• English
  • Login / Register

குளோபல் NCAP சோதனையில் வெறும் 1 நட்சத்திரத்தை மட்டுமே பெற்ற Mahindra Bolero Neo கார்

published on ஏப்ரல் 23, 2024 07:03 pm by ansh for மஹிந்திரா பொலேரோ நியோ

  • 50 Views
  • ஒரு கருத்தை எழுதுக

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு, ஃபுட் வெல் மற்றும் பாடிஷெல் இன்டெகிரிட்டி நிலையற்றதாக மதிப்பிடப்பட்டது.

  • பெரியவர்களுக்கான பாதுகாப்பில் (AOP) 34 -க்கு 20.26 புள்ளிகளை பெற்றது, இதன் விளைவாக 1-நட்சத்திர AOP மதிப்பீடு மட்டுமே கிடைத்தது.

  • குழந்தைகளுக்கான பாதுகாப்பில் (COP) 49 புள்ளிகளுக்கு 12.71 புள்ளிகளைப் பெற்றது, இதன் விளைவாக 1 நட்சத்திர COP மதிப்பீட்டைப் பெற்றது.

  • சோதனைகளுக்குப் பிறகு அதன் பாடிஷெல் இன்டெகிரிட்டி நிலையற்றதாக மதிப்பிடப்பட்டது.

  • இதன் பேஸ் பாதுகாப்பு வசதிகளில் டூயல் முன் ஏர்பேக்குகள், EBD உடன் ABS, பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் முன்பக்கத்திற்கான சீட்பெல்ட் ரிமைன்டர்களை உள்ளடக்கியது.

சமீபத்தில் குளோபல் NCAP (புதிய கார் மதிப்பீட்டு திட்டம்) -ல் மஹிந்திரா பொலிரோ நியோ கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது. ஆனால் மிகவும் மோசமான மதிப்பெண்ணை மட்டுமே பெற்றது. பாதுகாப்பிற்காக நல்ல மதிப்பெண்ணை பெறவில்லை. இந்த முரட்டுத்தனமான வடிவம் கொண்ட எஸ்யூவி முன், பக்க மற்றும் சைடு போல் தாக்க சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால் மிகவும் மோசமான 1-நட்சத்திர மதிப்பீட்டு மட்டுமே கிடைத்தது. ஒவ்வொரு சோதனையிலும் அது எவ்வாறு செயல்பட்டது என்பதை இங்கே பார்ப்போம்.

பெரியவர்களுக்கான பாதுகாப்பு (34 -க்கு 20.26 புள்ளிகள்)

Mahindra Bolero Neo Crash Test Ratings

முன் தாக்கம் (64 கிமீ/மணி)

முன்பக்க தாக்க சோதனையில் பொலிரோ நியோ டிரைவரின் தலைக்கு ‘ஓரளவுக்கான’ பாதுகாப்பையும், முன் பயணிகளின் தலைக்கு ‘நல்ல’ பாதுகாப்பையும் வழங்கியது. ஓட்டுநர் மற்றும் பயணி இருவரின் கழுத்துக்கும் ‘நல்ல’ பாதுகாப்பு கிடைத்தது. ஓட்டுநரின் மார்புக்கு 'பலவீனமான' பாதுகாப்பு மட்டுமே கிடைத்தது. மற்றும் பயணிகளின் மார்பில் உள்ள பாதுகாப்பு 'போதுமானதாக' மதிப்பிடப்பட்டது.

மேலும் படிக்க: மஹிந்திரா ஸ்கார்பியோ N Z8 தேர்வு வேரியன்ட் 10 படங்களில் விளக்கப்பட்டுள்ளது

ஓட்டுநர் மற்றும் பயணி இருவரின் முழங்கால்களுக்கும் ‘விளிம்பு நிலை’ பாதுகாப்பு மட்டுமே இருந்தது. டிரைவரின் கால் முன்னெலும்புகளுக்கு ‘விளிம்பு நிலை’’ பாதுகாப்பு கிடைத்தது, மேலும் பயணிகளின் கால் முன்னெலும்புகளில் பாதுகாப்பு ‘போதுமான’ மற்றும் ‘நல்ல’ மதிப்பீடு கிடைத்தது. புட் வெல் பகுதி நிலையற்றதாக மதிப்பிடப்பட்டது.

பக்கவாட்டு தாக்கம் (50 கிமீ மணி)

பக்கவாட்டு தாக்க சோதனையில், ஓட்டுநரின் தலை, இடுப்பு மற்றும் இடுப்புக்கு 'நல்ல' பாதுகாப்பு கிடைத்தது. இருப்பினும் மார்புக்கான பாதுகாப்பு 'போதுமானதாக' இருந்தது.

சைடு போல் இம்பாக்ட்

கர்ட்டெயின் ஏர்பேக்குகள் இல்லாததால் சைடு போல் இம்பாக்ட் சோதனை  நடத்தப்படவில்லை.

குழந்தைகளுக்கான பாதுகாப்பு (49 -க்கு 12.71 புள்ளிகள்)

Mahindra Bolero Neo Crash Test

முன் தாக்கம் (64 கிமீ/மணி)

18 மாத குழந்தையை பொறுத்தவரை குழந்தை இருக்கை பின்புறமாக பொருத்தப்பட்டிருந்தது. இந்த சோதனையில் ஓட்டுநரின் தலையை பாதுகாக்க முடியவில்லை. மேலும் குறைவான பாதுகாப்பை மட்டுமே வழங்கியது. மறுபுறம் 3 வயது குழந்தையின் குழந்தை இருக்கை முன்னோக்கி எதிர்கொள்ளும் வகையில் நிறுவப்பட்டது மற்றும் இது முன்பக்க தாக்கத்தின் போது தலை வெளிப்படுவதைத் தடுக்க முடிந்தது, கிட்டத்தட்ட முழு பாதுகாப்பையும் வழங்குகிறது.

பக்கவாட்டு தாக்கம் (50 கிமீ மணி)

இரண்டு சைல்டு சீட் ரீஸ்ட்ரெயின் அமைப்புகளாலும் (CRS) பக்கவாட்டு தாக்க சோதனையின் போது முழு பாதுகாப்பை வழங்க முடிந்தது.

மஹிந்திரா பொலிரோ நியோவில் உள்ள பாதுகாப்பு வசதிகள்

Mahindra Bolero Neo

பொலிரோ நியோவில் டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், ரிவர்ஸ் அசிஸ்ட் கொண்ட பின் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ISOFIX சைல்டு மவுண்ட்கள் அடங்கிய அடிப்படை பாதுகாப்பு வசதிகளை  மஹிந்திரா வழங்கியுள்ளது.

இந்த கிராஷ் டெஸ்ட் ரேட்டிங்கை பற்றிப் பேசுகையில், மஹிந்திரா அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. "எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் திருப்தியை உறுதி செய்யும் வாகனங்களை வழங்குவதில் மஹிந்திரா நிறுவனம் கடமைப்பட்டுள்ளது. பொலிரோ நியோ என்பது இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பகமான ஒரு  பயன்பாட்டு வாகனமாகும். அதன் வலுவான உருவாக்கம், மிகவும் நம்பகமான தன்மை மற்றும் பல்வேறு பயன்பாட்டு நிலைமைகளைக் கையாளும் திறன் இதற்கு உள்ளது. மேலும் இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் உள்ளது மற்றும் சமீபத்திய இந்திய பாதுகாப்பு தர விதிகளுக்கு தொடர்ந்து இணக்கமாக உள்ளன.

மேலும் படிக்க: Force Gurkha 5-door விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

"பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப நாங்கள் தொடர்ந்து புதிய தர நிர்ணய விதிகளை உருவாக்கி மேம்படுத்தி வருகிறோம். எங்களது சமீபத்திய அனைத்து அறிமுகங்களிலும் மஹிந்திரா பாதுகாப்பு அம்சங்களை கணிசமாக மேம்படுத்தியுள்ளது என்பதை எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் உறுதியளிக்க விரும்புகிறோம். தார், XUV700, XUV300 மற்றும் ஸ்கார்பியோ-N போன்ற மாடல்கள், குளோபல் NCAP ஆகியவ்ற்றில் 4 மற்றும் 5 நட்சத்திரங்களின் உயர் பாதுகாப்பு மதிப்பீடுகளுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது பாதுகாப்பிற்கான எங்களது தற்போதைய உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நாங்கள் மதிக்கிறோம். மற்றும் வாகன பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் மூலம் அதை நிலை நிறுத்த அர்ப்பணிப்புடன் இருக்கிறோம், ”என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.

ஸ்கார்பியோ N, XUV700 மற்றும் தார் போன்ற கார்கள் GlobalNCAP சோதனைகளில் அதிக மதிப்பெண்களை பெற்றதன் மூலம் மஹிந்திரா அதன் திறனை வெளிப்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த முடிவு என்பது ஒரு ஆச்சரியமாக உள்ளது. மேலும் இந்த காரின் பாதுகாப்பை மஹிந்திரா மேம்படுத்தும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

Mahindra Bolero Neo Crash Test Score

மஹிந்திரா பொலிரோ நியோ நான்கு பரந்த வேரியன்ட்களில் கிடைக்கிறது - N4, N8, N10 மற்றும் N10(O) விலை  ரூ 9.90 லட்சம் முதல் ரூ 12.15 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) உள்ளது.

மேலும் படிக்க: பொலிரோ நியோ டீசல்

was this article helpful ?

Write your Comment on Mahindra போலிரோ Neo

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience