- + 7நிறங்கள்
- + 14படங்கள்
- வீடியோஸ்
மாருதி ஆல்டோ கே10
மாருதி ஆல்டோ கே10 இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 998 சிசி |
பவர் | 55.92 - 65.71 பிஹச்பி |
டார்சன் பீம் | 82.1 Nm - 89 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | மேனுவல் / ஆட்டோமெட்டிக் |
மைலேஜ் | 24.39 க்கு 24.9 கேஎம்பிஎல் |
எரிபொருள் | சிஎன்ஜி / பெட்ரோல் |
- ஏர் கன்டிஷனர்
- பவர் விண்டோஸ்
- central locking
- ப்ளூடூத் இணைப்பு
- கீலெஸ் என்ட்ரி
- touchscreen
- ஸ்டீயரிங் mounted controls
- android auto/apple carplay
- advanced internet பிட்டுறேஸ்
- முக்கிய விவரக்குறிப்புகள்
- டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்
ஆல்டோ கே10 சமீபகால மேம்பாடு
-
மார்ச் 06, 2025: மாருதி இந்த மாதத்தில் ஆல்டோ கே10 -க்கு ரூ.82,100 வரை தள்ளுபடி வழங்குகிறது.
-
மார்ச் 01, 2025: ஆல்டோ K10 ஆனது ஆறு ஏர்பேக்குகளுடன் ஸ்டாண்டர்டாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஆல்டோ கே10 எஸ்டிடி(பேஸ் மாடல்)998 சிசி, மேனுவல், பெட்ரோல், 24.39 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹4.23 லட்சம்* | ||
ஆல்டோ கே10 எல்எஸ்ஐ998 சிசி, மேனுவல், பெட்ரோல், 24.39 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹5 லட்சம்* | ||
மேல் விற்பனை ஆல்டோ கே10 விஎக்ஸ்ஐ998 சிசி, மேனுவல், பெட்ரோல், 24.39 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹5.30 லட்சம்* | ||
ஆல்டோ கே10 விஎக்ஸ்ஐ பிளஸ்998 சிசி, மேனுவல், ப ெட்ரோல், 24.39 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹5.59 லட்சம்* | ||
ஆல்டோ கே10 விஎக்ஸ்ஐ ஏடி998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 24.9 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹5.80 லட்சம்* | ||
மேல் விற்பனை ஆல்டோ கே10 எல்எக்ஐ எஸ்-சிஇன்ஜி998 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 33.85 கிமீ / கிலோ1 மாத காத்திருப்பு | ₹5.90 லட்சம்* | ||
ஆல்டோ கே10 வக்ஸி பிளஸ் அட்998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட் ரோல், 24.9 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹6.09 லட்சம்* | ||
ஆல்டோ கே10 டபிள்யூ/பி(டாப் மாடல்)998 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 33.85 கிமீ / கிலோ1 மாத காத்திருப்பு | ₹6.21 லட்சம்* |
மாருதி ஆல்டோ கே10 விமர்சனம்
Overview
மாருதி சுஸூகி ஆல்டோ K10 ஆனது அதிக சக்தி வாய்ந்த மோட்டாரைக் கொண்டிருப்பது மட்டுமின்றி, உண்மையில் ஒரு புத்தம் புதிய தயாரிப்பாகவும் இருக்கிறது. இது வேறு ஏதாவது நல்ல விஷயங்கள் இருக்கிறதா?.
ஆல்டோ என்ற பெயருக்கு அறிமுகம் தேவையில்லை. தொடர்ந்து பதினாறு ஆண்டுகளாக இது இந்திய சந்தையில் சிறந்த விற்பனையாகும் காராக இருந்து வருகிறது, இப்போது 2022 -ல், மாருதி சுஸூகி மிகவும் சக்திவாய்ந்த K10 வேரியன்ட்டுடன் வந்துள்ளது. நல்ல விஷயம் என்னவென்றால், அப்டேட்கள் இன்ஜினுக்கு மட்டும் கொடுக்கப்படவில்லை; முழுமையான காரும் புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விலை அடிப்படையில் மாருதி சுஸூகி ஆல்டோ K10 ஆல்டோ 800 ஐ விட சுமார் 60-70 ஆயிரம் விலை அதிகம். கேள்வி என்னவென்றால், எப்போதும் பிரபலமான 800 வேரியன்டுடன் ஒப்பிடும் போது இது சரியான அப்டேட்டை கொடுத்தது போல் தெரிகிறதா?.
வெளி அமைப்பு
புதிய ஆல்டோ K10 கண்ணுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கிறது. டியர்டிராப் வடிவ ஹெட்லேம்ப்கள் மற்றும் பெரிய, ஸ்மைலிங் பம்பர் ஆகியவை மகிழ்ச்சியை காட்டுகின்றன. பம்பர் மற்றும் கூர்மையான மடிப்புகள் சற்று ஆக்ரோஷத்தை சேர்க்கிறது. பின்புறத்திலும், பெரிய டெயில் லேம்ப்கள் மற்றும் கூர்மையாக வெட்டப்பட்ட பம்பர் ஆகியவை அழகாகவும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போதும், ஆல்டோ சமச்சீராகத் தெரிகிறது. பின்புறத்தில் இருந்து பார்க்கும்போது ஒரு நல்ல தோற்றதையே கொண்டுள்ளது. பக்கவாட்டில் பார்க்கும் போது ஆல்டோ இப்போது 800 -ஐ விட பெரியதாகத் தெரிகிறது. இது 85 மிமீ நீளம், 55 மிமீ உயரம் மற்றும் வீல்பேஸ் 20 மிமீ அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, ஆல்டோ K10 800 உடன் ஒப்பிடும் போது அதிக முன்னிலையில் உள்ளது. வலுவான தோள்பட்டை வரிசையும் அதை நவீனமாகவும், 13-இன்ச் சக்கரங்கள் ஒட்டுமொத்த அளவு அதிகரித்திருந்தாலு சரியான அளவிலேயே இருக்கின்றது.
உங்கள் ஆல்டோ K10 பளிச்சென்று தோற்றமளிக்க விரும்பினால், நீங்கள் கிளின்டோ ஆப்ஷன் பேக்கிற்கு செல்லலாம், இது வெளிப்புறத்தில் நிறைய குரோம் பிட்களை சேர்க்கிறது மற்றும் நீங்கள் ஒரு ஸ்போர்ட்டி தோற்றத்தை விரும்பினால், மாருதி சுஸூகி இம்பேக்டோ பேக்கை வழங்குகிறது, இது எக்ஸ்டீரியரில் வித்தியாசமான ஆரஞ்சு நிற ஆக்சென்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
உள்ளமைப்பு
வெளிப்புறத்தைப் போலவே உட்புறமும் அழகாக இருக்கிறது. டேஷ்போர்டின் வடிவமைப்பு தெளிவாகவும் இருக்கிறது, நவீனமாகத் தோற்றமளிக்கும் V-வடிவ சென்ட்ரல் கன்சோலும் சற்று அதிநவீனத்தை சேர்க்கிறது. அனைத்து கன்ட்ரோல்கள் மற்றும் சுவிட்சுகளை எளிதாக பயன்படுத்தும் வகையில் உள்ளன மற்றும் எரகனமிக்ஸ் ரீதியாக சிறப்பாக இருக்கின்றன., இது ஆல்டோ K10 இன் கேபினை பயன்படுத்த மிகவும் எளிதானதாக ஆக்குகிறது.
தரத்தைப் பொறுத்தவரையிலும் குறை கூறுவதற்கு பெரிதாக எதுவும் இல்லை. பிளாஸ்டிக் நல்ல தரமாக உள்ளது மற்றும் ஃபிட் மற்றும் ஃபினிஷ் சீரானது. ஒரே சீரற்ற மேற்பரப்பைக் கொடுக்கும் இடது முன் ஏர்பேக்கிற்கான கவர் மட்டுமே சரியாக பொருந்தாத பிளாஸ்டிக் ஆகும்.
ஆல்டோ K10 காரின் முன் இருக்கைகள் போதுமான அகலம் கொண்டவை மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு கூட வசதியாக இருக்கும். இருக்கையின் விளிம்பு சற்று தட்டையாக இருந்தாலும், குறிப்பாக காட் பிரிவுகளில் பக்கவாட்டு ஆதரவு போதுமானதாக இருக்கிறது. மற்றொரு சிக்கல் டிரைவருக்கு அட்ஜஸ்ட்மென்ட் இல்லாதது. நீங்கள் இருக்கை உயரம் சரிசெய்தல் அல்லது சரிசெய்யக்கூடிய ஸ்டீயரிங் -கை பெறவில்லை. நீங்கள் சுமார் 5 அடி 6 இருந்தால், உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது, ஆனால் நீங்கள் உயரமாக இருந்தால், ஸ்டீயரிங் உங்கள் முழங்கால்களுக்கு மிக அருகில் இருக்கும்.
ஆனால் மிகப்பெரிய ஆச்சரியம் பின் இருக்கை. முழங்கால் அறை வியக்கத்தக்க வகையில் நன்றாக உள்ளது மற்றும் ஆறு அடிகள் உடையவர்கள் கூட இங்கு வசதியாக இருக்கலாம். போதுமான ஹெட்ரூம் உள்ளது மற்றும் பெஞ்ச் நல்ல தொடை ஆதரவையும் வழங்குகிறது. நிலையான ஹெட்ரெஸ்ட்கள் ஏமாற்றமளிக்கின்றன. அவை குறுகியவை மற்றும் பின்புற தாக்கம் ஏற்பட்டால் உங்களுக்கு பாதுகாப்பை வழங்காது.
சேமிப்பக இடங்களைப் பொறுத்தவரை, முன் பயணிகள் நன்றாக அவை கிடைக்கின்றன. பெரிய முன் கதவு பாக்கெட்டுகள், உங்கள் ஃபோனை வைக்க ஒரு இடம், சராசரி அளவிலான க்ளோவ் பாக்ஸ் மற்றும் இரண்டு கப் ஹோல்டர்கள் கிடைக்கும். மறுபுறம் பின்புற பயணிகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை. கதவு பாக்கெட்டுகள், கப் ஹோல்டர்கள் அல்லது இருக்கை பின் பாக்கெட்டுகள் கூட இல்லை.
அம்சங்கள்


டாப் VXi பிளஸ் வேரியண்டில் உள்ள Alto K10 ஆனது முன் பவர் ஜன்னல்கள், கீலெஸ் என்ட்ரி, ஏர் கண்டிஷனிங் சிஸ்டம், பவர் ஸ்டீயரிங், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ மற்றும் டெலிபோன் கண்ட்ரோல்கள் மற்றும் நான்கு ஸ்பீக்கர்களுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் கிடைக்கும். பெரிய ஐகான்களுடன் இன்ஃபோடெயின்மென்ட்டைப பயன்படுத்த எளிதாக இருக்கிறது மற்றும் அதன் வேகம் மிகச்சிறப்பாக உணர்கிறது. டிரிப் தகவலை கொண்ட டிஜிட்டல் டிரைவரின் இன்ஸ்ட்ரூமென்டையும் நீங்கள் பெறுவீர்கள். எதிர்மறையாக ஒரு டேகோமீட்டர் இதில் கொடுக்கப்படவில்லை.
மிரர் அட்ஜஸ்ட், ரியர் பவர் ஜன்னல்கள், ரிவர்சிங் கேமரா, இருக்கை உயரம் அட்ஜஸ்ட்மென்ட் மற்றும் ஸ்டீயரிங் ஹெயிட் அட்ஜஸ்ட்மென்ட் ஆகியவையும் இந்த காரில் இல்லை.
பாதுகாப்பு
பாதுகாப்பிற்கு வரும்போது ஆல்டோ டூயல் ஏர்பேக்குகள், EBD உடன் ABS மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்களுடன் வருகிறது.
பூட் ஸ்பேஸ்
ஆல்டோ 800 இன் 177 லிட்டரை விட 214 லிட்டரில் உள்ள பூட் கணிசமான அளவு பெரியது. பூட் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் ஏற்றும் உதடு சற்று அதிகமாக இருப ்பதால் பெரிய பொருட்களை ஏற்றுவது சற்று கடினமாக உள்ளது. கூடுதலாக தேவைப்பட்டால் பின் இருக்கையை மடித்து கொள்ள முடியும் இது அதிக சேமிப்பிடத்தை அளிக்கிறது.
செயல்பாடு
ஆல்டோ K10 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டூயல்ஜெட் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, இது 66.62 PS ஆற்றலையும் 89 Nm டார்க்கை உருவாக்குகிறது. இதே மோட்டார் தான் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட செலிரியோவிலும் இருக்கிறது.
ஆனால் ஆல்டோ K10 செலிரியோவை விட சிறியதாகவும், இலகுவாகவும் இருப்பதால், ஓட்டுவதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. இது நல்ல லோ எண்ட் டார்க்கை கொண்டுள்ளது மற்றும் ஐடில் இன்ஜின் வேகத்திலும் மோட்டார் சுத்தமாக இழுவை திறனுடன் இருக்கிறது, இதன் விளைவாக குறைந்த வேகத்தில் K10 கியர் ஷிப்ட்கள் குறைந்தபட்சமாக வைக்கப்படுவதால், ஓட்டுவதற்கு மன அழுத்தம் இல்லாமல் இருக்கும். மேனுவல் டிரான்ஸ்மிஷனும் மென்மையாய் இருக்கிறது மற்றும் கிளட்ச் லேசாக இருக்கிறது. மறுபுறம் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் AMT கியர்பாக்ஸுக்கு வியக்கத்தக்க வகையில் மென்மையாக இருக்கிறது. லைட் த்ரோட்டில் அப்ஷிஃப்ட்கள் குறைந்த ஷிப்ட் ஷாக் உடன் போதுமான விரைவானவை மற்றும் விரைவான டவுன்ஷிஃப்ட்கள் கூட விரைவாகவும் நம்பிக்கையுடனும் செயல்படுத்தப்படும். இது கடினமான ஆக்சலரேஷனின் கீழ் மட்டுமே, அப்ஷிஃப்ட்கள் சற்று மெதுவாக உணர வைக்கின்றன, ஆனால் அதைத் தவிர வேறு எதுவும் குறை கூற வேண்டியதில்லை. பவர் டெலிவரி ரெவ் வரம்பு முழுவதும் வலுவாக உள்ளது, இது K10 -ஐ டிரைவிங் செய்வதை ஃபன் -ஆக மாற்றுகிறது. நெடுஞ்சாலை ஓட்டங்களுக்கு இதிலுள்ள செயல்திறன் போதுமானதாக உள்ளது, மேலும் இது ஒரு அப அம்சங்களை கொண்ட தயாரிப்பாக அமைகிறது.
நாங்கள் புகார் செய்ய வேண்டியிருந்தால், அது மோட்டாரின் ரீஃபைன்மென்ட் ஆகும். இது சுமார் 3000rpm வரை அமைதியாக இருக்கும், ஆனால் அதற்கு மேல் சத்தமாக இருக்கும் மற்றும் கேபினிலும் சில அதிர்வுகளை நீங்கள் உணரலாம்.
ரிடே அண்ட் ஹண்ட்லிங்
நீங்கள் முதல் முறையாக கார் வாங்குபவராக இருந்தால், எளிதாக ஓட்டும் விஷயத்தில் Alto K10 ஐ விட சிறந்த கார்கள் அதிகம் இல்லை. ஆல்ட்டோ உண்மையில் ட்ராஃபிக்கில் ஓட்டுவது ஃபன் - னாக உள்ளது - இது சிறிய இடம் இருந்தால் கூட அதில் பொருந்துகிறது, சாலையின் பார்வை சிறப்பாக உள்ளது மற்றும் அதை நிறுத்துவதற்கும் எளிதானது. சமன்பாட்டில் லைட் ஸ்டீயரிங், ஸ்லிக் கியர்பாக்ஸ் மற்றும் ரெஸ்பான்ஸிவ் இன்ஜின் ஆகியவற்றால், ஆல்டோ K10 ஒரு சிறந்த நகர டிரைவிங்கை கொடுக்கிறது. குறைந்த வேகத்தில் வாகனம் ஓட்டும்போது உங்களை எரிச்சலூட்டுவது ஸ்டீயரிங் அதுவாகவே மையத்துக்கு திரும்புவதில்லை. ஆகவே குறுகலான திருப்பங்களை எடுக்கும்போது இது சற்று கூடுதலான முயற்சி தேவைப்படுகிது.
ஆல்டோ K10 -ன் சவாரி தரமும் உங்களை ஆச்சரியப்படுத்துகிறது. இது மிகக் கூர்மையான குழிகளை கூட எளிதில் சமாளித்து விடுகிறது. சஸ்பென்ஷனில் நல்ல அளவு பயணம் உள்ளது மேலும் இது உங்களுக்கு வசதியான பயணத்தை வழங்க அமைதியாக வேலை செய்கிறது. சிறிது டயர் மற்றும் சாலை இரைச்சலுக்கு தவிர்க்கும் ஆல்டோ கேபின் ஒரு இனிமையான இடம். ஆல்டோ K10 அலைச்சலுக்கு மேல் கூட நல்ல அமைதியைக் காட்டுகிறது, நெடுஞ்சாலைப் டிரைவிங்கும் நன்றாகவே உள்ளது. ஒரு குறிப்பிட்ட பாயின்டுக்கு பிறகு சவாரி சிறிது சமதளமாக இருக்கும், ஆனால் ஒருபோதும் சங்கடமானதாக உணர வைக்காது.
வெர்டிக்ட்
ஒட்டுமொத்தமாக, புதிய மாருதி சுஸூகி K10 உண்மையில் ஈர்க்கிறது ஆனால் சில குறைபாடுகளும்இருக்கின்றன. இன்ஜின் அதிக ரெவ்களில் சத்தம் எழுப்புகிறது, பின்புற இருக்கை பயணிகளுக்கான சேமிப்பு இடங்கள் முற்றிலும் இல்லை மற்றும் சில முக்கிய வசதி அம்சங்களையும் காணவில்லை. இது தவிர, ஆல்டோ K10-வில் குறை செய்வது கடினம். இது உள்ளே விரும்பத்தக்கதாக இருக்கிறது, இன்ஜின் சிறந்த டிரைவிபிலிட்டியுடன் சக்தி வாய்ந்தது, நான்கு நபர்களுக்கு அதிக இடவசதி உள்ளது, சவாரி தரம் வசதியானது மற்றும் ஓட்டுவது மிகவும் எளிதானது. புதிய ஆல்டோ K10 ஆனது 800 -க்கு ஒரு சரியான அப்டேட்டைகொடுத்தது போல உணர வைக்கவில்லை, ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு சிறந்த தயாரிப்பாக ஜொலிக்கிறது.
மாருதி ஆல்டோ கே10 இன் சாதகம் & பாதகங்கள்
நாம் விரும்பும் விஷயங்கள்
- நான்கு பெரியவர்களுக்கு வசதியானதாக இருக்கிறது
- பெப்பியான செயல்திறன் மற்றும் நல்ல சிக்கனம்
- மென்மையான AGS டிரான்ஸ்மிஷன்
நாம் விரும்பாத விஷயங்கள்
- பின்பகுதியில் மூன்று பேருக்கு ஏற்றபடி அகலமாக இல்லை
- சில விடுபட்ட கம்ஃபோர்ட் அம்சங்கள்
- பின்பக்க பயணிகளுக் கு குறைவான ஸ்டோரேஜ்
மாருதி ஆல்டோ கே10 comparison with similar cars
![]() Rs.4.23 - 6.21 லட்சம்* | ![]() ![]() Rs.4.70 - 6.45 லட்சம்* | ![]() Rs.5.64 - 7.37 லட்சம்* | ![]() Rs.4.26 - 6.12 லட்சம்* | ![]() Rs.5.64 - 7.47 லட்சம்* | ![]() Rs.5.85 - 8.12 லட்சம்* | ![]() Rs.6 - 10.32 லட்சம்* | ![]() Rs.6.70 - 9.92 லட்சம்* |
Rating419 மதிப்பீடுகள் | Rating883 மதிப்பீடுகள் | Rating345 மதிப்பீடுகள் | Rating454 மதிப்பீடுகள் | Rating449 மதிப்பீடுகள் | Rating634 மதிப்பீடுகள் | Rating1.4K மதிப்பீடுகள் | Rating608 மதிப்பீடுகள் |
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் |
Engine998 cc | Engine999 cc | Engine998 cc | Engine998 cc | Engine998 cc - 1197 cc | Engine1197 cc | Engine1199 cc | Engine1197 cc |
Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி |
Power55.92 - 65.71 பிஹச்பி | Power67.06 பிஹச்பி | Power55.92 - 65.71 பிஹச்பி | Power55.92 - 65.71 பிஹச்பி | Power55.92 - 88.5 பிஹச்பி | Power81.8 பிஹச்பி | Power72 - 87 பிஹச்பி | Power76.43 - 88.5 பிஹச்பி |
Mileage24.39 க்கு 24.9 கேஎம்பிஎல் | Mileage21.46 க்கு 22.3 கேஎம்பிஎல் | Mileage24.97 க்கு 26.68 கேஎம்பிஎல் | Mileage24.12 க்கு 25.3 கேஎம்பிஎல் | Mileage23.56 க்கு 25.19 கேஎம்பிஎல் | Mileage20.89 கேஎம்பிஎல் | Mileage18.8 க்கு 20.09 கேஎம்பிஎல் | Mileage22.35 க்கு 22.94 கேஎம்பிஎல் |
Boot Space214 Litres | Boot Space279 Litres | Boot Space- | Boot Space240 Litres | Boot Space341 Litres | Boot Space260 Litres | Boot Space366 Litres | Boot Space318 Litres |
Airbags6 | Airbags2 | Airbags6 | Airbags2 | Airbags6 | Airbags2 | Airbags2 | Airbags2-6 |
Currently Viewing | சலுகைகள்ஐ காண்க | ஆல்டோ கே10 vs செலரியோ | ஆல்டோ கே10 vs எஸ்-பிரஸ்ஸோ | ஆல்டோ கே10 vs வாகன் ஆர் |