் 

    Citroen Basalt

    சந்தையில் உள்ள பிற பிளாக் பதிப்புகளைப் போலவே பெசால்ட், சி3 மற்றும் ஏர்கிராஸ் டார்க் எடிஷன்களும் பெர்லா நேரா பிளாக் என பெயரிடப்பட்ட முழு பிளாக் நிற எக்ஸ்ட்ரீரியர் ஷேடை பெற்றுள்ளன. பேட்ஜிங், கிரில் மற்றும் பாடி இன்செர்ட்டுகள் போன்ற அனைத்து குரோம் எலமென்ட்களும் டார்க் க்ரோமில் டார்க் லுக்குடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளன. டூயல்-டோன் அலாய் வீல்கள் இதற்கு நல்ல வித்தியாசத்தை காட்டுகின்றன. டார்க் எடிஷன் பேட்ஜிங்கும் உள்ளது.

    உட்புறத்தில் காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் வருகிறது, இதில் புதிய மெட்ரோபொலிட்டன் பிளாக் லெதரெட்-சுற்றப்பட்ட இருக்கைகள் மற்றும் லெதரெட்-சுற்றப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் ஆகியவை அடங்கும். மாடல்கள் டாஷ்போர்டு மற்றும் இருக்கைகள் முழுவதும் சிவப்பு நிற தையல்களைப் பெறுகின்றன, அதில் சிட்ரோன் லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. 

    புதிய அம்சங்கள் இல்லை 

    காஸ்மெட்டிக் அப்டேட் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது என்பதால் சிட்ரோன் பசால்ட், ஏர்கிராஸ் மற்றும் சி3 பிளாக் எடிஷன்கள் எந்த புதிய அம்சங்களுடனும் வரவில்லை. வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 10.2 இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஸ்டீயரிங் மவுண்டட் ஆடியோ கண்ட்ரோல்கள், ரிமோட் கீலெஸ் என்ட்ரி மற்றும் ஆட்டோ ஏசி ஆகியவை மூன்று மாடல்களின் பொதுவான அம்சங்களாகும். 

    பாசால்ட், சி3 மற்றும் ஏர்கிராஸில் உள்ள பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் சென்சார்கள் கொண்ட ரியர் வியூ கேமரா ஆகியவை அடங்கும். 

    பவர்டிரெய்ன் 

    சிட்ரோன் பசால்ட், ஏர்கிராஸ் மற்றும் சி3 ஆகியவை ஒரே பவர்டிரெய்ன் தேர்வுகளுடன் வருகின்றன. C3 டாப் டிரிமில் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வந்தாலும், ஏர்கிராஸ் மற்றும் பாசால்ட் ஆகியவை டாப் வேரியன்ட்டில் டர்போ பெட்ரோல் ஆப்ஷனை மட்டுமே பெறுகின்றன. 

    விரிவான விவரங்கள் இங்கே:

    இன்ஜின் 

    1.2-லிட்டர் N/A பெட்ரோல் 

    1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் 

    பவர் 

    82 PS 

    110 PS 

    டார்க் 

    115 Nm 

    205 Nm வரை 

    டிரான்ஸ்மிஷன் 

    5-ஸ்பீடு MT 

    6-ஸ்பீடு MT/ 6-ஸ்பீடு AT*

    *AT= டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் 

    டார்க் பதிப்புகளுக்கான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் ஸ்டாண்டர்டான மாடல்களில் வழங்கப்படுவதைப் போலவே இருக்கும். 

    போட்டியாளர்கள் 

    சிட்ரோன் சி3 ஹேட்ச்பேக் மாருதி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் போன்றவற்றுக்கு போட்டியாக உள்ளது.
    எஸ்யூவி கூபே பசால்ட் ஆனது டாடா கர்வ் -க்கு நேரடி போட்டியாளராக உள்ளது. இதற்கிடையில் சிட்ரோன் ஏர்கிராஸ் கியா செல்டோஸ் டொயோட்டா ஹைரைடர், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஹூண்டாய் கிரெட்டா போன்றவற்றைப் பெறுகிறது.

     (அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான் இந்தியா) 

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Citroen சி3

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience