• English
  • Login / Register

புதிய ஹூண்டாய் வெர்னாவை அதன் முந்தைய கார்களிலிருந்து வேறுபடுத்தும் அம்சங்கள் அனைத்தும் இதோ

published on மார்ச் 28, 2023 05:26 pm by rohit for ஹூண்டாய் வெர்னா

  • 30 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த ஜெனரேஷன் அப்கிரேடுடன், செடான் அதன் புத்தம்புதிய பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் தொடங்கி பல்வேறு மிகப்பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது.

Hyundai Verna: old vs new

ஆறாவது தலைமுறை ஹூண்டாய் வெர்னா சமீபத்தில் கவர்ச்சிகரமான அறிமுக விலையில் வாங்குபவர்களுக்கு கிடைக்கிறது. அதன்  முந்தைய கார்களுடன்  ஒப்பிடும்போது, புதிய வெர்னா மிகவும் பெரியது, புதிய பவர்டிரெய்னைப் பெறுகிறது மற்றும் அதிக பிரீமியம் அம்சங்களையும் கொண்டுள்ளது. இரண்டும் எந்த அளவிற்கு ஒத்தவை அல்லது வேறுபட்டவை என்பதற்கான தெளிவான தகவலைப் பெற , அவற்றைப் பல விஷயங்களில் விரிவாக ஒப்பிட்டுப் பார்க்கலாம்:

வெளிப்புறம்

Old Hyundai Verna front
2023 Hyundai Verna front

புதிய வெர்னாவின் மறுவடிவமைப்புக்கு ஒரு புரட்சிகர அணுகுமுறையை தேர்ந்தெடுத்தது ஹூண்டாய் .  பழைய மாடலில் அதிக அளவிலான கூறுகள் இல்லை என்றாலும், ஆறாவது-தலைமுறை செடான் மிகவும்  உறுதியான முன்புற தோற்றத்தைப் பெறுகிறது, நீண்ட LED DRL ஸ்ட்ரிப் மற்றும் கிரில்லுக்கான "பாராமெட்ரிக் ஜூவல்" வடிவமைப்பிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். புதிய வெர்னா அதன் தலைமுறை கார் வகைகளை விட உலகளவில் விற்கப்படும் சமீபத்திய தலைமுறை எலன்ட்ராவை நினைவூட்டுகிறது.

செடான் ஃபாக் லைட்டுகளை இழந்திருந்தாலும் (அதன் ஹெட்லைட்கள் கார்னரிங் செயல்பாட்டைப் பெறுகின்றன), அது இன்னும் மல்டி-ரிஃப்ளெக்டர் LED  ஹெட்லைட்களைப் பெறுகிறது. வெர்னாவில் மற்றொரு புதிய அறிமுகம் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டென்ச்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) ரேடார் ஆகும்.

Old Hyundai Verna side
2023 Hyundai Verna side

படத்தில், ஐந்தாவது தலைமுறை வெர்னா சற்று நிதானமானத் தோற்றத்தில் தெரிகிறது, முன்புற ஃபெண்டரிலிருந்து பின்புறம் வரை செல்லும் நேர் கோடுகளுக்கு இதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும். ஒப்பிடும்போது, புதிய மாடல், கூர்மையான வெட்டுக்கள் மற்றும் மடிப்புகளால் நிரம்பியுள்ளது, இது தற்போதைய டக்சனை நினைவூட்டுகிறது, மேலும் அதன் பக்கங்களும் நீண்ட ஃபுட் பிரிண்ட் மற்றும் செடானின் ஃபாஸ்ட்பேக் போன்ற வடிவமைப்பைக் காட்டுகின்றன. இது 16-அங்குல டூயல்-டோன் அலாய் வீல்களைப் பெறுகிறது (டர்போ வேரியன்ட்களில் சிவப்பு பிரேக் காலிப்பர்களுடன் கூடிய பிளாக்-அவுட் வீல்கள் கிடைக்கும்).

Old Hyundai Verna rear
2023 Hyundai Verna rear

பின்புறத்திலும், புதிய வெர்னா பழைய மாடலில் இருந்து பலவற்றில் மாறியுள்ளது. பிந்தையது ரேப்பரவுண்ட் LED டெயில்லைட்களுடன் ஒரு கவர்ச்சிகர தோற்றத்தைக் கொண்டிருந்தால், புதிய மாடலின் பின்புறம் ஃபாங் போன்ற இணைக்கப்பட்ட டெயில்லைட்கள் மற்றும் பம்பரில் உள்ள வடிவியல் கூறுகள் காரணமாக பரபரப்பாகத் தெரிகிறது.

தொடர்புடையவைபுதிய ஹூண்டாய் வெர்னா, பிரிவின் தலைமைத்துவத்தில் அதன் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது

அதன் அளவுகளைப் பற்றி இதோ தெரிந்து கொள்ளலாம்:


அளவுகள்


பழைய வெர்னா


புதிய வெர்னா


வேறுபாடுகள்


நீளம்

4,440மிமீ

4,535மிமீ

+95மிமீ


அகலம்

1,729மிமீ

17,65மிமீ

+36மிமீ


உயரம்

1,475மிமீ

1,475மிமீ


எந்த மாற்றமும் இல்லை


வீல்பேஸ்

2,600மிமீ

2,670மிமீ

+70மிமீ

அதன் உயரத்தைத் தவிர, புதிய வெர்னா அனைத்து பரிமாணங்களிலும் ஐந்தாம் தலைமுறை மாடலை விட பெரியதாக உள்ளது. இந்த வளர்ச்சி கேபினில் அதிக இடத்தைத் தருகிறது.

உட்புறம்

Old Hyundai Verna cabin
2023 Hyundai Verna cabin

வெளிப்புறத்தைப் போலவே, உட்புறமும் - தலைமுறை மேம்படுத்தலுடன் - சேடானுக்கு ஒரு பெரிய படியாகும். ஹூண்டாய் புதிய வெர்னாவின் கேபினுக்கு நேர்த்தியான ஏசி வென்ட்கள், அதிக சாஃப்ட்-டச் மெட்டீரியல், டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் சில்வர் அக்சென்ட்களை வழங்குவதன் மூலம் அதிக பிரீமியத்தை கொடுத்துள்ளது.

 

Old Hyundai Verna Turbo cabin
Hyundai Verna Turbo-petrol Cabin

வெர்னா இரண்டு கேபின் தீம் ஆப்ஷன்களுடன் தொடர்கிறது: டூயல்-டோன் (கருப்பு மற்றும் மஞ்சள் கலந்த பழுப்பு) தரநிலை மற்றும் டர்போ வேரியன்ட்களுக்காக சிவப்பு ஆக்சன்டுகளுடன் முழுவதும் கறுப்பு நிறத்தில் வெளிவருகிறது. இருப்பினும், இதன் சிறப்பம்சமாக டுயுயல் டிஸ்பிளே செட் அப் (டிஜிட்டலைஸ் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 10.25-அங்குல டச் ஸ்கிரீன் உட்பட) உள்ளது.

தொடர்புடையவைபுதிய ஹீண்டாய் வெர்னா vs போட்டியாளர்கள்: விவரக்குறிப்புகள் ஒப்பிடப்படுகின்றன

பவர்டிரெயின்கள்

Old Hyundai Verna Turbo engine


விவரக்குறிப்புகள்


பழைய வெர்னா


புதிய வெர்னா


இன்ஜின்


1.5-லிட்டர் பெட்ரோல்


1-லிட்டர் டர்போ-பெட்ரோல்


1.5-லிட்டர் டீசல்


1.5-லிட்டர் பெட்ரோல்


1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல்


பவர்

115PS

120PS

115PS

115PS

160PS

டார்க்

144Nm

172Nm

250Nm

144Nm

253Nm


டிரான்ஸ்மிஷன்


6-வேக MT, CVT
 


7-வேக DCT


6-வேக MT,  6-வேக AT


6-வேக MT, CVT
 


6-வேக MT, 7-வேக DCT

விலைகள் மற்றும் போட்டியாளர்கள்

அதன் விற்பனைச் சுழற்சியின் இறுதியில், பழைய வெர்னாவின் விலை ரூ.9.64 இலட்சத்தில் இருந்து ரூ.15.72 இலட்சமாக இருந்தது. ஹூண்டாய் ஆறாவது தலைமுறை செடானை அறிமுக விலை ரூ.10.90 இலட்சம் முதல் ரூ.17.38 இலட்சம் வரை விற்பனை செய்கிறது (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் இந்தியா முழுவதற்கும்).

2023 Hyundai Verna

ஃவோல்க்ஸ் வேகன் வெர்ச்சுஸ், ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ஸ்லேவியா மற்றும் மாருதி சியாஸ் ஆகியவற்றுக்கு எதிராக காம்பாக்ட் செடான் களமிறங்குகிறது

மேலும் படிக்கவும்: ஹூண்டாய் வெர்னா ஆன் ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Hyundai வெர்னா

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience