2024 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த Tata Punch
modified on மே 07, 2024 06:13 pm by shreyash for மாருதி ஆல்டோ கே10
- 92 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி வேகன் R, பிரெஸ்ஸா மற்றும் டிசையர் ஆகியவற்றின் தேவை 2024 ஏப்ரல் மாதத்தில் அவற்றின் வழக்கமான எண்களுக்கு திரும்பின. அப்படி இருந்தும் என்ட்ரி-லெவல் டாடா எஸ்யூவி -யை அவற்றால் வெல்ல முடியவில்லை.
2024 ஏப்ரல் மாதத்துக்கான கார்களின் விற்பனை புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. வழக்கம்போல டாடா பன்ச் விற்பனையில் முதலிடத்தில் இருந்தது. இருப்பினும் முதல் 15 மாடல்களில் 8 மாடல்களுடன் மாருதி நிறுவனம் இன்னும் விற்பனை பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. 2024 ஏப்ரலில் கார்களின் விற்பனை விவரங்களின் விரிவான தகவல்கள் இங்கே.
மாடல்கள் |
ஏப்ரல் 2024 |
ஏப்ரல் 2023 |
மார்ச் 2024 |
டாடா பன்ச் |
19,158 |
10,934 |
17,547 |
மாருதி வேகன் R |
17,850 |
20,879 |
16,368 |
மாருதி பிரெஸ்ஸா |
17,113 |
11,836 |
14,614 |
மாருதி டிசையர் |
15,825 |
10,132 |
15,894 |
ஹூண்டாய் கிரெட்டா |
15,447 |
14,186 |
16,458 |
மஹிந்திரா ஸ்கார்பியோ |
14,807 |
9,617 |
15,151 |
மாருதி ஃபிரான்க்ஸ் |
14,286 |
8,784 |
12,531 |
மாருதி பலேனோ |
14,049 |
16,180 |
15,588 |
மாருதி எர்டிகா |
13,544 |
5,532 |
14,888 |
மாருதி இகோ |
12,060 |
10,504 |
12,019 |
டாடா நெக்ஸான் |
11,168 |
15,002 |
14,058 |
மஹிந்திரா பொலேரோ |
9,537 |
9,054 |
10,347 |
ஹூண்டாய் வென்யூ |
9,120 |
10,342 |
9,614 |
மாருதி ஆல்டோ K10 |
9,043 |
11,548 |
9,332 |
கியா சோனெட் |
7,901 |
9,744 |
8,750 |
முக்கிய விவரங்கள்
-
தொடர்ந்து இரண்டாவது மாதமாக டாடா பன்ச் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக இருந்தது. ஏப்ரல் மாதம் 19,000 யூனிட்களுக்கு மேல் பன்ச் விற்பனையானது, மேலும் அதன் ஆண்டுக்கு ஆண்டு விற்பனையும் 75 சதவிகிதம் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்தது. இந்த எண்ணிக்கையில் டாடா பன்ச் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) மற்றும் டாடா பன்ச் EV ஆகியவை அடங்கும்.
-
17,800 யூனிட்டுகள் விற்பனையான நிலையில் மாருதி வேகன் R ஏப்ரலில் ஹூண்டாய் கிரெட்டாவை முந்தி இரண்டாவது சிறந்த விற்பனையான காராக மாறியது. வேகன் R ஏப்ரல் மாத விற்பனை முந்தைய மாதத்தை விட கிட்டத்தட்ட 1,500 யூனிட்கள் அதிகமாக இருந்தபோதிலும் அது வருடாந்த விற்பனையில் 15 சதவீத இழப்பை எதிர் கொண்டது.
-
மாருதி பிரெஸ்ஸா ஏப்ரல் 2024 இல் அதன் எண்ணிக்கை 17,000 யூனிட்களைத் தாண்டியதன் மூலம், மாதாந்திர விற்பனை அட்டவணையில் ஒன்பதாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு உயர்ந்தது. இது மாதந்தோறும் (MoM) மற்றும் ஆண்டு ( YYY) விற்பனை இரண்டிலும் 17 சதவீதம் மற்றும் 45 சதவீதம் என்ற நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
-
மாருதி டிசையர் கடந்த மாதம் 15,800க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையான நிலையில் MoM விற்பனையில் நிலையான தேவையை பராமரிக்கிறது. மாருதியின் சப்காம்பாக்ட் செடான் ஆண்டு விற்பனையில் 56 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
-
பட்டியலில் ஹூண்டாய் கிரெட்டா கார் ஐந்தாவது இடத்தை பிடித்தது. மாதாந்திர விற்பனை 1,000 யூனிட்டுகளுக்கு மேல் சரிந்தது. ஹூண்டாய் ஏப்ரலில் கிரெட்டாவின் 15,500 யூனிட்களை விற்பனை செய்தது . இதன் ஆண்டு விற்பனை 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் பார்க்க: மஹிந்திரா XUV 3XO மற்றும் பெட்ரோல்-ஒன்லி போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு
-
மஹிந்திரா ஸ்கார்பியோ ஏப்ரலில் 14,800-யூனிட் தாண்டி விற்பனையானது. அதன் மாதாந்திர விற்பனை 300 யூனிட்டுகளுக்கு மேல் குறைந்துள்ளது. ஆனால் அது இன்னும் ஆண்டு விற்பனையில் 54 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த புள்ளி விவரங்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ N மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியன் கிளாசிக் ஆகியவ இரண்டின் விற்பனையும் அடங்கும்.
-
14,000 யூனிட்கள் விற்பனையாகி மாருதி ஃபிரான்க்ஸ் மாதாந்திர மற்றும் ஆண்டு விற்பனையில் முறையே 14 சதவீதம் மற்றும் 63 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
-
இந்த பட்டியலில் உள்ள ஒரே பிரீமியம் ஹேட்ச்பேக் மாருதி பலேனோ ஆகும். இது ஏப்ரல் 2024 இல் 14,000-யூனிட்கள் தாண்டி விற்பனையானது. இருப்பினும் இது மாதந்தோறும் (MoM) மற்றும் ஆண்டுக்கு ஆண்டு (YoY) விற்பனை இரண்டிலும் முறையே 10 சதவிகிதம் மற்றும் 13 சதவிகிதம் சரிந்துள்ளது.
-
முதல் 15 சிறந்த விற்பனையான மாடல்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இரண்டு MPV -கள் மாருதி எர்டிகா மற்றும் மாருதி இகோ மட்டுமே. ஏப்ரலில் எர்டிகா 13,500 யூனிட்களும், இகோ 12,000 யூனிட்கள் விற்பனையானது.
-
-
டாடா நெக்ஸான் ஏப்ரலில் 11,000 யூனிட்கள் விற்பனையானது, ஆனால் இன்னும் மாருதி பிரெஸ்ஸாவை விட கிட்டத்தட்ட 6,000 யூனிட்கள் குறைந்துள்ளது. நெக்ஸான் -ன் மாதாந்திர விற்பனை 21 சதவிகிதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஆண்டு விற்பனையில் 26 சதவிகிதம் இழப்பை சந்தித்தது. விற்பனை புள்ளிவிவரங்களில் டாடா நெக்ஸான் மற்றும் டாடா நெக்ஸான் EV ஆகிய இரண்டும் அடங்கும்
-
மஹிந்திரா பொலேரோ, பொலேரோ நியோ, மற்றும் பொலேரோ நியோ பிளஸ் ஏப்ரலில் மொத்த விற்பனை எண்ணிக்கை 9,500 யூனிட்களை எட்டியது. இதன் ஆண்டு விற்பனை சீராக இருந்தது, அதே நேரத்தில் MoM விற்பனை 810 யூனிட்கள் குறைந்துள்ளது.
-
பட்டியலில் இடம்பிடித்துள்ள மூன்றாவது சப்காம்பாக்ட் எஸ்யூவி ஹூண்டாய் வென்யூ ஆகும். இது கடந்த மாதம் 9,000 யூனிட்கள் விற்பனையானது . இந்த எண்ணிக்கையில் ஹூண்டாய் வென்யூ மற்றும் வென்யூ N லைன் ஆகிய இரண்டின் விற்பனையும் அடங்கும்
-
பட்டியலில் மற்றொரு நிலையான செயல்திறன் கொண்ட காராக மாருதி ஆல்டோ K10 இருந்தது. இது ஏப்ரலில் 9,000 யூனிட்களின் விற்பனையைக் கடந்தது. இருப்பினும், அதன் ஆண்டு விற்பனை 22 சதவீதம் குறைந்துள்ளது.
-
கடைசியாக கியா சோனெட் ஏப்ரலில் 7,901 யூனிட்கள் விற்பனையானது. இது மாதாந்திர மற்றும் ஆண்டு விற்பனையில் முறையே 10 சதவீதம் மற்றும் 19 சதவீதம் குறைந்தது.
மேலும் படிக்க: ஆல்டோ K10 ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful