2023 ஆண்டோடு இந்திய சந்தையில் இருந்து விடைபெறப் போகும் 8 கார்கள்
published on டிசம்பர் 27, 2023 04:54 pm by shreyash for ஹோண்டா டபிள்யூஆர்-வி
- 435 Views
- ஒரு கருத்தை எழுதுக
மொத்தம் உள்ள 8 மாடல்களில், ஹோண்டா மூன்றை படிப்படியாக விற்பனையில் இருந்து நிறுத்தியது. மேலும் ஸ்கோடா நிறுவனம் இரண்டு செடான் மாடல்களை நிறுத்தியது.
2023 ஆம் ஆண்டில், டாடா, ஹோண்டா மற்றும் ஹூண்டாய் போன்ற முக்கிய நிறுவனங்களிடம் இருந்து வெளியீடுகள் மற்றும் ஃபேஸ்லிஃப்ட்களை பார்க்க முடிந்தது. மறுபுறம்,ஹோண்டா, ஸ்கோடா, நிஸான், மற்றும் மஹிந்திரா போன்ற நிறுவனங்களின் சில மாடல்கள் இந்திய சந்தையில் இருந்து நிறுத்தப்பட்டன. BS6 பேஸ்-2 விதிமுறைகளின் அறிமுகம் காரணமாக, பெரும்பாலான நிறுவனங்கள் கார்களை உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்றபடி இன்ஜினை வடிவமைக்க பெரும் செலவு ஆகும் என்பதால் இந்த முடிவுக்கு வந்தன. அப்படி 2023 ஆண்டில் படிப்படியாக நிறுத்தப்பட்ட 8 கார்களின் விவரங்கள் இங்கே:
Maruti Alto 800
கடைசியாக பதிவு செய்யப்பட்ட விலை - ரூ 3.54 லட்சம் முதல் ரூ 5.13 லட்சம் வரை
இன்ஜின் - 0.8-லிட்டர் (பெட்ரோல் / CNG) இன்ஜின் (5-MT)
அறிமுகம் - 2012
2012 -ம் ஆண்டில் மாருதி ஆல்டோ 800 அறிமுகப்படுத்தப்பட்டது, இது ஆல்டோ K10 க்கு மிகவும் விலை குறைவான மாற்றாக மட்டுமல்லாமல், இந்தியாவில் மாருதியின் மிகவும் குறைந்த காராகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது பெட்ரோல் மற்றும் சிஇன்ஜி பவர் ட்ரெய்ன்களுக்கான ஆப்ஷன்களுடன் வந்தது. இருப்பினும், சந்தையில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வந்த ஆல்டோ 800 கடைசியாக 2023 ஆண்டில் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டது. ஏனெனில் இந்த என்ட்ரி லெவல் கார் BS6 பேஸ்-2 அப்டேட்டை பெறவில்லை. ஆனால் ஆல்டோ என்ற பெயர் இன்னும் K10 பதிப்பில் பயன்பாட்டில் உள்ளது, இதில் 1 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை கொடுக்கப்பட்டுள்ளது.
Honda Jazz
கடைசியாக பதிவு செய்யப்பட்ட விலை - ரூ 8.01 லட்சம் முதல் ரூ 10.32 லட்சம் வரை
இன்ஜின் - 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (5-MT/CVT)
அறிமுகம் - 2009
ஹோண்டா ஜாஸ் 2009 -ல் இந்திய சந்தையில் அறிமுகமானது, மேலும் 2015 இல் குறிப்பிடத்தக்க தலைமுறை அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், ஜாஸ் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு வேரியன்ட்களிலும் வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டில், ஜப்பானிய நிறுவனம் BS6 உமிழ்வு விதிமுறைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் டீசல் ஆப்ஷன் நிறுத்தப்பட்டது. பின்னர் ஏப்ரல் 2023 -ல் BS6 பேஸ்-2 விதிமுறைகளின் அமல்படுத்தப்பட்டதால், ஹோண்டா இதை விற்பனையில் இருந்து முற்றிலுமாக நிறுத்தியது.
இதையும் பார்க்கவும்: 2023 ஆண்டில் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை பெற்ற ரூ.30 லட்சத்திற்கும் குறைவான டாப் 10 கார்கள்
Honda WR-V
கடைசியாக பதிவு செய்யப்பட்ட விலை - ரூ.9.11 லட்சம் முதல் ரூ.12.31 லட்சம்
இன்ஜின் - 1.2-லிட்டர் பெட்ரோல் பெட்ரோல் (5-MT) / 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் (6-MT)
அறிமுகம் - 2017
2017 -ல், ஹோண்டா WR-V காரை அறிமுகப்படுத்தியது. ஹோண்டா ஜாஸ் அடிப்படையிலான சப்-4மீ கிராஸ்ஓவர். 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் இரண்டையும் கொண்ட WR-V மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் மட்டுமே வழங்கப்பட்டது. இருப்பினும், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இல்லாதது மற்றும் அதிகரித்து வரும் போட்டி ஆகியவை ஹோண்டா WR-V -யின் விற்பனையை கணிசமாக பாதித்தது. 2023 வாக்கில், WR-V ஜாஸ் உடன் நிறுத்தப்படலாம் என்ற நிலைக்கு வந்தது. சமீபத்திய விதிமுறைகளுக்கு ஏற்ப இதை மாற்றுவது தேவையற்ற முதலீடு என ஹோண்டா முடிவு செய்தது.
Honda City 4th-generation
கடைசியாக பதிவு செய்யப்பட்ட விலை - ரூ 9.50 லட்சம் முதல் ரூ 10 லட்சம் வரை
இன்ஜின் - 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (6-MT)
அறிமுகம் - 2014
நான்காவது தலைமுறை ஹோண்டா சிட்டி இந்தியாவில் 2014 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் 2017 -ல் மிட்லைஃப் அப்டேட்டை பெற்றது. இது 1.5-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் இரண்டையும் கொண்டிருந்தது, முந்தையது CVT ஆப்ஷனையும் கொண்டிருந்தது. இருப்பினும், 2020 -ல், ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி அறிமுகப்படுத்தப்பட்டது ஆனாலும் பழைய செடான் விற்பனையில் இருந்தது, ஆனால் டீசல் இன்ஜின் மற்றும் CVT ஆப்ஷன்கள் இல்லாமல் குறைவான விலையில் வழங்கப்பட்டது. ஆனால் ஐந்தாம் தலைமுறை சிட்டி மார்ச் 2023 -ல் ஒரு ஃபேஸ்லிப்டை பெற்றதால், ஹோண்டா இறுதியாக நான்காவது தலைமுறை சிட்டியை விற்பனையில் இருந்து படிப்படியாக நிறுத்தியது.
Nissan Kicks
கடைசியாக பதிவு செய்யப்பட்ட விலை - ரூ.9.50 லட்சம் முதல் ரூ.14.90 லட்சம்
இன்ஜின் - 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (5-MT) / 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (MT /CVT)
அறிமுகம் - 2019
ஹூண்டாய் கிரெட்டா போன்ற மாடல்களுக்கு போட்டியாக நிஸான் கிக்ஸ் ஒரு சிறிய எஸ்யூவியாக 2019 ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வந்தது. ஒவ்வொன்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை வழங்கியது. 2020 -ல் BS6 உமிழ்வு விதிமுறைகளுக்கு அமலுக்கு வந்ததால், நிஸான் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனை விற்பனையில் இருந்து நிறுத்தியது. அதற்கு பதிலாக காரில் புதிய 1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை (156 PS / 254 Nm) அறிமுகப்படுத்தியது, இது மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது CVT ஆட்டோமேட்டிக் உடன் கிடைக்கிறது. 2023 ஆம் ஆண்டில், புதிய RDE (ரியல் டிரைவிங் எமிஷன்ஸ்) விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, நிஸான் நிறுவனம் கிக்ஸ் கார் ஏற்கனவே நிறுத்தப்படும் நிலையை எட்டி விட்டதாகவும், குறைந்த அளவே விற்பனையாகி வந்த எஸ்யூவி -யை நிறுத்துவதாகவும் தெரிவித்தது. இந்தியாவில் விற்கப்படும் ஒரே நிஸான் மாடல் மேக்னைட் சப்-4m எஸ்யூவி -யாக உள்ளது.
இதையும் பார்க்கவும்: பதின்மூன்று! இந்த ஆண்டு இந்தியாவில் எத்தனை செயல்திறன் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
Skoda Octavia
கடைசியாக பதிவு செய்யப்பட்ட விலை - ரூ 27.35 லட்சம் முதல் ரூ 30.45 லட்சம் வரை
இன்ஜின் - 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் (7-DCT)
அறிமுகம் - 2001
முதல் தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா 2 தசாப்தங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகமானது, 2021 இல் அதன் இறுதி தலைமுறை அப்டேட்டை பெற்றது. CKD (முற்றிலும் நாக்-டவுன்) மாடலாக விற்கப்பட்டது, இந்த பிரீமியம் ஸ்கோடா செடான் அதன் கையாளுதல் மற்றும் செயல்திறனுக்காக ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. செடான் 2022 -ம் ஆண்டில் இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்து சாதனை படைத்தது. ஆனால் BS6 ஃபேஸ்-2 விதிமுறைகள் ஏப்ரல் 2023 -ல் அமல்படுத்தப்பட்டதால், ஸ்கோடா ஆக்டேவியா இந்தியாவில் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டது. சுவாரஸ்யமாக, இது புதிய அம்சங்கள் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் பெரும்பாலான உலகளாவிய சந்தைகளில் விற்பனையில் உள்ளது.
Skoda Superb
கடைசியாக பதிவு செய்யப்பட்ட விலை - ரூ 34.19 லட்சம் முதல் ரூ 37.29 லட்சம் வரை
இன்ஜின் - 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் (7-DCT)
அறிமுகம் - 2009
ஸ்கோடா சூப்பர்ப் இந்தியாவில் ஸ்கோடாவிடமிருந்து ஃபிளாக்ஷிப் செடான் கார் ஆகும். முதலில் 2009 இல் அதன் இரண்டாம் தலைமுறை அவதாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டில், BS6 உமிழ்வு தரநிலைகள் செயல்படுத்தப்பட்டபோது, ஸ்கோடா-வோக்ஸ்வாகன் பிராண்ட் டீசல் இன்ஜின்களில் இருந்து முற்றிலும் விலகியதால், சூப்பர் பெட்ரோல்-ஒன்லி காராக மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
ஆக்டேவியாவை போலவே, சூப்பர்ப் ஆனது இந்தியாவில் CKD யூனிட்டாக கிடைத்தது. 2023 ஆம் ஆண்டில், விதிமுறைகள் மிகவும் கடுமையாகி, சொகுசு அல்லாத எக்ஸிகியூட்டிவ் செடான்களுக்கான தேவை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தபோது, ஸ்கோடா சூப்பர்பை படிப்படியாக விற்பனையில் இருந்து நிருத்த முடிவு செய்தது. மேலும், புதிய தலைமுறை சூப்பர்ப் ஏற்கனவே உலகளவில் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் 2024 ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம்.
Mahindra KUV100 NXT
கடைசியாக பதிவு செய்யப்பட்ட விலை - 6.06 லட்சம் முதல் 7.72 லட்சம் வரை
இன்ஜின் - 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (5-MT)
அறிமுகம் - 2016
மஹிந்திரா KUV100 NXT 2016 இல் சந்தையில் நுழைந்தது மற்றும் 2017 இல் முகமாற்றம் செய்யப்பட்டது. KUV100 NXT ஆனது 6-சீட்டர் கிராஸ்ஓவர் ஆகும், இது 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.2-லிட்டர் டீசல் யூனிட் இரண்டையும் கொண்டிருந்தது. இருப்பினும் பிந்தைய கட்டத்தில், டீசல் இன்ஜின் வேரியன்ட்கள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. 2023 -ம் ஆண்டில், KUV100 NXTக்கான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முன்பதிவுகளை மஹிந்திரா நிறுத்தியது, மாடல் இறுதியாக நிறுத்தப்பட்டது என்பதுதான் அதற்கு அர்த்தம்.
இவை 2023 ஆண்டில் சந்தையில் இருந்து அகற்றப்பட்ட 8 மாடல்கள். எந்த மாடல் நிறுத்தப்படக்கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்கள், அதற்கு காரணம் என்ன ? உங்கள் கருத்துகளை கீழே உள்ள கமென்ட் பகுதியில் பகிரவும்.
0 out of 0 found this helpful