ICOTY 2025 விருதுகளுக்கு 3 பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட கார்கள்
published on டிசம்பர் 18, 2024 09:57 pm by dipan for மாருதி டிசையர்
- 54 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த ஆண்டுக்கான போட்டியாளர்களில் மஹிந்திரா தார் ராக்ஸ் போன்ற பிரபலமான கார்கள் முதல் BMW i5 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எஸ்யூவி போன்ற சொகுசு EV -களும் இடம் பெற்றுள்ளன.
இந்திய ஆட்டோமோட்டிவ் சந்தையில் இந்த ஆண்டும் பல பிரிவுகளில் நிறைய கார்கள் அறிமுகமாகின. ஆண்டு நிறைவடையும் நிலையில் ஆண்டு தோறும் இந்தியன் கார் ஆஃப் தி இயர் (ICOTY) விருதுகளை மீண்டும் தேர்வு செய்ய வேண்டிய நேரம் இது ஆகும். இந்த விருதுகளில் தொழில் வல்லுநர்கள் மொத்தம் மூன்று பிரிவுகளில் சிறந்த 3 கார்கள் பட்டியலிடப்பட்டுள்ளன: ஒட்டுமொத்தமாக பிரீமியம் கார் பிரிவு மற்றும் பசுமை கார் பிரிவில் (EV) இந்த கார்கள் இடம்பெற்றுள்ளன. ICOTY 2025 -ன் 3 பிரிவுகளில் ஒவ்வொன்றுக்கும் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியலைப் பார்ப்போம்:
இந்த ஆண்டின் இந்திய கார் (ஒட்டுமொத்தம்) |
பிரீமியம் கார் விருது (ICOTY) |
பசுமை கார் விருது (ICOTY) |
மஹிந்திரா தார் ராக்ஸ் |
கியா கார்னிவல் |
டாடா பன்ச் EV |
மாருதி டிசையர் |
பிஒய்டி சீல் |
டாடா கர்வ்வ் EV |
மாருதி ஸ்விஃப்ட் |
மினி கூப்பர் எஸ் |
எம்ஜி வின்ட்சர் இவி |
எம்ஜி வின்ட்சர் இவி |
மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் |
இமேக்ஸ் வேர்ல்ட் 7 |
சிட்ரோன் பசால்ட் |
மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எஸ்யூவி & மேபெக் EQS எஸ்யூவி |
பிஒய்டி சீல் |
டாடா கர்வ் & டாடா கர்வ் EV |
BMW 5 சீரிஸ் |
மினி கன்ட்ரிமேன் இவி |
டாடா பன்ச் EV |
BMW i5 |
BMW i5 |
இ -மேக்ஸ் வேர்ல்ட் 7 |
BMW M5 |
மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எஸ்யூவி & மேபெக் EQS எஸ்யூவி |
டாடா, மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் BMW ஆகிய மூன்றும் ஒவ்வொருவரும் வெவ்வேறு பிரிவுகளில் போட்டியிடுகின்றன. இது போட்டியாளர்களின் பட்டியலில் இந்த நிறுவனங்களின் கார்களே அதிகம். மாருதி, பிஒய்டி மற்றும் மினி இரண்டு கார்கள் ஆண்டு போட்டியில் போட்டியிடுகின்றன. மஹிந்திரா, கியா, எம்.ஜி மற்றும் சிட்ரோன் இந்த ஆண்டு ICOTY -யில் தலா ஒரு போட்டியாளர் வேண்டும்.
மேலும் படிக்க: 2024 ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட அனைத்து எலக்ட்ரிக் கார்களையும் பாருங்கள்
ICOTY பற்றிய கூடுதல் தகவல்
பெரும்பாலோனோருக்கு தெரிந்தது போல ICOTY என்பது இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய வெளியீடுகளிலும் உள்ள 20 பத்திரிகையாளர்களை கொண்ட ஒரு வருடாந்திர விருது ஆகும். அங்கு அனைத்து கார்களையும் அணுகி மூன்று பிரிவுகளில் ஒரு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கார்தேகோவின் தலைமை ஆசிரியர் அமேயா தண்டேகரும் மேற்கூறிய கார்களை மதிப்பிடும் நடுவர் குழுவில் பங்கு பெற்றுள்ளார். விலை, மைலேஜ், ஸ்டைலிங், வசதி, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உள்ளிட்ட விஷயங்களை ஆய்வு செய்து அதற்காக வாக்களிப்பதன் மூலம் வெற்றி பெரும் கார் தீர்மானிக்கப்படும். அதிகபட்ச வாக்குகளைப் பெறும் கார் அந்தந்த பிரிவில் வெற்றியாளராக விருதுக்கு தேர்வாகும்.
ஒவ்வொரு பிரிவிலும் எந்த கார் வெற்றி பெறுகிறது என்பதை தெரிந்து கொள்ள கார்தேக்கோவுடன் இணைந்திருங்கள்.
இந்த ஆண்டு ICOTY விருதுகளை எந்த கார் பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: மாருதி டிசையர் AMT