• English
  • Login / Register

MY25 அப்டேட்டாக புதிய வசதிகள் மற்றும் வேரியன்ட்களை பெறும் Grand i10 Nios, Venue, மற்றும் Verna கார்கள்

published on ஜனவரி 08, 2025 10:36 pm by shreyash for ஹூண்டாய் வெர்னா

  • 23 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த லேட்டஸ்ட் அப்டேட்கள் மூலமாக கிராண்ட் i10 நியோஸ் மற்றும் வென்யூ ஆகிய கார்களில் புதிய வசதிகள் மற்றும் புதிய வேரியன்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வெர்னாவின் டர்போ-பெட்ரோல் டிசிடி (டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) வேரியன்ட்டை மிகவும் விலை குறைவானதாக மாற்றுகிறது.

2025 ஆம் ஆண்டு தொடங்கிவிட்ட நிலையில் ஹூண்டாய் நிறுவனம் அதன் மூன்று பிரபலமான மாடல்களுக்கு மாடல்-இயர்-அப்டேட்களை கொடுத்துள்ளது. ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ், ஹூண்டாய் வென்யூ, மற்றும் ஹூண்டாய் வெர்னா ஆகிய கார்களுக்கு இந்த அப்டேட்கள் மூலமாக கூடுதல் வசதிகளுடன் மட்டுமல்ல புதிய வேரியன்ட்களும் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் வெர்னாவின் டர்போ-பெட்ரோல் ஆட்டோமெட்டிக் வேரியன்ட் விலை இப்போது குறைந்துள்ளது. காரில் கிடைக்கும் அப்டேட்களை இங்கே விரிவாக பார்ப்போம்.

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்

2023 Hyundai Grand i10 Nios

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் புதிய மிட்-ஸ்பெக் ஸ்போர்ட்ஸ் (ஓ) வேரியன்ட்டை பெறுகிறது. இது ஸ்போர்ட்ஸ் வேரியன்ட்டிற்கு மேலே இருக்கும். வழக்கமான ஸ்போர்ட்ஸ் வேரியன்ட்டை விட ஹேட்ச்பேக்கின் ஸ்போர்ட்ஸ் (O) வேரியன்ட் 15-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள், க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட வெளிப்புற டோர் ஹேண்டில்கள் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் 8 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் ஆட்டோமெட்டிக் ஏசி ஆகியவற்றைப் பெறுகிறது. இந்த புதிய வேரியன்ட் மேனுவல் மற்றும் AMT ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய வேரியன்ட் அறிமுகத்தைத் தவிர கிராண்ட் i10 நியோஸின் மிட்-ஸ்பெக் கார்ப்பரேட் வேரியன்ட் ஆனது புரொஜெக்டர் ஹெட்லைட்களுடன் இது அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியன்ட்களுக்கான விலை விவரங்கள் இங்கே:

வேரியன்ட்

பழைய விலை/ஸ்டாண்டர்டு வேரியன்ட் விலை

புதிய விலை

வித்தியாசம்

கார்ப்பரேட் எம்டி

ரூ.6.93 லட்சம்

ரூ.7.09 லட்சம்

+ ரூ.16,000

ஸ்போர்ட்ஸ் (O) MT

ரூ.7.36 லட்சம்

ரூ.7.72 லட்சம்

+ ரூ.36,000

கார்ப்பரேட் ஏஎம்டி

ரூ.7.58 லட்சம்

ரூ.7.74 லட்சம்

+ ரூ.16,000

ஸ்போர்ட்ஸ் (O) AMT

ரூ 7.93 லட்சம் (ரெகுலர் ஸ்போர்ட்ஸ்)

ரூ.8.29 லட்சம்

+ ரூ.36,000

ஸ்போர்ட்ஸ் (O) வேரியன்ட்டிற்கு வழக்கமான ஸ்போர்ட்ஸ் டிரிமை விட வாடிக்கையாளர்கள் ரூ.36,000 அதிகமாக செலுத்த வேண்டும். மறுபுறம் ஹேட்ச்பேக்கின் கார்ப்பரேட் வேரியன்ட் விலை ரூ.16,000 விலை உயர்ந்துள்ளது.

கிராண்ட் i10 நியோஸ் பெட்ரோல் மற்றும் CNG பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது:

இன்ஜின்

1.2 லிட்டர் N/A பெட்ரோல்

1.2 லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி

பவர்

83 PS

69 PS

டார்க்

114 Nm

95.2 Nm

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT, 5-ஸ்பீடு AMT

5-ஸ்பீடு MT

மேலும் படிக்க: கிரெட்டா எலக்ட்ரிக் -க்கு பிறகு ஹூண்டாய் கிரெட்டா இப்போது அதிக எண்ணிக்கையிலான பவர்டிரெய்ன் ஆப்ஷன்களைப் பெறுகிறது

ஹூண்டாய் வென்யூ

ஹூண்டாய் வென்யூ -வின் வேரியன்ட் வரிசையானது புதிய SX எக்சிகியூட்டிவ் வேரியன்ட் மேனுவல் வேரியன்ட்டுடன் விரிவுபடுத்தப்பட்டு எஸ்யூவி -யின் 1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படுகிறது. இந்த புதிய வேரியன்ட் மிட்-ஸ்பெக் S(O) டிரிமிற்கு மேலேயும், வழக்கமான SX வேரியன்ட்க்கு கீழேயும் ரூ.10.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் உள்ளது. புதிய SX எக்ஸிகியூட்டிவ் வேரியன்ட்டில் உள்ள முக்கிய வசதிகளில் 8-இன்ச் டச்ஸ்கிரீன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆட்டோ ஏசி மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் ஆகியவை அடங்கும்.

ஹூண்டாய் வென்யூ -வின் தற்போதைய வேரியன்ட்களையும் புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. S MT மற்றும் S பிளஸ் MT வேரியன்ட்களில் இப்போது பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் சேர்க்கப்பட்டுள்ளது. S(O) MT வேரியன்ட் இப்போது புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் ஸ்மார்ட் கீ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. S(O) MT நைட் பதிப்பு கூடுதலாக வயர்லெஸ் ஃபோன் சார்ஜருடன் வருகிறது. கடைசியாக S(O) பிளஸ் அட்வென்ச்சர் மேனுவல் வேரியன்ட் இப்போது புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதிகள் அனைத்தும் எஸ்யூவி -யின் 1.2-லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் மேனுவல் வேரியன்ட்களுக்கு பொருந்தும்.

புதுப்பிக்கப்பட்ட வேரியன்ட்களின் விலை விவரங்கள் இங்கே:

வேரியன்ட்

பழைய விலை/ஸ்டாண்டர்டு வேரியன்ட் விலை

புதிய விலை

வித்தியாசம்

S MT

ரூ.9.11 லட்சம்

ரூ.9.28 லட்சம்

+ ரூ.17,000

எஸ் பிளஸ் எம்டி

ரூ.9.36 லட்சம்

ரூ.9.53 லட்சம்

+ ரூ.17,000

S(O) MT

ரூ.9.89 லட்சம்

ரூ.10 லட்சம்

+ ரூ.11,000

S(O) நைட் எம்டி

ரூ.10.12 லட்சம்

ரூ.10.34 லட்சம்

+ ரூ.22,000

S(O) பிளஸ் அட்வென்ச்சர் எம்டி

ரூ.10.15 லட்சம்

ரூ.10.37 லட்சம்

+ ரூ.22,000

SX எக்ஸிகியூட்டிவ் எம்டி

ரூ 11.05 லட்சம் (ரெகுலர் SX)

ரூ.10.79 லட்சம்

(-) ரூ.26,000

வென்யூ -வின் எஸ் மற்றும் S(O) வேரியன்ட்கள் ரூ.17,000 மற்றும் ரூ.22,000 விலை உயர்ந்துள்ளன. இருப்பினும் சன்ரூஃப், ஆட்டோ ஏசி மற்றும் 8-இன்ச் டச்ஸ்கிரீன் போன்ற வசதிகளுக்கு SX எக்ஸிகியூட்டிவ் வேரியன்ட்டை நீங்கள் தேர்வு செய்யலாம். வழக்கமான SX டிரிமில் ரூ.26,000 சேமிக்கலாம்

ஹூண்டாய் வென்யூ 3 பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது:

இன்ஜின்

1.2 லிட்டர் N/A பெட்ரோல்

1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

பவர்

83 PS

120 PS

116 PS

டார்க்

114 Nm

172 Nm

250 Nm

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT

6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT

6-ஸ்பீடு MT

DCT - டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

ஹூண்டாய் வெர்னா

Hyundai Verna turbo long term report

ஹூண்டாய் வெர்னா இப்போது இரண்டு புதிய விலை குறைவான ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களுடன் வருகிறது: S(O) டர்போ-பெட்ரோல் DCT மற்றும் S பெட்ரோல் CVT. முந்தையது SX டர்போ-பெட்ரோல் DCT வேரியன்ட்டுக்கு கீழே விற்பனைக்கு கொண்டு வரப்படும், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் உடன் கூடிய 8-இன்ச் டச் ஸ்கிரீன், ஆட்டோ ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், டைனமிக் நேவிகேஷன்களுடன் கூடிய பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் சிங்கிள்-பேன் சன் ரூஃப் போன்ற வசதிகளுடன் வருகிறது. ரெட் கலர் பிரேக் காலிப்பர்களுடன் கூடிய 16-இன்ச் பிளாக்-அவுட் அலாய் வீல்கள் இந்த காரின் ஹைலைட்ஸ் ஆக உள்ளன.

வெர்னாவின் S வேரியன்ட் முன்பு மேனுவல் ஆப்ஷனில் மட்டுமே கிடைத்தது. இப்போது CVT ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. S MT மற்றும் S CVT ஆகிய இரண்டு வேரியன்ட்களும் இப்போது சிங்கிள்-பேன் சன்ரூஃபும் கிடைக்கும். S CVT பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் மல்டி-டிரைவ் மோடுகளும் உள்ளன. இந்த வேரியன்ட்களின் விலை விவரங்களை பார்ப்போம்:

வேரியன்ட்

பழைய விலை/ஸ்டாண்டர்டு வேரியன்ட் விலை

புதிய விலை

வித்தியாசம்

S MT

ரூ.12.05 லட்சம்

ரூ.12.37 லட்சம்

+ ரூ. 32,000

S CVT (புதிய வேரியன்ட்)

இல்லை

ரூ.13.62 லட்சம்

இல்லை

S(O) டர்போ DCT (புதிய வேரியன்ட்)

இல்லை

ரூ.15.27 லட்சம்

இல்லை

வெர்னாவின் வழக்கமான S MT வேரியன்ட்டில் ஒரு சிங்கிள் பேன் சன்ரூஃப் சேர்க்கப்பட்டதன் காரணமாக இதன் விலை ரூ.32,000 வரை உயர்ந்துள்ளது. வெர்னாவின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட S(O) டர்போ DCT வேரியன்ட், செடானின் முன்னர் கிடைத்த SX டர்போ DCT வேரியன்ட்டை விட ரூ.91,000 வரை விலை குறைவாக உள்ளது.

ஹூண்டாய் வெர்னா நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் மற்றும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது:

இன்ஜின்

1.5 லிட்டர் N/A பெட்ரோல்

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல்

பவர்

115 PS

160 PS

டார்க்

144 Nm

253 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT, CVT

6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT

இவை அனைத்தும் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ், வென்யூ மற்றும் வெர்னாவில் மாடல் இயர் அப்டேட்களால் கிடைப்பவை ஆகும். நீங்கள் எதை விரும்புகிறீர்கள்? கீழே கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளவும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Hyundai வெர்னா

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience