ஸ்விஃப்ட் காரிலிருந்து 2024 Maruti Dzire பெறலாம் என எதிர்பார்க்கப்படும் விஷயங்கள்
published on செப் 27, 2024 06:53 pm by anonymous for மாருதி டிசையர்
- 69 Views
- ஒரு கருத்தை எழுதுக
வடிவமைப்பில் சில விஷயங்களை தவிர 2024 டிசையர் ஸ்விஃப்ட்டிலிருந்து எடுத்துச் செல்லக்கூடிய கூடுதல் எலமென்ட்களை பாருங்கள்.
நான்காவது தலைமுறை ஸ்விஃப்ட் அறிமுகத்தைத் தொடர்ந்து மாருதி நிறுவனம் அடுத்த மாதம் 2024 டிசையர் காரைஅறிமுகப்படுத்த தயாராக உள்ளது. தற்போதைய மாடலை விட, புதிய டிசையர் புதிய வடிவமைப்பு, புதுப்பிக்கப்பட்ட உட்புறம் மற்றும் புதிய விஷயங்களை கொண்டிருக்கும். இந்த அப்டேட் உடன் வரவிருக்கும் டிசையர் 2024 ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கிலிருந்து பெறக்கூடிய 3 விஷயங்கள் இங்கே உள்ளன. அவற்றைப் இங்கே பாருங்கள்.
புதிய 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்
2024 ஸ்விஃப்ட் உடன், மாருதி சுஸுகி ஒரு புதிய 1.2 லிட்டர் 3-சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜினை அறிமுகப்படுத்தியது. இது 82 PS மற்றும் 112 Nm அவுட்புட்டை கொடுக்கும். வரவிருக்கும் டிசையர் அதே பெட்ரோல் யூனிட்டால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் வழங்கப்படும்.
கூடுதலாக ஸ்விஃப்ட்டை போலவே, 2024 டிசையர் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் உடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. CNG மோடில் பவர் அவுட்ட் 2024 ஸ்விஃப்ட்டில் 69 PS ஆகவும் 102 Nm அவுட்புட் ஆகவும் குறைகிறது. அதே நேரத்தில் 32.85 km/kg மைலேஜ் கிடைக்கும்.
மேலும் படிக்க: நவம்பர் 4 ஆம் தேதி அறிமுகமாகிறது 2024 Maruti Dzire
புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட இன்ட்டீரியர்
புதிய ஜென் ஸ்விஃப்ட் புதிய டேஷ்போர்டு அமைப்பு மற்றும் சில்வர் ஆக்ஸென்ட்களால் கான்ட்ராஸ்ட் பிளாக் தீம் ஆகியவற்றைக் கொண்ட அப்டேட் செய்யப்பட்ட கேபினுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. 2024 டிசையர் இதேபோன்ற அப்டேட்டை பெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும் இது டூயல்-டோன் கேபின் தீம் அதன் ஹேட்ச்பேக் காரிலிருந்து வேறுபடும்.
கூடுதலாக வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்ப்ளே கனெக்டிவிட்டி உடன் கூடிய கூடிய புதிய 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகள் 2024 ஸ்விஃப்டில் இருந்து கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாண்டர்டான பாதுகாப்பு கிட்
2024 டிசையர் ஸ்விஃப்ட்டிலிருந்து பாதுகாப்பு வசதிகளை கடன் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6 ஏர்பேக்குகளுடன் ஸ்டாண்டர்டாக வரலாம். கூடுதலாக மற்ற ஸ்டாண்டர்டான பாதுகாப்பு வசதிகள் EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் உடன் வரலாம். ஹையர் வேரியன்ட்களில் ரியர்வியூ கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும்.
மேலும் படிக்க: மாருதி ஸ்விஃப்ட் vs ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்: சிஎன்ஜி விவரக்குறிப்புகள் ஒப்பிடும்போது
2024 மாருதி சுஸூகி டிசையர் விலை மற்றும் எதிர்பார்க்கப்படும் வெளியீடு
2024 மாருதி டிசையர் ரூ.7 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி அதன் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தவில்லை. இது ஹூண்டாய் ஆரா, ஹோண்டா அமேஸ், மற்றும் டாடா டிகோர் போன்ற கார்களுடன் போட்டியிடும்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: மாருதி ஸ்விஃப்ட் ஏஎம்டி