ஏப்ரல் மாதம் ம ுதல் விலை உயர்வை அறிவித்த கார் நிறுவனங்கள் எவை தெரியுமா ?
kartik ஆல் மார்ச் 24, 2025 07:15 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 10 Views
- ஒரு கருத்தை எழுதுக
விலை உயர்வை அறிவித்துள்ள அனைத்து நிறுவனங்களும் தயாரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதையே காரணமாக தெரிவித்துள்ளன.
2024-25 நிதியாண்டின் முடிவில் இந்தியாவில் பல கார் நிறுவனங்கள் அவர்களது கார்களின் விலை உயரப்போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களுமே தயாரிப்பு உள்ளீட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளதையே இதற்கு முக்கியமான காரணமாக கூறுகின்றன. மேலும் பணவீக்கத்தை ஈடுகட்டவும் இந்த விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் மாதம் முதல் விலை உயர்வை அறிவித்த அனைத்து நிறுவனங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.
கார் நிறுவனங்கள் |
விலை உயர்வு |
மாருதி |
4 சதவீதம் வரை |
டாடா மோட்டார்ஸ் |
விவரம் இல்லை* |
கியா |
3 சதவீதம் வரை |
ஹூண்டாய் |
3 சதவீதம் வரை |
ஹோண்டா |
விவரம் இல்லை* |
ரெனால்ட் |
2 சதவீதம் வரை |
பிஎம்டபிள்யூ மோட்டார்ஸ் |
3 சதவீதம் வரை |
மஹிந்திரா |
3 சதவீதம் வரை |
*இந்த கார் தயாரிப்பாளர்கள் விலை உயர்வு எவ்வளவு இருக்கும் என்பதை தெரிவிக்கவில்லை
மாருதி
2025 ஏப்ரலில் விலை உயர்வை அறிவித்த முதல் கார் தயாரிப்பாளர்களில் மாருதியும் ஒன்று. மாருதி அதன் அனைத்து மாடல்களுக்கும் 4 சதவீதம் வரையிலான விலை உயர்வு இருக்கும் என தெரிவித்துள்ளது. தயாரிப்பு மற்றும் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளதே விலை உயர்வுக்கான காரணம் என மாருதி தெரிவித்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாடல் மற்றும் வேரியண்ட்டை பொறுத்து விலை உயர்வு இருக்கும் என்றும் மாருதி குறிப்பிட்டுள்ளது. மாருதி தற்போது ஆல்டோ கே10, வேகன் ஆர், கிராண்ட் விட்டாரா, பிரெஸ்ஸா, பலேனோ, மற்றும் இன்விக்டோ ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது.
டாடா மோட்டார்ஸ்
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து டாடா இரண்டாவது முறையாக விலை உயர்வை அறிவித்துள்ளது. தயாரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதே விலை உயர்வுக்கான காரணமாக டாடா தெரிவித்தாலும் கூட எவ்வளவு சதவிகிதம் விலை உயர்வு இருக்கும் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த அறிவிப்பால் டாடா கார்களின் விலை ஏப்ரல் மாதத்தில் உயரும். மாடல் மற்றும் வேரியன்ட்டை பொறுத்து விலை உயர்வு இருக்கும் என்று டாடா தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் கார் தயாரிப்பாளரின் இரண்டாவது விலை உயர்வு இதுவாகும். முதல் முறை கார்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்தியது. டாடா தற்போது அதன் போர்ட்ஃபோலியோவில் 13 மாடல்களை கொண்டுள்ளது. இதில் நெக்ஸான், டியாகோ, ஆல்ட்ரோஸ் மற்றும் கர்வ் இவி ஆகியவை அடங்கும்.
மஹிந்திரா
இந்தியவின் மற்றொரு பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா -வும் ஏப்ரல் மாதம் முதல் கார்களின் விலை உயரும் என தெரிவித்துள்ளது. மஹிந்திரா அதன் கார்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது. தயாரிப்பு உள்ளீடு செலவுகள் அதிகரித்துள்ளதே இதற்கான காரணமாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. மஹிந்திராவின் வரிசையில் XUV 700, தார், ஸ்கார்பியோ மற்றும் பொலிரோ ஆகிய கார்கள் உள்ளன.
கியா
டாடா மற்றும் மாருதியை போலவே கியாவும் 2025 ஆம் ஆண்டில் அதன் இரண்டாவது விலை உயர்வை அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் தயாரிப்பு உள்ளீடு செலவு மற்றும் பிற காரணிகளை விலை உயர்வுக்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த உயர்வு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கியா சிரோஸ் உட்பட இந்தியாவில் கியா வழங்கும் அனைத்து 7 மாடல்களையும் உள்ளடக்கியுள்ளது. மாடல் மற்றும் வேரியன்ட்டை பொறுத்து விலை 3 சதவீதம் வரை உயரும் என்று கியா தெரிவித்துள்ளது. கியாவின் தற்போதைய ஃபோர்ட்போலியோவில் சோனெட், செல்டோஸ் மற்றும் EV6 ஆகியவை அடங்கும்.
ஹூண்டாய்
கியா -வுடன் இணைந்து ஹூண்டாய் நிறுவனமும் 3 சதவீதம் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு சமீபத்திய கிரெட்டா எலக்ட்ரிக் உட்பட முழு வரிசைக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளீடு செலவுகள் அதிகரித்துள்ளது, அதிக செயல்பாட்டு செலவுகள் மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை இந்த உயர்வுக்கான காரணங்களாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. ஹூண்டாய் தற்போது இந்தியாவில் கிரெட்டா, எக்ஸ்டர், கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் அயோனிக் 5 உட்பட 14 கார்களை விற்பனை செய்கிறது.
ஹோண்டா
இந்த ஆண்டின் முதல் சுற்று விலை உயர்வை ஹோண்டா தவிர்த்துவிட்டாலும், இந்த முறை அதன் கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள மற்ற கார் தயாரிப்பாளர்களை போலவே ஹோண்டா -வும் உயர்ந்து வரும் மூலப்பொருள் செலவுகள் போன்றவற்றை காரணங்களாக தெரிவித்துள்ளது. ஹோண்டா தற்போது இந்தியாவில் அமேஸ், சிட்டி, மற்றும் சிட்டி ஹைப்ரிட் உட்பட ஐந்து மாடல்களை விற்பனை செய்கிறது.
ரெனால்ட்
ரெனால்ட் 2 சதவீதம் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. 2023 முதல் அதன் கார்களின் விலையை ரெனால்ட் உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகளைக் குறைக்க இந்த நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளது. ரெனால்ட்டின் தற்போதைய போர்ட்ஃபோலியோவில் க்விட், கைகர் மற்றும் ட்ரைபர் ஆகியவை அடங்கியுள்ளன.
பிஎம்டபிள்யூ
சொகுசு கார் பிராண்டான பிஎம்டபிள்யூவும் 3 சதவீதம் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. விலை உயர்வுக்கான சரியான காரணத்தை பிஎம்டபிள்யூ குறிப்பிடவில்லை. ஆனால் இந்த உயர்வு மினி உட்பட அதன் முழு அளவிலான மாடல்களுக்கும் இருக்கும் என தெரிவித்துள்ளது. பிஎம்டபிள்யூ போர்ட்ஃபோலியோ -வில் X3, X7, X1 லாங் வீல் பேஸ் (LWB), மினி கூப்பர் எஸ் மற்றும் M5 போன்ற கார்கள் அடங்கும்.
மேற்கூறிய கார் நிறுவனங்களில் இருந்து எந்த காரை வாங்க விரும்புகிறீர்கள் ? கமென்ட்டில் எங்களுடன் ஷேர் செய்து கொள்ளுங்கள்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.