மாருதி அரீனா கார்களுக்கு இந்த ஜூலை மாதத்துக்கான தள்ளுபடிகள், பகுதி 2 – ரூ. 63,500 வரை ஆஃபர்கள் கிடைக்கும்
published on ஜூலை 19, 2024 04:18 pm by yashika for மாருதி ஆல்டோ கே10
- 73 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாற்றியமைக்கப்பட்ட ஆஃபர்கள் 2024 ஜூலை மாத இறுதி வரை செல்லுபடியாகும்.
-
மாருதி வேகன் R அதிகபட்சமாக ரூ.63,500 தள்ளுபடியை வழங்குகிறது.
-
மாருதி ஆல்டோ K10 காரை ரூ.63,100 வரை ஆஃபர்களுடன் வழங்குகிறது.
-
வாடிக்கையாளர்கள் 7 வருடங்களுக்கும் குறைவான காரை எக்ஸ்சேஞ்ச் -க்காக கொடுத்தால் வேகன் R மற்றும் பழைய ஸ்விஃப்ட் ஆகியவற்றில் கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸை பெறலாம்.
-
புதிய ஸ்விஃப்ட் மொத்தம் ரூ.17,100 வரை தள்ளுபடியுடன் கிடைக்கிறது.
எர்டிகாவை தவிர்த்து அதன் அரீனா சீரிஸ் கார்களுகான திருத்தப்பட்ட சலுகைகளை இப்போது மாருதி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவை 2024 ஜூலை மாத இறுதி வரை செல்லுபடியாகும். முன்பு போலவே புதிய சலுகைகளில் பணத் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் போன்ற பல்வேறு பலன்கள் கிடைக்கும். மாடல் வாரியாக அப்டேட் செய்யப்பட்ட இந்த ஆஃபர்கள் ஜூலை 31 வரை கிடைக்கும்:
ஆல்டோ K10
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.45,000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15,000 வரை |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.3,100 வரை |
மொத்த பலன்கள் |
ரூ.63,100 வரை |
-
மேலே உள்ள தள்ளுபடிகள் ஹேட்ச்பேக்கின் ஃபுல்லி லோடட் Vxi+ AMT வேரியன்ட்டில் கிடைக்கும்.
-
நீங்கள் Vxi AMT வேரியன்ட்டை தேர்ந்தெடுத்தால் பணத் தள்ளுபடி ரூ. 2,000 குறையும். மற்ற சலுகைகள் மாறாமல் இருக்கும்.
-
மேனுவல் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு ரூ.40,000 மற்றும் ரூ.30,000 வரை குறைந்த ரொக்க தள்ளுபடி கிடைக்கும்.
-
அனைத்து வேரியன்ட்களும் ஒரே மாதிரியான எக்ஸ்சேஞ்ச் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகளை பெறுகின்றன.
-
மாருதி ஆல்டோ K10 காரின் விலை ரூ.3.99 லட்சம் முதல் ரூ.5.96 லட்சம் வரை இருக்கிறது.
எஸ்-பிரஸ்ஸோ
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.40,000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15,000 வரை |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.3,100 வரை |
மொத்த பலன்கள் |
ரூ.58,100 வரை |
-
அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் மாருதி எஸ்-பிரஸ்ஸோ -வின் AMT வேரியன்ட்களுக்கானது
-
மேனுவல் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு தலா ரூ.35,000 வரை குறைந்தபட்ச ரொக்க தள்ளுபடி கிடைக்கும்.
-
நீங்கள் லோவர்-ஸ்பெக் Std மற்றும் Lxi வேரியன்ட்களை தேர்ந்தெடுத்தால் பணத் தள்ளுபடி ரூ. 33,000 ஆகக் குறையும். மற்ற தள்ளுபடிகள் அப்படியே கிடைக்கும்.
-
மாருதி ஹேட்ச்பேக் காரின் விலை ரூ.4.26 லட்சம் முதல் ரூ.6.12 லட்சம் வரை இருக்கிறது.
வேகன் R
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.40,000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15,000 வரை |
கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் (< 7 ஆண்டுகள்) |
ரூ.5,000 வரை |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.3,500 வரை |
மொத்த பலன்கள் |
ரூ.63,500 வரை |
-
மாருதி வேகன் R இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் AMT வேரியன்ட்களில் இந்த தள்ளுபடிகளை பெறுகிறது. மேனுவல் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு ரூ.35,000 மற்றும் ரூ.30,000 வரை குறைந்த பணப் பலன்கள் கிடைக்கும்.
-
அனைத்து வேரியன்ட்களும் ஒரே மாதிரியான எக்ஸ்சேஞ்ச் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகளைப் பெறுகின்றன.
-
7 வருடங்களுக்கும் குறைவான பழைய கார்களை மாற்றுவதற்கு உங்களிடம் இருந்தால், மாருதி ரூ. 5,000 வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸை வழங்குகிறது.
-
மாருதி வேகன் R காரின் விலை ரூ.5.54 லட்சத்தில் இருந்து ரூ.7.37 லட்சமாக உள்ளது.
செலிரியோ
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.40,000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15,000 வரை |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.3,100 வரை |
மொத்த பலன்கள் |
ரூ.58,100 வரை |
-
மேலே குறிப்பிடப்பட்ட சலுகைகள் மாருதி செலிரியோ காரின் ஹையர்-ஸ்பெக் Zxi மற்றும் Zxi+ AMT வேரியன்ட்களுக்கு பொருந்தும்.
-
மேனுவல் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்கள் ஒவ்வொன்றும் ரூ.35,000 வரை குறைந்த பணப் பலனைப் பெறுகின்றன.
-
நீங்கள் மிட்-ஸ்பெக் Vxi AMT வேரியன்ட்டை தேர்ந்தெடுத்தால் பணத் தள்ளுபடி ரூ. 2,000 குறையும். மற்ற தள்ளுபடிகளில் மாற்றம் இருக்காது.
-
கார்ப்பரேட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் எல்லா வேரியன்ட்களுக்கும் ஒரே மாதிரியானவை.
-
மாருதி செலிரியோவின் விலை ரூ.5.37 லட்சம் முதல் ரூ.7.09 லட்சம் வரை இருக்கும்.
இகோ
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.20,000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15,000 வரை |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.2,100 வரை |
மொத்த பலன்கள் |
ரூ.37,100 வரை |
-
மாருதியின் பேஸிக் பீப்பிள்-மூவர் காரின் பெட்ரோல் வேரியன்ட்களில் இந்த தள்ளுபடிகள் கிடைக்கும்.
-
சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு ரூ.10,000 குறைந்த பணப் பலன் கிடைக்கும்.
-
அனைத்து வேரியன்ட்களும் ஒரே மாதிரியான எக்ஸ்சேஞ்ச் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகளை பெறுகின்றன.
-
மாருதி இகோ காரின் விலை ரூ. 5.32 லட்சம் முதல் ரூ.6.58 லட்சம் வரை உள்ளது.
பழைய தலைமுறை ஸ்விஃப்ட்
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.20,000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15,000 வரை |
கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் (< 7 ஆண்டுகள்) |
ரூ.5,000 வரை |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.2,100 வரை |
மொத்த பலன்கள் |
ரூ.42,100 வரை |
-
மாருதி நிறுவனம் பழைய ஜெனரல் ஸ்விஃப்ட்டிலும் அதன் மீதமுள்ள ஸ்டாக்குகள் காலியாகும் வரை பலன்களை வழங்குகிறது.
-
இதன் AMT வேரியன்ட்களுக்கு ரூ.20,000 வரை ரொக்கத் தள்ளுபடியும் மேனுவல் வேரியன்ட்களுக்கு ரூ.15,000 வரை குறைந்த தள்ளுபடியும் கிடைக்கும். CNG வேரியன்ட்களுக்கு எந்த பணப் பலனும் கிடைக்காது.
-
அனைத்து வேரியன்ட்களும் ரூ. 15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸை பெறுகின்றன. மேலும் எக்ஸ்சேஞ்ச் கார் 7 வருடங்களுக்கும் குறைவானதாக இருந்தால் ரூ. 5,000 வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸையும் நீங்கள் பெறலாம்.
-
கார்ப்பரேட் தள்ளுபடி அனைத்து வேரியன்ட்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும்.
-
ஸ்விஃப்ட் சிறப்பு பதிப்பு ரூ.18,400 கூடுதல் விலையில் கிடைக்கிறது.
-
பழைய ஜெனரேஷன் மாருதி ஸ்விஃப்ட் காரின் கடைசியாக பதிவு செய்யப்பட்ட விலை ரூ. 6.24 லட்சத்தில் இருந்து ரூ.9.14 லட்சமாக இருந்தது.
ஸ்விஃப்ட் 2024
சலுகை |
தொகை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15,000 |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.2,100 |
மொத்த பலன்கள் |
ரூ.17,100 |
-
புதிய மாருதி ஸ்விஃப்ட் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடியைத் தவிர வேறு எந்த சலுகைகளையும் வழங்காது.
-
வாடிக்கையாளர்கள் அதன் மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆகிய இரண்டு வேரியன்ட்களிலும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸையும், ரூ.2,100 கார்ப்பரேட் போனஸையும் பெறலாம்.
-
இதன் விலை ரூ.6.49 லட்சம் முதல் ரூ.9.60 லட்சம் வரை இருக்கிறது.
டிசையர்
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.15,000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15,000 வரை |
மொத்த பலன்கள் |
ரூ.30,000 வரை |
-
சப்-4m செடான் CNG தவிர அனைத்து வேரியன்ட்களிலும் இந்த தள்ளுபடிகள் கிடைக்கும்.
-
CNG வேரியன்ட்களுக்கு எந்த விதமான தள்ளுபடியும் கிடைக்காது.
-
டிசையர் காருக்கு கார்ப்பரேட் தள்ளுபடிகள் எதுவும் இல்லை.
-
மாருதி டிசையர் காரின் விலை ரூ.6.57 லட்சம் முதல் ரூ.9.39 லட்சம் வரை உள்ளது.
பிரெஸ்ஸா
சலுகை |
தொகை |
பணத் தள்ளுபடி |
ரூ.27,000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15,000 வரை |
மொத்த பலன்கள் |
ரூ.42,000 வரை |
-
சப்-4m எஸ்யூவி ஆனது அதன் அர்பனோ பதிப்பான Lxi -யில் ரூ.27,000 வரை பணத் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. அதன் VXi அர்பானோ பதிப்பில் ரொக்கத் தள்ளுபடி ரூ.15,000 ஆகவும். அதன் Zxi மற்றும் Zxi+ மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களில் ரூ.10,000 ஆகவும் குறைகிறது.
-
எக்ஸ்சேஞ்ச் போனஸ் அனைத்து வேரியன்ட்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும்.
-
CNG வேரியன்ட்களில் எந்த விதமான பலன்களும் கிடைக்காது.
-
மாருதி பிரெஸ்ஸா -வின் விலை ரூ.8.34 லட்சம் முதல் ரூ.14.14 லட்சம் வரை உள்ளது.
விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை
குறிப்பு: உங்கள் இருப்பிடம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டின் அடிப்படையில் இந்த சலுகைகள் வேறுபடலாம். கூடுதல் தகவலுக்கு உங்களுக்கு அருகிலுள்ள மாருதி அரீனா டீலரை தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.
லேட்டஸ்ட் கார் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்.
மேலும் படிக்க: ஆல்டோ K10 ஆன்ரோடு விலை