Kia Sonet காரின் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி 4 லட்சம் யூனிட்களை தாண்டியுள்ளது, சன்ரூஃப் பொருத்தப்பட் ட வேரியன்ட்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன
published on ஏப்ரல் 29, 2024 01:47 pm by rohit for க்யா சோனெட்
- 36 Views
- ஒரு கருத்தை எழுதுக
63 சதவீத வாடிக்கையாளர்கள் சப்-4எம் எஸ்யூவி -யின் பெட்ரோல் பவர்டிரெய்னை தேர்ந்தெடுத்ததாக கியா தெரிவித்துள்ளது.
-
கியா நிறுவனம் கடந்த 2020 -ம் ஆண்டில் சோனெட் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. மற்றும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காருக்கு ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் கிடைத்தது.
-
தற்போது வரை இந்தியாவில் மட்டும் 3.17 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 86,000 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
-
எஸ்யூவியின் 7-ஸ்பீடு DCT (டர்போ-பெட்ரோல்) மற்றும் 6-ஸ்பீடு AT (டீசல்) ஆப்ஷன்கள் ஒட்டுமொத்த விற்பனையில் 28 சதவீதத்திற்கு பங்களித்துள்ளன.
-
சோனெட் கார் வாடிக்கையாளர்களில் 23 சதவீதம் பேர் iMT கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்ட்டை தேர்வு செய்தனர்.
-
தற்போதைய சோனெட்டின் சிறப்பம்சங்களில் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள், 6 ஏர்பேக்குகள் மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.
-
விலை ரூ.7.99 லட்சம் முதல் ரூ.15.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கின்றது.
2020 செப்டம்பரில் இந்தியாவில் கியா சோனெட் கார் அறிமுகமானது. பரபரப்பாகப் போட்டியிட்ட சப்-4m எஸ்யூவி பிரிவில் அதன் என்ட்ரி இருந்தது. சோனெட் இப்போது நான்கு லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது, இதில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செய்யப்பட்ட ஏற்றுமதியும் அடங்கும்.
கியா சோனெட் வாடிக்கையாளர்களின் விருப்பங்கள்
விற்பனை செய்யப்பட்ட நான்கு லட்சம் யூனிட்களில் இந்தியாவில் மட்டும் 3.17 லட்சம் யூனிட்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் 86,000 யூனிட்கள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் எஸ்யூவி விற்பனைக்கு வந்ததில் இருந்து இருந்து, 63 சதவீத வாடிக்கையாளர்கள் சன்ரூஃப் பொருத்தப்பட்ட வேரியன்ட்டை தேர்ந்தெடுத்துள்ளதாக கியா தெரிவித்துள்ளது. அதே அளவுக்கான வாடிக்கையாளர்களில் சோனெட்டின் பெட்ரோல் வேரியன்ட்களை விரும்பி வாங்கியுள்ளனர்.
டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் என்று வரும்போது 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்) மற்றும் 6-ஸ்பீடு AT - ஆப்ஷன் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் வழங்கப்படுகிறது - விற்பனையில் 28 சதவிகிதம் பங்களித்தது. மறுபுறம் iMT (கிளட்ச் பெடல் இல்லாத மேனுவல்) வேரியன்ட்டை 23 சதவீத வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்தனர்.
சோனெட் காரில் என்ன வசதிகள் இருக்கின்றன ?
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா சோனெட் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷன்), வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகளுடன் வருகிறது. இது ஆட்டோ ஏசி, 4-வே பவர்-அட்ஜஸ்டபிள் டிரைவர் இருக்கை மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி ஆகிய வசதிகளுடன் வருகின்றது.
6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்றவற்றுடன் இந்த கார் வருகின்றது .
மேலும் படிக்க: குளோபல் NCAP சோதனையில் மீண்டும் 3 நட்சத்திரங்களை பெற்றது Kia Carens
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
இந்த பிரிவில் நிறைய இன்ஜின்-கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் இந்த கார் கிடைக்கிறது:
விவரங்கள் |
1.2-லிட்டர் N/A பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
83 PS |
120 PS |
116 பி.எஸ் |
டார்க் |
115 Nm |
172 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT |
6-ஸ்பீடு iMT, 7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு iMT, 6-ஸ்பீடு AT |
கிளைம் செய்யப்படும் மைலேஜ் |
18.83 கிமீ/லி |
18.70 கிமீ/லி, 19.20 கிமீ/லி |
22.30 கிமீ/லி (MT), 18.60 கிமீ/லி (AT) |
விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா சோனெட்டின் விலை ரூ. 7.99 லட்சத்தில் இருந்து ரூ. 15.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை உள்ளது. இது மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற பிரபலமான போட்டியாளர்களை கொண்ட பிரிவில் விற்பனையில் உள்ளது. சோனெட் விரைவில் வெளியாகவுள்ள மஹிந்திரா XUV 3XO மற்றும் ஸ்கோடா சப்-4எம் எஸ்யூவி ஆகியவற்றுடனும் போட்டியிடும். மேலும் இது போன்ற சப்-4m கிராஸ் ஓவர்களான மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் போன்றவற்றுக்கு மாற்றாகவும் இருக்கின்றது
மேலும் படிக்க: சோனெட் டீசல்