2024 Kia Sonet: வேரியன்ட் வாரியான இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களின் விவரம் இங்கே
published on டிசம்பர் 15, 2023 11:38 pm by rohit for க்யா சோனெட்
- 85 Views
- ஒரு கருத்தை எழுதுக
2024 சோனெட் டீசல் மேனுவல் ஆப்ஷன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் iMT ஆப்ஷன் தக்க வைக்கப்பட்டுள்ளது.
-
ஃபேஸ்லிஃப்டட் Kia Sonet காரின் விவரங்கள் அதன் சந்தை வெளியீட்டுக்கு முன்னர் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளன.
-
கியா ஏழு வேரியன்ட்களில் புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி -யை வழங்கும்.
-
டீசல் இன்ஜின் இப்போது மூன்று டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பெறுகிறது: MT, iMT மற்றும் AT.
-
டாப்-ஸ்பெக் வேரியன்ட்கள் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுக்கான ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் மட்டுமே வழங்கப்படும்.
-
கூடுதல் அம்சங்களில் 360 டிகிரி கேமரா, பவர்டு டிரைவர் சீட் மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.
-
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படலாம்; 8 லட்சத்தில் இருந்து விலை தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் முன்பதிவுகள் டிசம்பர் 20 முதல் திறக்கப்படும். விலையை தவிர, வேரியன்ட் வாரியான இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் உட்பட அனைத்து விவரங்களையும் கியா அறிவித்துள்ளது. வழங்கப்படும் அனைத்து பவர்டிரெய்ன் காம்போக்களையும் பார்ப்போம்.
வேரியன்ட் வாரியான தேர்வு
வேரியன்ட் |
HTE |
HTK |
HTK+ |
HTX |
HTX+ |
GTX+ |
X-Line |
1.2 லிட்டர் பெட்ரோல் 5MT |
✅ |
✅ |
✅ |
– |
– |
– |
– |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் 6iMT |
– |
– |
✅ |
✅ |
✅ |
– |
– |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் 7DCT |
– |
– |
– |
✅ |
– |
✅ |
✅ |
1.5 லிட்டர் டீசல் 6MT |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
– |
– |
1.5 லிட்டர் டீசல் 6iMT |
– |
– |
– |
✅ |
✅ |
– |
– |
1.5 லிட்டர் டீசல் 6AT |
– |
– |
– |
✅ |
– |
✅ |
✅ |
அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி, கியா அனைத்து டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் அனைத்து வேரியன்ட்களையும் வழங்கவில்லை. ஹையர்-ஸ்பெக் HTX வேரியன்ட் அதிக எண்ணிக்கையிலான பவர்டிரெய்ன்களுடன் வருகிறது. இதற்கிடையில், டீசல்-மேனுவல் காம்போ அதிக எண்ணிக்கையிலான வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது.
பவர்டிரெய்ன்களின் விவரங்கள்
கியா சோனெட் இப்போதுமூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது மற்றும் புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி -யை ஐந்து டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் பெறலாம். அதைப்பற்றிய ஒரு பார்வை இங்கே:
-
1.2-லிட்டர் பெட்ரோல் (83 PS/115 Nm): 5-ஸ்பீடு MT
-
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் (120 PS/172 Nm): 6-ஸ்பீடு iMT, 7-ஸ்பீடு DCT
-
1.5-லிட்டர் டீசல் (116 PS/250 Nm): 6-ஸ்பீடு MT (புதியது), 6-ஸ்பீடு iMT, 6-ஸ்பீடு AT
டீசல்-மேனுவல் காம்போ 2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில் கியாவின் முழு தயாரிப்பு வரிசையிலும் நீக்கப்பட்ட பிறகு மீண்டும் திரும்ப வந்துள்ளது.
மேலும் படிக்க: 2023 இல் இந்தியாவில் கியாவில் அறிமுகமான அனைத்து புதிய அம்சங்கள்
உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு சிறப்பம்சங்கள்
2024 சோனெட் ஆனது 10.25-இன்ச் டிஸ்ப்ளே (இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் ஒவ்வொன்றிற்கும்), 4-வே பவர்டு டிரைவர் இருக்கை, 70+ கனெக்டட் கார் டெக்னாலஜி அம்சங்கள், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், சன்ரூஃப் மற்றும் உள்ளமைக்கப்பட்ட ஏர் பியூரிஃபையர் ஆகியவற்றுடன் வருகிறது.
பாதுகாப்புக்காக10 மேம்பட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்கள் (ADAS), ஆறு காற்றுப்பைகள் (இப்போது நிலையானது), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), 360-டிகிரி கேமரா மற்றும் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளன.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் 2024 -ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இதன் ஆரம்ப விலை ரூ. 8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கலாம். அப்டேட் செய்யப்பட்ட சப்-4m எஸ்யூவி ஹூண்டாய் வென்யூ, மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV300, டாடா நெக்ஸான், நிஸான் மேக்னைட், மற்றும் ரெனால்ட் கைகர் மற்றும் மாருதி ஃப்ரான்க்ஸ் கிராஸ்ஓவர் எஸ்யூவி அகியவற்றுடன் போட்டியிடுகின்றது
மேலும் படிக்க: கியா சோனெட் ஆட்டோமெட்டிக்