ஃபேஸ்லிஃப்ட் Kia Sonet காரில் கொடுக்கப்பட்டுள்ள வேரியன்ட் வாரியான வசதிகள் இங்கே
published on டிசம்பர் 18, 2023 06:06 pm by ansh for க்யா சோனெட்
- 31 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய சோனெட் வடிவமைப்பு, கேபின் அனுபவம், அம்சங்கள் மற்றும் பவர்டிரெய்ன் உட்பட அனைத்திலும் அப்டேட்களை பெற்றுள்ளது
-
முன்பு இருந்த அதே 7 வேரியன்ட்களில் வருகிறது: HTE, HTK, HTK+, HTX, HTX+, GT-Line மற்றும் X-Line.
-
கியா வெளிப்புறத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளது.
-
லெவல் 1 ADAS உட்பட புதிய அம்சங்களைப் பெறுகிறது.
-
டீசல் இன்ஜின் இப்போது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது.
-
விலை ரூ.8 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்லிஃப்ட் கியா சோனெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் இப்போது மாற்றம் செய்யப்பட்ட செய்யப்பட்ட வெளிப்புறம், சற்று மாற்றியமைக்கப்பட்ட கேபின், கூடுதல் அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் டீசல்-மேனுவல் பவர்டிரெய்ன் ஆப்ஷனுடன் வருகிறது. கியா நிறுவனம் முன்பதிவுகளை டிசம்பர் 20 ஆம் தேதி திறக்கவுள்ளது. நீங்கள் ஏதாவது ஒரு வேரியன்ட்டை முன்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா ? ஆனால் எந்த வேரியன்ட்டை தேர்வு செய்வது என்று தெரியவில்லை என்றால், சப்காம்பாக்ட் எஸ்யூவி -யின் எந்த வேரியன்ட் உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்பதை அறிய இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.
கியா சோனெட் HTE
வெளிப்புறம் |
உட்புறம் |
கம்ஃபோர்ட் மற்றும் வசதி |
இன்ஃபோடெயின்மென்ட் |
பாதுகாப்பு |
|
|
|
|
|
கியா சோனெட் -ன் பேஸ் வேரியன்ட்டில் வெளிப்புற வடிவமைப்பில் பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லை. ஆனால் உங்களுக்கு செமி-லெதரெட் இருக்கைகளுடன் ஆல் பிளாக் கேபின் கிடைக்கும். மேலும், இது ஒரு இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை தவறவிட்டாலும், 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை ஸ்டாண்டர்டாக பெறுகிறது.
மேலும் படிக்க: 2024 Kia Sonet: வேரியன்ட் வாரியான இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களின் விவரம் இங்கே
இந்த வேரியன்ட் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் இரண்டிலும் கிடைக்கிறது, ஆனால் ஒவ்வொன்றிற்கும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கும்.
கியா சோனெட் HTK
HTE வேரியன்ட் -டை விட, ஒரு படி மேலே இருக்கும் சோனெட் HTK வேரியன்ட்டில் கிடைக்கும் வசதிகள்:
வெளிப்புறம் |
உட்புறம் |
கம்ஃபோர்ட் மற்றும் வசதி |
இன்ஃபோடெயின்மென்ட் |
பாதுகாப்பு |
|
|
|
|
HTK வேரியன்ட்டின் வெளிப்புறத்தில் சிறிய அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் கேபின் உங்களுக்கு அதிக வசதிகள் மற்றும் வயர்லெஸ் கனெக்டட் கார் டெக்னாலஜியுடன் கூடிய 8 இன்ச் டச் ஸ்கிரீனை வழங்கும். இது தவிர, இந்த வேரியன்ட் பார்க்கிங் கேமரா போன்ற வசதியான பாதுகாப்பு அம்சங்களையும் வழங்கும். சோனெட் HTK ஆனது பேஸ் வேரியன்ட்டின் அதே இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
கியா சோனெட் HTK+
HTK வேரியன்ட்டை விட, சோனெட் HTK+ -ல் கிடைக்கும் வசதிகள்:
வெளிப்புறம் |
உட்புறம் |
கம்ஃபோர்ட் மற்றும் வசதி |
இன்ஃபோடெயின்மென்ட் |
பாதுகாப்பு |
|
|
|
சப்காம்பாக்ட் எஸ்யூவியின் இந்த வேரியன்ட், ஹெட்லைட்களை தவிர, LED லைட்களுடன் கூடிய பல ஸ்டைலான எலமென்ட்களுடன் வருகின்றது. மேலும், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கட்டுப்பாடு மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்ற அம்சங்களால் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
சோனெட் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கும் என்ட்ரி லெவல் வேரியன்ட் இதுவாகும், ஆனால் 6-ஸ்பீடு iMT (கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவல்) உடன் மட்டுமே கிடைக்கும்.
கியா சோனெட் HTX
HTK வேரியன்ட்டை விட HTX வேரியன்ட்டில் கிடைக்கும் வசதிகள்:
வெளிப்புறம் |
உட்புறம் |
கம்ஃபோர்ட் மற்றும் வசதி |
இன்ஃபோடெயின்மென்ட் |
பாதுகாப்பு |
|
|
|
|
முழு LED லைட்டிங் அமைப்பைப் பெறுவதைத் தவிர, Kia Sonet -ன் HTX வேரியன்ட், சரிசெய்யக்கூடிய பின்புற ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற அம்சங்களுடன் சிறந்த கேபின் அனுபவத்தையும் வழங்குகிறது, அதே நேரத்தில் க்ரூஸ் கன்ட்ரோல் கட்டுப்பாடு, டிரைவ் மோடுகள் மற்றும் பேடில் ஷிஃப்டர்களுடன் டிரைவ் அனுபவத்தை மேம்படுத்துகிறது.
புதிய கியா சோனெட் க்கான ஆட்டோமெட்டிக் ஆப்ஷனுக்கான என்ட்ரி பாயிண்ட் இதுவே. இருப்பினும் இனி 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கிடைக்காது.
கியா சோனெட் HTX+
சோனெட் -ன் மிட்-ஸ்பெக் HTX+ வேரியன்ட் இந்த கூடுதல் அம்சங்களைப் பெறுகிறது:
வெளிப்புறம் |
உட்புறம் |
கம்ஃபோர்ட் மற்றும் வசதி |
இன்ஃபோடெயின்மென்ட் |
பாதுகாப்பு |
|
|
|
|
கியா சோனெட்டின் HTX+ வேரியன்ட் பெரும்பாலான பிரீமியம் வசதி மற்றும் வசதி அம்சங்களை கொண்டிருக்கின்றது. இருப்பினும், பெரிய டச் ஸ்கிரீனுடன் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் ஒருங்கிணைப்பு வசதி இதில் கிடைக்காது. புதிய 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே ஆனது ஃபேஸ்லிஃப்ட்டுக்கு பிறகு இதில் கிடைத்துள்ள பெரிய மாற்றம்.
மேலும், இந்த வேரியன்ட்டில் எந்த ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடனும் கிடைக்காது.
கியா சோனெட் GTX+
சோனெட்டின் GTX+ வேரியன்ட் உடன், இந்த கூடுதல் அம்சங்களை பெறுவீர்கள்:
வெளிப்புறம் |
உட்புறம் |
கம்ஃபோர்ட் மற்றும் வசதி |
இன்ஃபோடெயின்மென்ட் |
பாதுகாப்பு |
|
|
|
கியா சோனெட்டின் GT லைன் வேரியன்ட் வித்தியாசமான பாணியில் 16-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் கேபினில் சிறிய மாற்றங்களை வழங்குகிறது. ஆனால் 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 1 ADAS அம்சங்களின் தொகுப்புடன் பாதுகாப்பில் பெரிய மாற்றத்தை கொண்டு வருகின்றன. GTX+ வேரியன்ட் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுக்கான ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் மட்டுமே கிடைக்கிறது.
மேலும் படிக்க: இந்த 15 படங்களில் கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டின் GTX+ வேரியன்ட்டை பாருங்கள்
கியா சோனெட் X-லைன்
கடைசியாக, ஜிடி-லைன் மீது X-லைன் வேரியன்ட்டில் கிடைக்கும் வசதிகள்:
வெளிப்புறம் |
உட்புறம் |
கம்ஃபோர்ட் மற்றும் வசதி |
இன்ஃபோடெயின்மென்ட் |
பாதுகாப்பு |
|
|
|
2024 கியா சோனெட்டின் டாப்-ஸ்பெக் எக்ஸ்-லைன் வேரியன்ட் முக்கியமாக ஜிடி-லைனை விட ஒப்பனை மாற்றங்களையே பெறுகிறது. இதில் வித்தியாசமான வெளிப்புற நிறம், பச்சை நிற இருக்கைகள் மற்றும் ஒட்டுமொத்த ஸ்போர்ட்டியர் தோற்றமும் அடங்கும். இது ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
எதிர்பார்க்கப்படும் விலை & வெளியீடு
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா சோனெட் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை சுமார் 8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகலாம். டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, மாருதி பிரெஸ்ஸா மற்றும் மஹிந்திரா XUV300 ஆகிய கார்களுடன் இது போட்டியைத் தொடரும்
மேலும் படிக்க: சோனெட் ஆட்டோமெட்டிக்