Mahindra Thar 5-door காரின் உட்புறம் மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது - இதில் ADAS கிடைக்குமா ?
published on ஏப்ரல் 25, 2024 07:39 pm by rohit for மஹிந்திரா தார் ராக்ஸ்
- 26 Views
- ஒரு கருத்தை எழுதுக
வரவிருக்கும் எஸ்யூவி -யின் எங்களின் சமீபத்திய ஸ்பை ஷாட்கள் கண்ணாடியின் பின்புறம் இருக்கும் ADAS கேமராவின் ஹவுசிங் போன்ற ஒன்று இருப்பதை காட்டுகின்றன.
-
மஹிந்திரா ஆகஸ்ட் 15, 2024 அன்று தார் 5-டோர் காரை வெளியிட உள்ளது.
-
மஹிந்திரா XUV700 போன்ற ADAS தொகுப்பைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் டிரைவர் டிரெளவுஸினெஸ் வார்னிங் அடங்கும்.
-
பாதுகாப்பு வசதிகளில் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் முன் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
10.25-இன்ச் டச் ஸ்கிரீன், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் டூயல்-சோன் ஏசி ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தார் 3-டோர் காரில் இருக்கும் அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் அதிக செயல்திறன் கொண்டதாக கிடைக்கும்.
-
விலை ரூ.15 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.
மஹிந்திரா தார் 5-டோர் காரின் ஸ்பை ஷாட்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று அதன் அறிமுகத்திற்கு முன்னதாக நாங்கள் மீண்டும் ஒரு சாலையில் ஒன்றைக் கண்டோம். புதிய ஸ்பை காட்சிகள் எஸ்யூவியின் உருவம் மறைக்கப்பட்ட வெளிப்புறத்தையும் உட்புறத்தையும் நமக்குக் காட்டுகின்றன. மற்றும் சில சுவாரஸ்யமான விவரங்களை காட்டுகின்றன.
ADAS வசதி கொடுக்கப்படுமா ?
சமீபத்திய ஸ்பை ஷாட்களில் இருந்து பேசப்படும் முக்கிய விஷயம் என்னவென்றால் விண்ட்ஷீல்டில் உள்ள IRVM க்கு பின்னால் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) கேமராவுக்கான ஹவுசிங் இருப்பதை பார்க்க முடிகின்றது. 5-டோர் தார் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் விலையை கருத்தில் கொண்டு, மஹிந்திரா இந்த பயனுள்ள பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் அதைச் கொடுப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. முந்தைய ஸ்பை ஷாட்களின் அடிப்படையில் தார் 5-டோர் ஒரு பிரீமியம் கார் ஆக இருக்கும் என்பதை நாங்கள் ஏற்கனவே தெரிந்த ஒன்று. எனவே இது மஹிந்திரா XUV700 போன்ற ADAS தொகுப்பை (சரியானதாக இல்லாவிட்டால்) கொண்டிருக்கலாம். குறிப்புக்கு, XUV700 -ன் ADAS ஆனது லேன்-கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் டிரைவர் டிரெளஸினெஸ் வார்னிங் போன்ற வசதிகளை உள்ளடக்கியது.
வெளிப்புற விவரங்கள்
புதிய ஸ்பை ஷாட்கள் மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள், டெயில்கேட்டில் உள்ள ஸ்பேர் வீல் மற்றும் LED டெயில்லைட்கள் கொண்ட தார் 5-டோர் காரின் பெரிதும் உருவம் மறைக்கப்பட்ட உற்பத்திக்கு தயாராக உள்ள பதிப்பைக் காட்டுகின்றன. அதன் முன்புறம் கேமராவில் படம்பிடிக்கப்படவில்லை என்றாலும், முந்தைய ஸ்பை ஷாட்கள் வட்ட வடிவ LED DRLகள் மற்றும் புதிய வடிவிலான கிரில் உடன் புரொஜெக்டர் ஹெட்லைட்கள் இருப்பதை உறுதி செய்துள்ளன.
மேலும் பார்க்க: குளோபல் NCAP சோதனையில் வெறும் 1 நட்சத்திரத்தை மட்டுமே பெற்ற Mahindra Bolero Neo கார்
எதிர்பார்க்கப்படும் பாதுகாப்பு வசதிகள் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்
6 ஏர்பேக்குகள், பின்புற டிஸ்க் பிரேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் முன் பார்க்கிங் சென்சார்கள் கொண்ட நீண்ட வீல்பேஸ் தாரை மஹிந்திரா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய ஸ்பை ஷாட்டில் காணப்படுவது போல் தார் 5-டோர் காரில் பெரிய டச் ஸ்கிரீன் (XUV400 காரில் உள்ள புதிய 10.25-இன்ச் யூனிட்) இருக்கும். இது டூயல்-ஜோன் ஏசி, டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே, சன்ரூஃப் மற்றும் பின்புற மைய ஆர்ம்ரெஸ்ட் ஆகியவற்றைப் பெறுலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பவர்டிரெயின்கள் விவரங்கள்
மஹிந்திரா தார் 5-டோர் அதே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் வரலாம். அதன் 3-டோர் இட்டரேஷன் போல கூடுதலான அவுட்புட் உடன் இருக்கலாம். இரண்டு இன்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பெறக்கூடும். தார் 5-டோர் பின்புற சக்கர டிரைவ் (RWD) மற்றும் 4-வீல் டிரைவ் (4WD) ஆகிய இரண்டு ஆப்ஷன்களையும் வழங்கும்.
எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் விலை
மஹிந்திரா தார் 5-டோர் 2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் விற்பனைக்கு வரலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். இதன் விலை ரூ. 15 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம். மாருதி சுஸூகி ஜிம்னி, விரைவில் வெளிவரவிருக்கும் ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் ஆகியவற்றுக்கு இது ஒரு பெரிய மாற்றாக இருக்கும்
மேலும் படிக்க: மஹிந்திரா தார் ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful