2024 டிசம்பர் மாத விற்பனை கார் விற்பனை விவரங்கள்
kartik ஆல் ஜனவரி 07, 2025 07:48 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 53 Views
- ஒரு கருத்தை எழுதுக
டிசம்பர் மாத விற்பனை புள்ளிவிவரங்கள் கலவையானதாக இருந்தன. முக்கியமான கார் தயாரிப்பாளர்களின் மாதந்தோறும் (MoM) விற்பனையில் சரிவு இருந்தது. அதே நேரத்தில் மற்ற கார் நிறுவனங்களின் விற்பனையில் வளர்ச்சியை பார்க்க முடிந்தது.
டிசம்பர் மாதம் மட்டுமல்ல 2024 -ம் ஆண்டும் கடந்து சென்று விட்ட நிலையில் அந்த மாதத்துக்கான கார் விற்பனை புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. தரவரிசையில் மாருதி மீண்டும் முதலிடத்தில் உள்ளது. டாடா, ஹூண்டாயை முந்தி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து மற்ற கார் தயாரிப்பாளர்கள் முந்தைய மாதத்திலிருந்த அவர்களது இடங்களைத் தக்க வைத்துக் கொண்டனர். ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆகியவை மிகப் பெரிய வளர்ச்சியைக் கொண்டிருந்த அதே வேளையில் கியா நிறுவனங்களின் MoM விற்பனை மிகப்பெரிய சரிவை கண்டது. 2024 டிசம்பரில் கார் தயாரிப்பாளர்களும் விற்பனை விவரங்கள் இங்கே.
நிறுவனம் |
டிசம்பர் 24 |
நவம்பர் 24 |
MoM வளர்ச்சி (%) |
டிசம்பர் 23 |
ஆண்டு வளர்ச்சி (%) |
மாருதி |
1,30,115 |
1,41,312 |
-7.9 |
1,04,778 |
24.2 |
டாடா |
44,221 |
47,063 |
-6 |
43,471 |
1.7 |
ஹூண்டாய் |
42,208 |
48,246 |
-12.5 |
42,750 |
-1.3 |
மஹிந்திரா |
41,424 |
46,222 |
-10.4 |
35,171 |
17.8 |
டொயோட்டா |
24,887 |
25,183 |
-1.2 |
21,372 |
16.4 |
கியா |
8,957 |
20,600 |
-56.5 |
12,536 |
-28.5 |
எம்ஜி |
7,516 |
6,019 |
24.9 |
4,400 |
70.8 |
ஹோண்டா |
6,825 |
5,005 |
36.4 |
7.902 |
-13.6 |
ஃபோக்ஸ்வேகன் |
4,787 |
3,033 |
57.8 |
4,930 |
-2.9 |
ஸ்கோடா |
4,554 |
2,886 |
57.8 |
4,670 |
-2.5 |
மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் மற்றும் ரெகுலர் ஹூண்டாய் கிரெட்டா: இன்ட்டீரியர் வடிவமைப்பில் உள்ள வேறுபாடுகள் என்ன ?
முக்கிய விவரங்கள்
-
1.3 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையாகி மாருதி நிறுவனம் இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது. இது அதன் கடந்த மாத செயல்திறனில் இருந்து கிட்டத்தட்ட 8 சதவிகிதம் குறைந்துள்ளது. மாருதி நிறுவனம் ஆண்டுக்கு ஆண்டு (YoY) எண்ணிக்கையில் 24 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டது.
-
44,200 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி டாடா நிறுவனத்தின் விற்பனை அதன் மாதாந்திர புள்ளிவிவரங்களில் 6 சதவிகிதம் சரிவைக் கண்டாலும் டிசம்பரில் ஒரு படி உயர்ந்தது. டிசம்பர் 2023 உடன் ஒப்பிடும் போது டாடா நிறுவனத்தின் ஆண்டுக்கு ஆண்டு (YOY) விற்பனை எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 2 சதவிகிதம் சாதகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
-
2024 டிசம்பர் மாதம் 42,200 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி ஹூண்டாய் நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ஹூண்டாய் நிறுவனம் MoM மற்றும் YoY ஆகிய இரண்டிலும் முறையே 12.5 சதவீதம் மற்றும் 1 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக குறைந்துள்ளது.
-
41,400க்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்து மஹிந்திரா அதன் நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. இது MoM 10 சதவிகிதம் சரிவைக் குறித்தது. அதன் YOY பிரிவில் மஹிந்திரா நிறுவனம் கிட்டத்தட்ட 18 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
-
2024 டிசம்பரில் டொயோட்டா நிறுவனம் 24,900 யூனிட்களை விட சற்றே குறைவாக விற்றது. இருந்தாலும் டொயோட்டா 16 சதவீதத்திற்கும் அதிகமான நேர்மறையான YY வளர்ச்சியைக் கண்டது.
-
கியா நிறுவனத்தின் விற்பனை 2024 டிசம்பர் MoM மற்றும் YoY இரண்டிலும் எதிர்மறையாகப் பதிவாகியுள்ளது. கொரிய கார் தயாரிப்பாளரின் மாதாந்திர புள்ளிவிவரங்கள் ஐந்து இலக்கத்தை தாண்ட முடியவில்லை. கிட்டத்தட்ட 9,000 விற்பனையை நிறுவனம் எட்டியது, இது MoM 56.5 சதவிகிதம் சரிவு மற்றும் கிட்டத்தட்ட 29 சதவிகிதம் ஆண்டு சரிவு ஆகும்.
-
எம்ஜி 7,500 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்தது. இது கடந்த மாத விற்பனை புள்ளிவிவரங்களை விட கிட்டத்தட்ட 25 சதவீதம் அதிகமாகும். அதன் YOY விற்பனையை ஒப்பிடுகையில் எம்ஜி நிறுவனம் இந்த பட்டியலில் கிட்டத்தட்ட 71 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
-
2024 நவம்பரில் ஹோண்டா அதன் நிலையைத் தக்க வைத்துக் கொண்டது மற்றும் அதன் விற்பனை புள்ளிவிவரங்கள் 6,800 க்கும் மேற்பட்ட யூனிட்கள் விற்பனையுடன் 36 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. அதன் ஆண்டுக்கு ஆண்டு விற்பனை கிட்டத்தட்ட 14 சதவிகிதம் சரிவைக் கண்டது.
-
2024 டிசம்பரில் ஃபோக்ஸ்வேகன் அதிகபட்ச வளர்ச்சியைப் பதிவு செய்தது, கிட்டத்தட்ட 4,800 யூனிட்கள் விற்பனையாகின. இதன் விளைவாக MoM வளர்ச்சி கிட்டத்தட்ட 58 சதவிகிதமாக இருந்தது. இருப்பினும் ஆண்டு விற்பனையை கருத்தில் கொள்ளும்போது இது கிட்டத்தட்ட 3 சதவீதம் சரிவாகும்.
-
ஃபோக்ஸ்வேகன் போலவே ஸ்கோடா -வும் MoM வளர்ச்சி சதவீதத்தைப் பதிவு செய்தது. அதன் அனுப்பப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4,600 எட்டியது. ஸ்கோடாவின் ஆண்டு புள்ளிவிவரங்கள் 2.5 சதவீதம் சரிவைக் கண்டன.
மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா காரிலிருந்து எலக்ட்ரிக் அதன் ICE பதிப்பிலிருந்து கடன் வாங்கும் 10 வசதிகள்
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.