• English
  • Login / Register

2024 தீபாவளி -க்குள் இந்த 9 எஸ்யூவிகளை உடனடியாக டெலிவரி எடுக்கலாம்

published on அக்டோபர் 24, 2024 06:43 pm by yashika for மாருதி கிராண்டு விட்டாரா

  • 82 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஹோண்டாவின் எஸ்யூவி 10 -க்கும் மேற்பட்ட நகரங்களில் உடனடியாகக் கிடைக்கிறது. மற்ற கார்களை குறைந்தபட்சம் 7 இந்திய நகரங்களில் ஒரு வார காலத்திற்குள் டெலிவரி எடுக்கலாம்.

9 SUVs Waiting Period

தீபாவளி காலத்தில் பல்வேறு கார் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சலுகைகளை பயன்படுத்திக் புதிய காரை வீட்டுக்குக் கொண்டு வருவதற்குப் பலரும் விரும்புவார்கள். இருப்பினும் தொடர்ந்து வளர்ந்து வரும் தேவையால் பட்ஜெட்-சந்தை மாடல் கார்களுக்கு எப்போதும் காத்திருப்பு காலம் அதிகமாக இருக்கும். குறிப்பிட்டு சொல்லப்போனால் ஒரு மாதம் முதல் 6 மாதங்கள் வரை இருக்கிறது !.

நீங்கள் 2024 தீபாவளி பண்டிகைக்குள் ஒரு எஸ்யூவி -யை வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்புபவராக இருந்தால் இந்தியாவின் குறைந்தபட்சம் 7 முக்கிய நகரங்களில் குறைவான காத்திருப்பு அல்லது அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் வீட்டுக்கு செல்லக்கூடிய மாடல்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம்.

மாருதி கிராண்ட் விட்டாரா

விலை வரம்பு: ரூ.10.99 லட்சம் முதல் ரூ.20.09 லட்சம் வரை

1 வாரம் அல்லது அதற்கும் குறைவான நாட்களில் கிடைக்கும்: பெங்களூரு, ஹைதராபாத், புனே, அகமதாபாத், குருகிராம், தானே, சூரத், கோயம்புத்தூர்.

Maruti Grand Vitara

  • மாருதி கிராண்ட் விட்டாரா பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் எளிதாகக் கிடைக்கிறது. 

  • கிராண்ட் விட்டாராவுடன் கிடைக்கும் இன்ஜின் ஆப்ஷன்கள்:

இன்ஜின்

1.5-லிட்டர் பெட்ரோல் (மைல்டு-ஹைப்ரிட்)

1.5 லிட்டர் CNG (மைல்டு ஹைபிரிட் பெட்ரோல்)

1.5 லிட்டர் பெட்ரோல் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் 

பவர்

103 PS

88 PS

116 PS

டார்க்

137 Nm

122 Nm

122 Nm

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT/ 6-ஸ்பீடு AT

5-ஸ்பீடு MT

e-CVT

  • கிராண்ட் விட்டாரா வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வென்டிலேட்டட் முன் சீட்கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.

  • பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், 360 டிகிரி கேமரா மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளன.

மாருதி ஜிம்னி

விலை வரம்பு: ரூ.12.74 லட்சம் முதல் ரூ.14.95 லட்சம் வரை

1 வாரம் அல்லது அதற்கும் குறைவான நாட்களில் கிடைக்கும்: பெங்களூரு, ஹைதராபாத், புனே, ஜெய்ப்பூர், அகமதாபாத், குருகிராம், தானே, சூரத், சண்டிகர், கோயம்புத்தூர் மற்றும் ஃபரிதாபாத்.

Maruti Jimny

  • மாருதி ஜிம்னி பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் எளிதாகக் கிடைக்கிறது.

  • ஜிம்னியுடன் கிடைக்கும் இன்ஜின் ஆப்ஷன்கள்:

இன்ஜின்

1.5 லிட்டர் பெட்ரோல்

பவர்

105 PS

டார்க்

134 Nm

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT/4-ஸ்பீடு AT

  • இதில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோ ஏசி ஆகியவற்றுடன் கூடிய 9-இன்ச் டச் ஸ்கிரீன் உள்ளது.

  • இது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ரியர்வியூ கேமரா ஆகியவை உள்ளன.

மாருதி ஃபிரான்க்ஸ்

விலை வரம்பு: ரூ.7.51 லட்சம் முதல் ரூ.13.04 லட்சம் வரை

1 வாரம் அல்லது அதற்கும் குறைவான நாட்களில் கிடைக்கும்: பெங்களூரு, ஹைதராபாத், புனே, ஜெய்ப்பூர், அகமதாபாத், குருகிராம், தானே, சூரத், சண்டிகர், கோயம்புத்தூர் மற்றும் ஃபரிதாபாத்.

Maruti Fronx

  • வாடிக்கையாளர்கள் மாருதி ஃபிரான்க்ஸ் காரை உடனடியாக பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் கோவையில் பெறலாம்.

  • மாருதி ஃபிரான்க்ஸ் -க்கு இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை வழங்கியுள்ளது:

இன்ஜின்

1 லிட்டர் டர்போ பெட்ரோல்

1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல்

1.2 லிட்டர் பெட்ரோல்+CNG இன்ஜின்

பவர்

100 PS

90 PS

77.5 பிஎஸ்

டார்க்

148 Nm

113 Nm

98.5 Nm

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT/6-ஸ்பீடு AT

5-ஸ்பீடு MT/5-ஸ்பீடு AMT

5-ஸ்பீடு MT

  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் கூடிய 9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ ஏசி ஆகியவற்றை ஃபிரான்க்ஸ் கொண்டுள்ளது.

  • இது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள் ஆகியவற்றைப் பெறுகிறது.

ஹோண்டா எலிவேட்

விலை வரம்பு: ரூ.11.69 லட்சம் முதல் ரூ.16.71 லட்சம் வரை

1 வாரம் அல்லது அதற்கும் குறைவான நாட்களில் கிடைக்கும்: புது தில்லி, மும்பை, ஹைதராபாத், புனே, சென்னை, ஜெய்ப்பூர், கொல்கத்தா, காசியாபாத், பாட்னா, ஃபரிதாபாத், இந்தூர் மற்றும் நொய்டா.

Honda Elevate

  • ஹைதராபாத், புனே மற்றும் சென்னையில் வசிக்கும் வாங்குபவர்கள் எஸ்யூவியை உடனடியாக வீட்டிற்கு ஓட்டிச் செல்ல முடியும்.

  • ஹோண்டா எலிவேட் உடன் கிடைக்கும் இன்ஜின் ஆப்ஷன்கள்:

இன்ஜின்

1.5 லிட்டர் பெட்ரோல் 

பவர்

121 PS

டார்க்

145 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT/ 7-ஸ்டெப் CVT

  • ஹோண்டா எலிவேட் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் கூடிய 10.25 இன்ச் டச் ஸ்கிரீன், 7 இன்ச் செமி-டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஆட்டோ ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகியவற்றுடன் வருகிறது. 

  • பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன்-கீப்பிங் அசிஸ்ட் மற்றும் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன.

மேலும் படிக்க: Skoda Kylaq பற்றி கார்தேக்கோ -வின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களின் பார்வை

ஃபோக்ஸ்வேகன் டிகுவான்

விலை வரம்பு: ரூ.35.17 லட்சம்

1 வாரம் அல்லது அதற்கும் குறைவான நாட்களில் கிடைக்கும்: பெங்களூரு, ஹைதராபாத், புனே, ஜெய்ப்பூர், சூரத், ஃபரிதாபாத் மற்றும் நொய்டா

Volkswagen Tiguan

  • நீங்கள் நொய்டா, ஃபரிதாபாத் மற்றும் ஜெய்ப்பூரில் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் உடனடியாக டெலிவரி ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எடுக்கலாம்.

  • டிகுவானுடன் கிடைக்கும் இன்ஜின் ஆப்ஷன்கள்:

இன்ஜின்

2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

பவர்

190 PS

டார்க்

320 Nm

டிரான்ஸ்மிஷன்

7-ஸ்பீடு DCT

  • டிகுவானில் 8-இன்ச் டச் ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப், 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் பவர்-அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

  • பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் (TPMS), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொகுப்பு, ரியர் வியூ கேமரா மற்றும் ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் ஆகியவை உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் டைகுன்

விலை வரம்பு: ரூ.11.70 லட்சம் முதல் ரூ.19.74 லட்சம்

1 வாரம் அல்லது அதற்கும் குறைவான நாட்களில் கிடைக்கும்: பெங்களூரு, ஹைதராபாத், புனே, ஜெய்ப்பூர், சூரத், ஃபரிதாபாத் மற்றும் நொய்டா

Volkswagen Taigun

  • நீங்கள் உடனடியாக ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரை நொய்டா, ஃபரிதாபாத் மற்றும் ஜெய்ப்பூரில் உடனடியாக டெலிவரி எடுக்கலாம்.

  • ஃபோக்ஸ்ஸ்பீடுன் டைகுன் இரண்டு என்ஜின்களின் தேர்வுடன் வருகிறது:

இன்ஜின்

1 லிட்டர் டர்போ பெட்ரோல்

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் 

பவர்

115 PS

150 PS

டார்க்

178 Nm

250 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT/6-ஸ்பீடு AT

6-ஸ்பீடு MT/7-ஸ்பீடு DCT

  • 10.1 இன்ச் டச் ஸ்கிரீன், 8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வென்டிலேட்டட் மற்றும் பவர்டு முன் சீட்கள் மற்றும் ஆட்டோ ஏசி ஆகியவை டைகுன் காரில் உள்ள முக்கிய வசதிகளாகும். 

  • பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் பின்புறக் காட்சி கேமரா ஆகியவை உள்ளன.

சோனெட்

விலை வரம்பு: ரூ.8 லட்சம் முதல் ரூ.15.77 லட்சம் வரை

1 வாரம் அல்லது அதற்கும் குறைவான நாட்களில் கிடைக்கும்: பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், புனே, குருகிராம், கொல்கத்தா மற்றும் தானே.

Kia Sonet X-Line

  • சோனெட் கார் மும்பை, ஹைதராபாத் மற்றும் புனே உள்ளிட்ட சில நகரங்களில் எளிதாகக் கிடைக்கிறது.

  • 2024 கியா சோனெட் 3 இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது: 

இன்ஜின்

1.2 லிட்டர் பெட்ரோல்

1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

1.5 லிட்டர் டீசல் இன்ஜின்

பவர்

83 PS

120 PS

116 PS

டார்க்

115 Nm

172 Nm

250 Nm

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT

6-ஸ்பீடு iMT/ 7-ஸ்பீடு DCT

6-ஸ்பீடு MT/ 6-ஸ்பீடு iMT/ 6-ஸ்பீடு AT

  • சோனெட் 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் சீட்கள் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. 

  • பாதுகாப்புக்காக இது 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் லெவல் 1 ADAS ஆகியவற்றைப் கொண்டுள்ளது.

கியா செல்டோஸ்

விலை வரம்பு: ரூ.10.90 லட்சம் முதல் ரூ.20.45 லட்சம் வரை

1 வாரம் அல்லது அதற்கும் குறைவான நாட்களில் கிடைக்கும்: பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், புனே, குருகிராம், கொல்கத்தா மற்றும் தானே.

Kia Seltos

  • கியா செல்டோஸ் கார் மும்பை, ஹைதராபாத் மற்றும் புனேவில் உடனடியாக கிடைக்கும்.

  • கியா செல்டோஸ் உடன் உங்களுக்கு 3 இன்ஜின் தேர்வுகள் உள்ளன:

இன்ஜின்

1.5 லிட்டர் பெட்ரோல்

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் 

1.5 லிட்டர் டீசல் 

பவர்

115 PS

160 PS

116 PS

டார்க்

144 Nm

253 Nm

250 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT/ CVT

6-ஸ்பீடு iMT/ 7-ஸ்பீடு DCT

6-ஸ்பீடு MT/ 6-ஸ்பீடு iMT/ 6-ஸ்பீடு AT

  • செல்டோஸில் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கும்), டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவை வசதிகள் உள்ளன. 

  • பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), லெவல் 2 ADAS பாதுகாப்பு தொகுப்பு, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் மற்றும் ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி ஆகியவை உள்ளன.

ரெனால்ட் கைகர்

விலை வரம்பு: ரூ.6 லட்சம் முதல் ரூ.11.23 லட்சம் வரை

1 வாரம் அல்லது அதற்கும் குறைவான நாட்களில் கிடைக்கும்: புது டெல்லி, பெங்களூரு, மும்பை, சென்னை, கொல்கத்தா, தானே, காசியாபாத், பாட்னா மற்றும் நொய்டா.

Renault Kiger

  • நொய்டா, பாட்னா, தானே மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் எந்தக் காத்திருப்பு காலமும் இல்லாமல் இந்த காரை டெலிவரி எடுக்கலாம்.

  • ரெனால்ட் கைகர் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது:

இன்ஜின்

1 லிட்டர் பெட்ரோல்

1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

பவர்

72 PS

100 PS

டார்க்

96 Nm

160 Nm

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT/5-ஸ்பீடு AMT

5-ஸ்பீடு MT/ CVT

  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 8 இன்ச் டச் ஸ்கிரீன், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோ ஏசி, புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் ஆகிய வசதிகள் உள்ளன.

  • பாதுகாப்புக்காக 4 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் (HSA), பின்புற பார்க்கிங் சென்சார்கள், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் TPMS ஆகியவை உள்ளன.

மேலும் படிக்க: Renault Triber மற்றும் Kiger கார்கள் இந்திய இராணுவத்தில் இப்போது இணைந்துள்ளன

இந்த எஸ்யூவி -களில் எதை வாங்கலாம் என்று நினைக்கிறீர்கள் ? கீழே உள்ள கமெண்ட் பகுதியில் உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: கிராண்ட் விட்டாரா ஆன் ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Maruti கிராண்டு விட்டாரா

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
    ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
    Rs.17 - 22.15 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience