2024 -ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மிகவும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் 10 கார்கள் இவை
published on ஜூன் 03, 2024 07:46 pm by ansh for டாடா கர்வ்
- 14 Views
- ஒரு கருத்தை எழுதுக
இரண்டு கூபே எஸ்யூவி -கள், மூன்று EV -கள் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு ஆஃப்-ரோடரை வரும் மாதங்களில் பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதுவரை 2024 ஆம் ஆண்டில் அனைத்து புதிய மாடல்கள் மற்றும் ஃபேஸ்லிஃப்ட்கள் ஆகிய இரண்டு கார் வெளியீடுகளையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் மீதமுள்ள மாதங்களில் இன்னும் நிறைய வெளியீடுகளை எதிர்பார்க்கலாம். டாடா மஹிந்திரா, கியா மற்றும் ஹோண்டா மற்றும் சிட்ரோன் போன்ற பிராண்டுகளில் இருந்து இன்னும் பல கார்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்த வரவிருக்கும் கார்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகலாம் என்றாலும் இந்த 10 கார்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்டவை ஆகும்.
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர்
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஜூன் 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.10 லட்சம் முதல்
பன்ச் EV இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியானது. மேலும் டாடா நிறுவனம் இன்னும் பல மாடல்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதில் ஒன்றாக டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் இருக்கும். இது முதன்முதலில் ஆட்டோ எக்ஸ்போ 2023 -ம் ஆண்டில் டீஸ் செய்யப்பட்டது இப்போது இறுதியாக அறிமுகத்துக்கு தயாராகியுள்ளது. இது ஆல்ட்ரோஸ் ஹேட்ச்பேக்கின் ஸ்போர்ட்டியர் பதிப்பாக இருக்கும். மேலும் இது டிசைன் மாற்றங்கள் கூடுதல் வசதிகள் மற்றும் மிக முக்கியமாக சக்தி வாய்ந்த 120 PS டர்போ-பெட்ரோல் இன்ஜின் நெக்ஸான் காரிலிருந்து கடன் வாங்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே மறைப்பின்றி இரண்டு முறை படம் பிடிக்கப்பட்டுள்ளது மற்றும் முன்பதிவுகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன.
நியூ ஜெனரேஷன் மாருதி டிசையர்
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஜூன் 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.7 லட்சம் முதல்
மாருதி நிறுவனம் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை இந்தியாவில் 2024 மே மாதம் வெளியிடப்பட்டது. புதிய தலைமுறை மாருதி டிசையர் காரின் அறிமுகமும் சீக்கிரமாக இருக்கும் என தெரிகிறது. புதுப்பிக்கப்பட்ட செடான் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இது புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 6 ஏர்பேக்குகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கிளைமேட் கன்ட்ரோல் போன்ற சில எலமென்ட்களை ஹேட்ச்பேக்கிலிருந்து வாங்கும். மேலும் இது புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும் சப்-4m செடான் பிரிவில் ஒரு சன்ரூஃப் கூட அறிமுகப்படுத்தப்படலாம்.
கியா EV9
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஜூன் 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.80 லட்சம் முதல்
கியா தனது ஃபிளாக்ஷிப் எலக்ட்ரிக் எஸ்யூவியை இந்த ஆண்டு இந்தியாவிற்கு கொண்டு வரவுள்ளது. இந்தியாவில் EV6 -காருக்கு அடுத்தபடியாக கியா EV9 ஆனது கியாவின் இரண்டாவது எலக்ட்ரிக் காராக இருக்கும். சர்வதேச அளவில் இந்த SUV 99.8 kWh பேட்டரி பேக் உடன் வருகிறது. மற்றும் ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் பெறுகிறது. கியா EV9 ஆனது 680 கிமீ வரை WLTP-க்கு கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது. மேலும் டூயல் 12.3-இன்ச் ஸ்கிரீன்கள், 14-ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 9 ஏர்பேக்குகள் 360-டிகிரி கேமரா மற்றும் ADAS போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: 2026 -ம் ஆண்டுக்குள்ளாக இந்தியாவிற்கு வரவுள்ள Kia EV -களின் விவரங்கள்
ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஜூன் 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.17 லட்சம் முதல்
2024 ஜனவரி -யில் ஃபேஸ்லிஃப்ட் ஹூண்டாய் கிரெட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது ஹூண்டாய் அல்கஸாரை அப்டேட் செய்யவுள்ளது. ஃபேஸ்லிஃப்டட் ஹூண்டாய் அல்கஸார் அதன் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஒரு பனோரமிக் சன்ரூஃப், மல்டி ஏர்பேக்குகள், 360 டிகிரி . கேமரா மற்றும் ADAS போன்ற வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட கேபினையும் பெறும்.
டாடா கர்வ்வ் EV
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஜூலை 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.20 லட்சம் முதல்
இந்த ஆண்டு வெளியாகவுள்ள டாடாவின் மற்றொரு புதிய மாடல் கர்வ்வ் இவி ஆகும். இந்த கூபே-எஸ்யூவி டாடாவின் Acti.ev தளத்தை அடிப்படையாகக் கொண்டது. மற்றும் 500 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்ச் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலக்ட்ரிக் எஸ்யூவி -யில் 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) போன்ற வசதிகள் இருக்கும்.
மஹிந்திரா தார் 5 டோர்
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஆகஸ்ட் 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.15 லட்சம் முதல்
5-கதவு மஹிந்திரா தார் மிக நீண்ட காலமாக உருவாக்கத்தில் உள்ளது. மற்றும் பெரிய ஆஃப்-ரோடரின் புதிய விவரங்களை வெளிப்படுத்தும் புதிய ஸ்பை ஷாட்கள் ஆன்லைனில் வெளிவருகின்றன. தார் காரின் நீளமான பதிப்பு ரியர் வீல் டிரைவ் மற்றும் ஃபோர் வீல் டிரைவ் பவர் ட்ரெய்ன்களுடன் அதன் 3-டோர் மாடலின் அதே இன்ஜின் ஆப்ஷன்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒரு பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஒருவேளை 10.25 இன்ச் யூனிட்) டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே, டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஒரு சன்ரூஃப் போன்ற வசதிகளைப் பெறும்.
மேலும் படிக்க: மஹிந்திரா எந்த 6 எஸ்யூவிகளை 2030 ஆண்டுக்குள் வெளியிடலாம் என்பதைக் கண்டுபிடிப்போம்!
சிட்ரோன் பசால்ட்
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஆகஸ்ட் 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.11 லட்சம் முதல்
சிட்ரோன் பசால்ட் இந்திய சந்தைக்கான சிட்ரோனின் அடுத்த புதிய காராக சிறிது காலத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தபட்டது. கூபே-எஸ்யூவி -யில் C3 மற்றும் சி3 ஏர்கிராஸ் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் அதே 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கிடைக்கும். 2-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ரியர்வியூ கேமரா போன்ற வசதிகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா கர்வ்வ்
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஆகஸ்ட் 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.10.50 லட்சம் முதல்
கர்வ்வ் EV அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதன் ICE பதிப்பான டாடா கர்வ்வ் அறிமுகமாகவுள்ளது.. இது அதன் எலக்ட்ரிக் பதிப்பின் அதே வடிவமைப்பை சில சிறிய மாற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும். மேலும் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே ஸ்கிரீன் செட்டப், வென்டிலேஷன் கொண்ட முன் இருக்கைகள் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ADAS வசதிகள் உட்பட அதன் வசதிகளின் பட்டியல் அதன் எலக்ட்ரிக் காரை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஸ்கோடா குஷாக், ஹூண்டாய் கிரெட்டா போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
இந்தியாவில் வரவிருக்கும் அனைத்து கார்களின் விவரங்கள்
மஹிந்திரா XUV e8
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: டிசம்பர் 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.35 லட்சம் முதல்
XUV700 காரின் எலக்ட்ரிக் பதிப்பான மஹிந்திரா XUV e8 இந்த ஆண்டு வெளியாகவுள்ளது. இது 60 kWh மற்றும் 80 kWh பேட்டரி அளவுகளை ஆதரிக்கக்கூடிய கார் மஹிந்திராவின் INGLO தளத்தை அடிப்படையாகக் கொண்டது. மஹிந்திரா 450 கி.மீ வரை WLTP கிளைம்டு ரேஞ்சில் ரியர்-வீல்-டிரைவ் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் அமைப்புகளில் எலக்ட்ரிக் XUV700 காரை வழங்கக்கூடும். இன்டெகிரேட்டட் டிரிபிள்-ஸ்கிரீன் செட்டப், மல்டி ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ADAS போன்ற வசதிகளுடன் இது வரும்.
புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ்
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: தகவல் இல்லை
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.7.50 லட்சம் முதல்
ஹோண்டா அமேஸ் புதுப்பித்தலுக்கு காரணமாக உள்ளது மற்றும் கார் தயாரிப்பாளர் தனது புதிய தலைமுறை அவதாரத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தலாம். அதன் மாற்றங்களின் விவரங்கள் மெலிதாக இருந்தாலும் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற வசதிகளுடன் அப்டேட்டட் கேபினை பெறும். மேலும் பாதுகாப்புக்காக கிட்டில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ஒரு ரியர்வியூ கேமரா உடன் வரும். செடான் தற்போதைய மாடலில் உள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா சிவிடி vs ஹோண்டா எலிவேட் சிவிடி: ரியர் வேர்ல்டு செயல்திறன் ஒப்பீடு
விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை
0 out of 0 found this helpful