இந்த மார்ச் மாதம் Maruti கார்களுக்கு ரூ.67000 வரை தள்ளுபடி கிட ைக்கும்
published on மார்ச் 07, 2024 08:11 pm by rohit for மாருதி ஆல்டோ 800
- 34 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஸ்விஃப்ட் மற்றும் வேகன் R போன்ற மாடல்களின் AMT வேரியன்ட்களுக்கு இந்த மாதத்தில் அதிகமாக தள்ளுபடிகள் கிடைக்கும்.
-
ஆல்டோ K10 -காரில் அதிகபட்சமாக ரூ.67000 வரை தள்ளுபடிகள் கிடைக்கும்.
-
S-பிரஸ்ஸோ மற்றும் வேகன் R ரூ.66000 வரை பலன்களைப் பெறுகின்றன.
-
ஆல்டோ 800 காரின் மீதமுள்ள யூனிட்களுக்கு ரூ.15000 சேமிப்புடன் மாருதி வழங்குகிறது.
-
மாருதி பிரெஸ்ஸா அல்லது மாருதி எர்டிகா ஆகியவற்றுக்கு தள்ளுபடிகள் இல்லை.
-
இந்த சலுகைகள் அனைத்தும் மார்ச் 31 2024 வரை மட்டுமே செல்லுபடியாகும்.
நாங்கள் சமீபத்தில் மாருதி சுஸூகி நெக்ஸா கார்களில் கிடைக்கும் சலுகைகளின் விவரங்களை உங்களுக்கு வழங்கினோம். இருப்பினும் நீங்கள் மாருதி அரீனா காரை வாங்க விரும்பினால் பிரெஸ்ஸா எஸ்யூவி மற்றும் எர்டிகா MPV தவிர்த்த மாடல்களுக்கு பல்வேறு ஆஃபர்கள் உள்ளன. மாருதி சுஸுகி அரீனா கார்களில் என்னென்ன தள்ளுபடிகள் உள்ளன என்பதைப் பார்ப்போம். இத சலுகைகள் மார்ச் 2024 இறுதி வரை செல்லுபடியாகும்:
ஆல்டோ 800
சலுகை |
தொகை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15000 |
மொத்த பலன்கள் |
ரூ.15000 |
-
மாருதி ஆல்டோ 800 காரின் தயாரிப்பு ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டது. ஆகவே மேலே குறிப்பிட்டுள்ள பலன்கள் ஷோரூமில் இருக்கும் மீதமுள்ள யூனிட்களுக்கு மட்டுமே பொருந்தும்.
-
பேஸ்-ஸ்பெக் ஸ்டாண்டர்டான என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக்கின் அனைத்து வேரியன்ட்களிலும் (CNG உட்பட) எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.
-
இறுதியாக ஆல்டோ 800 விலை ரூ.3.54 லட்சத்தில் இருந்து ரூ.5.13 லட்சம் வரை இருந்தது.
ஆல்டோ K10
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.45000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15000 |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.7000 |
மொத்த பலன்கள் |
ரூ.67000 வரை |
-
மாருதி ஆல்டோ K10 AMT வேரியன்ட்களில் இந்த தள்ளுபடிகளை நீங்கள் பெறலாம்
-
மாருதி ஹேட்ச்பேக்கின் மேனுவல் வேரியன்ட்களை ரூ.40000 ரொக்க தள்ளுபடியுடன் கிடைக்கும் மற்ற சலுகைகளில் மாற்றமில்லை.
-
ஆல்டோ K10 CNG -யை நீங்கள் தேர்வுசெய்தால் அதே எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடியுடன் ரூ.25000 ரொக்க தள்ளுபடி கிடைக்கும்.
-
ஆல்டோ K10 விலை ரூ.3.99 லட்சம் முதல் ரூ.5.96 லட்சம் வரை உள்ளது.
எஸ்-பிரஸ்ஸோ
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.45000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15000 |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.6000 |
மொத்த பலன்கள் |
66000 வரை |
-
மாருதி எஸ்-பிரஸ்ஸோ -வின் AMT வேரியன்ட்களில் மட்டுமே இந்த பலன்கள் கிடைக்கும்.
-
ஹேட்ச்பேக்கின் MT வேரியன்ட்களை தேர்ந்தெடுக்க விரும்புவோருக்கு பணத் தள்ளுபடி ரூ. 40000 ஆகக் குறையும், மற்ற பலன்கள் அப்படியே இருக்கும்.
-
S-பிரஸ்ஸோ -வின் CNG வேரியன்ட்களுக்கு ரூ. 25000 ரொக்க தள்ளுபடி கிடைக்கும். அதே நேரத்தில் மொத்த சலுகைகளில் வேறு எந்த மாற்றமும் இல்லை.
-
மாருதி ஹேட்ச்பேக்கை ரூ.4.27 லட்சம் முதல் ரூ.6.12 லட்சம் வரை விற்பனை செய்கிறது.
இகோ
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.20000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.10000 |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.4000 |
மொத்த பலன்கள் |
34000 வரை |
-
மாருதி இகோ -வின் பெட்ரோல் வேரியன்ட்களில் இந்த தள்ளுபடிகளை பெறலாம்.
-
மாருதி எம்பிவி -யின் CNG வேரியன்ட்களை வெறும் ரூ. 10000 ரொக்க தள்ளுபடியுடன் அதே எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடியுடன் வழங்குகிறது.
-
இகோ -வின் விலை ரூ.5.32 லட்சம் முதல் ரூ.6.58 லட்சம் வரை உள்ளது.
மேலும் படிக்க: மாருதி இகோ: எதை செய்கிறதோ அதுவே சிறந்ததாக இருக்கின்றது
செலிரியோ
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.40000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15000 |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.6000 |
மொத்த பலன்கள் |
ரூ.61000 வரை |
-
மாருதி செலிரியோ AMT வேரியன்ட்களில் இந்த அதிக சேமிப்பை நீங்கள் பெறலாம்.
-
நீங்கள் செலிரியோவின் MT வேரியன்ட்டை வாங்க விரும்பினால் மாருதி அதை ரூ. 35000 ரொக்க தள்ளுபடியுடன் வழங்குகிறது மற்ற பலன்கள் மாறாமல் இருக்கும்.
-
செலிரியோ CNG ரூ. 25000 ரொக்கத் தள்ளுபடியுடன் வருகிறது. கூடுதலாக மேலே குறிப்பிட்டுள்ள அதே எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடியைப் பெறுகிறது.
-
மாருதி நிறுவனம் இந்த காரின் விலையை ரூ.5.37 லட்சம் முதல் ரூ.7.09 லட்சம் வரை நிர்ணயித்துள்ளது.
வேகன் R
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.40000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15000 |
கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.5000 |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.6000 |
மொத்த பலன்கள் |
ரூ.66000 வரை |
-
மாருதி வேகன் R காரின் AMT வேரியன்ட்களில் மட்டுமே இந்த தள்ளுபடிகளை பெற முடியும்.
-
புதிய வேகன் R காரில் நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்யும் கார் ஏழு வருடங்களுக்கு குறைவானதாக இருந்தால் மட்டுமே கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸை மாருதி வழங்குகிறது.
-
இதன் மேனுவல் வேரியன்ட்களுக்கு ரூ.35000 ரொக்க தள்ளுபடியும் CNG டிரிம்களில் ரூ.30000 ஆக குறையும். எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி மாறாமல் இருக்கும்.
-
வேகன் R காரின் விலை ரூ.5.55 லட்சம் முதல் ரூ.7.38 லட்சம் வரை உள்ளது.
மேலும் பார்க்க: CNG ஆட்டோமெட்டிக் ஆப்ஷன் பயன்பாட்டுக்கு வருவதற்கு இவ்வளவு காலம் ஆனது ஏன் ?
ஸ்விஃப்ட்
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.20000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15000 |
கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.5000 |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.7000 |
மொத்த பலன்கள் |
ரூ.47000 வரை |
-
மாருதி ஸ்விஃப்ட் காரின் AMT வேரியன்ட்களில் மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ள பலன்கள் கிடைக்கும்.
-
புதிய ஸ்விஃப்ட்டில் நீங்கள் வர்த்தகம் செய்யும் கார் ஏழு வருடங்களுக்கு குறைவானதாக இருந்தால் மட்டுமே கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸை மாருதி வழங்குகிறது.
-
ஹேட்ச்பேக்கின் மேனுவல் வேரியன்ட்களை வாங்க விரும்புவோருக்கு ரொக்க தள்ளுபடி ரூ.15000 ஆக குறைகிறது. மறுபுறம் ஸ்விஃப்ட் CNG ரூ.15000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.7000 கார்ப்பரேட் தள்ளுபடியுடன் மட்டுமே வழங்கப்படுகிறது.
-
நீங்கள் ஸ்விஃப்ட் சிறப்பு பதிப்பை வாங்க விரும்பினால் ரூ.18400 கூடுதலாக செலுத்த வேண்டும். இது இன்னும் ரூ.20000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் (கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் உட்பட) மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.7000.
-
மாருதி இந்த காரின் விலையை ரூ.5.99 லட்சம் முதல் ரூ.9.03 லட்சம் வரை நிர்ணயித்துள்ளது.
டிசையர்
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.15000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15000 |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.7000 |
மொத்த பலன்கள் |
ரூ.37000 வரை |
-
மாருதி டிசையர் AMT வேரியன்ட்கள் மட்டுமே இந்த சேமிப்புடன் கிடைக்கும்.
-
சப்-4m செடானின் MT வேரியன்ட்களை நீங்கள் விரும்பினால் பிற சலுகைகள் மாற்றமில்லாமல் கிடைக்கும். ஆனால் பணத் தள்ளுபடி ரூ.10000 வரை குறையும்.
-
மாருதி டிசையர் காரின் விலை ரூ.6.57 லட்சம் முதல் ரூ.9.39 லட்சம் வரை உள்ளது.
குறிப்பு: மாநிலம் மற்றும் நகரத்தைப் பொறுத்து தள்ளுபடிகள் மாறுபடலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள மாருதி அரீனா டீலரை தொடர்பு கொள்ளவும்.
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) -க்கான விலை ஆகும்
மேலும் படிக்க: ஆல்ட்டோ ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful