Tata Curvv மற்றும் Citroen Basalt: இரண்டு கார்களின் வெளிப்புற வடிவமைப்பு ஒப்பீடு
டாடா கர்வ் க்காக ஜூலை 26, 2024 04:10 pm அன்று shreyash ஆல் திருத்தம் செய்யப்பட்டது
- 35 Views
- ஒரு கருத்தை எழுதுக
சிட்ரோன் பாசால்ட் உடன் ஒப்பிடும் போது டாடா கர்வ்வ் ஆனது கனெக்டட் LED லைட்டிங் செட்டப் மற்றும் ஃப்ளஷ் டைப் டோர் ஹெண்டில்கள் போன்ற நவீன வடிவமைப்பை கொண்டுள்ளது.
டாடா கர்வ்வ் காரின் வெளிப்புற வடிவமைப்பு பற்றிய விவரங்கள் இப்போது இப்போது டாடாவால் வெளியிடப்பட்டுள்ளன. அதன் வெளிப்புறம் எப்படி இருக்கும் என்பது இப்போது நமக்கு தெரிய வந்துள்ளது. டாடா கர்வ்வ் ஆனது வரவிருக்கும் சிட்ரோன் பசால்ட் காருக்கு நேரடி போட்டியாளராக உள்ளது. இது வரும் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமாக உள்ளது. கர்வ்வ் மற்றும் பசால்ட் இரண்டும் இந்தியாவில் முதல் பட்ஜெட் எஸ்யூவி-கூபேக்கள் ஆகும். அவற்றின் வெளிப்புற வடிவமைப்பில் இரண்டு கார்களும் எவ்வாறு இருக்கின்றன என்பதை இங்கே ஒப்பிட்டு பார்ப்போம்.
முன்பக்கம்


வடிவமைப்பு பொறுத்தவரையில் டாடா கர்வ்வ் ஆனது நவீன எலமென்ட்களை கொண்டுள்ளது. இதில் கனெக்டட் LED DRL ஸ்டிரிப், சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் வெல்கம் மற்றும் குட்பை அனிமேஷன்களுக்கான ஃபங்ஷன் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சிட்ரோன் பசால்ட் ஸ்போர்ட்ஸ் V-வடிவ LED DRL -கள் கொடுக்கப்படவில்லை. கர்வ்வ் ஆனது ஆல் LED ஹெட்லைட்கள் மற்றும் ஃபாக் லைட்ஸ்களுடன் உள்ளது. அதேசமயம் பசால்ட் ஆனது ஹாலோஜன் ஹெட்லைட்கள் மற்றும் ஃபாக் லைட்ஸ்களுடன் வருகிறது.
பக்கவாட்டு தோற்றம்


கர்வ்வ் அதன் நவீன கவர்ச்சியை ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்களை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பாசால்ட் பழைய மாடல் பாணி டோர் ஹேண்டில்களை கொண்டுள்ளது. இரண்டு எஸ்யூவி-கூபேக்களிலும் வீல் ஆர்ச்களை சுற்றி கிளாஸியான பிளாக் கிளாடிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கோணத்தில் இருந்து தான் இரண்டு கார்களின் கூரையின் கூபே போன்ற ஸ்போர்ட்டியர் தோற்றத்தையும் நீங்கள் கவனிக்கிறீர்கள்.


இரண்டு எஸ்யூவி-கூபேக்களுக்கும் உள்ள மற்றொரு வித்தியாசம் அலாய் வீல்கள் ஆகும். டாடா கர்வ்வ் ஆனது பெட்டல்-ஷேப்டு டூயல்-டோன் அலாய்களை பெறுகிறது. அதே சமயம் பாசால்ட் ஆல் பிளாக் அலாய்களுடன் வருகிறது.


பாசால்ட்டுடன் ஒப்பிடும்போது கர்வ்வில் உள்ள டெயில் லைட்ஸ் மிகவும் நேர்த்தியாகத் தெரிகின்றன. முன்புறத்தைப் போலவே டாடாவின் எஸ்யூவி-கூபே பின்புறத்திலும் கனெக்டட் LED ஸ்ட்ரிப்பை பெறுகிறது. இதில் சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் வெல்கம் மற்றும் குட்பை அனிமேஷன் ஃபங்ஷன் உள்ளது. மறுபுறம் பசால்ட் மிகவும் வழக்கமான தோற்றமுடைய LED டெயில் லைட்களையே கொண்டுள்ளது. கர்வ்வ் மற்றும் பசால்ட் இரண்டும் பின்பக்க பம்பரில் பிளாக்டு அவுட் ட ட்ரீட்மென்ட்டை பெறுகின்றன. மேலும் அவை சில்வர் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்கிட் பிளேட்டையும் பெறுகின்றன.
எதிர்பார்க்கப்படும் பவர் டிரெயின்கள்
கர்வ்வ் ஆனது டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும். என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பாசால்ட் டர்போ-பெட்ரோல் இன்ஜின் தேர்வு மட்டுமே கிடைக்கும். அவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
மாடல் |
டாடா கர்வ்வ் |
சிட்ரோன் பசால்ட் |
|
இன்ஜின் |
1.2-லிட்டர் T-GDi டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
125 PS |
115 PS |
110 PS |
டார்க் |
225 Nm |
260 Nm |
205 Nm வரை |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT (எதிர்பார்க்கப்படுகிறது) |
6-ஸ்பீடு MT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
DCT: டூயல் கிளட்ச் ஆட்டொமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
AT: டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் ஆட்டொமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
எதிர்பார்க்கப்படும் விலை
டாடா கர்வ்வ் விலை ரூ.10.5 லட்சத்தில் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது, அதே சமயம் சிட்ரோன் பாசால்ட் விலை ரூ.10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம். இந்த இரண்டு எஸ்யூவி -களும் ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஹோண்டா எலிவேட், மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகியற்றுக்கு ஸ்டைலான எஸ்யூவி-கூபே மாற்றாக இருக்கும்.
டாடா கர்வ்வ் பற்றிய கூடுதல் அப்டேட்களுக்கு கார்தேக்கோ -வின் வாட்ஸ்அப்பை சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்.