• English
  • Login / Register

2024 ஜூலை மாதத்துக்கான Maruti Nexa கார்களுக்கான சலுகைகள்: பகுதி 1- ரூ. 2.5 லட்சம் வரை தள்ளுபடிகள் கிடைக்கும்

published on ஜூலை 04, 2024 08:38 pm by samarth for மாருதி ஜிம்னி

  • 77 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கிராண்ட் விட்டாராவை தொடர்ந்து ஜிம்னியில் அதிக ஆஃபர் கிடைக்கும்.

Maruti Nexa July 2024 Offers

  • மாருதி ஜிம்னி அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடியை பெறுகிறது.

  • கிராண்ட் விட்டாரா -வில் ரூ.1.03 லட்சம் வரை தள்ளுபடி பெறலாம்.

  • பலேனோ மற்றும் ஃபிரான்க்ஸ் ஆகியவை ரூ.40,000 மற்றும் ரூ.35,000 வரை பணத் தள்ளுபடியுடன் கிடைக்கின்றன.

  • XL6 மற்றும் சியாஸ் இரண்டிலும் ரூ.20,000 பண தள்ளுபடி உள்ளது.

  • மாருதி இன்விக்டோவுக்கு எந்த தள்ளுபடியும் இல்லை.

  • இந்த சலுகைகள் ஜூலை 15, 2024 வரை செல்லுபடியாகும்.

மாருதி நெக்ஸா காரை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா ? மாருதி நிறுவனம் 2024 ஜூலை -யில் புதிய சலுகைகளை கார்களுக்கு கொடுக்கிறது. இன்விக்டோ எம்பிவி -யை தவிர ஜிம்னி, கிராண்ட் விட்டாரா மற்றும் ஃபிரான்க்ஸ் போன்ற பல்வேறு நெக்ஸா கார்களில் நீங்கள் மிக அதிகமாக பணத்தை சேமிக்கலாம். ஆனால். இந்த சலுகைகள் ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை மட்டுமே செல்லுபடியாகும், அதன் பிறகு அவை மாற்றப்படலாம். மாடல் வாரியான சலுகை விவரங்களை இங்கே பார்க்கலாம்:

பலேனோ

Maruti Baleno Front

சலுகை

தொகை 

பணத் தள்ளுபடி

ரூ.40,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.15,000

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.2,100

மொத்த பலன்கள்

ரூ.57,100

  • மாருதி அதிகபட்ச தள்ளுபடியை வழங்குகிறது பலேனோ AMT வேரியன்ட்களில் ரூ.40,000 ரொக்கத் தள்ளுபடியும், மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியன்ட்களுக்கு ரூ.5,000 ஆக குறையும். 

  • ரூ. 15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸுக்கு பதிலாக ரூ. 20,000 ஸ்கிராப்பேஜ் போனஸும் உள்ளது.

  • நீங்கள் சிஎன்ஜி ஆப்ஷனில் பலேனோவை வீட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டால் நீங்கள் ரூ. 25,000 ரொக்க தள்ளுபடியைப் பெறலாம். மற்ற ஆஃபர்களில் மாற்றம் இருக்காது.

  • பலேனோவின் விலை ரூ.6.66 லட்சம் முதல் ரூ.9.83 லட்சம் வரை உள்ளது.

ஃபிரான்க்ஸ்

Maruti Fronx Front

சலுகை

தொகை 

பணத் தள்ளுபடி

35,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.10,000

மொத்த பலன்கள்

ரூ.45,000

  • நீங்கள் மாருதி ஃபிரான்க்ஸ் காரின் டர்போ வேரியன்ட்களை வாங்க திட்டமிட்டால், ரூ. 35,000 ரொக்கத் தள்ளுபடி மற்றும் ரூ. 43,000 மதிப்புள்ள வேலாசிட்டி எடிஷன் ஆக்ஸசரி கிட உடன் கிடைக்கும்.

  • 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் ஃபிரான்க்ஸை தேர்வு செய்தால், ரூ.22,500 ரொக்க தள்ளுபடி கிடைக்கும். AMT வேரியன்ட்களுக்கு கூடுதலாக ரூ.5,000 ரொக்க தள்ளுபடி கிடைக்கும்.

  • கூடுதலாக சிக்மா வேரியன்ட்டுக்கு நீங்கள் ரூ. 3,060 மதிப்புள்ள ஒரு காம்ப்ளிமென்டரி வெலாசிட்டி எடிஷனின் கிட்டை பெறலாம்.

  • எக்ஸ்சேஞ்ச் போனஸுக்கு பதிலாக ரூ.15,000 ஸ்கிராப்பேஜ் போனஸையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

  • சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு மாருதி எந்த பணப் பலனையும் வழங்கவில்லை. இருப்பினும், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ரூ.15,000 ஸ்கிராப்பேஜ் போனஸ் இரண்டில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.

  • ஃபிரான்க்ஸ் விலை ரூ.7.52 லட்சம் முதல் ரூ.12.88 லட்சம் வரை உள்ளது.

குறிப்பு: இந்தக் காலக்கட்டத்தில். டெல்டா/டெல்டா+க்கான வெலாசிட்டி எடிஷன் கிட்டை தள்ளுபடி விலையில் ரூ.12,700 -க்கு வாங்கலாம். அதன் உண்மையான விலையான ரூ.17,300 -ல் இருந்து குறைக்கப்பட்டுள்ளது.

கிராண்ட் விட்டாரா

Maruti Grand Vitara Review

சலுகை

தொகை 

பணத் தள்ளுபடி

50,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.50,000

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.3,100

மொத்த பலன்கள்

ரூ.1.03 லட்சம்

  • மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆஃபர்கள் மாருதி கிராண்ட் விட்டாரா -வின் ஸ்ட்ராங்-ஹைபிரிட் வேரியன்ட்களுக்கு பொருந்தும். ஒரு இலவசமான 5 வருட உத்தரவாதத் தொகுப்புடன் இது கிடைக்கும்.

  • ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியன்ட்களில் ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸுக்கு பதிலாக ரூ.55,000 ஸ்கிராப்பேஜ் போனஸையும் நீங்கள் பெறலாம். 

  • மாருதி எஸ்யூவியின் பேஸ்-ஸ்பெக் சிக்மா வேரியன்ட்டை ரூ.30,000 ரொக்க தள்ளுபடி, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸுக்கு பதிலாக ரூ.25,000 விருப்பமான ஸ்கிராப்பேஜ் போனஸ் மற்றும் ரூ.3,100 கார்ப்பரேட் தள்ளுபடியுடன் வழங்குகிறது.

  • எஸ்யூவியின் சிஎன்ஜி வேரியன்ட்களில் வாங்குபவர்கள் ரூ.10,000 ரொக்கத் தள்ளுபடியைப் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஸ்கிராப்பேஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை மேலே உள்ளதைப் போலவே இருக்கும்.

  • கிராண்ட் விட்டாரா அதன் டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்களில் ரூ. 30,000 ரொக்கத் தள்ளுபடி மற்றும் அதே எக்ஸ்சேஞ்ச் போனஸை பெறுகிறது. இந்த டிரிம்களுக்கு ஸ்கிராப்பேஜ் போனஸ் ரூ. 10,000 அதிகரிக்கிறது. அதே நேரத்தில் கார்ப்பரேட் தள்ளுபடி மாறாமல் இருக்கும். 

  • கிராண்ட் விட்டாரா ரூ.11 லட்சம் முதல் ரூ.19.93 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஜிம்னி

Maruti Jimny

சலுகை

தொகை 

பணத் தள்ளுபடி

2.5 லட்சம் வரை

மொத்த பலன்கள்

ரூ.2.5 லட்சம்

  • மாருதி ஜிம்னி -யின் அனைத்து வேரியன்ட்களும் Maruti Suzuki Smart Finance (MSSF) ஐப் பெறாமல் ரூ. 1 லட்சம் வரையிலான பலன்களுடன் வழங்கப்படுகிறது.

  • MSSF -ஐத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் எஸ்யூவிக்கு நிதியளிப்பதற்காக ஜெட்டா வேரியன்ட்டில் ரூ. 2 லட்சம் தள்ளுபடியும், ஆல்ஃபா வேரியன்ட்டில் ரூ. 2.5 லட்சம் வரை தள்ளுபடியும் பெறலாம். 

  • மாருதி எந்த எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி அல்லது ஸ்கிராப்பேஜ் போனஸ் ஆகியவற்றை வழங்கவில்லை.

  • ஜிம்னியின் விலை ரூ.12.74 லட்சம் முதல் ரூ.14.79 லட்சம் வரை உள்ளது.

XL6

சலுகை

தொகை 

பணத் தள்ளுபடி

ரூ.20,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.20,000 வரை

மொத்த பலன்கள்

ரூ.40,000

  • மாருதி XL6 பெட்ரோல் வேரியன்ட்கள் மேலே கூறப்பட்ட தள்ளுபடிகளுடன் கிடைக்கும், எக்ஸ்சேஞ்ச் போனஸுக்குப் பதிலாக ஸ்கிராப்பேஜ் நன்மையைத் தேர்வுசெய்தால் ரூ.25,000 போனஸுடன் கிடைக்கும்.

  • சிஎன்ஜி வேரியன்ட்டுக்கு ரூ.15,000 ரொக்க தள்ளுபடி கிடைக்கிறது. எக்ஸ்சேஞ்ச் மற்றும் ஸ்கிராப்பேஜ் போனஸ் முறையே ரூ. 10,000 மற்றும் 15,000 ஆக குறைகிறது (இரண்டு போனஸ்களில் ஒன்றை மட்டும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்).

  • மாருதி XL6 காரின் விலையை ரூ.11.61 லட்சம் முதல் ரூ.14.61 லட்சம் வரை நிர்ணயித்துள்ளது.

சியாஸ்

சலுகை

தொகை 

பணத் தள்ளுபடி

ரூ.20,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.25,000

கார்ப்பரேட் தள்ளுபடி

ரூ.3,000

மொத்த பலன்கள்

ரூ.48,000

  • மாருதி சியாஸ் காரின் அனைத்து வேரியன்ட்களிலும் மேலே குறிப்பிட்ட சேமிப்பை நீங்கள் பெறலாம். ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸுக்கு பதிலாக ரூ.30,000 ஸ்கிராப்பேஜ் போனஸைத் தேர்வுசெய்ய வாங்குபவர்களுக்கு ஆப்ஷன் உள்ளது.

  • மாருதி தனது காம்பாக்ட் செடான் காரின் விலை ரூ.9.40 லட்சம் முதல் ரூ.12.29 லட்சம் வரையில் உள்ளது.

இக்னிஸ்

Maruti Ignis

சலுகை

தொகை 

பணத் தள்ளுபடி

ரூ.40,000 வரை

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

ரூ.15,000

மொத்த பலன்கள்

ரூ.55,000

  • மேலே குறிப்பிட்டுள்ள சலுகைகள் அனைத்தும் மாருதி இக்னிஸ் காரின் AMT வேரியன்ட்களுக்கும் பொருந்தும்.

  • மாருதி இக்னிஸின் MT வேரியன்ட்களுக்கு ரூ. 35,000 ரொக்க தள்ளுபடி கிடைக்கும். மற்ற தள்ளுபடிகள் மாறாமல் இருக்கும்.

  • நீங்கள் ரூ. 15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸை தேர்வு செய்யலாம். அல்லது ரூ. 20,000 ஸ்கிராப்பேஜ் போனஸுக்கு செல்லலாம்.

  • மாருதி இக்னிஸின் விலையை ரூ.5.84 லட்சம் முதல் ரூ.8.06 லட்சம் வரை நிர்ணயித்துள்ளது.

கவனிக்கவும்:

  • ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் ஏற்றவாறு கார்ப்பரேட் சலுகைகள் மாறுபடலாம்.

  • மாநிலம் மற்றும் நகரத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம். எனவே விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள மாருதி நெக்ஸா டீலரை தொடர்பு கொள்ளவும்.

  • விலை விவரங்கள் அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் -க்கானவை ஆகும்.

லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்

மேலும் படிக்க: மாருதி ஜிம்னி ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti ஜிம்னி

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience