Citroen Basalt Dark Edition டீசர் வெளியாகியுள்ளது, C3 மற்றும் Aircross கார்க ளிலும் ஸ்பெஷல் எடிஷன்கள் அறிமுகமாகவுள்ளன
kartik ஆல் ஏப்ரல் 01, 2025 09:48 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
3 மாடல்களின் டார்க் எடிஷன்களும் எக்ஸ்ட்டீரியர் ஷேடு மற்றும் ஆல் பிளாக் இன்ட்டீரியர் தீம் உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிட்ரோனில் இருந்து டார்க் எடிஷன்களைப் பெறும் முதல் கார் மாடல்களாக சிட்ரோன் பாசால்ட், C3 மற்றும் ஏர்கிராஸ் ஆகியவை இருக்கும்.
-
டீஸரில் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் C3 யின் கிரில் ஆகியவை காட்டப்பட்டுள்ளன.
-
டீஸரில் உட்புறமும் காட்டப்பட்டுள்ளது, இது டேஷ்போர்டு மற்றும் இருக்கைகளுக்கான புதிய வடிவமைப்பைக் காட்டியது.
-
3 கார்களுக்குமான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் மாறாமல் இருக்கும்.
-
3 பதிப்புகளுக்குமான விலை அவற்றின் தொடர்புடைய வேரியன்ட்களை விட சற்று கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்ரோன் நிறுவனம் பசால்ட் டார்க் எடிஷனின் டீசரை மீண்டும் வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த முறை C3 ஹேட்ச்பேக் மற்றும் ஏர்கிராஸ் எஸ்யூவி ஆகியவற்றையும் இதில் சேர்த்துள்ளது. சிட்ரோன் இந்தியாவின் சமூக ஊடகக் கணக்குகளில் வெளியிடப்பட்ட சிறிய வீடியோ கிளிப், டார்க் எடிஷனுக்கான புதிய சேர்த்தல்களுடன் மாடல்களின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தைக் காட்டியது. 3 டார்க் பதிப்புகளும் விரைவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீஸர்களில் பார்க்ககூடிய விஷயங்களின் விரைவான பார்வை இங்கே.
என்ன பார்க்க முடிகிறது?
சமீபத்திய டீஸர் வெளிப்புறத்தை மட்டுமல்ல உட்புறத்தின் சிறிய பகுதிகளையும் காட்டியது. வீடியோவில் C3 -யின் கிரில் ஏர் கிராஸின் அலாய் வீல்களுடன், டூயல்-டோன் ஷேடில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வீடியோ உட்புறத்தின் துணுக்குகளையும் காட்டியது. டாஷ்போர்டிலும் ஆல் பிளாக் இருக்கைகளிலும் ரெட் கலர் ஸ்டிச் தெரிகிறது. இந்த இருக்கைகள் 3 கார்களின் வழக்கமான வெர்ஷன்களில் இல்லாத ரெட் கலரில் உள்ள‘சிட்ரோன்’ எம்போஸிங்கையும் கொண்டுள்ளது.
மேலும் பார்க்க: 2025 கியா கேரன்ஸ்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய டாப் 5 விஷயங்கள்
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
வசதிகள் மற்றும் பாதுகாப்பு பட்டியல் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் இவை மூன்று கார்களின் டார்க் பதிப்புகள் ஹையர்-ஸ்பெக் டிரிம்களின் அடிப்படையில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
பசால்ட் ஆனது C3 மற்றும் ஏர்கிராஸ் -ன் பொதுவான வசதிகளில் 10.2-இன்ச் டச்ஸ்கிரீன், 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோ-ஏசி, எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்டபிள் ஓவிஆர்எம் -கள் மற்றும் ரிமோட் கீலெஸ் என்ட்ரி ஆகியவை கொடுக்கப்படும்.
3 மாடல்களுக்கான பாதுகாப்புத் தொகுப்புகளில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), சென்சார்கள் கொண்ட பின்புறக் காட்சி கேமரா, EBD உடன் ABS, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவை அடங்கும்.
பவர்டிரெய்ன்
3 சிட்ரோன் கார்களும் ஒரே இன்ஜினை பகிர்ந்து கொள்கின்றன. அவற்றின் விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
1.2-லிட்டர் N/A இன்ஜின் |
1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் |
பவர் |
82 PS |
110 PS |
டார்க் |
115 Nm |
205 Nm வரை |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT |
6-ஸ்பீடு MT/ 6-ஸ்பீடு AT* |
*AT= டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக்
பவர்டிரெய்ன் பற்றிய எந்த விவரங்களையும் கார் தயாரிப்பாளர் இப்போது உறுதிப்படுத்தவில்லை; இருப்பினும் டார்க் பதிப்பு ஒரு காஸ்மெட்டிக் அப்டேட்டாக இருக்கும் என்பதால் இந்த இன்ஜின் ஆப்ஷன்களையும் அப்படியே தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்.
விலை மற்றும் போட்டியாளர்கள்
டார்க் பதிப்புகளுக்கான விலை, அவற்றின் தொடர்புடைய வேரியன்ட்களை விட சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பசால்ட் ஆனது டாடா கர்வ் உடன் நேரடியாக போட்டியிடுகிறது. C3 ஆனது ஹேட்ச்பேக்குகளான மாருதி வேகன் ஆர் மற்றும் டாடா டியாகோ ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும். ஏர்கிராஸ் ஆனது ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் ஆகியவற்றுக்கு ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.