2025 ஏப்ரல் முதல் Hyundai கார்கள் விலை உயரவுள்ளது
ஹூண்டாய் கிரெட்டா என் லைன் க்காக மார்ச் 20, 2025 07:40 pm அன்று kartik ஆல் பப்ளிஷ் ச ெய்யப்பட்டது
- 14 Views
- ஒரு கருத்தை எழுதுக
மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது மற்றும் செயல்பாட்டு செலவுகள் அதிகரிப்பு ஆகியவையே இந்த விலை உயர்வுக்கான காரணம் என்று ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிதியாண்டு முடிவடைவதை அடுத்து பல இந்தியாவில் பல்வேறு கார் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ளன. இப்போது ஹூண்டாய் நிறுவனம் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கிரெட்டா எலக்ட்ரிக் உட்பட அதன் அனைத்து கார்களின் விலையும் 3 சதவீதம் வரை உயரும் என தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஹூண்டாய் நிறுவனம் இரண்டாவது முறையாக விலையை உயர்த்தியுள்ளது. முதல் விலை 2025 உயர்வு ஜனவரியில் இருந்தது. ஹூண்டாய் இந்த விலை உயர்வுக்கு இரண்டு காரணங்களை தெரிவித்துள்ளது அவை:
விலை உயர்வுக்கான காரணம்
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நிறுவனங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள ஹூண்டாய் இந்த உயர்வுக்கான காரணத்தை உள்ளீடு செலவுகள், அதிகரித்த மூலப்பொருட்கள் செலவுகள் மற்றும் அதிக செயல்பாட்டு செலவுகள் ஆகியவற்றையே இந்த விலை உயர்வுக்கான காரணங்களாக கூறியுள்ளது. கியா மற்றும் மாருதி போன்ற பிற கார் தயாரிப்பு நிறுவனங்களும் அவற்றின் கார்கள் விலை உயர்த்தப்பட்டதற்கு இதே போன்ற காரணத்தைக் கூறியுள்ளன.
மாடல் மற்றும் வேரியன்ட் அடிப்படையில் விலை உயர்வு தீர்மானிக்கப்படும். இந்தியாவில் தற்போதைய ஹூண்டாய் கார்களின் விலை இங்கே உள்ளன
மாடல் |
தற்போதைய விலை வரம்பு |
கிராண்ட் i10 நியோஸ் |
ரூ.5.98 லட்சம் முதல் ரூ.8.62 லட்சம் |
எக்ஸ்டர் |
ரூ.6 லட்சம் முதல் ரூ.10.51 லட்சம் |
ஆரா |
ரூ.6.54 லட்சம் முதல் ரூ.9.11 லட்சம் |
i20 |
ரூ.7.04 லட்சம் முதல் ரூ.11.25 லட்சம் |
வென்யூ |
ரூ.7.94 லட்சம் முதல் ரூ.13.52 லட்சம் |
I20 என் லைன் |
ரூ.10 லட்சம் முதல் ரூ.12.56 லட்சம் |
வெர்னா |
ரூ.11.07 லட்சம் முதல் ரூ.17.55 லட்சம் |
கிரெட்டா |
ரூ.11.11 லட்சம் முதல் ரூ.20.50 லட்சம் |
வென்யூ என் லைன் |
ரூ.12.14 லட்சம் முதல் ரூ.13.97 லட்சம் |
அல்கஸார் |
ரூ.14.99 லட்சம் முதல் ரூ.21.70 லட்சம் |
கிரெட்டா என் லைன் |
ரூ.16.93 லட்சம் முதல் ரூ.20.64 லட்சம் |
கிரெட்டா எலக்ட்ரிக் |
ரூ.17.99 லட்சத்தில் இருந்து ரூ.24.38 |
டுஸான் |
ரூ.29.27 லட்சம் முதல் ரூ.36.04 லட்சம் |
அயோனிக் 5 |
ரூ.46.30 லட்சம் |
* அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி -க்கானவை
மேலும் பார்க்க: ஏப்ரல் 2025 முதல் டாடா கார்கள் விலை உயரவுள்ளது
ஹூண்டாயின் எதிர்கால திட்டங்கள்
ஹூண்டாய் 2025 -ல் இந்தியாவில் ஒரு உறுதியான அறிமுகத்திற்கான எந்த மாடல்களையும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் இந்தியாவில் இந்த ஆண்டிலேயே ஃபேஸ்லிஃப்ட் டுஸான் காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.