மஹிந்திரா தார் 5 டோர் Maruti Jimny காருடன் ஒப்பிடும் போது Mahindra Thar 5 Door காரில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் என 7 வசதிகள்
published on ஜூலை 05, 2024 06:13 pm by dipan for மஹிந்திரா தார் ராக்ஸ்
- 70 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி ஜிம்னியை விட தார் 5-டோர் கூடுதல் வசதிகள் கொண்டதாகவும், அதிக பிரீமியமான காராகவும் இருக்கும்.
மஹிந்திரா தார் 5-டோர் விரைவில் அறிமுகமாக உள்ளது. இது மாருதி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் என ஆஃப்-ரோடு சார்ந்த எஸ்யூவி -களுடன் போட்டியிடும். காரில் அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், பல ஸ்பை ஷாட்களில் புரடெக்ஷன்-ஸ்பெக் மாடலில் என்ன வசதிகள் கிடைக்கும் என்பது பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது. மாருதி ஜிம்னி உடன் ஒப்பிடும் போது இதில் எதிர்பார்க்கப்படும் விஷயங்களின் பட்டியல் இங்கே:
ADAS
எங்களுக்கு கிடைத்த ஒரு ஸ்பை ஷாட் மூலமாக அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) டெக்னாலஜிக்கான கேமராவிற்கான யூனிட் போல தோற்றம் கொண்ட ஒரு பகுதி உள்பக்க பின்புறக் கண்ணாடியின் (IRVM) பின்புறத்தில் இருப்பது தெரிய வந்தது. ADAS வசதிகள் மஹிந்திரா XUV700 காரில் வழங்கப்படுவதைப் போலவே இருக்கலாம். அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் லேன் சேஞ்ச் அசிஸ்ட் உட்பட. மறுபுறம் மாருதி ஜிம்னியில் ADAS வசதிகள் எதுவும் இல்லை.
பனோரமிக் சன்ரூஃப்
மாருதி ஜிம்னி சிறப்பான வசதிகளை கொண்டிருந்தாலும் கூட அதில் சன்ரூஃப் இல்லை. அது இந்திய வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் வசதிகளில் ஒன்றாகும். ஆனால் தார் 5-கதவின் சோதனைக் கார்களில் ஒன்று பனோரமிக் சன்ரூஃப் உடன் இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது. இது புரடெக்ஷன்-ஸ்பெக் மாடலில் சன்ரூஃப் கிடைக்கும் என்பதை குறிக்கிறது.
பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
மாருதி ஜிம்னி வயர்லெஸ் ஃபோன் கனெக்டிவிட்டியை சப்போர்ட் செய்யும் 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெறுகிறது. மஹிந்திரா தார் 5-டோர் மஹிந்திரா XUV400 EV -யின் 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கடன் பெற வாய்ப்புள்ளது. இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்கிறது.
ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே
தார் 5-டோர் ஒரு பெரிய இன்ஃபோடெயின்மென்ட் செட்டப்பை கொண்டிருக்கலாம். அதோடு மட்டுமல்லாமல் அதன் சமீபத்திய சோதனைக் கார்களில் ஒன்றில் காணப்பட்டதைப் போல இது ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளேவையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அப்டேட்டட் XUV400 -லிருந்து பெறப்பட்டதாகவும் இருக்கலாம். ஒப்பிடுகையில் மாருதி ஜிம்னி மையத்தில் மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே (எம்ஐடி) கொண்ட டூயல்-பாட் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை பெறுகிறது.
வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங்
வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய தேவையான வயர்கள் மற்றும் கேபிள்களின் தேவையை நீக்குகிறது. மஹிந்திரா 5-டோர்-டோர் தார் XUV700 காரில் இடம்பெற்றுள்ள அதே வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் பேடை கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
360 டிகிரி கேமரா
தார் 5-டோரில் 360-டிகிரி கேமரா இடம்பெற வாய்ப்புள்ளது. இது இந்த எஸ்யூவி -யை குறுகலான இடங்கள் வழியாக டிரைவிங் செய்வதை எளிதாக்கும். குறிப்பாக ஆஃப்-ரோடு பயணங்களின் போது. மறுபுறம் மாருதி ஜிம்னியில் ரிவர்சிங் கேமரா மட்டுமே வழங்கப்படுகிறது.
பின்புற டிஸ்க் பிரேக்குகள்
மஹிந்திரா தார் 5-டோர் அதன் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு உடன் பின்புற டிஸ்க் பிரேக்குகளை கொண்டிருக்கும். இது பிரேக்கை அப்ளை செய்யும் போது எஸ்யூவியை குறைந்த தூரத்தில் நிறுத்த உதவும். ஒப்பிடுகையில், ஜிம்னி முன் சக்கரங்களில் மட்டுமே டிஸ்க் பிரேக்கை கொண்டுள்ளது.
ஜிம்னி -யை விட தார் 5-டோர் கார் இன்னும் என்ன வசதிகளை பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? கீழே உள்ள கமெண்ட் பகுதியில் உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாகன உலகில் நடப்பவை பற்றி உடனடி அறிவிப்புகள் வேண்டுமா? கார்தேக்கோ -வின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: மஹிந்திரா தார் ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful