• க்யா சோனெட் முன்புறம் left side image
1/1
 • Kia Sonet
  + 49படங்கள்
 • Kia Sonet
 • Kia Sonet
  + 9நிறங்கள்
 • Kia Sonet

க்யா சோனெட்

with fwd option. க்யா சோனெட் Price starts from Rs. 7.99 லட்சம் & top model price goes upto Rs. 15.69 லட்சம். It offers 19 variants in the 998 cc & 1493 cc engine options. The model is equipped with 1.5l சிஆர்டிஐ விஜிடீ engine that produces 114bhp@4000rpm and 250nm@1500-2750rpm of torque.. It delivers a top speed of kmph. It's &. Its other key specifications include its boot space of 385 litres. This model is available in 10 colours.
change car
36 மதிப்பீடுகள்rate & win ₹ 1000
Rs.7.99 - 15.69 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
ஒப்பீடு with old generation க்யா சோனெட் 2020-2024
view பிப்ரவரி offer
இந்த மாதத்திற்கான சிறந்த ஆஃபர்களை தவறவிட்டு விடாதீர்கள்

க்யா சோனெட் இன் முக்கிய அம்சங்கள்

engine998 cc - 1493 cc
பவர்81.8 - 118 பிஹச்பி
torque172Nm - 250Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive typefwd
fuelடீசல் / பெட்ரோல்
டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
powered முன்புறம் இருக்கைகள்
வென்டிலேட்டட் சீட்ஸ்
டிரைவ் மோட்ஸ்
இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
360 degree camera
சன்ரூப்
 • key சிறப்பம்சங்கள்
 • top அம்சங்கள்

சோனெட் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. சோனெட்டின் விலையை அதன் போட்டியாளர்களின் விலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். இந்த விரிவான படங்களில் பேஸ்-ஸ்பெக் HTE மற்றும் ஒன்-அபோவ்-வேரியன்ட்டான HTK -வை நீங்கள் பார்க்கலாம்.

விலை: 2024 கியா சோனெட்டின் விலை ரூ. 7.99 லட்சத்தில் இருந்து ரூ. 15.69 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) உள்ளது.

வேரியன்ட்கள்: கியா இந்த காரை 7 வேரியன்ட்களில் வழங்குகிறது: HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X லைன்.

நிறங்கள்: இது ஏழு மோனோடோன் மற்றும் இரண்டு டூயல்-டோன் கலர் ஆப்ஷன்களில் வருகிறது: இன்டென்ஸ் ரெட், அரோரா பிளாக் பேர்ல், பியூட்டர் ஆலிவ், கிளேஸியர் வொயிட் பேர்ல், கிராவிட்டி கிரே, ஸ்பார்க்லிங் சில்வர், இம்பீரியல் ப்ளூ, எக்ஸ்க்ளூசிவ் கிராஃபைட் மேட் (எக்ஸ் லைனுடன்), கிளேஸியர் வொயிட் பேர்ல் வித் அரோரா பிளாக் பேர்ல், மற்றும் அரோரா பிளாக் பேர்ல்.

சீட்டிங் கெபாசிட்டி: இதில் ஐந்து பேர் வரை பயணிக்கலாம்.

பூட் ஸ்பேஸ்: கியாவின் சப்காம்பாக்ட் எஸ்யூவி 385 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்குகிறது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: 2024 கியா சொனெட் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது: 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (120 PS / 172 Nm) 6-ஸ்பீடு iMT அல்லது 7-ஸ்பீடு DCT, 1.2-லிட்டர் பெட்ரோல். இன்ஜின் (83 PS / 115 Nm) 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் யூனிட் (116 PS / 250 Nm) 6-ஸ்பீடு iMT அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. டீசல் இன்ஜின் இப்போது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும். எஸ்யூவிக்கான -க்கான மைலேஜ் புள்ளிவிவரங்கள் இங்கே:

     1.2-லிட்டர் NA பெட்ரோல் MT - 18.83 கிமீ/லி

     1-லிட்டர் டர்போ-பெட்ரோல் iMT - 18.7 கிமீ/லி

     1-லிட்டர் டர்போ-பெட்ரோல் DCT - 19.2 கிமீ/லி

     1.5 லிட்டர் டீசல் iMT - 22.3 கிமீ/லி

     1.5 லிட்டர் டீசல் AT - 18.6 கிமீ/லி

அம்சங்கள்: புதுப்பிக்கப்பட்ட சோனெட்டில் உள்ள அம்சங்களில் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, 4-வே பவர்டு டிரைவர் சீட், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், கனெக்டட்ட் கார் டெக்னாலஜி, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஆகியவை அடங்கும்.

பாதுகாப்பு: பாதுகாப்புக்காக, 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. சப்காம்பாக்ட் எஸ்யூவி -யில் இப்போது 10 நிலை 1 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் வருகிறது, இதில் லேன்-கீப் அசிஸ்ட்,  ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங்  மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் ஆகியவை உள்ளன.

போட்டியாளர்கள்: ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா சோனெட் கார் ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட், மாருதி சுஸூகி பிரெஸ்ஸா மற்றும் சப்-4எம் க்ராஸ்ஓவர் எஸ்யூவியான மாருதி சுஸூகி ஃபிரான்க்ஸ் ஆகியவற்றுடன் போட்டியிடும்.

மேலும் படிக்க
சோனெட் hte(Base Model)1197 cc, மேனுவல், பெட்ரோல்more than 2 months waitingRs.7.99 லட்சம்*
சோனெட் htk1197 cc, மேனுவல், பெட்ரோல்more than 2 months waitingRs.8.79 லட்சம்*
சோனெட் hte டீசல்(Base Model)1493 cc, மேனுவல், டீசல்more than 2 months waitingRs.9.79 லட்சம்*
சோனெட் htk பிளஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல்more than 2 months waitingRs.9.90 லட்சம்*
சோனெட் htk டீசல்1493 cc, மேனுவல், டீசல்more than 2 months waitingRs.10.39 லட்சம்*
சோனெட் ஹெச்டீகே பிளஸ் டர்போ ஐஎம்டீ998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்more than 2 months waitingRs.10.49 லட்சம்*
சோனெட் htk பிளஸ் டீசல்1493 cc, மேனுவல், டீசல்more than 2 months waitingRs.11.39 லட்சம்*
சோனெட் ஹெச்டீஎக்ஸ் டர்போ ஐஎம்டீ998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்more than 2 months waitingRs.11.49 லட்சம்*
சோனெட் htx டீசல்1493 cc, மேனுவல், டீசல்more than 2 months waitingRs.11.99 லட்சம்*
சோனெட் htx டர்போ dct998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்more than 2 months waitingRs.12.29 லட்சம்*
சோனெட் htx டீசல் imt1493 cc, ஆட்டோமெட்டிக், டீசல்more than 2 months waitingRs.12.60 லட்சம்*
சோனெட் htx டீசல் ஏடி1493 cc, ஆட்டோமெட்டிக், டீசல்more than 2 months waitingRs.12.99 லட்சம்*
சோனெட் ஹெச்டீஎக்ஸ் பிளஸ் டர்போ ஐஎம்டீ998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்more than 2 months waitingRs.13.39 லட்சம்*
சோனெட் htx பிளஸ் டீசல்1493 cc, மேனுவல், டீசல்more than 2 months waitingRs.13.69 லட்சம்*
சோனெட் htx பிளஸ் டீசல் imt1493 cc, ஆட்டோமெட்டிக், டீசல்more than 2 months waitingRs.14.39 லட்சம்*
சோனெட் ஜிடீஎக்ஸ் பிளஸ் டர்போ டிசிடீ998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்more than 2 months waitingRs.14.50 லட்சம்*
சோனெட் x-line டர்போ dct(Top Model)998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்more than 2 months waitingRs.14.69 லட்சம்*
சோனெட் கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி1493 cc, ஆட்டோமெட்டிக், டீசல்more than 2 months waitingRs.15.50 லட்சம்*
சோனெட் x-line டீசல் ஏடி(Top Model)1493 cc, ஆட்டோமெட்டிக், டீசல்more than 2 months waitingRs.15.69 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

ஒத்த கார்களுடன் க்யா சோனெட் ஒப்பீடு

க்யா சோனெட் விமர்சனம்

Kia Sonet facelift

கியா சோனெட் காரானது ஹூண்டாய் வென்யூ, மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மற்றும் மஹிந்திரா XUV300 போன்ற கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வந்துள்ள கியாவின் என்ட்ரில் லெவல் எஸ்யூவி ஆகும். 2020 ஆண்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் இப்போது வெளியாகியுள்ளது. இந்த ஃபேஸ்லிஃப்ட்டில், இது பிரிவில் சிறந்த வசதிகள் மற்றும் அதிக பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.

வெளி அமைப்பு

2024 Kia Sonet

கியா சோனெட்டின் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஒட்டுமொத்த வடிவத்தில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், கியா எந்த ஷார்ட் கட்டையும் பயன்படுத்தவில்லை. நீங்கள் முன்பக்கத்தில் பார்த்தால், கன்மெட்டல் கிரே எலமென்ட்களை பார்க்க முடியும். ஹெட்லேம்ப்கள் அனைத்தும் LED யூனிட்கள் மற்றும் DRL -கள் ஆகியவை மிகவும் சிறப்பானவை மற்றும் இவை இரவில் அழகாக இருக்கும்.

2024 Kia Sonet Rear

ஃபாக் லைட்ஸ் ஒவ்வொரு வேரியன்ட்களுக்கும் ஏற்ப வேறுபடுகின்றன மற்றும் இரண்டு அலாய் வீல் வடிவமைப்புகளுடன் நான்கு வெவ்வேறு வீல் ஆப்ஷன்களும் உள்ளன. பின்புறத்தில் ஒரு புதிய ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் LED கனெக்டட் டெயில் லேம்ப்கள் அழகாக இருக்கும். எனவே, ஒட்டுமொத்தமாக, இந்த சோனெட் முந்தையதை விட சிறப்பாக உள்ளது. எனவே ஃபேஸ்லிப்ட்டுக்கான இலக்கு அடையப்பட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும்.

உள்ளமைப்பு

2024 Kia Sonet Interior

சோனெட்டின் கீ மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த கீ -யை EV6 -ல் பார்க்க முடிந்தது. அதன் பின்னர் செல்டோஸிலும், இப்போது சோனெட்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் லாக், அன்லாக்,  ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப்  மற்றும் பூட் -டை திறப்பதற்கான ஆப்ஷன்களை பெறுவீர்கள். இந்த கீ நிச்சயமாக பழையதை விட அதிக பிரீமியமாக இருக்கின்றது.

இதன் ஃபிட், ஃபினிஷ் மற்றும் தரம் உட்புறத்தின் சிறப்பம்சமாக தோன்றுகின்றது. நீங்கள் இங்கு பார்க்கும் அனைத்து எலமென்ட்களும் மிகவும் நன்றாக ஃபிட் செய்யப்பட்டுள்ளன மற்றும் அவை  அசைவதில்லை மேலும் தளர்வான உணர்வையும் கொடுக்கவில்லை. இதனால் கார் சில வருடங்களுக்கு பிறகும் எந்த சத்தத்தையும் எழுப்பாது என நம்பலாம். பிளாஸ்டிக்குகளை பொறுத்தவரையில் அதன் ஃபினிஷ் மற்றும் ஸ்டீயரிங் லெதர் ரேப், சீட் அப்ஹோல்ஸ்டெரி மற்றும் ஆர்ம்ரெஸ்ட் லெதர் ரேப் ஆகியவற்றின் தரம் நன்றாகவே இருக்கிறது. உண்மையில், இந்த கேபினில் அமர்ந்து பார்க்கும் போது நீங்கள் பிரீமியம் மற்றும் விலையுயர்ந்த காரில் அமர்ந்திருக்கும் உணர்வை பெறுவீர்கள். இருப்பினும், முன்பக்கத்தில் உள்ள இந்த பெரிய கிளாடிங் மற்றும் இந்த சென்டர் கன்சோல் காரணமாக கேபின் அமைப்பு சற்று வித்தியாசமாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த அப்டேட் மூலமாக கியா சென்டர் கன்சோலின் பட்டன்களை மேம்படுத்தியுள்ளது; இருந்தாலும் கூட, புதிய செல்டோஸில் உள்ளதைப் போலவே டேஷ் போர்டின் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அம்சங்கள்

வசதிகளின் அடிப்படையில் கியா சோனெட் எப்போதும் முதலிடத்திலேயே இருந்து வந்ததுள்ளது. ஆனால் சமீபத்தில் இந்த பிரிவில் போட்டி அதிகரித்ததால் இந்த கிரீடம் அதனிடம் இருந்து பறிக்கப்பட்டது. இருப்பினும், கூடுதல் அம்சங்களுடன், இது மீண்டும் இந்த பிரிவில் கூடுதலான வசதிகளைக் கொண்ட ஃபுல்லி லோடட் எஸ்யூவி ஆகும்.

Kia Sonet facelift 360-degree camera

கூடுதல் அம்சங்களை பற்றி பார்க்கும் போது, இப்போது இது ஒரு அற்புதமான டிஸ்பிளேவுடன் ஆல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை பெறுகிறது. இதை செல்டோஸிலும் பார்க்க முடிந்தது, இங்கே அதன் அமைப்பு, டிஸ்பிளே மற்றும் கிராபிக்ஸ் நன்றாக உள்ளது. கூடுதலாக, இப்போது இது 360 டிகிரி கேமராவையும் கொண்டுள்ளது. உங்களுக்கு பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர்களின் வசதியும் கிடைக்கும். எனவே வாகனம் ஓட்டும் போது, ​​பாதுகாப்பு மற்றும் வசதி இன்னும் கொஞ்சம் அதிகரிக்கிறது.

மேலும், 360-டிகிரி கேமராவின் தரம் மற்றும் காட்சி அமைப்பும் மிகவும் தெளிவாக இருப்பதால், பயன்படுத்த எளிதாக உள்ளது. கூடுதலாக, இந்த கேமராவின் காட்சி உங்கள் மொபைலில் பார்க்க முடியும். எனவே, கார் எங்கோ தொலைவில் நிறுத்தப்பட்டு, அது பாதுகாப்பாக இல்லை என்று உங்களுக்கு தோன்றுகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த வசதியால் நீங்கள் தொலைவில் இருந்தாலும் கூட ஸ்மார்ட்போனில் இருந்தபடியே காரின் சுற்றுப்புறங்களை சரிபார்க்கலாம், இது மிகவும் நேர்த்தியான அம்சமாகும்.

Kia Sonet facelift front seats

டிரைவருக்கான வசதியை அதிகரிக்க, கியா டிரைவருக்காக 4-வே அட்ஜெஸ்ட்டபிள் பவர் சீட்களையும் சேர்த்துள்ளது, அதாவது ஸ்லைடிங் மற்றும் சாய்வதை எலக்ட்ரிக்காக அட்ஜஸ்ட் முடியும். இருப்பினும் உயரத்தை சரி செய்வது இன்னும் மேனுவலாகவே உள்ளது. மற்ற அம்சங்களில் 7-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்ஸ், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், டிரைவ் மோடுகள், டிராக்‌ஷன் மோட்கள், முன்பக்க வென்டிலேட்டட் சீட்கள், ஆட்டோ டே-நைட் IRVM, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், சன்ரூஃப் மற்றும் ஏர் பியூரிஃபையர் ஆகியவை உள்ளன.

Kia Sonet 2024

இன்ஃபோடெயின்மென்ட் பற்றி பார்க்கும் போது, சோனெட் இன்னும் இந்த 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வருகிறது, இது செக்மென்ட்டில் சிறந்தது. இதே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வென்யூவில் வேறு ஒரு தீமில் கிடைக்கிறது.டிஸ்பிளே ஸ்மூத் ஆக உள்ளது மற்றும் மிகவும் துல்லியமானது. மேலும் குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால், எந்த பிழையும் இல்லை. அது எப்போதும் சீராக இயங்குகின்றது. அதைப் பயன்படுத்திய அனுபவம் மிகவும் நன்றாகவே உள்ளது. இது போஸ் 7-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இது மிகவும் சிறப்பாக உள்ளது. ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இதில் இல்லை. அதற்கு, நீங்கள் இன்னும் ஒரு வயர் மூலமாகவே கனெக்ட் செய்ய வேண்டியிருக்கும், அதுவும் USB கேபிளை இணைக்க வேண்டும், ஏனெனில் Type C கேபிளை பயன்படுத்த முடியாது.

கேபின் நடைமுறை தன்மை

2024 Kia Sonet

சோனெட்டின் கேபின் பயணிகளுக்கும் மிகவும் ஏற்ற வேரியன்ட்யிலேயே உள்ளது. இங்கே நீங்கள் நிறைய ஸ்டோரேஜ் மற்றும் சார்ஜிங் ஆப்ஷன்களை பெறுவீர்கள். 1 லிட்டர் பாட்டில் மட்டுமின்றி கூடுதலாக சில பொருட்களை எளிதாக வைத்திருக்க உதவும் டோர் பாக்கெட்டுகளுடன் ஆரம்பிக்கலாம். அதுமட்டுமின்றி, உங்கள் ஃபோன் அதிக வெப்பமடையாமல் இருக்க ஏர் வென்ட்டுடன் கூடிய வயர்லெஸ் சார்ஜரை கொண்ட ஒரு பெரிய ஓபன் ஸ்டோரேஜ் மையத்தில் உள்ளது. அதன் பின்னால் இரண்டு கப் ஹோல்டர்கள் மற்றும் ஒரு ஃபோன் ஸ்லாட் உள்ளது. ஆர்ம்ரெஸ்டின் உள்ளேயும் உங்களுக்கு இடம் கிடைக்கும், ஆனால் ஏர் ஃபியூரிபையர் காரணமாக இடம் சிறிது சமரசம் செய்யப்பட்டுள்ளது. க்ளோவ் பாக்ஸ் தேவையான அளவில் உள்ளது ஆனால் கூல்டு வசதி கிடையாது. சார்ஜிங் ஆப்ஷன்கள் பற்றி பார்க்கும் போது Type C, வயர்லெஸ் சார்ஜர், USB சார்ஜர் மற்றும் 12V சாக்கெட் உள்ளது.

பின் இருக்கை அனுபவம்

2024 Kia Sonet Rear seats

பின் இருக்கையில் இருப்பவர்களுக்கு சோனெட்டில் நல்ல இடவசதி உள்ளது. முன் இருக்கைகளுக்கு அடியில் இடம் இருப்பதால் கால்களையும்  நீட்டலாம். முழங்கால் அறை போதுமானது மற்றும் ஹெட் ரூம் நன்றாக உள்ளது. எனவே 6 அடிக்கு மேல் இருப்பவர்களும் எந்த புகாரும் செய்ய மாட்டார்கள். ஆனால் இருக்கையின் வசதி இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். பேக்ரெஸ்ட் கோணம் தளர்வாக இருக்கின்றது ஆனால்  ​​கான்டூரிங் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால் ஒருவேரியன்ட்யில் இந்த தட்டையான இருக்கைகள் ஒரு வசதியை தருகின்றன: இதில் 3 பெரியவர்கள் அமருவது மிகவும் வசதியானதாக உள்ளது. மூன்றாவது பயணிக்கு ஹெட்ரெஸ்ட் கொடுக்கப்படவில்லை என்றாலும், 3-பாயின்ட் சீட் பெல்ட் உள்ளது.

2024 Kia Sonet charging points

நல்ல விஷயம் என்னவென்றால், இந்த இருக்கையில் நீங்கள் நிறைய அம்சங்களைப் பெறுகிறீர்கள். இந்த ஆர்ம்ரெஸ்டில் 2 கப் ஹோல்டர்கள் மற்றும் சரியான உயரத்தில் உள்ளது, மேலும் கதவு ஆர்ம்ரெஸ்ட் ஒரே மாதிரியாக இருப்பதால் பயன்படுத்த வசதியாக இருக்கும். கூடுதலாக, கதவு ஆர்ம்ரெஸ்ட் லெதரால் மூடப்பட்டுள்ளது, எனவே நீங்கள் இங்கேயும் பிரீமியம் உணர்வை பெறுவீர்கள். ஜன்னல் சன் ஷேட்கள் கோடைக்காலத்தில் உதவுவதோடு, சார்ஜ் செய்வதற்கும் இரண்டு Type-C போர்ட்களை பெறுவீர்கள். உங்கள் போன் அல்லது பர்ஸை நீங்கள் வைப்பதற்காக ஒரு ஸ்டோரேஜ் பகுதியும் உள்ளது மற்றும் பின்புற ஏசி எர் சர்க்குலேஷனுக்கு உதவுகிறது. இருப்பினும், ஃபுளோவர் கன்ட்ரோல் இதில் இல்லை. மொபைல் மற்றும் வாலட்டுகளுக்கு புதிய இருக்கை பின் பாக்கெட் உள்ளது. ஒட்டுமொத்தமாக, அனுபவத்தின் பார்வையில் இருக்கையை பார்த்தால், அம்சங்கள் வசதியை உருவாக்குகின்றன மற்றும் இந்த அனுபவம் முழுமையான உணர்வை கொடுக்கின்றது.

பாதுகாப்பு

2024 Kia Sonet

பாதுகாப்பிலும் சில அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. அடிப்படை வேரியன்ட் உடன் 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்டாக பெறுவீர்கள். கூடுதலாக, இந்த காரின் சிறந்த வேரியன்ட்களில் ADAS ஆப்ஷன்களை பெறுவீர்கள். ஆனால் இது ரேடார் அடிப்படையிலானது அல்ல, கேமரா அடிப்படையிலானது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எனவே, ஃபிரன்ட் கொலிஷன் அவாய்டன்ஸ் அசிஸ்ட், ஃபிரன்ட் கொலிஷன் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் லேன் டிபார்ச்சர் வார்னிங் போன்ற அம்சங்களை பெறுவீர்கள், ஆனால் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற ரேடார் அடிப்படையிலான செயல்பாடுகள் இந்த காரில் கிடையாது.

சோனெட் காரானது விரைவில் பாரத் NCAP ஆல் சோதிக்கப்படும் என்று நம்புகிறோம். நாம் செல்டோஸில் பார்த்தது போல் ஃபேஸ்லிஃப்ட்டில் சில பாடி மற்றும் கட்டமைப்பில் வலுவூட்டல்கள் இருந்திருந்தால், கூடுதலாக மதிப்பெண் கிடைப்பதற்காக உதவும். 

பூட் ஸ்பேஸ்

2024 Kia Sonet Boot space

கியா சோனெட்டில் இந்த செக்மென்ட்டிலேயே சிறந்த பூட் ஸ்பேஸ் கிடைக்கும். இதற்குக் காரணம், ஃபுளோர் அகலமாகவும், நீளமாகவும், தட்டையாகவும் இருக்கும். மேலும் இது பெரிதாகவும் இருப்பதால் பெரிய சூட்கேஸ்களை எளிதாக இங்கு வைக்கலாம். நீங்கள் சாமான்களை மற்றொன்றுக்கு மேலே அடுக்கி வைக்கலாம் மற்றும் நிறைய சிறிய பைகளை வைக்கலாம். நீங்கள் ஒரு பெரிய பொருளை நகர்த்த விரும்பினால், இந்த இருக்கைகளை 60-40 ஸ்பிளிட் செய்யலாம் , ஆனால் தட்டையான ஃபுளோர் கிடைக்காது.

செயல்பாடு

2024 Kia Sonet Engine

கியா சோனெட் மூலம் நீங்கள் நிறைய இன்ஜி மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பெறுவீர்கள். உண்மையில் இது இந்த பிரிவில் உள்ள மிகவும் சிறப்பான கார் ஆகும். நீங்கள் நகரத்தில் சௌகரியமாக ஓட்ட விரும்பினால், உங்களிடம் 1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது ஒரு ரீஃபைன்மென்ட் ஆன 4-சிலிண்டர் இன்ஜின் மற்றும் நகரத்தில் ஓட்டுவதற்கு மென்மையாகவும் நிதானமாகவும் இருக்கும். நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. ஆனால் நீங்கள் சில விரைவான முந்திச் செல்வதைத் விரும்புவீர்கள் என்றாலோ டிரைவிங்கில் கூடுதலான ஆற்றலையும் உற்சாகத்தையும் தேடுகிறீர்கள் என்றாலோ அது இந்த இன்ஜினில் கிடைக்காது. ஆம், இது மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் மட்டுமே கிடைக்கும்.

உங்கள் டிரைவிங்கில் கூடுதலான உற்சாகத்தை நீங்கள் விரும்பினாலோ மற்றும் வேகமான காரை விரும்பினாலோ, நீங்கள் 1.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோலை இன்ஜினை தேர்வு செய்ய வேண்டும். இந்த இன்ஜினும் மிகவும் ரீஃபைன்மென்ட் ஆக உள்ளது, மேலும் நெடுஞ்சாலையிலும் நகரத்திலும் விரைவாக முந்திச் செல்லும் திறனும் கிடைக்கும். செயல்திறனுக்காக, குறிப்பாக நீங்கள் அதை ஆர்வத்துடன் ஓட்டினால், அது அதிக மைலேஜில் பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால் செயல்திறன் நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு ஏற்றபடி இருக்கும். 6-ஸ்பீடு இன்டெலிஜென்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன், கிளட்ச்லெஸ் மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DCT போன்ற அதிக டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் உங்களுக்கு கிடைக்கும். இது 3 டிரைவ் மோடுகளையும் பெறுகிறது, இருப்பினும் ஸ்போர்ட் மோட் ட்ராஃபிக்கில் சற்று அதிகமாக இருக்கும். நார்மல் மோடில் டிரைவிங் மற்றும் ஃபெர்பாமன்ஸ் ஆகியவற்றுக்கு இடையே நல்ல சமநிலையை வழங்கும். இகோ மோடில், டிரைவிங் சற்று மெதுவாக செல்வதை போன்ற உணர்வை கொடுக்கின்றது.

ஆனால் நீங்கள் ஒரு ஆல்-ரவுண்டரை விரும்பினால் -- நெடுஞ்சாலையில் பயணம் செய்ய விரும்பினால், நகரத்தில் முந்துவதற்கான சக்தி மற்றும் ஓரளவு மைலேஜ் தரும் இன்ஜின் ஆகியவற்றை நீங்கள் விரும்பினால், ஒரே ஒரு வழி உள்ளது: 1.5 லிட்டர் டீசல் இன்ஜின். இது ஒரு மென்மையான டிரைவிங் அனுபவம் மற்றும் ஆள்கள் இல்லாத சாலைகளில் சிரமமின்றி பயண அனுபவத்தை வழங்குகிறது. மேலும் இந்த இன்ஜின் மேனுவல், iMT க்ளட்ச்லெஸ் மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகியவற்றுடன் மிகவும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது. மொத்தம் உள்ள மூன்றில் இதுவே நாங்கள் பரிந்துரைக்கும் ஒன்றாக உள்ளது.

நீங்கள் டீசல் இன்ஜினை வாங்கப் போகிறீர்கள் என்றால் ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். இந்த ஃபேஸ்லிஃப்ட்டில், ஒரு AdBlue டேங்க் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. AdBlue என்பது யூரியா அடிப்படையிலான ஒரு லிக்விட் ஆகும், இது வாகனத்தின் மாசு உமிழ்வைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் இதை ஒரு முறை நிரப்பினால் சுமார் 10,000 கி.மீ வரை நீடிக்கும். அதை டாப் ஆஃப் செய்ய உங்களுக்கு சுமார் ரூ. 900-1000 செலவாகலாம். ஆனால் இது ஒரு பெரிய செலவு அல்ல, ஆனால் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் காட்டப்படும் AdBlue -வின் அளவை கட்டாயமாக கவனத்தில் வைக்க வேண்டும்.

ரிடே அண்ட் ஹண்ட்லிங்

2024 Kia Sonet

கம்ஃபோர்ட் என்பது எப்போதும் சோனெட்டின் வலுவான விஷயங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆம், இந்த பிரிவில் இது மிகவும் வசதியான கார் இல்லை, ஆனால் நீங்கள் இதில் உட்கார்ந்தால் புகார் எதுவும் செய்ய மாட்டீர்கள். மேலும் இந்த ஃபேஸ்லிஃப்ட்டில், மோசமான சாலைகளை சிறப்பாகச் சமாளிக்க சஸ்பென்ஷன் சிறப்பாக உள்ளது, இந்த வசதி கொஞ்சம் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது. இது மோசமான சாலைகளில் அமைதியை பராமரிக்கிறது மற்றும் உங்களை நன்கு கம்ஃபோர்ட் ஆக வைத்திருக்கும். ஆழமான பள்ளங்களில் கொஞ்சம் இது தடுமாறுகின்றது. நீங்கள் ஸ்பீட் பிரேக்கரில் அல்லது கரடுமுரடான சாலைப் பாதையில் வாகனம் ஓட்டினாலும் அல்லது மென்மையான நெடுஞ்சாலையில் பயணித்தாலும், சஸ்பென்ஷன் சீரானதாக இருக்கும். 

சோனெட் மூலம் பாதுகாப்பான மற்றும் உறுதியளிக்கும் கையாளுதல் பேக்கேஜும் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் இந்த காரை ஒரு மலை வாசஸ்தலத்திற்கு எடுத்துச் செல்லப் போகிறீர்கள் என்றால், இதை ஓட்டுவது ஃபன் -ஆக இருக்கும். இருப்பினும், எனக்கு ஒரு சிறிய புகார் உள்ளது, இது இந்த எஸ்யூவி -யின் சவுண்ட் இன்சுலேஷன். இது இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். இது சிறப்பாக இருந்திருந்தால், இந்த கார் தரும் பிரீமியம் உணர்வை மேம்படுத்தியிருக்கும்.

வெர்டிக்ட்

2024 Kia Sonet

இறுதியாக, சோனெட்டில் நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுகிறீர்களா? ஆம்! கிராஷ் டெஸ்ட் முடிந்தவுடன், இறுதியான சந்தேகமும் தெளிவாகும். ஆனால் இவை அனைத்தையும் பெற, நீங்கள் ஒரு கொஞ்சம் அதிகம் விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதாவது, டெல்லியில் டாப்-எண்ட் சோனெட்டை வாங்கினால், ரூ.17 லட்சத்துக்கும் மேல் ஆன்-ரோடு விலையாக செலுத்த வேண்டும். இப்போது, ​​இந்த விலையில், நீங்கள் ஃபுல்லி லோடட் சோனெட்டை வாங்கலாம் அல்லது நன்கு சிறப்பான வசதி கொண்ட செல்டோஸை பெறலாம். இது அதிக இட வசதி, சாலை தோற்றம் மற்றும் நல்ல மதிப்பை வழங்கும். ஆனால் எதை தேர்வு செய்வது என்பது மிகவும் கடினமாக விஷயமாகவே இருக்கும்.

க்யா சோனெட் இன் சாதகம் & பாதகங்கள்

expert review
கார்த்தேக்கோ வல்லுனர்கள்:
தோற்றம், தொழில்நுட்பம், அம்சங்கள் மற்றும் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய கியா சோனெட்டில் நீங்கள் விரும்பும் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். இருப்பினும், இவை அனைத்தையும் நீங்கள் பெறலாம் ஆனால் நீங்கள் அதிக விலை என்ற விஷயத்தை சமாளிக்க வேண்டும். ஆனால் கொடுக்கும் பணத்துக்கு இது மதிப்பானதுதான், ஆனால் சப்-4 மீட்டர் எஸ்யூவி -க்கு ரூ. 17 லட்சத்திற்கு மேல் செலவழிக்க வேண்டியிருக்கும்.

நாம் விரும்பும் விஷயங்கள்

 • சிறந்த லைட்டிங் அமைப்புடன் முன்பை விட தோற்றம் நன்றாக இருக்கிறது.
 • மேலே உள்ள ஒரு பிரிவில் இருந்து பெறப்பட்டு இதில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் அம்சங்கள், அதன் பிரிவில் கூடுதலான வசதிகள் கொண்ட எஸ்யூவி -யாக உள்ளது.
 • 3 இன்ஜின்கள் மற்றும் 4 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன், செக்மென்ட்டில் அதிக எண்ணிக்கையிலான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.
 • இந்த பிரிவில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒரு காராக இருக்கின்றது.

நாம் விரும்பாத விஷயங்கள்

 • மேலே உள்ள ஒரு பிரிவில் இருந்து பவர்டிரெய்ன்கள் மற்றும் அம்சங்களை கடன் வாங்குவது அதை மிகவும் விலை உயர்ந்ததாக ஆக்கியுள்ளது.
 • கேபின் இன்சுலேஷன் சிறப்பாக இருந்திருக்கலாம்.
 • போக்குவரத்தில் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொண்ட காரில் ஸ்போர்ட் மோடை பயன்படுத்தினால் ஓட்டுவதற்கு ஜெர்க்கியாக உள்ளது கொடுக்கின்றது.
 • பின் இருக்கைகளில் கூடுதல் வசதிக்காக சிறந்த குஷனிங்கை கொடுத்திருக்கலாம்.

fuel typeடீசல்
இன்ஜின் டிஸ்பிளேஸ்மென்ட்1493 cc
no. of cylinders4
அதிகபட்ச பவர்114bhp@4000rpm
max torque250nm@1500-2750rpm
சீட்டிங் கெபாசிட்டி5
ட்ரான்ஸ்மிஷன் typeஆட்டோமெட்டிக்
பூட் ஸ்பேஸ்385 litres
fuel tank capacity45 litres
உடல் அமைப்புஎஸ்யூவி

இதே போன்ற கார்களை சோனெட் உடன் ஒப்பிடுக

Car Name
டிரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக் / மேனுவல்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக் / மேனுவல்
Rating
36 மதிப்பீடுகள்
336 மதிப்பீடுகள்
329 மதிப்பீடுகள்
429 மதிப்பீடுகள்
545 மதிப்பீடுகள்
426 மதிப்பீடுகள்
2403 மதிப்பீடுகள்
164 மதிப்பீடுகள்
1053 மதிப்பீடுகள்
265 மதிப்பீடுகள்
என்ஜின்998 cc - 1493 cc 1482 cc - 1497 cc 998 cc - 1493 cc 1199 cc - 1497 cc 1462 cc998 cc - 1197 cc 1197 cc - 1497 cc1482 cc - 1497 cc 1199 cc1349 cc - 1498 cc
எரிபொருள்டீசல் / பெட்ரோல்டீசல் / பெட்ரோல்டீசல் / பெட்ரோல்டீசல் / பெட்ரோல்பெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜிடீசல் / பெட்ரோல்டீசல் / பெட்ரோல்பெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல்
எக்ஸ்-ஷோரூம் விலை7.99 - 15.69 லட்சம்10.90 - 20.30 லட்சம்7.94 - 13.48 லட்சம்8.15 - 15.60 லட்சம்8.34 - 14.14 லட்சம்7.51 - 13.04 லட்சம்7.99 - 14.76 லட்சம்11 - 20.15 லட்சம்6.13 - 10.20 லட்சம்9.98 - 17.90 லட்சம்
ஏர்பேக்குகள்66662-62-62-6622-6
Power81.8 - 118 பிஹச்பி113.42 - 157.81 பிஹச்பி81.8 - 118.41 பிஹச்பி113.31 - 118.27 பிஹச்பி86.63 - 101.64 பிஹச்பி76.43 - 98.69 பிஹச்பி108.62 - 128.73 பிஹச்பி113.18 - 157.57 பிஹச்பி72.41 - 86.63 பிஹச்பி108.49 - 138.08 பிஹச்பி
மைலேஜ்-17 க்கு 20.7 கேஎம்பிஎல்24.2 கேஎம்பிஎல்17.01 க்கு 24.08 கேஎம்பிஎல்17.38 க்கு 19.89 கேஎம்பிஎல்20.01 க்கு 22.89 கேஎம்பிஎல்20.1 கேஎம்பிஎல்17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்15.43 கேஎம்பிஎல்

க்யா சோனெட் கார் செய்திகள் & அப்டேட்கள்

 • நவீன செய்திகள்
 • அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்

க்யா சோனெட் பயனர் மதிப்புரைகள்

4.6/5
அடிப்படையிலான36 பயனாளர் விமர்சனங்கள்
 • ஆல் (36)
 • Looks (9)
 • Comfort (12)
 • Mileage (6)
 • Engine (6)
 • Interior (7)
 • Space (2)
 • Price (7)
 • More ...
 • நவீனமானது
 • பயனுள்ளது
 • Sonet Driving Experience

  This feature-loaded car lacks power. I recommend opting for the 1.0L turbo if you are an enthusiast....மேலும் படிக்க

  இதனால் ritik
  On: Feb 20, 2024 | 1036 Views
 • Nice Car

  This car offers commendable features for its price, though many are exclusive to the top variant. It...மேலும் படிக்க

  இதனால் vikas singare
  On: Jan 28, 2024 | 4108 Views
 • Wonderful Performance

  I recently purchased the Kia Sonet, and I'm pleased to say it's a commendable car with a range of fe...மேலும் படிக்க

  இதனால் manju
  On: Jan 27, 2024 | 3156 Views
 • Great Car

  The internal design of this vehicle is intriguing, especially with the inclusion of ventilated seats...மேலும் படிக்க

  இதனால் sabil
  On: Jan 24, 2024 | 2076 Views
 • Safety Car

  The best safety family car, fully loaded with features including a 360-degree camera and boasting a ...மேலும் படிக்க

  இதனால் karan wankhede
  On: Jan 20, 2024 | 1702 Views
 • அனைத்து சோனெட் மதிப்பீடுகள் பார்க்க

க்யா சோனெட் வீடியோக்கள்

 • Kia Sonet Facelift 2024 vs Nexon, Venue, Brezza and More! | #BuyOrHold
  6:33
  Kia Sonet Facelift 2024 vs Nexon, Venue, Brezza and More! | #BuyOrHold
  டிசம்பர் 25, 2023 | 48912 Views

க்யா சோனெட் நிறங்கள்

க்யா சோனெட் படங்கள்

 • Kia Sonet Front Left Side Image
 • Kia Sonet Front View Image
 • Kia Sonet Rear view Image
 • Kia Sonet Grille Image
 • Kia Sonet Front Fog Lamp Image
 • Kia Sonet Headlight Image
 • Kia Sonet Taillight Image
 • Kia Sonet Side Mirror (Body) Image
space Image
Found what you were looking for?

க்யா சோனெட் Road Test

கருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்
Ask QuestionAre you Confused?

48 hours இல் Ask anything & get answer

கேள்விகளும் பதில்களும்

 • சமீபத்திய கேள்விகள்

What is the launch date of the Kia Sonet 2024?

SolomonSusheelKumar asked on 23 Jun 2023

As of now, there is no official update from the brand's end regarding the la...

மேலும் படிக்க
By CarDekho Experts on 23 Jun 2023

space Image

இந்தியா இல் சோனெட் இன் விலை

 • பிரபலமானவை
சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs. 9.40 - 18.46 லட்சம்
மும்பைRs. 9.32 - 22.25 லட்சம்
புனேRs. 9.30 - 18.74 லட்சம்
ஐதராபாத்Rs. 9.49 - 19.12 லட்சம்
சென்னைRs. 9.44 - 19.31 லட்சம்
அகமதாபாத்Rs. 8.89 - 17.49 லட்சம்
லக்னோRs. 9.02 - 18.03 லட்சம்
ஜெய்ப்பூர்Rs. 9.21 - 18.25 லட்சம்
பாட்னாRs. 9.20 - 18.52 லட்சம்
சண்டிகர்Rs. 8.78 - 17.48 லட்சம்
உங்கள் நகரத்தை தேர்ந்தெடு
space Image

போக்கு க்யா கார்கள்

 • பிரபலமானவை
 • உபகமிங்
 • க்யா கார்னிவல்
  க்யா கார்னிவல்
  Rs.40 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 20, 2024
 • க்யா ev9
  க்யா ev9
  Rs.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2024
 • க்யா ஸ்போர்டேஜ்
  க்யா ஸ்போர்டேஜ்
  Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: ஜூலை 20, 2024
 • க்யா ev5
  க்யா ev5
  Rs.55 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2025

Popular எஸ்யூவி Cars

 • டிரெண்டிங்கில்
 • லேட்டஸ்ட்
 • உபகமிங்
 • வோல்வோ ex90
  வோல்வோ ex90
  Rs.1.50 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 01, 2024
 • ஹூண்டாய் கிரெட்டா n-line
  ஹூண்டாய் கிரெட்டா n-line
  Rs.17.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 11, 2024
 • மஹிந்திரா bolero neo plus
  மஹிந்திரா bolero neo plus
  Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2024
 • மஹிந்திரா thar 5-door
  மஹிந்திரா thar 5-door
  Rs.15 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2024
 • மஹிந்திரா xuv300 2024
  மஹிந்திரா xuv300 2024
  Rs.9 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2024
view பிப்ரவரி offer
view பிப்ரவரி offer

Similar Electric கார்கள்

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience