2025 ப ிப்ரவரியில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் மஹிந்திரா -வின் டீசல் எஸ்யூவிகளை தேர்வு செய்துள்ளனர்
shreyash ஆல் மார்ச் 13, 2025 06:49 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
எக்ஸ்யூவி 3XO -யை பொறுத்தவரையில் டீசலை விட பெட்ரோலுக்கான அதிக தேவை இருந்தது.
2025 பிப்ரவரி மாதத்திற்கான பவர்டிரெய்ன் வாரியான விற்பனை புள்ளிவிவரங்களை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. எதிர்பார்த்தபடி, எக்ஸ்யூவி700 மற்றும் ஸ்கார்பியோ என் உள்ளிட்ட டீசலில் இயங்கும் எஸ்யூவி -களுக்கு அதிக தேவை இருந்தது. மொத்தம் விற்கப்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட எஸ்யூவி -களில், கிட்டத்தட்ட 30,000 மேற்பட்ட யூனிட்கள் டீசலில் இயங்குபவை ஆகும். பிப்ரவரி மாதத்தில் இந்த இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) மாடல்களுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையின் விவரங்கள் கீழே உள்ளன.
மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ என்
பவர்டிரெய்ன் |
பிப்ரவரி 2024 |
சதவீதம் |
பிப்ரவரி 2025 |
சதவீதம் |
பெட்ரோல் |
1,360 |
9.9% |
1,017 |
8.07% |
டீசல் |
13,691 |
90.1% |
12,601 |
91.93% |
ஸ்கார்பியோ என் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன் தேர்வுகள் இரண்டிலும் கிடைக்கிறது. இதிலுள்ள 2.2-லிட்டர் டீசல் யூனிட், 132 PS மற்றும் 300 Nm அல்லது 175 PS மற்றும் 400 Nm வரை அவுட்புட்டை கொடுக்கும். இவை இரண்டும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் (MT) அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (AT) உடன் கிடைக்கின்றன. மேலும் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் 203 PS மற்றும் 380 Nm வரை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஸ்கார்பியோ N -ன் டீசல் எடிஷன் ஆனது ஆப்ஷனலான 4-வீல்-டிரைவ் (4WD) டிரைவ் டிரெய்னுடன் கிடைக்கிறது.
மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் 2.2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது. இது 132 PS மற்றும் 320 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்தமாக ஸ்கார்பியோவின் விற்பனை குறைந்துள்ளது. இருப்பினும் டீசல் கார்களே ஒட்டுமொத்த விற்பனையில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன.
மஹிந்திரா தார் மற்றும் தார் ராக்ஸ்
பவர்டிரெய்ன் |
பிப்ரவரி 2024 |
சதவீதம் |
பிப்ரவரி 2025 |
சதவீதம் |
பெட்ரோல் |
503 |
9.47% |
1,615 |
21.15% |
டீசல் |
5,309 |
90.52% |
7,633 |
78.85% |
மஹிந்திரா தார் 3-டோர் ஆனது இது 152 PS 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின், 132 PS 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 119 PS 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் என்ற வகையில் இரண்டு டீசல் மற்றும் ஒரு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும். இது ரியர் வீல் டிரைவ் (RWD) அமைப்புடன் வருகிறது. தார் 5-டோர் பதிப்பான தார் ராக்ஸ் காரும் அதே இன்ஜின் ஆப்ஷன்களை பயன்படுத்துகிறது. ஆனால் இன்ஜின் ஒன்றுதான் என்றாலும் இது பெட்ரோலில் 177 PS மற்றும் டீசலில் 175 PS வரை கூடுதலாக அவுட்புட்டை கொடுக்கும் வகையில் டியூன் செய்யபப்ட்டுள்ளது. தார் 5-டோர் காரில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனை கிடையாது. மேலும் 4WD டீசல் வெர்ஷன்களுடன் மட்டுமே கிடைக்கிறது.
டீசலில் இயங்கும் தார் காருக்கான தேவை கடந்த ஆண்டை விட 90 சதவீதத்தில் இருந்து கிட்டத்தட்ட 80 சதவீதமாக குறைந்துள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி700
பவர்டிரெய்ன் |
பிப்ரவரி 2024 |
சதவீதம் |
பிப்ரவரி 2025 |
சதவீதம் |
பெட்ரோல் |
2,077 |
46.47% |
1,908 |
34.31% |
டீசல் |
4,469 |
53.52% |
5,560 |
65.68% |
மஹிந்திரா எக்ஸ்யூவி700 டீசல் வெர்ஷன்களுக்கான தேவை 65 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இது 200 PS 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 185 PS 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் உடன் இது கிடைக்கும். டீசல் வேரியன்ட்கள் ஆப்ஷனலான ஆல்-வீல் டிரைவ் (AWD) டிரைவ் டிரெய்னுடன் கிடைக்கின்றன.
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO மற்றும் எக்ஸ்யூவி400 இவி
பவர்டிரெய்ன் |
பிப்ரவரி 2025 |
சதவீதம் |
பெட்ரோல் |
6,120 |
57.46% |
டீசல் + எலக்ட்ரிக் |
2,603 |
42.53% |
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO பொறுத்தவரையில் பெட்ரோல் வெர்ஷனுக்கான தேவை 57 சதவீதம் அதிகமாக இருந்தது. அதே சமயம் டீசல் வெர்ஷன்களின் தேவை 30 சதவீதம் வரை குறைவாக இருந்தது. டீசல் புள்ளிவிவரங்கள் குறைவாக உள்ளன. ஆனால் எக்ஸ்யூவி 3XO டீசல் மற்றும் எக்ஸ்யூவி400 இவி -க்கான தனிப்பட்ட விற்பனை புள்ளி விவரங்களை மஹிந்திரா வெளியிடவில்லை.
மஹிந்திரா பொலேரோ, பொலேரோ நியோ மற்றும் பொலேரோ நியோ பிளஸ்
பவர்டிரெய்ன் |
பிப்ரவரி 2024 |
பிப்ரவரி 2025 |
டீசல் |
10,113 |
8,690 |
மஹிந்திரா பொலிரோவை பொலிரோ, பொலிரோ நியோ, மற்றும் பொலிரோ நியோ பிளஸ் என மூன்று வெர்ஷன்களில் விற்பனை செய்கிறது. இவை அனைத்தும் டீசல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும். பொலிரோ மற்றும் பொலேரோ நியோ 1.5 லிட்டர் டீசல் இன்ஜினை பயன்படுத்துகின்றன, அதே சமயம் பொலிரோ நியோ பிளஸ் பெரிய 2.2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வருகிறது.
உங்கள் தேர்வுகளும் இதே மாதிரி இருக்குமா அல்லது இந்த எஸ்யூவி -களில் ஏதேனும் பெட்ரோல் வேரியன்ட்களை தேர்வு செய்வீர்களா ? கமென்ட் பகுதியில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.