Kia Sonet Gravity எடிஷன் விவரங்களை 8 படங்களில் பார்க்கலாம்
published on செப் 19, 2024 08:31 pm by anonymous for க்யா சோனெட்
- 52 Views
- ஒரு கருத்தை எழுதுக
கியா சோனெட் லைன் அப்பில் புதிய எடிஷன் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. இது மிட்-ஸ்பெக் HTK+ வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது. இது அதன் டோனர் பதிப்பை விட அதிக விஷயங்களை பெறுகிறது. இப்போது சோனெட் கிராவிட்டி பதிப்பின் படங்களை பெற்றுள்ளோம். 8 ரியல் வேர்ல்டு படங்களில் இது எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்:
வெளிப்புறம்
முன்பக்கத்திலிருந்து தொடங்கி கியா சோனெட் கிராவிட்டி எடிஷன் வழக்கமான வேரியன்ட்களை போலவே தெரிகிறது. இது LED DRL -களுடன் LED ஹெட்லைட்கள் மற்றும் டோனர் வேரியன்ட்டின் ஃபாக் லைட்களை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது.
பக்கவாட்டிற்கு நகரும் போது கியா சோனெட் கிராவிட்டி எடிஷன் முன்பக்க டோர்களில் 'கிராவிட்டி' பேட்ஜை பெறுகிறது. இது வழக்கமான வேரியன்ட் வரிசையிலிருந்து புதிய பதிப்பை வேறுபடுத்துவதை எளிதாக்குகிறது.
பின்புறத்தில் சோனெட் கிராவிட்டி பதிப்பு ஒரு ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றத்தை கொடுக்கிறது. எஸ்யூவி -யின் பின்புறத்தில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இன்ட்டீரியர்
கியா சோனெட் கிராவிட்டி எடிஷன் இன்ட்டீரியர் ஆனது புளூ மற்றும் பிளாக் கலரில் உள்ளது. இது சீட்கள் மற்றும் டோர் பேடுகளுக்கு புளூ கலர் அப்ஹோல்ஸ்டரியை பெறுகிறது. இது ஒட்டுமொத்தமாக பிரீமியம் உணர்வை கொடுக்கிறது.
கேபினுக்குள் மற்றொரு முக்கிய வசதியாக டூயல் கேமரா டேஷ்கேம் உள்ளது. இது காரை ஓட்டும் போது மற்றும் பார்க்கிங் செய்யும் போது கூடுதல் வசதியாகும். இது தவிர கியா சோனெட் கிராவிட்டி எடிஷன் வயர்லெஸ் போன் சார்ஜரையும் பெறுகிறது.
பின்புற முனையில் கூடுதல் ஆர்ம்ரெஸ்ட்டுடன் இருக்கைகளில் 60:40 ஸ்பிளிட் வசதியும் உள்ளது. ஹெட்ரெஸ்ட்களும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடியவை. மேனுவல் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்களில் நீங்கள் இன்னும் சன்ரூஃப் பெறவில்லை என்றாலும் அது iMT வேரியன்ட்டில் கிடைக்கும்.
வசதிகள்
மேலே குறிப்பிட்டுள்ள புதிய வசதிகளைத் தவிர கியா சோனெட் கிராவிட்டி எடிஷன் அதன் டோனர் வேரியன்ட்டின் அதே இன்ஸ்ட்ரூமென்ட்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதில் 8-இன்ச் டச் ஸ்கிரீன், ஆட்டோ ஏசி, புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் கீலெஸ் என்ட்ரி ஆகியவை உள்ளன. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், ரியர்வியூ கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள், டிபிஎம்எஸ் மற்றும் பின்புற டிஃபோகர் ஆகியவை உள்ளன.
பவர்டிரெய்ன்
கியா சோனெட் கிராவிட்டி எடிஷனில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (83 பிஎஸ்/115 என்எம்) 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் (116 பிஎஸ்/250 என்எம்) 6-ஸ்பீடு மேனுவல் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றும் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (120 PS/172 Nm) 6-ஸ்பீடு iMT உடன் இணைக்கப்பட்டுள்ளது.
விலை & போட்டியாளர்கள்
கியா சோனெட் கிராவிட்டி எடிஷன் விலை ரூ. 10.49 லட்சத்தில் இருந்து ரூ. 11.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை உள்ளது. ஹூண்டாய் வென்யூ, மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV3XO மற்றும் ரெனால்ட் கைகர் போன்றவற்றுக்கு எதிராக இந்த கார் போட்டியிடுகிறது.
மேலும் படிக்க: கியா சோனெட் ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful