2025 ஏப்ரல் மாதம் நெக்ஸா கார்கள் ரூ.1.4 லட்சம் வரை தள்ளுபடியுடன் கிடைக்கும்
kartik ஆல் ஏப்ரல் 07, 2025 09:43 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி ஜிம்னி, கிராண்ட் விட்டாரா மற்றும் இன்விக்டோ ஆகியவற்றில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான தள்ளுபடி கிடைக்கும்.
ஏப்ரல் 2025 க்கான நெக்ஸா கார்களுக்கு சலுகைகளை மாருதி வெளியிட்டுள்ளது. பணத் தள்ளுபடிகள், கார்ப்பரேட் தள்ளுபடிகள் மற்றும் ஸ்கிராப்பேஜ் பலன்களை கொடுக்கிறது. சில மாடல்களில் கிடைக்கும் சிறப்பு மேம்படுத்தப்பட்ட போனஸுடன் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய வாகனங்களை மாற்றும்போது வெகுமதி புள்ளிகளையும் பெறலாம். 2025 ஏப்ரலில் நெக்ஸா கார்களில் கிடைக்கும் தள்ளுபடிகளின் விவரங்கள் இங்கே உள்ளன.
இக்னிஸ்
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.30,000 வரை |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.2,100 |
ஸ்கிராப்பேஜ் பலன் |
ரூ.30,000 வரை |
மொத்த பலன் |
ரூ. 62,100 வரை |
-
மாருதி இக்னிஸ் காரின் AMT வேரியன்ட்களில் மேலே உள்ள சலுகைகள் கிடைக்கும்.
-
மேனுவல் வேரியன்ட்களுக்கு ரூ. 25,000 பணத் தள்ளுபடி, மொத்த பலன்களாக ரூ. 57,100 வரை கிடைக்கும்.
-
மாருதி ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ரூ.30,000 ஸ்கிராப்பேஜ் பலன்யையும் கொடுக்கிறது. இந்த பலன்களில் ஒன்றை மட்டுமே ஒரே நேரத்தில் பெற முடியும் என்பதை நினைவில் வைக்கவும்.
-
கார்ப்பரேட் அல்லது ரூரல் தள்ளுபடியும் இதனுடன் கிடைக்கும். இதில் ஒன்றை மட்டுமே பயன்படுத்த முடியும்.
பலேனோ
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
25,000 வரை |
ஸ்கிராப்பேஜ் பலன் |
25,000 வரை |
ரூரல் பலன்கள் |
ரூ.2,100 |
மொத்த பலன் |
50,000 வரை |
-
பலேனோ -வின் பேஸ்-ஸ்பெக் சிக்மா மற்றும் AMT வேரியன்ட்கள் மேலே உள்ளபடி அதிகமான பலன்களுடன் கிடைக்கும்.
-
மற்ற வேரியன்ட்களுக்கு ரூ.20,000 வரை குறைவான பணத் தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது.
-
மாருதி பலினோ உடன் கார்ப்பரேட் தள்ளுபடியை வழங்கவில்லை. ஆனால் இது ரூ.2,100 ரூரல் தள்ளுபடியுடன் கிடைக்கும்.
-
பலேனோவுக்கான ரீகல் கிட் ரூ. 10,000 வரை தள்ளுபடியுடன் கிடைக்கும்.
சியாஸ்
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.10,000 |
ஸ்கிராப்பேஜ் பலன் |
30,000 வரை |
மொத்த பலன் |
40,000 வரை |
-
அனைத்து வேரியன்ட்களும் சியாஸ் மேலே குறிப்பிட்டுள்ள அதே பண பலன் உடன் கிடைக்கும்.
-
ஸ்கிராப்பேஜ் பலன் நான்கு வேரியன்ட்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.
ஃபிரான்க்ஸ்
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
30,000 வரை |
ஸ்கிராப்பேஜ் பலன் |
15,000 வரை |
மொத்த பலன் |
45,000 வரை |
-
ஃப்ரான்க்ஸ் -க்கான அதிக தள்ளுபடிகள் டர்போ வேரியன்ட்டில் கிடைக்கும், இது ஒரு வெலாசிட்டி ஆக்ஸசரீஸ்களையும் (ரூ. 43,000 மதிப்புள்ள) இலவசமாக பெறலாம்.
-
என்ட்ரி லெவல் சிக்மாவை தவிர வழக்கமான வேரியன்ட்களில் ரூ.10,000 பணத் தள்ளுபடியுடன் கிடைக்கின்றன.
-
சிக்மா வேரியன்ட் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு எந்த பணத் தள்ளுபடியும் இல்லை. ஆனால் ஸ்கிராப்பேஜ் அல்லது எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும்.
கிராண்ட் விட்டாரா
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
50,000 வரை |
ஸ்கிராப்பேஜ் பலன் |
65,000 வரை |
கூடுதல் பலன்கள் |
20,000 வரை |
மொத்த பலன் |
1.35 லட்சம் வரை |
-
கிராண்ட் விட்டாரா -வின் ஸ்ட்ராங் ஹைபிரிட் வேரியன்ட்கள் 5 வருட நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்துடன், மேலே குறிப்பிட்டுள்ளபடி அதிகபட்ச தள்ளுபடிகளுடன் கிடைக்கும்.
-
கிராண்ட் விட்டாராவின் டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட் -கள் குறைந்த பணத் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
-
கிராண்ட் விட்டாராவின் சிக்மா மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு எந்த பணத் தள்ளுபடியும் இல்லை. ஆனால் இவை எக்ஸ்சேஞ்ச் அல்லது ஸ்கிராப்பேஜ் போனஸ் உடன் கிடைக்கும்.
எக்ஸ்எல் 6
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
கிடைக்காது |
ஸ்கிராப்பேஜ் பலன் |
25,000 வரை |
மொத்த பலன் |
25,000 வரை |
-
மாருதி XL6 -ல் பணத் தள்ளுபடி கிடைக்காது.
-
இது இன்னும் ஒரு ஸ்கிராப்பேஜ் அல்லது எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் கிடைக்கும். அதில் ஒன்றை மட்டுமே பெற முடியும்
ஜிம்னி
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
1 லட்சம் வரை |
ஸ்கிராப்பேஜ் பலன் |
கிடைக்காது |
மொத்த பலன் |
1 லட்சம் வரை |
-
மாருதி ஜிம்னியின் ஆல்பா வேரியன்ட்டிற்கு ரூ. 1 லட்சம் பணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
-
ஜெட்டா வேரியன்ட் பணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ எந்த பலன்யையும் பெறாது.
-
எக்ஸ்சேஞ்ச், ஸ்கிராப்பேஜ் அல்லது கார்ப்பரேட் போனஸ் போன்ற பிற பலன்கள் ஜிம்னியில் கிடைக்காது.
-
மாருதி ஜிம்னியின் விலை ரூ.12.76 லட்சம் முதல் ரூ.14.81 லட்சம் வரை உள்ளது.
இன்விக்டோ
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
25,000 வரை |
ஸ்கிராப்பேஜ் பலன் |
1.15 லட்சம் வரை |
மொத்த பலன் |
1.40 லட்சம் வரை |
-
இன்விக்டோ -வின் ஆல்பா வேரியன்ட் 25,000 பணத் தள்ளுபடியுடன் வருகிறது.
-
ஜெட்டா வேரியன்ட் எந்த பணப் பலன்களையும் பெறாது.
-
இன்விக்டோ ரூ. 1.15 லட்சம் ஸ்கிராப்பேஜ் போனஸ் அல்லது ரூ. 1 லட்சம் எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் வருகிறது. இதில் ஒன்றே ஒன்றை மட்டுமே பெற முடியும்.
-
மாருதி இன்விக்டோவின் விலை ரூ.25.51 லட்சத்தில் இருந்து ரூ.29.22 லட்சம் வரை உள்ளது.
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி -க்கானவை
மாநிலம் அல்லது நகரத்தைப் பொறுத்து தள்ளுபடிகள் மாறுபடலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள நெக்ஸா டீலரை தொடர்பு கொள்ளவும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.