மாருதி நிறுவனம் கார்களுக்கான ஸ்டாண்டர்ட் வாரண்டி கவரேஜ் காலத்தை ஜூலை 9 முதல் அதிகரித்துள்ளது
published on ஜூலை 10, 2024 06:12 pm by shreyash for மாருதி ஸ்விப்ட்
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
முந்தைய 2-ஆண்டு/40,000 கி.மீ உத்தரவாதமானது புதிய நீட்டிக்கப்பட்ட உத்தரவாத ஆப்ஷன்களுடன் ஸ்டாண்டர்டாக 3-ஆண்டு/1 லட்சம் கி.மீ பேக்கேஜாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
-
ஜூலை 9, 2024 முதல் செய்யப்படும் அனைத்து டெலிவரிகளுக்கும் இது பொருந்தும்.
-
ஸ்டாண்டர்டான உத்தரவாதமானது இன்ஜின், டிரான்ஸ்மிஷன், மெக்கானிக்கல் பாகங்கள், எலக்டரிக்கல் பாகங்கள் மற்றும் ஏர் கண்டிஷனிங் ஆகியவற்றிற்கான கவரேஜை வழங்குகிறது.
-
வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களுக்கான உத்தரவாதத்தை 6 ஆண்டுகள்/1.60 லட்சம் கி.மீ வரை நீட்டிக்கலாம் (எது முதலில் வருகிறதோ அதுவரை).
மாருதி சுஸூகி நீண்ட காலமாக இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் நம்பகமான பிராண்டுகளில் ஒன்றாகக் உள்ளது. அதன் நம்பகமான, குறைந்த பராமரிப்பு கார்கள் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய விரிவான நெட்வொர்க்கிற்கு மாருதி நிறுவனம் பெயர் பெற்றது. இந்த நற்பெயரை மேலும் மதிப்புள்ளதாக மாற்ற மாருதி தனது கார்களுக்கான ஸ்டாண்டர்டான வாரண்டியை 2 ஆண்டுகள்/40,000 கி.மீ என்ற காலத்தில் இருந்து 3 ஆண்டுகள்/1 லட்சம் கி.மீ ஆக நீட்டித்துள்ளது. ஜூலை 9, 2024 முதல் அதாவது நேற்று முதல் செய்யப்படும் அனைத்து டெலிவரிகளுக்கும் இது பொருந்தும்.
ஸ்டாண்டர்டான உத்தரவாதமானது இன்ஜின், டிரான்ஸ்மிஷன், இன்ஜின் பாகங்கள், எலக்டரிக்கல் பாகங்கள், மற்றும் ஏர் கண்டிஷனிங் ஆகியவற்றிற்கான கவரேஜை வழங்குகிறது. மேலும் கூடுதலாக உத்தரவாதக் காலத்தின் போது லேபர் காஸ்ட் செலவிலும் தள்ளுபடியும் கிடைக்கும்.
புதிய நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத் தொகுப்புகள்
மாருதி புதிய நீட்டிக்கப்பட்ட வாரண்டி பேக்கேஜையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றின் விவரங்கள் கீழே உள்ளன.
வாரண்டி பேக்கேஜ் |
ஆண்டு/கி.மீ |
பிளாட்டினம் தொகுப்பு |
4 ஆண்டுகள்/ 1.20 லட்சம் கி.மீ |
ராயல் பிளாட்டினம் தொகுப்பு |
5 ஆண்டுகள்/ 1.40 லட்சம் கி.மீ |
சொலிட்டேர் தொகுப்பு |
6 ஆண்டுகள்/ 1.60 லட்சம் கி.மீ |
“மாருதி சுஸூகியில் வாழ்நாள் முழுவதும் வாடிக்கையாளர்களை வைத்திருக்க நாங்கள் பாடுபடுகிறோம். இந்த உறுதிப்பாட்டிற்கு ஏற்றபடி எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்குவதற்காக எங்கள் ஸ்டாண்டர்டான வாரண்டி கவரேஜை 3 ஆண்டுகள் அல்லது 1,00,000 கி.மீ ஆக உயர்த்தியுள்ளோம். மேலும் 6 ஆண்டுகள் அல்லது 1,60,000 கி.மீ வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டி பேக்கேஜையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். மேலும் 4ஆம் ஆண்டு மற்றும் 5ஆம் ஆண்டு நீட்டிக்கப்பட்ட வாரண்டி பேக்கேஜ்களின் நோக்கத்தை மாற்றியமைத்துள்ளோம். மேம்படுத்தப்பட்ட ஸ்டாண்டர்டான உத்தரவாதம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட உத்தரவாத தொகுப்புகள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதியையும் மன அமைதியையும் வழங்கும். மேலும் ஒட்டுமொத்தமாக காரின் உரிமை அனுபவத்தை மேம்படுத்தும்” என இந்த முயற்சி தொடர்பாக MSIL - மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவின் மூத்த செயல் அதிகாரி திரு.பார்த்தோ பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மாருதியின் எதிர்காலத் திட்டங்கள்
தற்போது மாருதி இந்தியாவில் 18 மாடல்களை விற்பனை செய்கிறது. அதன் அரீனா வரிசையில் 9 கார்கள் மற்றும் நெக்ஸா டீலர்ஷிப்களில் 8 கார்கள் விற்பனை செய்யப்படுகிறன. 2031 ஆம் ஆண்டிற்குள் அதன் இந்திய போர்ட்ஃபோலியோவை 18 முதல் 28 மாடல்களாக விரிவுபடுத்த மாருதி திட்டமிட்டுள்ளது. இதில் முதல் eVX எலக்ட்ரிக் எஸ்யூவி உள்பட வேறு சில EV களும் அடங்கும். கூடுதலாக மாருதி நிறுவனம் வரும் நாட்களில் புதிய தலைமுறை டிசையர் காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது
ரெகுலர் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை பின்தொடரவும்
மேலும் படிக்க: மாருதி ஸ்விஃப்ட் AMT
0 out of 0 found this helpful