• English
  • Login / Register

ஜூலை 4 ஆம் தேதியில் இந்தியாவில் அறிமுகமாகும் ஃபேஸ்லிப்டட் கியா செல்டோஸ்

published on ஜூன் 21, 2023 03:17 pm by ansh for க்யா Seltos

  • 2K Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த ஃபேஸ்லிப்ட்டுடன், காம்பாக்ட் எஸ்யூவி அகலமான சன்ரூஃப் மற்றும் ADAS போன்ற பிரபலமான அம்சங்களையும் பெறும்.

Facelifted Kia Seltos Front

  • காம்பாக்ட் எஸ்யூவி க்கான டீலர்ஷிப் அளவிலான முன்பதிவுகள் ரூ.25,000 முன்பணத்துடன் திறக்கப்பட்டுள்ளன.

  • வெளியேறும் மாடலில் உள்ளதைப் போல அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது கூடுதலாக 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினையும் பெறும்.

  • ADAS மற்றும் அகலமான சன்ரூஃபை-த் தவிர்த்து, அது இன்டெகிரேட்டட் டூயல் 10.25 இன்ச் டிஸ்பிளேக்கள், ஹீட்டட் முன்புற இருக்கைகள் மற்றும் ஆறு ஏர்பேக்குகளையும் பெறுகிறது.

  • அறிமுகப்படுத்தப்பட்ட உடனே சந்தை வெளியீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • விலை ரூ. 10.5 லட்சத்தில் (எக்ஸ் ஷோ ரூம்) இருந்து நிர்ணயிக்கப்படலாம்

நாட்டில் அதிகம் விற்பனையாகும் காம்பாக்ட் எஸ்யூவி -களில் ஒன்றான கியா செல்டோஸ் அப்டேட்டுக்காக காத்திருக்கிறது. மற்றும் அதன் ஃபேஸ்லிப்டட் மாடலின் வருகைக்காக நாங்கள் சில காலமாகவே காத்திருக்கிறோம். இப்போது, நாங்கள் ஃபேஸ்லிப்டட் கியா செல்டோஸ் சந்தைக்கு விரைவில் வரும் என்பதை உறுதிப்படுத்துகிறோம் மற்றும் ஜூலை 4 ஆம் தேதியில் இந்தியாவில் அதன் அறிமுகம் இருக்கும்.

புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு

Facelifted Kia Seltos Rear

இந்த ஃபேஸ்லிப்ட்டுடன், செல்டோஸ் LEDஹெட்லைட்டுகளுடன் ஸ்லீக்கர் செட் மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட முன்புற கிரில்லுடன் கூடிய DRL -களையும் பெறும்.  சில கதவு கிளாடிங்கைத் தவிர பக்கவாட்டுத்தோற்றத்தில் எந்த பெரிய மாற்றமும் இல்லை. பின்புறத்தில், காம்பாக்ட் எஸ்யூவிஇன் டெயில் லேம்ப் சற்று வளைந்துள்ளது மற்றும் நடுவில் இணைக்கும் கூறு ஒன்று உள்ளது. கூடுதல் ஈர்க்கும் தோற்றத்திற்காக பூட் சிறிது வளைந்த வடிவமைப்புடன் உள்ளது மற்றும் பின்புற பம்பரும் மறுவடிவமைக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பவர்டிரெயின்கள்

வெளிச்செல்லும் மாடலின் இன்ஜின் ஆப்ஷன்களையே ஃபேஸ்லிப்டட் செல்டோஸ் -ம் பெறும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம், அது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ், 6-ஸ்பீடு iMT அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் 1.5லிட்டர் டீசல் இன்ஜின்(115PS/250Nm)  தேர்வுடன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைப் (115PS/144Nm)பெறுகிறது.

மேலும் படிக்கவும்: எந்த உறையும் இல்லாமல் கியா செல்டோஸ் உளவு பார்க்கப்பட்டது, நாம் காணக்கூடிய 5 விஷயங்கள் இதோ

விற்பனையில் இல்லாத பழைய 140PS 1.4லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினால் (160PS/253Nm) மாற்றப்படக்கூடும் அது கியா கேரென்ஸ்  மற்றும் புதிய ஹூண்டாய் வெர்னாவில் காணப்படுகிறது.

அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு

Facelifted Kia Seltos Cabin

சோதனையில் உள்ள சில காட்சிகளின்படி, ஃபேஸ்லிப்டட் செல்டோஸ் பனோரமிக் சன்ரூஃப் உடன் லேன் கீப் அசிஸ்ட், ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற ADAS அம்சங்களையும் பெறும் என்று நமக்குத் தெரிகிறது. இந்த இரு அம்சங்களையும் அதன் போட்டிக்கார்களும் வழங்குகின்றன.

மேலும் படிக்கவும்: வீட்டிற்கு வந்தடைந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கியா செல்டோஸ் கார்கள்

உலகளவில் கிடைக்கும் ஃபேஸ்லிப்டட் செல்டோசில் உள்ளதைப் போன்ற மறுவடிவமைக்கப்பட்ட கேபினையும் அது பெறும அதில் டூயல் 10.25 இன்ச் டிஸ்பிளேக்கள்( டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே) போன்ற அம்சங்கள் மற்றும் ஆறு ஏர்பேகுகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டு கன்ட்ரோல் (ESC), டயர் பிரசர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), மற்றும் ஹில் அசிஸ்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் பெறுகிறது

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

Facelifted Kia Seltos Front

அதே மாதத்தின் பிற்பகுதியில் கியா அதன் விலையை அறிவிக்கலாம் மற்றும் அதன் தொடக்க விலை ரூ.10.5 லட்சமாக (எக்ஸ்-ஷோ ரூம்) இருக்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஃபேஸ்லிப்டட் செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா,  ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் , மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர்  மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகியவற்றுடன் போட்டியாகத் தொடரும்.

மேலும் படிக்கவும்: செல்டோஸ் டீசல் .

was this article helpful ?

Write your Comment on Kia Seltos

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience