Hyundai Verna S மற்றும் Honda City SV: எந்த காம்பாக்ட் செடான் காரை வாங்குவது?
published on ஜூன் 03, 2024 08:22 pm by dipan for ஹூண்டாய் வெர்னா
- 41 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஒரே மாதிரியான விலை இருந்தபோதிலும், இந்த இரண்டு சிறிய செடான் கார்களும் வெவ்வேறு வாடிக்கையாளர் குழுக்களை ஈர்க்கின்றன. அவற்றுக்கிடையேயான தேர்வு தனிப்பட்ட ஆப்ஷன்கள் மற்றும் தேவைகளைப் பொறுத்தது. நீங்கள் எந்த காரை தேர்ந்தெடுக்க வேண்டும்?
புதிய ஜெனரேஷன் ஹூண்டாய் வெர்னா 2023 -ல் அறிமுகப்படுத்தப்பட்டபோது அது மக்களது கவனத்தை மிகவும் ஈர்த்த பல வசதிகளைக் கொண்டிருந்தது. இருப்பினும், இது ஹோண்டா சிட்டியுடன் போட்டியிடுகிறது. இது எப்போதும் செடான் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரபலமான விருப்பத் தேர்வாக இருந்து வருகிறது. நீங்கள் சுமார் ரூ. 12 லட்சம் பட்ஜெட்டில் செடான் காரை வாங்க திட்டமிட்டிருந்தால் அடிப்படை வேரியன்ட்களிலிருந்து இரண்டாவது ஹூண்டாய் வெர்னா S அல்லது அதே போன்ற என்ட்ரி லெவல் ஹோண்டா சிட்டி SV வேரியன்ட்டைக் கருத்தில் கொள்ள வேண்டுமா? என்பதைப் பற்றி நாம் மேலும் அறியலாம்:
விலை
வேரியன்ட் |
ஹூண்டாய் வெர்னா S |
ஹோண்டா சிட்டி SV |
விலை |
ரூ.11.99 லட்சம் |
ரூ.12.08 லட்சம் |
விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை, பான் இந்தியா
ஹோண்டா சிட்டி பேஸ் மாடலின் விலை வெர்னாவின் இரண்டாவது பேஸ் வேரியன்ட் S-ஐ விட சற்று அதிகமாக உள்ளது.
பவர்டிரெயின்
வேரியன்ட் |
ஹூண்டாய் வெர்னா S |
ஹோண்டா சிட்டி SV |
இன்ஜின் |
1.5 லிட்டர் N/A பெட்ரோல் |
1.5 லிட்டர் N/A பெட்ரோல் |
பவர் |
115 PS |
121 PS |
டார்க் |
144 Nm |
145 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீட் MT |
5-ஸ்பீட் MT |
ஹூண்டாய் வெர்னாவின் S வேரியன்ட் மற்றும் ஹோண்டா சிட்டியின் SV டிரிம் இரண்டும் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் (வெர்னாவில் 6-ஸ்பீடு யூனிட்) கனெக்டட் 1.5-லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் இன்ஜினை கொண்டுள்ளது. இந்த மாடல்களில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் சிட்டியின் இன்ஜின் அதன் ஹூண்டாய் வெர்னாவை விட சற்று அதிக சக்தி வாய்ந்தது.
வசதிகள்
வசதிகள் |
ஹூண்டாய் வெர்னா S |
ஹோண்டா சிட்டி SV |
வெளிப்புறம் |
|
|
உட்புறம் |
|
|
இன்ஃபோடெயின்மென்ட் |
|
|
வசதிகள் |
|
|
பாதுகாப்பு |
|
|
ஹூண்டாய் வெர்னா S மற்றும் ஹோண்டா சிட்டி SV ஆகிய இரண்டும் அவற்றின் விலைக்கு ஏற்ப நல்ல வசதிகளை வழங்குகின்றன. இருப்பினும் நகாரத்தில் பயணிப்பவர்களுக்கு சில நன்மைகள் உள்ளன. இதில் வழிகாட்டுதல்களுடன் கூடிய ரியர் பார்க்கிங் கேமரா, எலக்ட்ரிகல் மூலம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ORVM-கள் மற்றும் PM 2.5 ஏர் பில்டர் போன்றவை இதில் அடங்கும். மறுபுறம், வெர்னா S ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், கூல்டு க்ளோவ் பாக்ஸ், முன் மற்றும் ரியர் USB-C சார்ஜர்கள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது, இது போன்ற வசதிகள் எதுவும் ஹோண்டா சிட்டி SV-யில் இல்லை.
தீர்ப்பு
ஹூண்டாய் வெர்னா S -ஐ விட ஹோண்டா சிட்டி SV -யின் விலை சற்று அதிகமாக உள்ளது. வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இரண்டு வேரியன்ட்களும் கிட்டத்தட்ட சமமாகவே உள்ளது. இந்த இரண்டு மாடல்களும் ஒரே மாதிரியான பவர்டிரெய்ன்களையும் வழங்குகிறார்கள். ரிவர்சிங் கேமரா, ஏர் பில்டர் மற்றும் சற்று அதிக சக்தி வாய்ந்த இன்ஜின் போன்ற வசதிகளுக்கு முன்னுரிமை அளித்தால், உங்களுக்கான சிறந்த தேர்வாக ஹோண்டா சிட்டி உள்ளது.
இருப்பினும், நீங்கள் அதிக ஃபீல்-குட் வசதிகளையும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனையும் விரும்பினால், வெர்னா S ஆனது கூல்டு க்ளோவ் பாக்ஸ் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோலை உள்ளடக்கியிருப்பதால், உங்களுக்கான சிறந்த தேர்வாக இது இருக்கும்.
இந்த காம்பாக்ட் செடான் கார்களில் உங்களின் தேர்வு ஏதுவாக இருக்கும் என்பதை கீழே உள்ள கமெண்ட் பகுதியின் மூலமாக எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
மேலும் படிக்க: வெர்னாவின் ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful