• ஹூண்டாய் வெர்னா front left side image
1/1
 • Hyundai Verna
  + 100images
 • Hyundai Verna
 • Hyundai Verna
  + 6colours
 • Hyundai Verna

ஹூண்டாய் வெர்னா

காரை மாற்று
495 விமர்சனங்கள்இந்த காரை மதிப்பிடு
Rs.8.17 - 14.07 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
அக்டோபர் சலுகைகள்ஐ காண்க
don't miss out on the festive offers this month

ஹூண்டாய் வெர்னா இன் முக்கிய அம்சங்கள்

மைலேஜ் (அதிகபட்சம்)24.0 kmpl
என்ஜின் (அதிகபட்சம்)1591 cc
பிஹெச்பி126.2
டிரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமேட்டிக்
சீட்கள்5
சர்வீஸ் செலவுRs.3,722/yr

வெர்னா சமீபகால மேம்பாடு

நவீன புதுப்பிப்பு: வெர்னா காரின் புதிய இரு வகைகளை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அவையாவன: SX+ AT பெட்ரோல் மற்றும்SX(O) AT டீசல். இவை இரண்டிலும் ஒரு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.இது தவிர, இந்த வரிசையில் ஒரு 1.4 லிட்டர் டீசல் என்ஜினும் கார் தயாரிப்பு நிறுவனம் மூலம் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்களை இங்கு காணலாம்.

ஹூண்டாய் வெர்னா வகைகள் மற்றும் விலை நிலவரம்: இந்த ஹூண்டாய் வெர்னா கார், E, EX, SX, SX+ மற்றும்SX(O) என மொத்தம் ஐந்து வகைகளில் கிடைக்கிறது. இதில் துவக்க வகையானE, ஒரு பெட்ரோல் என்ஜின் உடன் அமைந்து 7.92 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கிறது. அதே நேரத்தில், இதற்கு நிகரான டீசல் வகை 9.29 லட்சம் ரூபாய் நிர்ணயத்தில் டீசல் என்ஜின் உடன் கிடைக்கிறது. இதில் உயர் தர வகையானSX(O) காரின் பெட்ரோல் பதிப்பிற்கு 12.68 லட்சம் ரூபாய் எனவும், டீசல் பதிப்பிற்கு 13.99 லட்சம் ரூபாய் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெர்னா காரின் சிறப்பான ஆண்டுவிழா பதிப்பு ஒன்றையும், ஹூண்டாய் நிறுவனம் அளிக்கிறது.நிர்ணயிக்கப்பட்ட அளவில் வெளியிடப்பட்ட இந்த மாடலில், ஒரு புதிய நிறம், கூடுதல் அம்சங்கள் மற்றும் சிறப்பான கூடுதல் அழகியல் உதிரிபாகங்கள் ஆகியவை அளிக்கப்படுகின்றன. இது குறித்து கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.

ஹூண்டாய் வெர்னா என்ஜின்: இந்த ஹூண்டாய் வெர்னா கார் மொத்தம் நான்கு என்ஜின் தேர்வுகளில் அளிக்கப்படுகிறது. அவையாவன: 1.4 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டீசல், 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல். இதில் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலம்100PS/132Nm ஆற்றலும், 1.6 லிட்டர் பெட்ரோல்என்ஜின் மூலம்123PS/151Nm ஆற்றலும் வெளியிடப்படுகிறது. 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின்களை பொறுத்த வரை, முறையே90PS/220Nm மற்றும்128PS/259Nm என்ற அளவில் அமைந்துள்ளன. மேற்கண்ட இரு 1.6 லிட்டர் என்ஜின்களிலும், ஒரு 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 1.4 லிட்டர் என்ஜின்களில் ஒரு 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே அளிக்கப்படுகிறது.

ஹூண்டாய் வெர்னா காரில் உள்ள அம்சங்கள்: இந்த காரில் உள்ள அம்சங்களைப் பொறுத்த வரை,LED டேடைம் ரன்னிங் லைட்கள்(DRL-கள்) உடன் கூடிய ஆட்டோமேட்டிக் பிராஜெக்டர் ஹெட்லெம்ப்கள், எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமெட்டிக் கிளைமெட் கன்ட்ரோல், ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிரர் லிங்க் ஆகியவை கொண்ட 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு, காற்றோட்டம் கொண்ட முன்பக்க சீட்கள், பின்பக்க பார்க்கிங் கேமரா உடன் சென்ஸர்கள் மற்றும் டைனாமிக் வழிகாட்டிகள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்த வரை, இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள்,ABS, முன்பக்க சீட் பெல்ட்கள் உடன் கூடிய ப்ரீடென்ஸர்கள் மற்றும் ஐசோபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள் ஆகியவை எல்லா வகைகளுக்கும் பொதுவாக அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பொதுவாக அளிக்கப்பட்டுள்ளதை தவிர, உயர் தர வகையில் கூடுதலாக நான்கு ஏர்பேக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் வெர்னா போட்டியாளர்கள்: ஹோண்டா சிட்டி, மாருதி சுஸுகி சியஸ், டொயோட்டா யாரீஸ், வோல்க்ஸ்வேகன் வென்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் ஆகிய கார்களுடன் இந்த வெர்னா போட்டியிடுகிறது.

அதிக சேமிப்பு!
பயன்படுத்திய புது டெல்லி இல் ஹூண்டாய் வெர்னா இலிருந்து 53% !க்கு கிடைக்க கூடிய சிறந்த டீல்கள் வரை சேமிக்க

ஹூண்டாய் வெர்னா price list (variants)

vtvt 1.4 e1368 cc, கையேடு, பெட்ரோல், 19.1 kmplRs.8.17 லட்சம்*
vtvt 1.4 ex1368 cc, கையேடு, பெட்ரோல், 19.1 kmplRs.9.33 லட்சம்*
சிஆர்டிஐ 1.4 இ 1396 cc, கையேடு, டீசல், 24.0 kmplRs.9.42 லட்சம்*
சிஆர்டிஐ 1.4 இஎக்ஸ் 1396 cc, கையேடு, டீசல், 24.0 kmplRs.9.99 லட்சம்*
vtvt 1.6 sx1591 cc, கையேடு, பெட்ரோல், 17.0 kmpl
மேல் விற்பனை
Rs.9.99 லட்சம்*
vtvt 1.6 at sx plus1591 cc, தானியங்கி, பெட்ரோல், 17.0 kmplRs.11.62 லட்சம்*
சிஆர்டிஐ 1.6 எஸ்எக்ஸ் 1582 cc, கையேடு, டீசல், 22.0 kmpl
மேல் விற்பனை
Rs.11.72 லட்சம்*
vtvt 1.6 sx option1591 cc, கையேடு, பெட்ரோல், 17.0 kmplRs.11.72 லட்சம்*
anniversary edition பெட்ரோல்1591 cc, கையேடு, பெட்ரோல், 17.7 kmplRs.11.78 லட்சம்*
vtvt 1.6 at sx option1591 cc, தானியங்கி, பெட்ரோல், 17.0 kmplRs.12.87 லட்சம்*
சிஆர்டிஐ 1.6 எஸ்எக்ஸ் தேர்வு 1582 cc, கையேடு, டீசல், 22.0 kmplRs.13.01 லட்சம்*
சிஆர்டிஐ 1.6 ஏடி எஸ்எக்ஸ் பிளஸ் 1582 cc, தானியங்கி, டீசல், 22.0 kmplRs.13.28 லட்சம்*
சிஆர்டிஐ 1.6 ஏடி எஸ்எக்ஸ் தேர்வு 1582 cc, தானியங்கி, டீசல், 22.0 kmplRs.14.07 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
Ask Question

Are you Confused?

48 hours இல் Ask anything & get answer

Recently Asked Questions

ஒத்த கார்களுடன் ஹூண்டாய் வெர்னா ஒப்பீடு

புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை

ஹூண்டாய் வெர்னா விமர்சனம்

“இதில் உள்ள புதிய அளவீடுகளால், நல்ல கையாளும் திறன் மற்றும் சிறந்த ஓட்டும் தரம் ஆகியவற்றிற்கு இடையிலான ஒரு சிறந்த சமநிலை கிடைத்துள்ளதன் மூலம்பழைய காரில் இருந்த முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தீர்க்கப்பட்டுள்ளது.” வெர்னா காரில் நாங்கள் விரும்பியவை

இந்த புதிய ஹூண்டாய் வெர்னா கார் 7.99 லட்சம் ரூபாய் முதல் 12.39 லட்சம் ரூபாய் வரை என்ற போட்டியிடும் நிலையிலான விலை நிர்ணயத்தில், மாருதி சியஸ் காரின் டீசல் விலைஉடன் ஒத்ததாகவும், ஹோண்டா சிட்டி காரை விட குறைவாகவும் அமைந்துள்ளது. இந்த காரின் மேற்புறத்தில் உள்ள எலக்ட்ரிக் சன்ரூஃப் உடன் இந்த பிரிவில் முதல் முறையாக அளிக்கப்பட்டுள்ள ஹேண்ட்ஸ் ஃப்ரீ பூட் லிட் மற்றும் ஏர் கூல்டு முன்பக்க சீட்கள் போன்ற அம்சங்கள், இன்னும் அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. இந்த புதிய அவதாரத்தின் மூலம் 2017 வெர்னா காரின் வடிவமைப்பிற்கு ஒரு புதுப்பிக்கப்பட்ட வளர்ச்சியை, ஹூண்டாய் நிறுவனம் அளித்துள்ளது. “இதில் உள்ள புதிய அளவீடுகளால், நல்ல கையாளும் திறன் மற்றும் சிறந்த ஓட்டும் தரம் ஆகியவற்றிற்கு இடையிலான ஒரு சிறந்த சமநிலைகிடைத்துள்ளதன் மூலம் பழைய காரில் இருந்த முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தீர்க்கப்பட்டுள்ளது.”

இதில் உள்ள புதிய அளவீடுகளால், நல்ல கையாளும் திறன் மற்றும் சிறந்த ஓட்டும் தரம் ஆகியவற்றிற்கு இடையிலான ஒரு சிறந்த சமநிலை கிடைத்துள்ளதன் மூலம் பழைய காரில் இருந்த முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தீர்க்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் அல்லது அளவற்ற கிலோ மீட்டர் உத்தரவாதம் மூலம் இது வாங்கும் பணத்திற்கான மதிப்பை மேலும் அதிகரிப்பதாக அமைகிறது. இந்த புதிய வெர்னா காரில் உள்ள ஒரு முக்கியமான பிரச்சனை என்னவென்றால், பின்பக்கத்தில் சரியான இடவசதி இல்லை என்பது ஆகும். ஏனெனில், காரை வாங்குபவர்கள் பெரும்பாலான நேரத்தை பின்பக்க சீட்டில் தான் கழிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தாலும், இந்த குறிப்பிட்ட பிரச்சனை அறியும் முன், நடுநிலை அளவிலான சேடன் கார்களை வாங்க விரும்புவோரை ஹூண்டாய் ஷோரூமை நோக்கி படையெடுக்கும் வகையில், இந்த 2017 ஹூண்டாய் வெர்னா சிறப்பான முறையில் மயக்கி விட்டுள்ளதாக தெரிகிறது.

exterior

எங்களைப் பொறுத்த வரை, முதல் தலைமுறையில் இருந்த ஹூண்டாயின் ஃப்ளூய்டிக் வடிவமைப்பு கார்கள், அதன் வழிதோன்றல்களுக்கு மேம்பாட்டிற்காக சிறிய வழிவகையை ஏற்படுத்தி உள்ளது எனலாம். இந்த புதிய ஹூண்டாய் வெர்னா வடிவமைப்பாளர்கள், காரை ஒரு கவர்ச்சிகரமான பேக்கேஜ் உடன் ஏற்படுத்தி, பழக்கமான மற்றும் தொடர்ந்து புதுமையான தோற்றத்தை பெற்றதாக நிலை நிறுத்தி உள்ளனர் எனலாம்.

இந்த காரின் முகப்பகுதி பொது மக்களுக்கு புதியது அல்ல. மேலும் இதன் முதல் வடிவமைப்பு சீனாவில் முதல் முறையாக வெளியிடப்பட்ட போது, அது வெளிச்சத்திற்கு வந்தது. ஏற்கனவே ‘சோலாரிஸ்’ பேட்ஜ்ஜின் கீழ் ரஷ்யாவில்,  இது விற்பனையில் உள்ளது. இந்திய சந்தையைப் பொறுத்த வரை, 2017 வெர்னா காரில், ப்ரோஜெக்டர் ஹெட்லெம்ப்கள் உடன் டேடைம் ரன்னிங்LED-கள் மற்றும் புதிய பெரிய முன்பக்க கிரில்லை அடைத்து கொள்ளும் ப்ரோஜெக்டர் பனி விளக்குகள் ஆகியவை அமைந்துள்ளன.

ஹூண்டாய் எலன்ட்ரா காரை நினைவுப்படுத்தும் வகையில், விண்டோ லைனுக்கு கொஞ்சம் கீழே வரைக்கும் ஷோல்டர் அப்படியே இறங்கி வருகிறது.ஹூண்டாய் வெர்னா மற்றும் எலன்ட்ரா ஆகிய கார்கள், தற்போது ஒரேK2 தளத்தில் இயங்குவதால் அப்படி அமைந்திருக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் தற்போது வெளியீட்டில் உள்ள மாடலை விட, இன்னும் அதிகம் வளர்ந்த தன்மையில் அமைந்த தோற்றம் இதில் சேர்க்கப்பட்டுள்ளதை அறியலாம். இதன் நீளம் 4440 மிமீ என்ற அளவில் நீட்டிக்கப்பட்டு, முந்தையை பதிப்பை விட 65 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல 29 மிமீ அதிகரிக்கப்பட்டு, 1729 மிமீ என்று நீட்டிக்கப்பட்டுள்ளது. வீல்பேஸை பொறுத்த வரை, 30 மிமீ அதிகரிப்பு உடன் 2600 மிமீ என்று நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆயினும், கூர்மையான ரூஃப் ரேக் தவிர, காரின் உயரத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், 1475 மிமீ என்ற அளவிலேயே தொடர்கிறது.

இந்த காரின் ரூஃப் பொதுவாக பின்பகுதியை நோக்கி சரிந்த வரையில் அமைந்து, ஒரு தாழ்வான பகுதியில் இருந்து பார்க்க, ஏறக்குறைய ஒரு நோட்ச்பேக் போல காட்சி அளிக்கிறது. டெயில் லைட்களை பொறுத்த வரை, எலன்ட்ரா காரை ஒத்ததாக அமைந்து, அதில் ஒரு மூன்று யூனிட் வடிவமைப்பை பெற்றுள்ளது. ஆனால் எலன்ட்ரா காரில், வட்டமானLED சாதனங்களும், இந்த புதிய வெர்னா காரில் பகுதி வட்ட வடிவிலான யூனிட்களும் பெற்றுள்ளன. இதில் உள்ள புதிய பம்பர் மூலம் ஒரு தேறிய புதிய தோற்றத்தின் சிறப்பான முழுமையை காண முடிகிறது.

 

Exterior Comparison

Honda CityMaruti CiazVolkswagen VentoHyundai Verna
Length (mm)4440mm4490 mm4390mm4440mm
Width (mm)1695mm1730 mm1699mm1729mm
Height (mm)1495mm1485 mm1467mm1475mm
Ground Clearance (mm)165mm170 mm163mm165mm
Wheel Base (mm)2600mm2650 mm2553mm2600mm
Kerb Weight (kg)1147kg-1216Kg-

Boot Space Comparison

Honda CityMaruti CiazHyundai VernaVolkswagen Vento
Volume510510-litres480494
 

interior

ஹூண்டாய் வெர்னா காரில் உள்ள உள்புற அமைப்பியல், அதன் உறுதியான தன்மைகளில் ஒன்றாக அமைகிறது. மேலும் இந்த புதிய காரில், அதே நிலையில் அமைந்த பொருட்களின் தரம் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை காண முடிகிறது.இதன் வடிவமைப்பை பொறுத்த வரை, புதிதாக வரும் ஹூண்டாய் கார்களில் நாம் கண்டு வருவதை மிகவும் ஒத்ததாக இருப்பதால், இதற்கான தனித்தன்மையை இழக்கிறது. மேலும் இது முற்றிலும் ஒரு புதிய கார் என்ற தன்மை சற்று இழக்க செய்கிறது. பழைய வெர்னா கார் உடன் இதை ஒப்பிட்டால், இதன் வடிவமைப்பு சற்று வறண்டதாகவும் ஒளிர்வு மிக்கதாகவும் தெரிகிறது. மேலும், டேஸ்போர்டில் உள்ள எல்லா சுவிட்ச்கள் மற்றும் ஸ்டீயரிங் வீல் ஆகிய அனைத்தும் மிகவும் நேர்மறையான செயல்பாடுகளை பெற்று, உறுதியாகவும் சிறப்பான கட்டமைப்பு கொண்டதாகவும் உணர முடிகிறது.

இந்த காரில் உள்ள சென்டர் கன்சோலில், ஒரு பெரிய 7 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே அமைந்து, அதில் தனித்தனி செயல்பாட்டிற்கு ஏற்ப பட்டன்கள்அளிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 2017 வெர்னா காருக்கு அதிக சுமூகமான அனுபவத்தை பெற்று தருகிறது. எடுத்துக்காட்டாக, மாருதி சியஸ் போல முழுமையான தொடுமுறையின் அடிப்படையில் அமைந்து சிக்கலை ஏற்படுத்துவது தவிர்க்கப்பட்டுள்ளது.

இதன் முன்பக்க சீட்களில் மென்மையானகுஷனிங் அளிக்கப்பட்டு, மாடி மற்றும் பின்பக்கத்திற்கு நல்ல ஆதரவை அளிக்கிறது. தொடைகளுக்கு கீழே நன்றாக ஆதரவு கிடைக்கும் வகையில், சீட்கள் சற்று நீட்டிக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதற்காக அவை ஆதரவாக இல்லை என்று கூறவில்லை. ஆனால் இன்னும் கூடுதல் ஆதரவை பெற நாங்கள் விரும்புகிறோம். முன்பகுதியில் ஒரு விசாலமான லெக்ரூம் கிடைக்கும் வகையில், முன்பக்க சீட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காரில்எனது கூட்டாளிதூசாரில்அளிக்கும்6’5” ஆட்டோ ஜெர்னோ கூட செய்ய முடியும் என்று தோன்றுகிறது. துரதிஷ்டவசமாக, அது தற்போது எங்களோடு இல்லை என்றாலும், இந்த காரை விரைவில் சாலை பரிசோதனை செய்யும் போது, அதையும் வைத்து சோதனை செய்யலாம் என்று நம்புகிறோம்.

இந்த பிரிவிலேயே முதன் முறையாக, வெர்னா 2017 பதிப்பு காரில் தான் ஏர் கூல்டு சீட்களை காண முடிகிறது. உஷ்ணம் மற்றும் வேர்வை மிகுந்த காலநிலையில் நிலவும் கொச்சி நகரில், இது கடவுள் அருளிய வரபிரசாதமாக உள்ளது.

இந்த காரில் உள்ள அளவீடுகள் அதிகரிக்கப்பட்ட போதும், ஆச்சரியப்படுத்தும் விதமாக, பின்பக்க சீட்டில் உள்ள இடவசதி அதிகளவில் அந்த அளவிற்கு விரிவாக்கம் பெறவில்லை. நன்றாக வளர்ச்சி அடைந்த பெரியவர்களுக்குபொதுமான அளவிற்கு லெக்ரூம் உள்ளது. ஆனால் வரிசையில் மூன்று நபர்கள் அமரும் போது சற்று இடநெருக்கடி ஏற்படுகிறது. அதே நேரத்தில் மாருதி சியஸ் அல்லது ஹோண்டா சிட்டி போன்ற காரில் உள்ள விசாலமான தன்மையை இதில் காண முடிவதில்லை. இந்த காரின் எல்லா வகைகளிலும் ஏசி திறப்பிகள் மற்றும் ஒருUSB சார்ஜர் காணப்படுகிறது என்றாலும், துவக்க நிலை வகையானE இல் இருப்பது ஒரு நல்ல முடிவாக தெரிகிறது.

தொழில்நுட்பம், அம்சங்கள் மற்றும் பாதுகாப்ப

இந்த காரின் உயர் தர வகைகளில் நேவிகேஷனில் இருந்து ஸ்மார்ட்போன் இணைப்பு அம்சங்கள் வரையிலான ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் மிரர்லிங்க் என்று எல்லாமே பெற்றுள்ளளது.

இந்த புதிய வெர்னா காரில் தற்போது ஒரு எலக்ட்ரிக் சன்ரூஃப் அளிக்கப்பட்டு, இதன் பிரிவில் நவீன தன்மையை தொடர்ந்து செயல்படுத்தி உள்ளது. மேலும் இந்த பிரிவில் முதல் முறையாக ஹேண்ட்ஸ் ஃப்ரீ பூட் லிட் வசதியை இந்த காரில் காண முடிகிறது. உங்கள் சாவியை வைத்து கொண்டு, 3 அடி தூரத்திற்குள் 3 வினாடிகளுக்கு மேலாக நின்றாலே, இது தானாக திறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சுமூகமான அம்சத்தின் மூலம் தனியாக கடைகளுக்கு சென்று, இரு கைகளிலும் பொருட்களோடு திரும்பி வரும் நபருக்கு, பெரும் உதவியாக அமைகிறது. மேலும் இதில் ஒரு ரிவெர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் பார்க்கிங்சென்ஸர்கள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆனால் ஹோண்டா சிட்டி காரில் உள்ளது போன்ற முழுமையானLED ஹெட்லெம்ப்கள் மற்றும் ரெயின் சென்ஸிங் வைப்பர்கள் ஆகியவை இல்லாதது வருத்தம் அளிக்கிறது. 2017 ஹூண்டாய் வெர்னா காரின் உயர் தர வகைகளில் 6 ஏர்பேக்குகள் அளிக்கப்படுவது தொடர்ந்தாலும், மற்ற எல்லா வகைகளுக்கும் பொதுவாக, இரட்டை ஏர்பேக்குகள் மற்றும்ABS ஆகியவை அளிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஆட்டோ லிங்க் என்ற அப்ளிகேஷன் ஒன்று, மற்றொரு முக்கியமான அம்சமாக, உயர் தர வகைகளானSX(O)-களில் பொதுவாக அளிக்கப்பட்டுள்ளது.ஐதராபாத்தில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்தில், இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டது. இந்த அப்ளிகேஷன் மூலம் கார் உடன் உங்கள் ஸ்மார்ட்போன் இணைக்கப்பட்டு, என்ஜின் ஸ்பீடு, என்ஜின் லோடு மற்றும் பிரேக்கிங் செயல்பாடுகள் போன்ற வாகனம் தொடர்பான முழு விவரங்களையும் உடனுக்குடன் அளிக்கிறது. மேலும் நீங்கள் வீட்டில் சவுகரியமாக இருந்தவாறு, பல தகவல்களை பெற்று கொள்ள முடியும். ஒரு சேவையை பெற முன்பதிவு செய்தல் அல்லது உங்கள் ஓட்டும்வரலாற்றை குறித்து பரிசோதித்தல் அல்லது கடைசியாக உங்கள் காரை பார்க்கிங் செய்த இடம் கூட அறிந்து கொள்ள முடியும்.

 

performance

இந்த 2017 வெர்னா காரில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகள் மட்டுமே அளிக்கப்படுகிறது. மேலும் இவை இரண்டும் அதிக ஆற்றல் மிகுந்த 1.6 லிட்டர் என்ஜின்கள் ஆகும்.VTVT பெட்ரோல் என்ஜின் மூலம்123PS ஆற்றல் மற்றும்151Nm முடுக்குவிசையை பெற முடிகிறது. அதே நேரத்தில்CRDi டீசல் என்ஜின் மூலம்128PS ஆற்றலும் 260NM முடுக்குவிசையும் கிடைக்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என்ற இரு வகை டிரான்ஸ்மிஷன்களிலும் கிடைக்கும் இந்த இரு என்ஜின்களும்,சிறந்த ஓட்டும் திறனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் 6 ஸ்பீடு யூனிட் உடன் இணைந்து செயலாற்றுகின்றன.

Performance Comparison (Diesel)

Skoda RapidMaruti CiazHyundai VernaHonda City
Power108.6bhp@4000rpm88.50bhp@4000rpm88.76bhp@4000rpm97.9bhp@3600rpm
Torque (Nm)250Nm@1500-2500rpm200Nm@1750rpm219.66NM@1500-2750rpm200Nm@1750rpm
Engine Displacement (cc)1498 cc1248 cc1396 cc1498 cc
TransmissionManualManualManualManual
Top Speed (kmph)185kmph175 Kmph
0-100 Acceleration (sec)11.31 Seconds10 Seconds
Kerb Weight (kg)1182kg--1147kg
Fuel Efficiency (ARAI)21.13kmpl28.09kmpl24.0kmpl25.6kmpl
Power Weight Ratio91.87bhp/ton--85.35bhp/ton
 

ஹூண்டாய் வெர்னா காரில் அளிக்கப்பட்டுள்ள இந்த1.6CRDi என்ஜின் தற்போது வெளியீட்டில் இருப்பதை போன்றே சக்தி வாய்ந்தது என்றாலும், குறைந்தrpm இல் இப்போது அதிக முடுக்குவிசையை அளிக்கிறது. அதாவது நகர்புற சாலைகளில் மணிக்கு 30 கி.மீ. வேகத்திற்கு குறைவாக செல்லும் போதும், நீங்கள் 3வது கியரில் டிரான்ஸ்மிஷனை விட்டு விட்டு, ஆக்ஸிலேட்டரை அழுத்தினால் கூட, எந்த திணறலும் இல்லாமல் இது முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.அதே நேரத்தில்1700-1800rpm என்பதை ஒட்டிய நிலைக்கு டர்போ வரும் போது, இந்த என்ஜினுக்கே உரித்தான சிறப்பு செயல்பாடு வெளிப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த குறைந்த செயல்பாட்டிலும் என்ஜினில் திணறலை காண முடிவதில்லை.

இதில் சற்று சத்தம் வெளிப்பட தான் செய்கிறது. அதிலும்1100-1800 rpm என்ற நிலையில் மற்றும் அதை விட சற்று அதிகமாக, சுமாரான அழுத்தத்தில் செல்லும் போது, கேபின் உள்ளே அதிக சத்தம் கேட்க முடிகிறது. மற்ற எல்லா அழுத்த நிலைகளிலும் என்ஜின் அமைதியாகி, சகித்து கொள்ளக் கூடிய நிலையில் மட்டுமே சத்தம் கேட்கிறது. இந்த டீசல் வெர்னா காரில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தி லிட்டருக்கு 24.75 கி.மீ. மைலேஜ்ஜும், ஆட்டோமேட்டிக்கில் லிட்டருக்கு 21.02 கி.மீ. மைலேஜ்ஜும் கிடைக்கும் என்று ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. முந்தைய தலைமுறையைச் சேர்ந்த ஹூண்டாய் வெர்னா காரில் மேனுவல் முறையில் லிட்டருக்கு 23.9 கி.மீட்டரும், ஆட்டோ முறையில் 19.08 கி.மீட்டரும் கிடைத்தது கவனிக்கத்தக்கது.

Performance Comparison (Petrol)

Honda CityHyundai VernaMaruti CiazSkoda Rapid
Power117.3bhp@6600rpm121.3bhp@6400rpm103.25bhp@6000rpm108.6bhp@4000rpm
Torque (Nm)145Nm@4600rpm151Nm@4850rpm138Nm@4400rpm250Nm@1500-2500rpm
Engine Displacement (cc)1497 cc1591 cc1462 cc1498 cc
TransmissionManualAutomaticManualManual
Top Speed (kmph)189 Kmph158.83 kmph185kmph
0-100 Acceleration (sec)9.64 Seconds12.04 Seconds
Kerb Weight (kg)1058kg--1182kg
Fuel Efficiency (ARAI)17.4kmpl17.0kmpl21.56kmpl21.13kmpl
Power Weight Ratio110.8bhp/ton--91.87bhp/ton

வெர்னா காரின் இரண்டு என்ஜின்களையும் வைத்து பார்க்கும் போது, இந்த123PS பெட்ரோல் வெர்னா என்ஜின் மிகவும் அமைதியானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நகர்புற சாலைகளில் சிறந்த ஓட்டும் திறனை அளிக்கும் வகையில், இது ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இதை அவசரகதியில் இயக்கவிரும்புவது இல்லை. உங்கள் மனம் சாந்தமாகவும் ஒருங்கிணைந்ததாகவும் இருந்தால்,1500rpm என்ற குறைந்த அளவில் கூட மொத்த அளவான151Nm இல்130.5Nm வரை மென்மையான செயல்பாட்டில் அளிக்க வல்லது. மேலும், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனில் மிகவும் குறைந்த அழுத்தத்தில் (மிகவும் வேகம் குறைவாக) மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் ஆறாவது கியரில் இயக்க முடியும். அந்த சூழ்நிலையிலும் என்ஜின் அல்லது டிரான்ஸ்மிஷனில் பெரிய அளவிலான எந்தொரு குறைப்பாடும் காண முடிவதில்லை.

 

நீங்கள் விரைவாக செயல்பட வேண்டிய ஒரு தருணம் இருந்தால், எடுத்துக்காட்டாக, சாப்பாட்டு நேரம் முடியும் முன் ஒரு உணவகத்திற்கு செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை இருப்பதாக வைத்து கொண்டால், இந்த பெட்ரோல் என்ஜினை3500-5000rpm என்ற நிலையில் சுழல செய்ய வேண்டும். ஏனெனில் இது தான் இந்த என்ஜினின் மிகவும் இனிமையான அளவு ஆகும்.மேனுவல் முறையில் 17.7 கி.மீட்டரும், ஆட்டோமேட்டிக் பெட்ரோல் லிட்டருக்கு 15.92 கி.மீட்டரும் அளிப்பதாக ஹூண்டாய் நிறுவனம் கூறுகிறது. வெர்னா காரின்4S-களில் மேனுவல் முறையில் லிட்டருக்கு 17.1 கி.மீ. மற்றும் முந்தைய 4 ஸ்பீடு ஆட்டோ மூலம் கிடைக்கும் லிட்டருக்கு 15.74 கி.மீ. என்ற அளவை விட, இது அதிகம் ஆகும்.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள்  

இந்த டீசல் மேனுவல் 2017 வெர்னா காரை ஓட்டுவதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், 6 ஸ்பீடு சுமூகமான முடுக்குவிசை மாற்றி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் என்பது ஆச்சரியப்படுத்தும் விஷயம் ஆகும். முடுக்கு விசை மாற்றி டிரான்ஸ்மிஷனில் மெதுவான செயல்பாடு மற்றும் பெடல் அழுத்தத்தில் இணைப்பு துண்டிக்கப்பட்டது போன்ற உணர்வு ஆகியவை ஏற்படுவதால், இதை ‘ஸ்லேஷ் பாக்ஸ்’ என்று அழைக்கிறார்கள். ஆனால் ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த மறுஅறிமுகம் என்னை மிகவும் கவர்ந்தது. நகர்புற சாலைகளில் பயணம் மற்றும் லேசான அல்லது நடுநிலையான முடுக்கு விசை உள்ளீடுகளில், இது மிகவும் பொறுப்பானது மற்றும் வேகமானது ஆகும். இது மிகவும் நேரடியான இணைப்பை பெற்றது போன்ற உணர்வை அளிக்கிறது.  

நீங்கள் பெடலை முழுமையாக அழுத்தும் போது தான், சில சறுக்கல் உணர்வுகளையும், என்ஜின் ரெவ் வேறுபாடுகளில் டிரான்ஸ்மிஷன் தொடர்ந்து திணறும் சத்தத்தையும் நீங்கள் கேட்க முடியும். நன்றாக ஓட்டும் எண்ணம் உங்களுக்கு ஏற்படும் பட்சத்தில், தேவைக்கேற்ப டிரான்ஸ்மிஷனை மேனுவல் முறைக்கு மாற்றி கொள்ளலாம். இதன்மூலம் தகுந்த கியரை பிடித்து கொண்டு செயல்படும். ஆனால் எங்களைப் பொறுத்த வரை, ஆட்டோ முறையிலேயே தொடர்ந்து இருப்பது நன்றாக தெரிகிறது. ஏனெனில் டீசல் என்ஜினின் பெரும்பாலான முடுக்குவிசை செயல்பாடு நன்றாக இருந்து, தேவைப்படும் மென்மையான கியர் மாற்றங்களை நமக்கு அளித்து, முடுக்குவிசை மாற்றங்களையும் தெரிந்த வகையில் நன்றாக உள்ளது. லிட்டருக்கு 21 கி.மீ. (டீசல்) மைலேஜ் அளிக்கும் என்று கூறப்படுவது, ஏறக்குறைய உண்மை என்று ஏற்று கொள்ளலாம

கையாளுதல் மற்றும் ஓட்டும் தரம்

பழைய ஹூண்டாய் வெர்னா காரில் இருந்த ஒரு முக்கியமான பிரச்சனையாக, அதிக வேகத்தில் உறுதியான செயல்பாட்டை அளிக்காது என்று இருந்தது. புதியK2 பிளாட்பார்ம் அமைப்பு உடன் முன்பக்க மற்றும் பின்பக்க சஸ்பென்ஸன் அமைப்புகளின் மாற்றம் ஆகியவை சேர்ந்து, 2017 வெர்னா காரின் ஓட்டும் அனுபவத்தை முழுமையாக ஹூண்டாய் நிறுவனம் மாற்றி அமைத்துள்ளது.நகர்புற சாலைகளில் ஸ்டீயரிங் இன்னும் மென்மையாகவே உள்ளது. இதன்மூலம் கொச்சியில் உள்ள நெருக்கடி மிகுந்த இறுக்கமான சாலைகளில் ஒரு தென்றலாக செயல்படுகிறது. அதே நேரத்தில் நெடுஞ்சாலையில் வேகத்தை அதிகரிக்கும் போது, ஸ்டீயரிங் வீல்லின் எடை அதிகரித்து விடுகிறது. இதன் ஸ்டீயரிங் வீல் மிகவும் நேரடியாக இருப்பது போன்ற உணர்வை அளிப்பதால், முன்பக்க வீல்லில் என்ன நடக்கிறது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள உங்களுக்கு உதவுகிறது.

சாலை வளைவுகளில் இது மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. இதன் சேசிஸை மாற்றக் கூடிய கட்டுப்படுத்த கூடிய சூழ்நிலைகள் வந்த போதும், அது நிலையாக முன்னேறியது. இதன் பிரேக் பெடல் மிகவும் மெல்லியதாக இருந்தாலும், மிகவும் உறுதியாக உள்ளது. மேலும் இது குறைந்த திறன் கொண்டது என்று நினைத்தாலும், தேவைக்கு அதிகமாகவே பிரேக்கிங் அழுத்தத்தை அளிக்க திறன் கொண்டதாக உள்ளது.

இந்த புதிய வெர்னா காரில் பயண தரம் இன்னும் உறுதியாக இருப்பதால், எந்த வகையிலும் இதமான அனுபவத்திற்கு சமரசம் தேவைப்படுவது இல்லை.இது நிறுவனம் சார்ந்த கூற்றாக இருந்தாலும், சாலைகளில் உள்ள குண்டும் குழிகளையும் இது எதிர்கொள்கிறது. ஹூண்டாய் நிறுவனம், சஸ்பென்ஸன் துறையில் அதிக கவனம் செலுத்துவதை இதில் அறியலாம். முன்பக்கத்தில்மெக்பேர்சன் இணைப்புகளின் அமைப்பில் மாற்றம் செய்து, கிடைமட்ட டிஸ்ப்ளேஸ்மெண்ட் குறிப்பிட்ட அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன்பக்க வீல்கள் கூர்மையான மேடுகளை ஏறும் போதுஇது ஏற்படுகிறது. பின்பக்கத்தை பொறுத்த வரை, அதிர்வுகளை தாங்கும் திறனைஅதிகசெங்குத்தான நிலைக்கு மாற்றப்பட்டு, பின்பக்க பயணத்தை கூடுதல் மேம்பாட்டை பெற செய்துள்ளது. அந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

 

 

 

 

safety

2017 ஹூண்டாய் வெர்னா காரின் எல்லா வகைகளிலும் இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள்,ABS மற்றும் ஐசோபிக்ஸ் ஆகியவை பொதுவாக அளிக்கப்பட்டுள்ளது.இதில்EX வகையில், ரிவெர்ஸ் பார்க்கிங் சென்ஸர்கள், ஒரு பின்பக்க பார்க்கிங் கேமரா, ப்ரோஜெக்டர் பனி விளக்குகள் மற்றும் ஆட்டோ ஹெட்லெம்ப்கள் ஆகியவை உடன் தாக்கம் / வேகத்தை உணரும் ஆட்டோ டோர் லாக்குகள் மற்றும் டைமர் உடன் கூடிய ஒரு பின்பக்க டிஃபோக்கரும் அளிக்கப்பட்டுள்ளது. புதிய வெர்னா காரின்SX வகையில், ஒரு ஆட்டோ டிம்மிங் உள்புற அமைப்பியல் பின்பக்க காட்சி அளிக்கும் மிரர் மற்றும் உயரத்தை மாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், உயர் தர வகையானSX (O) இல் பக்கவாட்டு மற்றும் கர்ட்டன் ஏர்பேக்குகள் உடன் சேர்த்து மொத்தம் 6 ஏர்பேக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

variants

முற்றிலும் புதிதாக உள்ள இந்த ஹூண்டாய் வெர்னா கார், மொத்தம் 12 வகைகளில் கிடைக்கிறது.

ஹூண்டாய் வெர்னா இன் சாதகம் & பாதகங்கள்

things we like

 • இந்த 2017 வெர்னா காரின் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் மூலம் எளிதான ஓட்டும் திறன் மற்றும் நல்ல மறுசீரமைப்பை பெற முடிகிறது. இந்த இரு என்ஜின்களிலும் 6 ஸ்பீடுAT அளிக்கப்பட்டுள்ளது.
 • இதமான பயணம்: இந்த 2017 வெர்னா காரில் வேகம் அதிகரிக்கும் போது, வளைவுகளில் கூட நிலைப்புத் தன்மை பெற முடிகிறது.
 • ஹூண்டாய் வெர்னா காரில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உடன் கூடிய டச் ஸ்கிரீன், சன்ரூஃப், காற்றோட்டம் கொண்ட சீட்கள், ஹேண்ட்ஸ் ஃப்ரீ பூட் ரிலீஸ் போன்ற அம்சங்கள் அளிக்கப்பட்டு இருப்பது ஆச்சரியம் அளிக்கக்கூடியவை அல்ல.
 • இந்த புதிய வெர்னா காரில் பொதுவாக அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களில்,இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள்,ABS மற்றும் ஐசோபிக்ஸ் ஆகியவை உட்படுகின்றன. உயர் தர வகையில் 6 ஏர்பேக்குகள் அளிக்கப்படுகின்றன.
 • இந்த புதிய வெர்னா காரில் பிரிமியம் கட்டமைப்பு தரத்தை காணலாம். ஹூண்டாய் கார்களில் நாம் எதிர்பார்க்கும் தர நிர்ணயத்திற்கு ஏற்ற பிளாஸ்டிக் மற்றும் பொருட்களின் பயன்பாடு தொடர்வதை காண முடிகிறது.

things we don't like

 • புதிய வெர்னா காரின் உள்புற அமைப்பியல் பிரிமியமாக இருந்தாலும், அதன் கேபின் வடிவமைப்பு ஒரு வெறுமையையும், குதூகலத்தை இழப்பதாகவும் தெரிகிறது.
 • இந்த புதிய வெர்னா காரின் பின்பக்க வரிசை மனதை கவரும் வகையில் இல்லை. பின்பக்க சீட் ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் ஆகியவை அளவில் சராசரியாக உள்ளன.
 • 2017 வெர்னா காரின் தனித்தன்மையான அம்சங்கள், உயர் தர வகைக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. துவக்க வகையில் ஒரு ஹெட் யூனிட் அல்லது ஸ்பீக்கர் கூட அளிக்கப்படவில்லை.
 • ஹூண்டாய் வெர்னா டீசல்AT தேர்வை, உயர் தரSX (O) வகையில் கிடைப்பது இல்லை.

தனித்தன்மையான அம்சங்கள்

 • Pros & Cons of Hyundai Verna

  இந்த 2017 வெர்னா காரில் பிராஜெக்டர் ஹெட்லைட்களை தவிர, பிராஜெக்டர் ஃபேக் லைட்கள் அளிக்கப்பட்டு, பனி / மூடுபனி, மழை சூழ்நிலைகளில் தாழ்நிலை பார்வை மேம்படுகிறது.

 • Pros & Cons of Hyundai Verna

  எலட்ரா காரில் உள்ளதை போல, இந்த 2017 ஹூண்டாய் வெர்னா காரிலும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ பூட் இயக்க அம்சம் காணப்படுகிறது. இதனால் உங்கள் கைகள் முழுவதும் பொருட்களோடு வரும் போது, எளிதாக பூட் இயக்கி திறக்க முடிகிறது.

 • Pros & Cons of Hyundai Verna

  இந்த 2017 வெர்னா காரில் உள்ள எலக்ட்ரிக் சன்ரூஃப் மூலம் நல்ல காற்றோட்டத்தை உணர முடிகிறது. மேலும் கோடைக் காலத்தில் ஏற்படும் வெப்பத்தை தணிய செய்ய உதவிகரமாக உள்ளது.

 • Pros & Cons of Hyundai Verna

  இந்த 2017 வெர்னா காரின் SX மற்றும் SX (O) வகைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் மிரர் லிங்க் இணைப்பு உடன் கூடிய 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பை பெற முடிகிறது.

 • Pros & Cons of Hyundai Verna

  இந்த பிரிவிலேயே முதல் முறையாக, புதிய வெர்னா காரில் மட்டுமே காற்றோட்டம் கொண்ட முன்பக்க சீட்கள் அளிக்கப்படுகின்றன. இதன்மூலம்வெப்பம் அதிகமான வெயில் காலத்தில், உங்கள் பின்பக்க குளுமையாக இருக்கிறது. இனி வேர்வை அடையாளங்கள் சீட்களில் இருக்காது!

space Image

ஹூண்டாய் வெர்னா பயனர் விமர்சனங்கள்

4.6/5
அடிப்படையிலான495 பயனர் விமர்சனங்கள்
Chance to win image iPhone 7 & image vouchers - T&C *

மதிப்பிடு & மதிப்பீடு

 • All (495)
 • Looks (158)
 • Comfort (138)
 • Mileage (100)
 • Engine (102)
 • Interior (76)
 • Space (34)
 • Price (59)
 • More ...
 • நவீனமானது
 • பயனுள்ளது
 • VERIFIED
 • CRITICAL
 • It Is A Star Car

  Hyundai Verna is one of a kind, it has got those killer looks with that front grill and the DRLs add to the beauty of the car, as far as the interior goes, it has luxury ...மேலும் படிக்க

  இதனால் aryan
  On: Oct 08, 2019 | 359 Views
 • for VTVT 1.4 E

  Best sedan car

  Hyundai Verna is the best car in every aspect- Stylish look, unmatchable performance, a bucket full of features, safety and whatnot. Enjoying every ride gives a smooth an...மேலும் படிக்க

  இதனால் pawan gupta
  On: Oct 02, 2019 | 146 Views
 • Gem Of Car

  I have driven Hyundai Verna 10000 km till date. Its a gem of a car. It has all you can get out of a vehicle. I own the diesel titanium plus version which provides 6 airba...மேலும் படிக்க

  இதனால் nitin
  On: Oct 04, 2019 | 108 Views
 • for CRDi 1.6 AT SX Option

  It is awesome car

  It is an excellent car with an excellent pickup. It also comes with airbags, which is an awesome safety feature. The music system is superb.

  இதனால் ayush kumar
  On: Oct 03, 2019 | 29 Views
 • Less maintenance cost

  Hyundai Verna is providing an amazing feeling to drive, good mileage and cheap maintenance, cost need to pay for this car. Perfect car in this segment.

  இதனால் ronik tyagi
  On: Oct 02, 2019 | 30 Views
 • வெர்னா மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க
space Image

ஹூண்டாய் வெர்னா வீடியோக்கள்

 • Maruti Suzuki Ciaz 1.5 Vs Honda City Vs Hyundai Verna: Diesel Comparison Review in Hindi | CarDekho
  11:11
  Maruti Suzuki Ciaz 1.5 Vs Honda City Vs Hyundai Verna: Diesel Comparison Review in Hindi | CarDekho
  Jul 27, 2019
 • Maruti Suzuki Ciaz Vs Hyundai Verna Vs Honda City | Diesel Comparison Review | ZigWheels.com
  9:56
  Maruti Suzuki Ciaz Vs Hyundai Verna Vs Honda City | Diesel Comparison Review | ZigWheels.com
  Jun 27, 2019
 • Toyota Yaris vs Honda City vs Hyundai Verna | Automatic Choice? | Petrol AT Comparison Review
  13:58
  Toyota Yaris vs Honda City vs Hyundai Verna | Automatic Choice? | Petrol AT Comparison Review
  May 22, 2018
 • Honda City vs Hyundai Verna | Sedan Comparison | ZigWheels.com
  12:7
  Honda City vs Hyundai Verna | Sedan Comparison | ZigWheels.com
  Dec 20, 2017
 • Hyundai Verna : A Handsome Brute : PowerDrift
  10:47
  Hyundai Verna : A Handsome Brute : PowerDrift
  Oct 08, 2017

ஹூண்டாய் வெர்னா நிறங்கள்

 • fiery red
  பையரி சிவப்பு
 • typhoon silver
  typhoon சில்வர்
 • marine blue
  மரின் நீலம்
 • thunder black
  தண்டர் பிளேக்
 • starry night
  starry night
 • polar white
  போலார் வெள்ளை
 • titan gray metallic
  டைட்டன் சாம்பல் மெட்டாலிக்

ஹூண்டாய் வெர்னா படங்கள்

 • படங்கள்
 • ஹூண்டாய் வெர்னா front left side image
 • ஹூண்டாய் வெர்னா side view (left) image
 • ஹூண்டாய் வெர்னா rear left view image
 • ஹூண்டாய் வெர்னா front view image
 • ஹூண்டாய் வெர்னா rear view image
 • CarDekho Gaadi Store
 • ஹூண்டாய் வெர்னா grille image
 • ஹூண்டாய் வெர்னா front fog lamp image
space Image

ஹூண்டாய் வெர்னா சாலை சோதனை

 • Hyundai Grand i10 Facelift Road-Test Review

  மாருதி சுஜூகி இன்கிஸ் போன்ற போட்டியாளர்களுக்கு எதிராக எப்படி முன்னெடுக்கப்படுகின்றது ? நாம் கண்டுபிடிக்கிறோம்.

  By SiddharthMay 10, 2019

Similar Hyundai Verna பயன்படுத்தப்பட்ட கார்கள்

 • ஹூண்டாய் வெர்னா xxi (பெட்ரோல்)
  ஹூண்டாய் வெர்னா xxi (பெட்ரோல்)
  Rs1 லக்ஹ
  20071,20,000 Kmபெட்ரோல்
  விவரங்களைக் காண்க
 • ஹூண்டாய் வெர்னா xxi (பெட்ரோல்)
  ஹூண்டாய் வெர்னா xxi (பெட்ரோல்)
  Rs1.89 லக்ஹ
  200868,000 Kmபெட்ரோல்
  விவரங்களைக் காண்க
 • ஹூண்டாய் வெர்னா transform vtvt
  ஹூண்டாய் வெர்னா transform vtvt
  Rs1.95 லக்ஹ
  201090,000 Kmபெட்ரோல்
  விவரங்களைக் காண்க
 • ஹூண்டாய் வெர்னா transform vtvt
  ஹூண்டாய் வெர்னா transform vtvt
  Rs2.01 லக்ஹ
  201060,000 Kmபெட்ரோல்
  விவரங்களைக் காண்க
 • ஹூண்டாய் வெர்னா transform vgt சிஆர்டிஐ உடன் audio
  ஹூண்டாய் வெர்னா transform vgt சிஆர்டிஐ உடன் audio
  Rs2.1 லக்ஹ
  20101,00,000 Kmடீசல்
  விவரங்களைக் காண்க
 • ஹூண்டாய் வெர்னா xi (பெட்ரோல்)
  ஹூண்டாய் வெர்னா xi (பெட்ரோல்)
  Rs2.25 லக்ஹ
  200760,000 Kmபெட்ரோல்
  விவரங்களைக் காண்க
 • ஹூண்டாய் வெர்னா சிஆர்டிஐ எஸ்எக்ஸ்
  ஹூண்டாய் வெர்னா சிஆர்டிஐ எஸ்எக்ஸ்
  Rs2.25 லக்ஹ
  20081,10,000 Kmடீசல்
  விவரங்களைக் காண்க
 • ஹூண்டாய் வெர்னா 1.6 crdi
  ஹூண்டாய் வெர்னா 1.6 crdi
  Rs2.6 லக்ஹ
  201170,000 Kmடீசல்
  விவரங்களைக் காண்க

Write your Comment மீது ஹூண்டாய் வெர்னா

space Image
space Image

இந்தியா இல் ஹூண்டாய் வெர்னா இன் விலை

சிட்டிஇஎக்ஸ் ஷோரூம் விலை
மும்பைRs. 8.17 - 14.07 லட்சம்
பெங்களூர்Rs. 8.17 - 14.07 லட்சம்
சென்னைRs. 8.17 - 14.07 லட்சம்
ஐதராபாத்Rs. 8.17 - 14.07 லட்சம்
புனேRs. 8.17 - 14.07 லட்சம்
கொல்கத்தாRs. 8.17 - 14.07 லட்சம்
கொச்சிRs. 8.12 - 14.08 லட்சம்
உங்கள் நகரத்தை தேர்ந்தெடு

ஹூண்டாய் கார்கள் டிரெண்டிங்

 • பிரபல
 • அடுத்து வருவது
×
உங்கள் நகரம் எது?